சத்தியமார்க்கம்.காம்

பழகு மொழி (பகுதி-6) print Email
தொடர்கள் - மொழியியல்
ஞாயிறு, 16 ஆகஸ்டு 2009 18:23

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை)

குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச் சார்ந்து திரியும் ஓசை என்பதாலும் தமிழில் யகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு என்பதாலும் அஃது அரிதாகிப் போனது.


கவிதை புனையும் கவிஞர்கள் ஓசையழகுக்காகக் குற்றியலிகரத்தைப் பயன் படுத்துவர். முன்மொழியின் இறுதி எழுத்து வல்லின உகரக் குறிலாக (கு,சு,டு,து,பு,று) அமைந்து, வருமொழியானது ''கரத்தில் தொடங்கும்போது முன்மொழியின் இறுதி எழுத்தான வல்லின உகரக் குறில், இகரமாகத் திரியும். அவ்வாறு திரியும்போது அதன் ஓசை குன்றி ஒலிக்கும். திரிந்தும் குன்றியும் ஒலிக்கும் இகரமே குற்றியலிகரமாகும்.


காட்டுகள்
:

வீடு+யாது = வீடியாது;

காட்டு+யானை = காட்டியானை;

எழுத்து+யகரம் = எழுத்தியகரம்.

"குழலினிதி யாழினி தென்பதர்தம் மக்கள்

மழலைச் சொற் கேளாதவர்"

எனும் குறளில், "குழல் இனிது" எனும் உகர ஈற்றை, "குழல் இனிதி" என்று குற்றியல் இகரமாக மாற்றிது, வருமொழிச் சொல்லான "யாழினிது"வில் உள்ள யா ஆகும்.


-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- அதி. அழகு


<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி - 4 | பகுதி - 5 >

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
siraj:
ஸலாம்.

இந்தப் பகுதியை அச்செடுக்க முயல்கிறேன்; முடியவில்லை. வழி சொல்லவும்.
1

August 20, 2009 11:53

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» பழகு மொழி (பகுதி-12)

(2) சொல்லியல்சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக்...

» பழகு மொழி (பகுதி-7)

(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை) (1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம் 'உ' என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்

» பழகு மொழி (பகுதி-4)

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள் ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும்.காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்).(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள்

» பழகு மொழி (பகுதி - 1)

(1) எழுத்தியல்நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக்...

» பழகு மொழி! - புதிய தொடர்

பழகு மொழி - முன்னுரை"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர்...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் மொழியியல் பழகு மொழி (பகுதி-6)
Twitter
RSS
YouTube
English