சத்தியமார்க்கம்.காம்

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு! print Email
வாசகர் பகுதி - வாசகர் மடல்
சனி, 24 அக்டோபர் 2009 11:26

ஷப்னம் ஹாஷ்மிபாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?

... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?

இங்கிருந்து அழைப்பவர்கள் தொண்ணூறு விழுக்காட்டினர் முஸ்லிம்கள்! மூன்று நாட்களுக்குமுன் அமெரிக்காவில் இருந்து காலை 2 மணிக்கு அழைப்பு, அழைத்தவர் ஒரு முஸ்லிம்இன்று கராச்சியிலிருந்து, நேற்று காஷ்மீரிலிருந்து.

உங்கள் மின்மடல்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!

ஆட்வாணி, வாஜ்பேயியைக் கேலியாகப் பேசுகிறீர்களா?

மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்கிறீர்களா?

உங்கள் புத்தக அலமாரியில் அரபி, உருது புத்தகங்கள் இருக்கின்றனவா?

உருது புத்தகம் கவிதைப்புத்தகமா? நம்ப முடியாது! கவிதை வடிவில் ஒரு பயங்கரவாதச் செயலுக்கான திட்டம் நிச்சயம் இருக்கும்!

அருகிலிருக்கும் புத்தகத்தில் ஹிட்லர் பெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளதே! என்ன சொன்னீர்கள்? மோடி ஹிட்லருக்கு ஒப்பானவரா? நிச்சயம் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்!

என்னது? உங்களிடம் கோத்ரா சம்பவம் குறித்த ஆவணங்கள் உள்ளனவா? அதுகுறித்த இவ்வளவு வீடியோ போட்டோக்கள் உங்களிடம் எதற்கு? மோடியின் பெயரைக் களங்கப்படுத்தும் சதி தானே இது? ஐஎஸ்ஐ யுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளது.

இதென்ன மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூர் வரைபடங்கள்? எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் எனத் திட்டம் தீட்டத் தானே?

நாள் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்தவாரம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எதற்கா? வேறு எதற்கு? வழியில் உங்களை விடுவித்ததாகச் சொல்லி நீங்கள் நகரும் போது என்கவுண்டரில் போட்டுத் தள்ளத்தான்!

உங்களிடமிருந்து கைப்பற்றப் படப்போகும் ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி வேண்டாம். உங்கள் கைகளிலும் பைகளிலும் எங்கள் இருப்பில் இதற்காகவே சேர்த்து வைத்திருக்கும் நிறைய வெடிபொருள்களையும் ஏகே47 ரக துப்பாக்கிகளையும் நாங்களே திணித்து விடுவோம். பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னதாகவே தகவல் சொல்லி விடுவோம். அடுத்த நாள் முழுக்க நீங்கள்தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தெரிவீர்கள்பிணமாகத்தான், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!

தலைப்பு என்னவா? தயார் செய்துவிட்டோம்!

கொடிய பெண் தீவிரவாதி என்கவுண்டரில் கொலை!

ஃஃஃஃஃஃஃ

இன்னும் என்ன தயக்கம் நீதிமான்களே, காவலர்களே?

என்னிடம் உருது நூல்கள் நிறைய உள்ளன;

எனக்கு அமெரிக்காவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் முஸ்லிம்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன;

நான் படித்தவள்; இருகுழந்தைகளின் தாய்; ஓர் அறிவியலாரின் மனைவி; நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! என்னிடம் உருது நூல்கள் உள்ளன;

இந்தியாவின் முக்கிய நகரங்களின் வரைபடங்கள் உள்ளன!

வேறென்ன வேண்டும் பொதுமக்களைக் காக்கும் கடமை தவறாக் காவலரே!

வா, வந்து என்னைச் சுட்டுக் கொல்!

-ஷப்னம் ஹாஷ்மி

நன்றி : http://www.countercurrents.org/hr-hashmi260604.htm

தமிழாக்கம் : அபூஷைமா

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும். இப்படி தான் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் சதித் திட்டம் அப்பாவியாக மாட்டிக் கொண்டவரின் பிரதிபலிப்பை காட்டுகின்றது.

பொறுமையை மேற்க கொள்வோம், அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். இறைவனின் சந்நிதானத்தில் வீழ்ந்து அல்லாஹ்வின் சோதனைகளை இன்மனதுடன் ஏற்ப்போம்.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.
1

October 26, 2009 05:29
0
salihu:
ஒரு நாள் உண்மையான தீவிரவாதிகள் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள். அன்று அவர்களுக்கு அதன் வலி புரியும்.

_____________________

அன்புச் சகோதரர் சாலிஹு ஆலம்,
கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள்.
நன்றி!
http://www.satyamargam.com/TamilTyping
2

November 25, 2009 12:08

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்" SIT

குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல 'என்கவுண்டர்' நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத்...

» Modi govt denies scholarships to minority students

The 2010-2011 final examinations are almost over and the admission process for the new academic year is in full swing. But the ambitious Muslim students who want to pursue higher studies are down in the dumps.Six years have passed since the Central government under a Prime Minister’s scheme started offering pre-matriculation scholarships every year to hundreds boys and girls of minority communities in all states.

» கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28ஷவ்வால் மாத நோன்பு.யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்)...

» ஷவ்வால் நோன்பு!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும்...

» நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி,...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு வாசகர் பகுதி வாசகர் மடல் நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!
Twitter
RSS
YouTube
English