சத்தியமார்க்கம்.காம்

மீண்டும் ஒரு ரமளான் print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
வெள்ளி, 21 ஆகஸ்டு 2009 21:20

ரமளான் பிறை 1


ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கட்டாயம் தங்கள் நன்றியினைச் சொல்லாலும் செயலாலும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,

'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன".... - (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும்,

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்.

ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்றுத் தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.


இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ரமளானை எதிர்பார்த்து அதில் நோன்பு நோற்ற நிலையில் அதிகமான வணக்க வழிபாடுகள், தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், அதிகமாக மார்க்க விஷயங்களில் ஈடுபடுதல் போன்று நன்மைகளில் தமது நேரத்தை முஸ்லிம்கள் அதிகமாகக் கழிக்கின்றனர். தம்மிடமிருந்து சொல்லாலோ செயலாலோ பார்வையாலோ எந்த ஒரு தவறும் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லாவித சிறிய பெரிய பாவங்களிலும் இருந்தும் நோன்பாளியான நிலையில் தவிர்த்துக் கொள்கின்றனர்.


முஸ்லிம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நோன்பு நோற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமது ஐவேளைத் தொழுகைகளை மற்ற நாட்களில் சரியாக நிறைவேற்றாதவர்களும்கூட மிக ஆர்வமாக இம்மாதத்தில் நோன்பு நோற்பதையும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதையும் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதையும் காணலாம்.


அதிகமாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முஸ்லிம்களிடம் இம்மாதத்தில் மிகுந்து இருப்பதைக் காணமுடியும். "எப்படியாவது அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்று கொள்ள வேண்டும்; தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற்று மீட்சி அடைந்திட வேண்டும்" என்று முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.


புனித ரமளானின் ஒரு மாத கால அளவில் காணப்படும் நற்செயல்களின் மீதான ஆர்வம் நோன்பு மாதம் முடிந்ததும் மீண்டும் தலைகீழாக மாறிவிடும் நிலையைச் சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. நோன்பின் சமயங்களில் செய்த நல்லறங்கள், பேணிய ஒழுக்கங்கள், காட்டிய நற்பண்புகளை அடுத்த பதினொன்று மாதங்களுக்குப் பூட்டி வைக்கும் நிலையைக் குறித்து இச்சமூகம் இன்னும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? புனித ரமளான் மூலம் தான் அடைந்த நன்மை என்ன? அதற்கான பிரதிபலன் பெறும் தகுதி தனக்கு உள்ளதா? எனத் தன்நிலையைக் குறித்து சுயபரிசோதனை செய்ய முஸ்லிம்கள் தவறி விடுகின்றனர்.


ஆக்கம்: இப்னு ஹனீஃப்

 

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

 

குறிப்பு: இரண்டாண்டுகளுக்கு முன்னர் சகோதரர் இப்னு ஹனீஃப் நமக்கு ஆக்கி அளித்த இத்தொடர், சென்ற ஆண்டு நான்கு பகுதிகளாக நமது தளத்தில் பதிவேறியது.

அதைக் குறுந் தொடர்களாகப் பிரித்து, இவ்வாண்டு நோன்பின் ஒவ்வொரு நாளும் மீண்டும் நன்றியுடன் வெளியிடுகிறோம்.

வாசகர்கள் படித்துப் பயன் பெறுக!

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
அபூ ஸாலிஹா:
சத்தியமார்க்கம்.காம் இணைய தளக் குழுவினருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமழான் வாழ்த்துக்கள்!

அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் உன்னதம் உலகமெங்கும் பரவட்டும்!
1

August 21, 2009 23:25
0
இப்னு ஹனீஃப்:
அஸ்ஸலாமு அலைக்கும் ......வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காததஹூ.........

சத்தியமார்க்கம்.காம் இணைய தளக் குழுவினருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாசக அன்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த ரமழான் வாழ்த்துக்கள்!

ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அருளும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் உன்னதமும் சாந்தியும் சமாதானமும் உலகமெங்கும் பரவட்டும்!

இந்த புனித மாதத்தில் நன்மைகளை அதிகரிக்கச் செய்து அவனது வெகுமதியான நிலையான சுவனத்தின் பால் நெருங்கக்கூடிய காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் அதிகப் படுத்திட அல்லாஹ் எளிதாக்குவானாக...

அவனது கோபம் மற்றும் தண்டனையாகிய நரகத்தின் பால் சேர்க்கும் காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் செய்வதிலிருந்து பாதுகாப்பானாக என்று துவா செய்வோமாக....

அல்லாஹ் நமது பிராததனைகளையும் அமல்களையும் ஏற்றுக் கொண்டு அவனது அருளினாலும் கருணாஇயாலும் இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் அளித்திடுவானாக.... ஆமீன்

2

August 22, 2009 04:36

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் மீண்டும் ஒரு ரமளான்
Twitter
RSS
YouTube
English