சத்தியமார்க்கம்.காம்

ஹஜ் செல்ல முடிவு செய்துள்ளோர் கவனத்திற்கு! print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
வியாழன், 13 ஆகஸ்டு 2009 23:11
இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை பாஸ்போர்ட் கட்டாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை அவர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால், இனிமேல் அவ்வாறான சிறப்பு அனுமதி மட்டும் உடையோருக்கு ஹஜ் விசா அனுமதிப்பதில்லை என சவூதி அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் செல்ல திட்டமிட்டிருப்போரில் இதுவரை பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு ஹஜ் விசா பெறுவதில் சிக்கல் எழும். இப்பிரச்சனையைப் போக்க, இவ்வாண்டு ஹஜ் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோரில் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாதோரை அனுமதிக்க இயலாது என புதிய உத்தரவு பிறப்பித்துள்ள சவுதி அரசு, தற்போது பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று கூறியுள்ளது.

இவ்வாண்டு பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் பெறுவதற்கான தேதி ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இருப்பினும் இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தகவல் : அபு நிஹான்

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:154 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ''(அவர்கள்) இறந்துவிட்டார்கள்"" என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள். எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஹஜ் செல்ல முடிவு செய்துள்ளோர் கவனத்திற்கு!
Twitter
RSS
YouTube
English