சத்தியமார்க்கம்.காம்

தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் print Email
தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள்
ஞாயிறு, 30 ஆகஸ்டு 2009 04:29

நோன்பு என்பது கேடயம்மீண்டும் ஒரு ரமளான்: பிறை 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَدَعْ قَوْلَ ‏ ‏الزُّورِ ‏ ‏وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ‏

"யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை" (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903).

சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.

சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.

அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி - 1896).

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الصِّيَامُ ‏ ‏جُنَّةٌ ‏ ‏فَلَا ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَخُلُوفُ ‏ ‏فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي ‏ ‏الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ‏

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பெச்சுகளைப் பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஒரு நோன்பாளியைத் தீயசொல்லால் திட்டினாலோ வீண் வம்புக்கு வந்தாலோ "நான் நோன்பாளி" என்று அவர் இருமுறை கூறிவிடவும். என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம், அல்லாஹ்வின் கணிப்பில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறினான்: எனக்காக நோன்பாளி தம் (ஹலாலான) உணவையும் குடிப்பையும் உடலிச்சையையும் துறந்து விடுகிறார். (அவரது) நோன்பு எனக்கு மட்டுமே உரியது.அதற்கு நானே கூலி வழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்) ஒரு நன்மை என்பது பத்து மடங்குகள் பெருகக் கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .

பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக்  குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.

மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!

- தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் இஸ்லாம் தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்
Twitter
RSS
YouTube
English