சத்தியமார்க்கம்.காம்

பழகு மொழி (பகுதி 3 ) print Email
தொடர்கள் - மொழியியல்
திங்கள், 20 ஜூலை 2009 00:00
(1):1:2 மெய்யெழுத்துகள்

'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:

(1):1:2:1 வல்லினம்

 

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு. எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு ர் என்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.

வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்" என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

கடந்த வார வினாவுக்கான விடை:

'நீரை' எனும் சொல், 'நீர்' எனும் சொல்லோடு 'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, "நீரை சேமிப்போம்" என்று பிழையாக எழுதாமல் நீரைச் சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீ ராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:
"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- அதி. அழகு.

< பழகு மொழி (முன்னுரை) | பகுதி - 1 | பகுதி - 2 | அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் விரைவில் >

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
இராஜகிரியார்:
நன்றி.

//குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு. எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு என்று எழுத வேண்டும். தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.//

சரியாக விளங்க வில்லை. இன்னும் சற்று தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.
1

August 04, 2009 06:25
0
அதி.அழகு:
அன்புச் சகோதரர் இராஜகிரியாருக்கு,

'கிரி'யில் உள்ள ரி யுனிகோடில் 'ரி' என்றுதான் (பிழையாக) உள்ளது. அதன் சரியான வடிவம் 'ர' போட்டு அதற்கு மேல் கொம்பு இருக்க வேண்டும். போலவே, 'ர்' என்பது பிழையான வரிவடிவம். 'ர' எழுதி, அதற்கு மேல் புள்ளி இடுவதே சரியானதாகும். இதை யுனிகோடுக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும்.

தொடரும் தங்களது ஆர்வத்துக்கு நன்றி!
2

August 06, 2009 23:24
0
சத்தியமார்க்கம்.காம்:
கருத்திட்ட இராஜகிரியார் அவர்களுக்கும் கட்டுரையாசிரியர் அதி. அழகு அவர்களுக்கும் நன்றிகள் பல.

இது தொடர்பாக யூனிகோடு அமைப்பிற்கு (http://www.unicode.org/consortium/) ஒரு மடல் எழுதி அனுப்பப் பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

யூனிகோடு அமைப்பு, சரியான எழுத்து வடிவத்தினைக் கொண்டு திருத்தியமைக்கும் என்று நம்புகிறோம். நன்றி!
3

August 12, 2009 15:03

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் மொழியியல் பழகு மொழி (பகுதி 3 )
Twitter
RSS
YouTube
English