சத்தியமார்க்கம்.காம்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! print Email
தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள்
வெள்ளி, 25 செப்டம்பர் 2009 02:47

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும்  இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரு தேசிய கட்சிகளே செயல்பட்டு வந்தன. முழு நாட்டுக்காக நடந்த விடுதலை வேள்வியில் வெற்றி கிடைத்ததென்னவோ பாதியாகத்தான். இந்திய சுதந்திரத்தின் போது "முஸ்லிம்களுக்கான பகுதி" என பாகிஸ்தான் பிரிக்கப்பட்டப் பின்னர், இந்திய தேசிய அளவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு, படிப்படியாகத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தேசிய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக மற்றொரு தேசிய கட்சி வலுப்பெற்று வராத காரணத்தால், மத்தியில் காங்கிரஸின் ஆட்சியே நடைபெற்று வந்தது. மாநிலங்களில் பிரதேச கட்சிகள் வளர்ச்சி பெறும்வரை மாநிலங்களிலும் காங்கிரசின் ஆட்சிதான் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் உள்ள பல குறைபாடுகளால் மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக எழுந்த சிந்தனைகள், பல பிரதேச கட்சிகளை வளர வைத்தன. 60களின் இறுதியில் மாநிலங்களில் காங்கிரசுக்கு இருந்த ஆதிக்கம் செயலிழக்கத் துவங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் பல பிரதேச கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க ஆரம்பித்தன. இருப்பினும் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அதே அளவுக்குச் சக்தியுடன் மற்றொரு கட்சி வளர்ச்சி பெறாத காரணத்தினால் அப்போதும் காங்கிரசின் கையே தேசிய அளவில் ஓங்கியிருந்தது.

80களின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் அல்லாத பல கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி, நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை. 81ஆம் ஆண்டு ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸின் ஜனசங்கம் தேசிய அளவில் மாற்று கட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

காங்கிரஸில் இருந்த கோஷ்டிச் சண்டை, பதவி வெறி, ஊழல், நிர்வாகத் திறமையின்மை, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்குத் திட்டமிட்ட கொள்கையின்மை போன்ற காரணங்களைப் பட்டியலிட்டு திறமையான, நிலையான, வலுவான, ஊழலற்ற ஆட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தேசிய அரசியலில் களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சி, ஒரு கட்டத்தில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் அளவுக்கு முன்னேறியது.

அந்தோ, பரிதாபம்!  இந்து மகாசபை, ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற பல அமைப்புகளால் உரமிடப் பட்டு வெறும் 20 ஆண்டு காலத்தில் அசுர வளர்ச்சியைப் பெற்ற பாஜக, தற்போது இலையுதிர் காலத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உண்மையை நீண்டகாலத்திற்கு மூடி மறைக்க முடியாது என்ற வாசகத்துக்கு ஏற்ப, பாஜகவால் மூடி மறைக்கப்பட்டப் பல உண்மைகள் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களின் வாயிலிருந்தே வெளியேறிய வண்ணமிருக்கின்றன. எல்லாக் கட்சிகளுக்கும் முதல் மந்திரமான, "ஊழலற்ற ஆட்சி" என்ற கோஷம் பாஜகவைப் பொருத்தளவில், மீண்டும் ஒருமுறை அந்த இரு சொற்களையும் சொல்வதற்குக்கூட அக்கட்சி அருகதை அற்றுப் போய்விட்டது. அந்த அளவுக்குக் காங்கிரசோடு  போட்டியிடும் விதத்தில் பாஜக தலைவர்களிடையே ஊழல் தலைவிரித்தாடியதோடு  காங்கிரஸின் பதவி வெறியைவிடப் பன்மடங்கு, மத்தியில் நாற்காலியைப் பிடிப்பதற்காக எத்தகைய கேவலமான வேலைகளையும் பாஜக செய்யும் என்பது இப்போது நாட்டு மக்களுக்குப் புரிந்து விட்டது.  "காங்கிரசுக்கு மாற்றாக" என்று சொல்லிக் கொண்டு முன்னெழுந்து வந்த பாஜக, எழுந்த வேகத்தில் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பொய்யின் மீதும் அசத்தியத்தின் மீதும் கட்டியெழுப்பப்படும் கோட்டைகள் நீண்ட காலம் தாக்குபிடிக்காது என்பதற்கு இலக்கணமாக, மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவுக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வி, அக்கட்சி இதுவரை மறைத்து வைத்திருந்த பல உண்மைகள் திமிறிக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்குச் சரிந்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.

தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக முன்வைக்கப் பட்ட  பாஜகவின் உருவாக்கத்துக்குப் பின்னால் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உறைந்து கிடப்பதை இன்று நாட்டு மக்கள் தெளிவாகப் புரியத்துவங்கி விட்டனர். அதுவும் அக்கட்சியின் மிக மூத்தத் தலைவரின்(ஜஸ்வந்த் சிங்) வாயாலேயே பாஜகவின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட அத்வானியின் பொய் முகத்திலிருந்து இந்திய சுதந்திர வரலாற்றின் மிக முக்கிய கட்டங்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியானதும் அக்காரணத்திற்காகவே அவரைக் கட்சியை விட்டே நீக்கியதன் மூலம் இதுநாளும் பாஜக தனக்கு, "கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள்" எனப் பூசி வந்த சாயம் வெளுத்துப் போனதைத் தெள்ளத் தெளிவாக நாட்டு மக்கள் புரிந்து கொண்டதோடு,  இதுநாள் வரை இந்திய அரசியல் குறித்துத் தங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டம் வந்து விட்டது என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
"kavianban" KALAM, Adirampattinam:
ஞாலத்தில் உண்மை நிரூபிக்கும் வண்ணமாய்
காலத்திற் கேற்ற கருத்து.

-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
1

September 25, 2009 22:05
0
Sabeer ahmed Vadagal:
எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் நம் நாட்டில் வலிமை பெறும், இன்ஷா அல்லாஹ்.
___________________
அன்புச் சகோதரர் சபீர் அஹ்மது,
உங்களுக்காக : http://www.satyamargam.com/TamilTyping
- சத்தியமார்க்கம்.காம்
2

October 01, 2009 21:36

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு!

வின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் பின் வருமாறு:

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் ஆய்வு இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி!
Twitter
RSS
YouTube
English