சத்தியமார்க்கம்.காம்

ஷவ்வால் நோன்பு! print Email
தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள்
புதன், 16 செப்டம்பர் 2009 19:42

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

"ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவருக்குச் சமமாவார்". (ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

இன்னும் சிலர் அறியாமையால் இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர் என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு இந்த ரமளான் முதல் இந்த நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

ரமளான் முழுவதும் நோன்பு இருந்து தொழுகையை நிறைவேற்றி அதிகமதிகம் குர்ஆனை ஓதி நன்மைகள் பல செய்து ரமளான் முடிந்த மறுநாள் பெருநாள் தொழுகை தொழுதவுடன் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் பிற கேளிக்கையான காரியங்களிலும் நம்மை மூழ்கச் செய்யும் ஷைத்தானின் வலையில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வோமாக.

நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் எனும் அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மை என்பதுடன் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகளுக்கு 6௯x10 = 60 நோன்புகள் ஆக 300 + 60 = 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு இதில் இருக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.

மேலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் இதை நோற்று வந்தால் நாம் காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போல் ஆகும் என்றும் நபி மொழிகள் உள்ளன. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல் படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம ஸஹாபா பெருமக்கள் (நபித்தோழர்கள்) சரித்திரங்கள் சான்று பகன்று வருகின்றன.

இன்று நமக்கு இந்த நன்மைகளின் மகிமை தெரியாது. ஆனால் நாளை நமது நன்மைகளும் தீமைகளும் நிறுக்கப்படும் போது நமது ஒவ்வொரு சிறிய நன்மையின் மகிமையும் அதேபோல் இன்று சர்வ சாதாரணமாக அலட்சியமாக நாம் செய்து வரும் (பட்டியல்களில் அடங்காத) ஒவ்வொரு தீமையின் பெரும் பாதிப்பும் அதன் பயங்கர இழப்பையும் காண முடியும் என்பது உறுதி.

நம்முடைய கடந்த நாட்களில் எதையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம்முடைய இன்றைய நாளை நம்மால் முயன்று சீராக்கிக் கொள்ள முடியும் அதே நிலையில் முயன்று உறுதியாக சீராக நம்முடைய நாளைய வாழ்க்கையையும் அதன் வழிமுறைகளையும் இறை நாட்டத்துடன் அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் அதே நிலையில் இறுதி மூச்சு வரை இருக்க வாய்ப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதற்கும் இஸ்லாமிய வரலாற்றினை தமது உன்னதமான தியாகங்களின் மூலம் சிறப்பித்துச் சென்ற சிற்பிகளான பிலால் (ரலி),கப்பாப் (ரலி), யாசிர் (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி) போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்களின் கடந்தகால மற்றும் இறுதிகால வாழ்க்கையில் மிகவும் தெளிவான அழகான படிப்பினைகள் உள்ளன.

இவற்றையும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையில் எப்போது நாம் இவ்வுலகில் அமல்கள் செய்யும் நல் வாய்ப்புகளை இழந்தவர்களாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து விடுவோமோ தெரியாது என்பதால், வெறும் நன்மைகள் மட்டுமே பயனளித்து நம்மைக் காக்கும் அந்த நிலையான மறு உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அதிகப்படுத்த முனைவது மிகவும் அவசியம் மட்டுமல்லாது அறிவுடைய செயலாகவும் இருக்கும்.

ஷவ்வால் மாத நோன்பினைப் பற்றி அறிந்து அதையும் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ரமளான் முழுவதும் பேணுதலுடன் இருந்த முஸ்லிம்களில் பலர் ஷவ்வால் ஒன்றில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு என்று பொதுவாக பெருநாளுக்கு முந்தைய மாலை முதல் நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் நேரத்தைக் கழித்து விட்டு பெருநாள் அன்று பஜ்ர் தொழுகையும் தவறும் நிலையில் தூங்கத் துவங்கிவிடுகின்றனர். இது பெருநாள் கழித்து வரக்கூடிய மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அடுத்த ரமளான் வரை பலருக்கு இந்த நிலை நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

ரமளானில் தொழுகைக்கு அழைப்பு விடுத்த பாங்கோசைகள் இன்று ஏன் காதுகளில் விழாதது போல் செயல் படுகின்றோம்? அதானுக்கு முன்னர் பள்ளியில் கூடிய நாம் இன்று ஏன் அதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானுடன் கூடும் விதமாக செயல் படுகின்றோம்? சுவனம் தான் இலட்சியமென்றால் ஏன் இந்த அலட்சியம்? இது தான் நம் மூலதனமா? இதுதான் நமது தக்வாவின் வெளிப்பாடா?

அல்லாஹ் நம்மை இது போன்ற நிலையில் இருந்து பாதுகாப்பானாக! எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாம் நமது ஈமான், தொழுகை, தக்வா போன்றவற்றினை விட்டுக் கொடுக்காமல் செயல் பட வேண்டும். இவற்றினை இலகுவாக்கும் அடிப்படையே தொழுகை என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா? ஒவ்வொரு தொழுகையையும் தவறாமல் இயன்ற வறை ஜமாத்துடன் தொழ முயல வேண்டும், வீடுகளிலும் நாம் சுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் முழுக்க ஓதிய குர்ஆனை ஷவ்வாலிலும் (பொருளுடன்) ஓதவேண்டும். ஷவ்வாலுக்குப் பின்னரும் தினமும் ஓத வேண்டும், ஷவ்வாலில் மீண்டும் பள்ளிகள் தொழுகையாளிகள் இன்றி காணப்படும் நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயல்பட்டால் நமக்கும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முழுமையாக பயனளிக்கும்.

ஒருவரிடம் தக்வா நிலைபெற்றிருப்பதன் வெளிப்பாடு அவருக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் பலனுடையதாக நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும், என்ன வேறுபாடு? அதேபோல இறைநம்பிக்கையுள்ள சமுதாயத்திற்கும் இறைநம்பிக்கையற்ற சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்ற நிலை தான் ஏற்படும்.

இதர மதத்தினர்களின் சில பெருநாள்கள் போல் அன்று மட்டும் சிறப்பித்துக் கொண்டாடி,சில நேரங்களில் அதன் திளைப்பில் தனக்கும் தன் சமுதாயத்திற்கும் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பையும் இழப்பையும் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமான ஒரு சிலர்களின் செயலுக்கும் பெருநாள் எனும் பெயரில் மதிமயங்கி செயல்படுவதிலிருந்தும் முஸ்லிம்களின் பெருநாளும் செயல்பாடும் எந்நேரமும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.

இதில் நாம் பார்க்க வேண்டியது நம் குடும்பத்தை, நம் உறவை, நம் கட்சி, இயக்கம், நம் மதம் அல்லது சமுதாயத்தை சார்ந்தோர் என்று அல்லாமல் யாரிடம் இது போன்ற சமூக சீர் கேடுகள் காணப்படினும் எச்சரித்துக் கண்டித்துச் சீர்திருத்த முனைய வேண்டும்.

ஒரு நாள் "பெருநாள்" எல்லாம் கூடும் என்று கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது, மனிதனுடைய 24 மணி நேர வாழ்க்கைக்கும் வழி வகுத்த இஸ்லாமிய மார்க்கம் இதற்கும் ஒரு வரம்பு விதித்துள்ளது, அதனுள் இருந்தே நாம் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது.

ரமளானில் நாம் பெற்ற இந்த நோன்பும் பயிற்சியும் அதன் பலன்களும் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருப்பதை காண முடிகிறது. பெருநாளை மகிழ்வுடன் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் பெருநாளைக் கொண்டாடிய உடன் பெருநாளுக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை நாம் நோற்பது மூலம் தொடர்ந்து இன்னும் மற்ற சுன்னத்தான திங்கள், வெள்ளி மற்றும் மாதம் மூன்று நோன்புகள் போன்ற நோன்புகளும் நோற்கும் ஆர்வம் ஏற்படலாம். அதேபோல் தொடர்ந்து குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் என்று எல்லா நல்ல அமல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கலாம். அல்லாஹ் நம்மை நன்மைகளின் பால் விரைந்தோடுபவர்களாகவும், தீமைகளை விட்டு வெருண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

ரமளான் மூலம் நாம் பெற்ற "தக்வா" (இறையச்சம்) எனும் அருள் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வோமாக!

அதனை (இறையச்சத்தை) நமது இறுதி மூச்சுவரை பேணிப் பாதுகாத்து ஈமானுடன் நபிவழியில் வாழ்ந்து வரவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக மன உறுதியுடன் செயல்பட முனைவோமாக!

வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


பிறை 1பிறை 2பிறை 3பிறை 4பிறை 5பிறை 6பிறை 7பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 பிறை 14 பிறை 15 பிறை 16 பிறை 17 பிறை 18 பிறை 19 பிறை 20 பிறை 21 பிறை 22 பிறை 23 பிறை 24 பிறை 25 பிறை 26

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
முஹம்மது:
இப்னு ஹனீஃப்!
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஷவ்வால் 2 முதல் தொடற்சியாக ஆறு நோன்புகள் நோற்க வேண்டுமா

அல்லது

அந்த மாதத்தில் எங்காவது தொடற்சியாக ஆறு நாட்கள் நோற்க வேண்டுமா

அல்லது

விட்டு விட்டு வேவ்வேறு ஷவ்வாலின் நாட்களில் ஆறு நோன்புகளை -நம் இஷ்டப்பட்ட ஷவ்வாலின் நாட்களில்- நோர்ருக்கொள்ளலாமா.....

---என்பதனை ஹதீஸ் விளக்கங்களுடன் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
1

September 17, 2009 18:25
0
ஃபெரோஸ்கான்:
அஸ்ஸலாமு அலைக்கும்
ஷவ்வால் மாதம் 6 நோன்புகள் வைப்பது சுன்னத். பொதுவாக பெண்கள் மாதவிடாய் காரணமாக ரமலானில் சில நோன்புகள் விட்டிருப்பார்கள். ஷவ்வாலில் ரமலானில் தவற விட்ட நோன்புகளை வைத்த பிறகு தான் ஷவ்வால் 6 நோன்பை வைக்க வேண்டுமா அல்லது ஷவ்வால் மாதம் முடிந்த பிறகும் ரமலானில் விடுபட்ட நோன்புகளை வைக்கலாமா
2

September 22, 2009 15:31
0
muslim:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார். (புகாரி 1950)

ரமளானில் விடுபட்ட கடமையான நோன்பை அடுத்த ரமளான் மாதத்திற்கு முன் - ஷஅபான் இறுதி வரை நோற்றுக் கொள்ளலாம்.



3

September 22, 2009 23:30
0
இப்னு ஹனீஃப்:
வ அலைக்குமுஸ்ஸலாம்

// எவர் ஒருவர் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". (ஆதாரம்: முஸ்லிம்//

இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு ஷவ்வால் 2 முதல் தொடற்சியாக ஆறு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்ற ஒரு கருத்தும்...

ஷவ்வால் மாதத்தில் தமது வசதிக்கு ஏற்ப, ஒரிரு நோன்புகள் என்று விட்டு விட்டு அல்லது தொடர்ச்சியாக ஆறு நோன்பாக நிறைவேற்றலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஆகையால் எது தமக்கு இயலுமோ அவ்வாறு இதை நிறைவேற்றிக் கொள்ளலாம், என்றாலும் 2 முதல் 6 வரை வைப்பது சிறந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனெனில் அது தெளிவாக மேற்கண்ட ஹதீஸை சந்தேகத்திற்கிடமின்றி செயல் படுத்தியதாக அமைக்கிறது.

அதே போல் கடமையான நோன்புகள் விடு பட்டு இருந்தால் அதை முதலில் வைக்க வேண்டும் பின்னர் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால் சில தவிர்க்க முடியாத பிரயாணம் நோய் போன்ற காரணங்களால் விடு பட்ட நோன்பை ஷவ்வாலின் ஆறு நாட்கள் மீதி இருக்கும் வரை நோற்க இயலாத நிலையில் ஷவ்வால் நோன்பு ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் என்பதாலும்,

ரமலானில் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்க அனுமதியுள்ளது என்பதாலும் இந்நிலையில் ஷவ்வால் நோன்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது சரியான கருத்தாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
4

September 26, 2009 00:57
0
INTJ:
Published the above article with thanks:

http://www.intjonline.in/2091.do
5

September 22, 2011 05:16

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:168 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் இஸ்லாம் ஷவ்வால் நோன்பு!
Twitter
RSS
YouTube
English