சத்தியமார்க்கம்.காம்

பழகு மொழி (பகுதி - 5) print Email
தொடர்கள் - மொழியியல்
செவ்வாய், 11 ஆகஸ்டு 2009 13:20
(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)

 

கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு சொல்லின் ஈற்றாய் (கடைசி எழுத்தாக) அமைந்து, அச்சொல், கீழ்க்காணும் ஆறு வகைச் சொற்களுள் ஒன்றாக இருப்பின் அந்த எழுத்து, குற்றியல் உகரம் எனப்படும்.

ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகள் சிலவேளை அதன் இயல்புத் தன்மையான ஒரு மாத்திரை அளவிலிருந்து குன்றி, அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். அதையே குற்றியல் உகரம் என்பர்..

 

குற்றியல் உகரத்தின் எழுத்துகள் 6: கு, சு, டு, து, பு, று (உகர வல்லின உயிர் மெய்க் குறில்கள்).

 

குற்றியல் உகர வகைகள் 6.


(1):2:1 நெடில் தொடர்க் குற்றியல் உகரம்:

இஃது இரண்டெழுத்துகளை மட்டும் கொண்டது. முதல் எழுத்து நெடிலாகவும் இரண்டாவதான இறுதி எழுத்து உகர வல்லின உயிர் மெய்க் குறில்களுள் ஒன்றாகவும் அமையும்.

 

காட்டுகள் : வாகு, காசு, மாடு, யாது, கோபு, று


(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:

வன்தொடர்க் குற்றியல் உகரம் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். சொல்லின் ஈற்றில் (இறுதியில்) இடம் பெறும் உகர வல்லின உயிர் மெய்க் குறில் (கு,சு,டு,து,பு,று) எழுத்துக்கு இடப்புறம் அமைந்த (ஈற்றயல்) எழுத்து, ஈற்றெழுத்தின் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்தாக அமைந்திருக்கும்.

 

காட்டுகள் : சுக்கு, ச்சு, ட்டு, த்து, காப்பு, மாற்று


ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகளாக (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+=உ=)ட்டு, (த்+த்+உ=)த்து, (ப்+ப்+உ=)ப்பு, (ற்+ற்+உ=)ற்று ஆகியவற்றுள் ஏதேனும் அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, வன்தொடர்க் குற்றியல் உகரம் என்று எளிதாக இனங் கண்டு கொள்ளலாம்.


(1):2:3 மென்தொடர்க் குற்றியல் உகரம்:

மென்தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் மெல்லின மெய்யெழுத்தைப் பெற்றிருப்பதால் மென்தொடர்க் குற்றியல் உகரம் என்றானது.


காட்டுகள் : நுங்கு, கழஞ்சு, ண்டு, சிந்து, கொம்பு, ன்று

 

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, மென்தொடர்க் குற்றியல் உகரம் என்று இனங் கண்டு கொள்க.


(1):2:4 இடைத் தொடர்க் குற்றியல் உகரம்:

இடைத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் இடையின மெய்யெழுத்தைப் பெற்றிருக்கும்.


காட்டுகள் : பெய்து, சார்பு, சால்பு, போழ்து


(1):2:5 ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்:

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் ஆய்த எழுத்தைப் பெற்றிருக்கும்.


காட்டுகள் : கு, சு, து


குற்றியல் உகரப் பாடத்தில் இதுவரை நாம் பயின்றவை:


முதலாவதாக, ஓர் உயிர்மெய் நெடில் எழுத்தையும் ஓர் உயிர்மெய் வல்லின உகரக் குறில் எழுத்தையும் கொண்ட நெடில் தொடர்க் குற்றியல் உகரம்.

 

அடுத்த மூன்று பாடங்களில் (இறுதி எழுத்துக்கு இடப்புறம் அமைந்திருக்கும்) ஈற்றயலில் ஒற்று(புள்ளி எழுத்து) உடன் அமைந்த வன்/மென்/இடைத் தொடர்க் குற்றியல் உகரங்கள்.

 

ஐந்தாவதாக ஆய்த எழுத்தை ஈற்றயலாகக் கொண்ட ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்.


ஆறாவதாக நாம் பயில இருப்பது உயிர்த் தொடர்க் குற்றியல் உகரமாகும்.


(1):2:6 உயிர்(மெய்)த் தொடர்க் குற்றியல் உகரம்:

இந்தக் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். இதன் ஈற்றயல் உயிர்மெய் எழுத்தாக இருந்த போதிலும் இஃது, உயிர்த் தொடர்க் குற்றியல் உகரம் என்றே வழங்கப் படுகிறது.


காட்டுகள் : விறகு, அரசு, கசடு, து, மரபு, வயிறு.

 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- அதி. அழகு


<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி - 4 >

 

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
கணேஷ்:
மிகுந்த ஆர்வமுடன் வாசிக்கிறேன்.
பழகுமொழி அடுத்த பகுதியினை வாசிக்க தாருங்கள். நன்றி
1

February 05, 2010 13:05

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:29 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் மொழியியல் பழகு மொழி (பகுதி - 5)
Twitter
RSS
YouTube
English