சத்தியமார்க்கம்.காம்

பொருளியல் - (பகுதி-4) print Email
தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள்
புதன், 12 ஆகஸ்டு 2009 22:13

"பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!"

முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' என்ற போர்வையில் லாபம் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஏழை-பணக்காரர்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதே முதலாளித்துவம். வட்டி அதன் இரத்த ஓட்டமாக இருந்து வருகிறது. தனது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள 'வர்த்தக நெறிமுறை'களைக் (Business Ethics) கூட காற்றில் பறக்கவிட்டு தில்லுமுல்லுகள், தகிடுதத்தங்கள் செய்யவும் முதலாளித்துவவாதிகள் தயங்குவதில்லை என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

முதலாளித்துவத்தின் இன்னொரு அடிப்படை 'பொருளாதார மனிதன்' (Homo Economicus) எனும் கோட்பாடு. பொருளாதார நடவடிக்கைகளில் மனிதர்கள் இப்படி-இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என சில பொருளியல் நிபுணர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குடியிருப்புப் பகுதியில் பலசரக்குக்கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் தமது வாடிக்கையாளர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்து வைத்திருப்பார்: 'இவர்கள் நடுத்தர வருமானமுடைய மாதச் சம்பளக்காரர்கள், மாதத்தின் முதல் பாதியில் வீட்டு உபயோக, மளிகைப் பொருட்களை அதிகம் வாங்குவார்கள், விலை ஏற்ற இறக்கங்களில் மிக கவனமாக இருப்பார்கள், இவர்களை நம்பி கடன் கொடுக்கலாம், தேதி பிறந்தவுடன் கடனை அடைத்து விடுவார்கள்' இப்படி எல்லாம் அவரது கணிப்பு இருக்கும். அவரது இந்த மதிப்பீட்டைப் பொருத்தே அவர் கொள்முதல் செய்யும் பொருட்கள், அதன் தரம், விலை, விளம்பரம் ஆகியவை அமையும்.

அது போலவே, சில பொருளியல் நிபுணர்களின் கணிப்புப்படி மனிதர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஜான் கே என்ற பொருளியலாளர், "மனிதர்கள் பொதுவாக சுயநலவாதிகள். உலகாதாய நோக்கம் மட்டுமே கொண்டவர்கள். தனது செல்வ மதிப்பை கணக்கிடுவதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்" என்கிறார். இதுதான் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் 'பொருளாதார மனிதன்'. மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான், சிறு முதலாளிகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை தங்கள் லாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யும் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும், 'பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!' என நியாயப் படுத்தப் படுகின்றன.

 

மனித வாழ்வின் பல நிலைகளில் மாறிக்கொண்டே இருக்கும் அவனது தேவைகளை ஆபிரஹாம் மாஸ்லோ என்ற சமூகவியலாளர் வகைப்படுத்தியிருக்கிறார். மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவனைச் செலுத்தும் உந்துசக்தியாக இருப்பது அவனது தேவைகள்தாம் என்பது அவரது கருத்து.

 

வருமானம் தேடி பட்டணத்திற்கு வருகிறான் ஒரு கிராமத்து இளைஞன். அவனுக்கு இப்போது உடனடித்தேவை உண்ண உணவு, குடிக்க நீர், உடுத்த உடை, படுக்க ஓர் இடம். உடல் சார்ந்த இத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் இப்போது அவனது ஒரே நோக்கம். அவனுக்கு ஒரு வேலை கிடைத்து, இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் அடுத்ததாக அந்த வேலை நிரந்தரமாக வேண்டும், அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், வாடகைக்கு தனி வீடு வேண்டும் என அவனது அடுத்தக் கட்டத் தேவைகள் முன்னுக்கு வரும். இந்தத் தேவைகளும் நிறைவேறிய பிறகு, திருமணம் செய்து குடும்பஸ்தனாகும் ஆவல் பெருகும். இந்த நிலையை அடைந்த பிறகு தனது சுய கவுரவத்தை நிலை நிறுத்தும் விதமாக பதவி, அங்கீகாரம், அந்தஸ்து ஆகியவற்றை அவன் அடைய முற்படுவான்.

மாஸ்லோ-வின் தேவை அடுக்கு


வாழ்வின் இத்தனை நிலைகளிலும் பொருளாதாரத்தை மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அவனது சுய கவுரவத்தேவைகள் நிறைவேறிய பிறகே 'தன்னை அறிய வேண்டும்' என்ற உந்துதல் பிறக்கிறது. ஆன்மீகச் சிந்தனைகளையும் நன்னடத்தைகளையும் வளர்த்துக் கொண்டு உயரிய நோக்கங்களை முன்வைத்துத் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறான் அவன்.

 

இக்கோட்பாட்டின்படி, ஒரு மனிதன் தான் எதிர்பார்க்கும் பதவி, அங்கீகாரம் ஆகியவற்றை அடையுமுன் நற்குணம், நல்லொழுக்கம், ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டான் என்கிறார் அபிரஹாம் மாஸ்லோ. பொருளாதாரத் தேவைகள் முழுவதும் நிறைவேறி, ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்த பிறகே நெறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது பொதுவாக மனிதனின் இயல்பு என்பது மாஸ்லோவின் கருத்து. அரசியல் போன்ற பிற துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், முதலாளித்துவத்தின் சுயநல அடிப்படைக்கு இக்கோட்பாடு மிகவும் பொருத்தமானது.

 

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தன் போட்டியாளர்களை நசுக்கி உலகின் நம்பர் ஒன் கணினி மென்பொருள் நிறுவனம் என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள செய்த முறைகேடுகளும் சட்ட மீறல்களும் ஏராளம். இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கிடையில் 1999ல் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு, உலக அளவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவற்காக அவர் 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' எனும் சேவை நிறுவனத்தைத் துவக்கினார். மாஸ்லோவின் கோட்பாட்டிற்கு இதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

 

முதலாளித்துவக் கொள்கையினால் பலன்களைவிட பாதகங்களே அதிகம் என்ற நிலையில், அதைச் சீர்திருத்த ஒருவர் கூட முயலவில்லையா என்ற இயல்பான சந்தேகம் நமக்கு எழலாம். முதலாளித்துவத்தை சீர்திருத்தும் திட்டம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு பில் கேட்ஸ் வெளியிட்டார். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

 

ஆதாரச் சுட்டிகள்:

பொருளியல் பகுதி-3

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
Nizar ahmed:
மிகப் பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர். அடுத்தடுத்த பகுதிகளை வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.

அன்புடன், நிஜார் அஹ்மது
1

August 13, 2009 01:21
0
Rajenderam Abreham:
அருமையான கட்டூரை. பல விஷயங்களை உள்ளடக்கியதான தங்களின் முதலாளித்துவம் தொடர்பான தரவுகள் பாராட்டத்தக்கது.
இது போன்ற சில வர்த்தக விடயங்களை எழுதினால் எமக்கு பயனாக இருக்கும். நன்றி
2

October 27, 2011 01:40

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:154 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ''(அவர்கள்) இறந்துவிட்டார்கள்"" என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள். எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் ஆய்வு பொருளியல் - (பகுதி-4)
Twitter
RSS
YouTube
English