முகப்பு

நோன்பில் சலுகையும் பரிகாரமும்

மீண்டும் ஒரு ரமளான்மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12

நோயாளிகள்/பயணிகள்:

பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

"... فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُون

"... உங்களில் அம்மாதத்தை அடைபவர், அம்மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும். எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (நோய்,பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில்(விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதான முறையை விரும்புகின்றானேயன்றி, உங்களுக்கு இடரளிக்கும் முறையையன்று. இச்சலுகை, (ரமளானில் விடுபட்ட) நாட்களை நிறைவு செய்ய வாய்ப்பளித்ததற்கும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்கும் அல்லாஹ்வின் மேன்மையை நீங்கள் போற்றி, நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் (அல்குர்ஆன் 2:185).

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் பயணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்" என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டு விட்டார்கள். அவர்களுடன் பயணித்தவர்களும் நோன்பை விட்டு விட்டனர். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1944).

சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

"... فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

"... உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய்,பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலுவிழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்துணை அதிகம் கொடுத்தாலும் - (ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் - நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும் (அல்குர்ஆன் 2:184).

'ஃபித்யா" (பரிகாரம்):

முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் நோன்பை விட்டு விட்டு 'ஃபித்யா" (பரிகாரம்) கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது மேற்காணும் வசனத்தின் மூலம் தெளிவாக்கப் பட்டுள்ளது.

மாதவிடாய்ப் பெண்கள்:

மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பை விட்டுவிட பெண்களுக்கு அனுமதி உள்ளது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

"...ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304).

"நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களா செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்" (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி).

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும்:

ரமளான் மாதத்தின் நோன்பை, கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டு உள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களாச் செய்ய வேண்டும்.

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்" (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

ரமளானில் நாம் பெற்ற நோன்பு எனும் பயிற்சியை நமது இறுதி மூச்சுவரை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆகவும் நாமும் நாம் நேசிக்கும் நம் குடும்பத்தினரும், நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் நேர்வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாகவே மரணித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழையும் பாக்கியத்தைப் பெறுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

நமது எல்லாப் பிழைகளைகளையும் மன்னித்து நமது அமல்களையும் துவாக்களையும் அந்த வல்ல நாயன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!

- ஆக்கம்: இப்னு ஹனீஃப்

பிறை 1பிறை 2பிறை 3பிறை 4பிறை 5பிறை 6பிறை 7பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11

Comments:

கருத்துக்கள்   

முனாஸ் சுலைமான் இலங்கை.
0 #1 முனாஸ் சுலைமான் இலங்கை. 2009-09-03 00:21
ரமளானில் நாம் பெற்ற நோன்பு எனும் பயிற்சியை நமது இறுதி மூச்சுவரை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆகவும் நாமும் நாம் நேசிக்கும் நம் குடும்பத்தினரும ், நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் நேர்வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாகவே மரணித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழையும் பாக்கியத்தைப் பெறுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக . நல்ல கருத்தும் கதீசும் குரான் வசனமும் இன்னும் வரட்டும் நன்றி சகோதரருக்கு.
Quote | Report to administrator
அபூ பௌஸீமா
0 #2 அபூ பௌஸீமா 2009-09-04 00:15
'கர்ப்பிணிகளுக் கும் பாலூட்டுவோருக்க ும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்" (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது கர்ப்பிணிகளுக்க ும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ம் நோன்பு வைப்பதிலிருந்து சலுகையளிக்கப்பட ்டுள்ளது என்று. களா செய்ய வேண்டுமென்று நீங்கள் எதை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறீர்கள்?

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
abdul azeez
0 #3 abdul azeez 2009-09-04 05:23
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ அபூ பௌஸீமா இந்த ஹதீதையே 'கர்ப்பிணிகளுக் கும் பாலூட்டுவோருக்க ும் பொருத்திப் போட்டுள்ளார் போல் தோன்றுகிறது.

// "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்க ள்.(அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி).//

மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
…அபூ பௌஸீமா
0 #4 …அபூ பௌஸீமா 2009-09-04 16:40
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சகோ. அப்துல் அஸீஸ், உங்கள் கருத்துச் சரிதான். கட்டுரையாளர் இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்துத் தன் கருத்தை எழுதியிருக்கிறா ர் போல் தெரிகிறது.

முன்னைய சலுகை நிபந்தனையோடு கூடியது. பின்னையது நிபந்தனையற்ற சலுகை. ஹதீஸ்களை வாசித்துச் சிந்திக்கும்போத ு அது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, இவ்விரு ஹதீஸ்களும் இணைத்துப் பார்க்க முடியாத தரத்திற்கு ஆட்படுபவை.

ஆக, கற்பினிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ம் நோன்பு நோற்பதிலிலிருந் து நிரந்தரச் சலுகை இருக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
M முஹம்மத்
0 #5 M முஹம்மத் 2009-09-05 03:08
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அபு பௌஸீமா அவர்களே

நோன்பு சலுகைகள் இரண்டு விதமானவை
முதலாவது தற்காலிக சலுகை உதாரணமாக
பிரயாணம் , மாதவிடாய், நோயாளிகள் இவர்கள் நோன்பை தற்காலிகமாக விட்டு விட சலுகையுள்ளது.
அதே நேரம் பிரயாணம் முடிந்ததும், மாதவிடாய் நாட்கள் கழிந்ததும், நோய் குணம் அடைந்ததும் அதை நிரைவு செய்ய வேண்டும் ...இதில் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

அதே போல் தீராத நோயுடையவர்கள், பலவீனமான முதியவர்கள் : இவர்கள் தமது ஒவ்வொரு விடுபட்ட நோன்பிற்கும் பகரமாக ஒரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் இது பித்யா எனப்படும்.

பார்க்க 2 : 184

ஆக இங்கு நோன்பு நோற்க இயலாத காரனங்களாக கஷ்டம், சிரமங்கள், பலவீனம் போன்றவையே சலுகையளிக்க காரனமாக உள்ளன என்பதை கவனிக்கவும். அதே போல் அந்த தற்காலிக நிலை மாறியதும் நோன்பு நோற்கவும், அந்த நிலை மாறாதவர்கள் பித்யா வழங்கவும் வேண்டும்.

கர்ப்பமாக இருப்பது மற்றும் பாலூட்டுவது என்பதும் ஒரு தற்காலிக நிலை என்பதால் இந்த சலுகையை பயன் படுத்தி விடுபட்ட நோன்பை அந்த நிலை மாறியதும் கர்பிணி பிரசவித்து பாலூட்டிடும் காலமாகிய பலவீன நிலை மாறியதும் அந்த நோனபை நிறைவு செய்ய வேண்டும் என்று விளங்கலாம்.

அதே நேரம் மாதவிடாய் காலம் தவிர மற்ற நிலைகளில் நோன்பை நோற்க நேரடியான தடையில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்..

பிரயாணிகள், சாதாரண நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் தமக்கு சக்தியிருந்து நோன்பிருக்க நாடினால் அதற்கும் த்டையில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
அபூ பௌஸீமா
0 #6 அபூ பௌஸீமா 2009-09-06 00:27
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சகோ. எம். முஹம்மத் - நீங்கள் குறிப்பிட்டுள்ள வாறு முதலாவது தற்காலிக சலுகைக்கான உதாரணம் சரிதான். இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஃபித்யா சம்பந்தமாகக் குறிப்பிட்டுள்ள கருத்தும் சரியானதே.
கர்ப்பமான நிலை, பாலூட்டும் காலம் : தற்காலிக நிலைதான்! ஆனால் அதன் தன்மை மிகப்பாரதூரமானத ு. கர்ப்பமான ஒரு பெண் பிள்ளைப் பேற்றிற்காக சற்றேரக்குறைய பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். பிள்ளை பிறந்ததன் பின்னால் அக்குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பால் கொடுக்க வேண்டும். ஆக மொத்தமாக மூன்று வருடங்கள் நோன்பு நோற்க இயலாது. இதற்கிடையில் ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் இடையில் ஒரு வருடம், ஒன்றரை வருடம், இரண்டு வருடம் என்ற நிலைப்பாடும் மனித சமூகத்தில் பரவலாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களில ் பல வருடங்கள் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முடியாமல் போவதை தெளிவாகக் காண முடிகிறது.

அந்த முதலாவது ஹதீஸ் இந்தச் சந்தர்ப்பத்தை மிகத்தெளிவாக உணர்த்துகிறது. மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்து சிந்தித்தால் இதன் தாற்பரியம் புரியும்.
// 'கர்ப்பிணிகளுக் கும் பாலூட்டுவோருக்க ும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்" (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)//

இஸ்லாமிய கட்டளைகள் யாவும் இலகுவையும் யதார்த்தத்தையும ் உள்ளடக்கியே இருக்கும்.
கல்குலேஷனைப் போட்டுப் பாருங்கள். விளக்கம் கிடைக்கும்.
நமது நன்மைக்கே, அல்லாஹ் சலுகைகளை நிபந்தனையோடும் நிபந்தனையின்றிய ும் கொடுத்திருக்கிற ான். குர் ஆனும் ஹதீஸும் காட்டித்தராத எதுவும் நல்லது போல் தோன்றிலாம் நல்லதாக இருக்க முடியாது. அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
M முஹம்மத்
0 #7 M முஹம்மத் 2009-09-07 07:13
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அபு பௌஸிமா அவர்களே

// உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய்,பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலு விழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்துணை அதிகம் கொடுத்தாலும் - (ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் - நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும் (அல்குர்ஆன் 2:184). //

இந்த வசனத்தை கவனமாக பார்த்தால் ஒரு விஷயம் புரியும் அதாவது நோன்பு அனைவரும் நோர்க வேண்டும் அல்லது பரிகாரம் அளிக்க வேண்டும்.

அனவரும் என்பதில் சலுகை உள்ள பிரயாணிகள், நோயாளிகள், மாதவிடாய் பெண்கள் பின்னர் அட்ர்ஹை நிறாஇவு செய்வதில் தங்களுக்கு மாற்று கருத்தில்லை, அதே போல் தீராத நோயுடையவர் முதுமையடைந்தவர் ஒரு ஏழைக்கு ஒரு நாள் வீதம் பித்யா வழங்க வேண்டும் எனும் போது,

கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் பித்யாவும் வழங்காமல் நோன்பை மீட்காமல் இருப்பதற்கு தெளிவான சான்று மேற்கண்ட வசனத்திலும் நபி வழியிலும் இல்லை. 2: 184 வசனத்தின் இறுதியை கவனிக்கவும்

//(ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் - நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும் (அல்குர்ஆன் 2:184). //

ஆக இவர்கள் கர்ப்பிணியாக இருந்ததால் நோற்காமல் இருந்த நோன்பை பின்னர் நோற்காமல் இருப்பது இந்த பெரும் நன்மையை இழக்கும் செயலாகும் என்பதை கவனத்தில் கொண்டால் இது தற்காலிக சலுகை என்பதை விளங்கலாம். நிரந்தர சலுகை என்பது சந்தேகத்திற்குர ியதாக உள்ள போது தெளிவான ஒன்றன் படியே அமல் செய்தல் வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
M அப்துல்லாஹ்
0 #8 M அப்துல்லாஹ் 2009-09-08 00:54
// இஸ்லாமிய கட்டளைகள் யாவும் இலகுவையும் யதார்த்தத்தையும ் உள்ளடக்கியே இருக்கும்.
கல்குலேஷனைப் போட்டுப் பாருங்கள். விளக்கம் கிடைக்கும்.
நமது நன்மைக்கே, அல்லாஹ் சலுகைகளை நிபந்தனையோடும் நிபந்தனையின்றிய ும் கொடுத்திருக்கிற ான். குர் ஆனும் ஹதீஸும் காட்டித்தராத எதுவும் நல்லது போல் தோன்றிலாம் நல்லதாக இருக்க முடியாது. அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.//

குர் ஆன் அஹதீஸில் இல்லாத அக்ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்ப்டை.

ஆக .....நோன்பு எனும் கடமையை பலவீனமான முதியவர்கள் தீராத நோயுடையவர்கள் உட்பட அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் அதாவது தாம் நோற்பது அல்லது பித்யா அளிப்பது என்று நிறைவேற்ற வேண்டும் எனும் போது , கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு சலுகை என்பதை மீண்டும் நோற்கவும் தேவையில்லை பித்யா வழங்கவும் தேவையில்லை என்று விளங்குவதும்,

"உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய்,பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலு விழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்துணை அதிகம் கொடுத்தாலும் - (ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் - நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும்" (அல்குர்ஆன் 2:184).


நோன்பு மற்ற நாட்களிலும் நோற்க தேவையில்லை என்று குர் ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக இல்லாத ஒரு கருத்தை கொள்வது அவர்களின் நன்மைகளை இழக்க செய்வது மட்டுமின்றி புதிதாக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்து ம் குற்றத்திற்கும் ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது.

அல்லாஹ் பாதுகாப்பானாக.
Quote | Report to administrator
அபூ பௌஸீமா
0 #9 அபூ பௌஸீமா 2009-09-10 18:34
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

ஆம். கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் பித்யா கொடுக்கத்தான் வேண்டும். அது தேவையில்லாதது போன்ற விளக்கம் பொதிந்திருந்தால ் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளவும். அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்திக் கொள்ளுங்கள்.

இனி, எனது முன்னைய பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
S.S.K.
0 #10 S.S.K. 2011-08-14 00:20
ASSALAMU ALAIKUM

Brother Abu Fausimaa Pls refer belwo link for further answer to your question

onlinepj.com/.../...
Quote | Report to administrator
ஜபருல்லாஹ் இஸ்மாயில்
+2 #11 ஜபருல்லாஹ் இஸ்மாயில் 2014-07-20 02:51
அன்பிற்கினிய அட்மின் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சத்தியமார்க்கம்.காம் தளத்தின் வாசகன் என்பதில் நான் மகிழ்வடைகிறேன். உங்களது பதிவுகள் எல்லாமே பாதுக்காக்கப்ப் டவேண்டிய பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
இணையத்தில் மட்டுமே காணும் குறையை போக்கவேண்டும்.
தற்போது கணிணி இல்லாதவர்கள் கூட மொபைல் போனை உப்யோகிக்கிறார் கள். மொபைல் உபயோகம் கணிணியை விட அதிகமாகவே பயன்பாட்டில் உள்ளது.
சத்தியமார்க்கம் .காம். அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்த தளத்தை ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் கொண்டுவந்தால் இன்னும் பலரும் பயன் அடைவார்கள் என்பது என் போன்றோர்களின் ஆசை.
நிவாகம் இதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டுகிறே ன்.
வல்ல இறையோனிடம் உங்களுக்காக உங்களது சேவைகளுக்காக துஆ செய்தவனாக.....
-என்றும் அன்புடன்,
ஜபருல்லாஹ் இஸ்மாயில்
Quote | Report to administrator

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh


Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


மக்கா நேரலை

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்