சத்தியமார்க்கம்.காம்

வீணாகும் நேரமும் உணவும் print Email
தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள்
செவ்வாய், 01 செப்டம்பர் 2009 04:40

வீணாக்க வேண்டாம்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11

இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.

நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் "இக்லாஸ்" எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக! எதையும்) வீண் விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)

நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)

நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

பிறை 1பிறை 2பிறை 3பிறை 4பிறை 5பிறை 6பிறை 7பிறை 8 | பிறை 9 | பிறை 10

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
mohammedrizvi:
மாஷா அல்லாஹ், அருமையான பதிவு.
1

September 02, 2009 11:36
0
A.Abdul Hameed:
இவ்வாறு உணவை வீணாக்கும் நபர்களுக்கு இனியாவது வீண் விரயம் செய்யாமலிருக்க எல்லாம் வல்ல இறைவன் ஹிதாயத் செய்வானாக, ஆமீன்.
2

September 04, 2009 08:21
0
M.J. SYED ABDULRAHMAN:
Sorry Fondly not weast your Time and Food, Please food-stuff from ALLAH

Thank you Good wishes,
3

August 23, 2010 15:38
0
abu hudhaifa:
பல அருள்களைத்தாங்கி வந்திருக்கும் ரமழானை நாம் நல்ல முறையில் பயன் படுத்தி,நம்மிடமிருக்கும் கெட்ட குணங்களையும்,நடத்தைகளையும் வேறோடு பிடிங்கி எறிந்து நல்லவற்றில் அதிக வேகத்துடனும்,விவேகத்துடனும் நம்மை பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும்.

//இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது//
இதை தினம் தினம் நான் வசிக்கும் கத்தர் நாட்டில் கண்கூடாக பார்த்து நெஞசம் குமுறிக்கொண்டிருக்கிறேன்.குப்பைத்தொட்டியைப்பார்க்கும் போது சில மணித்துளிகள் சோமாலியர்களின் எலும்புக்கூடு உடம்புகளை நினைத்து கண்கள் ரத்தம் வடிக்கின்றன.இலை தலைகளையும்,புற்பூண்டுகளையும் சாப்பிடும் அவர்களின் பரிதாப நிலையைக்கண்டால் கல் நெஞ்சமும் உருகி விடும்.ஆனால் இந்த அரபுகளின் கண்களுக்கு அது ஒரு பொருட்டாகவே தென் படுவதில்லை.
4

August 24, 2010 03:55
0
A.K.IRFANULLAH:
INDA RAMALAAN MADA SIRAPPOGALAI UNARNDU ULAHA MUSLIMKAL VETRIYALARKALAAHA AHA VENTUM
5

August 24, 2010 14:22
0
mohamed asmeen:
எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.மாஷா அல்லாஹ், அருமையான பதிவு.1
6

August 24, 2010 15:44
0
SABEERAHMED:
ALHAMDULILLAH THANS
7

August 14, 2011 12:43

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் இஸ்லாம் வீணாகும் நேரமும் உணவும்
Twitter
RSS
YouTube
English