| "ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம் |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் | ||||
| சனி, 12 செப்டம்பர் 2009 00:25 | ||||
|
பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?" என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?" என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும் திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண். இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".
நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.
1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார். தகவல் : சகோ. நூருத்தீன், சியாட்டில், யூ எஸ்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]()
இத்தகவல் உண்மையே; இறையருளால் நான் அமெரிக்காவில் இருந்தபோழ்து, உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போழ்து ,'இஸ்லாம் என்றால் என்ன?" என்பதே அம்மக்களின் வினாவாகவிருந்தது. நானும் நிறைய பேர்கட்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்துள்ளென். குறிப்பாக, "ஜோஹுவா" பிரிவினருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்- "ஜுமஆ" நேரம் அம்மக்கள் இஸ்லாத்தில் இணைவதை கண்டுள்ளேன்."ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை உள்ளது" என்பதற்கிணங்க, 9/11 நிகழ்வுக்குப் பின்னரே அமெரிக்காவில் "இஸ்லாம் என்பது தான் என்ன?" என்ற கேள்வி எல்லார் மனத்திலும் உருவானது-கருவானது; இன்று இஸ்லாம் அங்கே வேகமாக பரவி வருவதற்கு இக்கட்டுரை ஓர் எடுத்துக்காட்டாகும்.
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம் 1
September 13, 2009 20:00
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |