சத்தியமார்க்கம்.காம்

கருஞ்சீரகம் நோய் நிவாரணி print Email
மருத்துவம் - இயற்கை மருத்துவம்
திங்கள், 13 ஜூலை 2009 06:25

blackcuminஐயம்:

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா?

வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)

தெளிவு:

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.

  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
  • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
Trackback(0)
கருத்துக்கள் (19)add comment
0
Jaffar:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


அல்கம்துலில்லாஹ், பயனுள்ள ஆக்கம். எனக்கு குறட்டை பிரச்சனை உள்ளது. அதனைப் போக்க இந்தக் "கருஞ்சீரகத்தை" எப்படி பயன்படுத்துவது?


தயவுசெய்து விரிவாக விளக்கவும்.
1

July 13, 2009 09:05
0
ansari:
கருஞ்சீரகம் குறித்த விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

இந்தக் கருஞ்சீரகத்தை விற்பனை செய்வதற்கு ஹதீஸ்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா?
2

July 15, 2009 18:22
0
Nasoordeen:
அஸ்ஸலாமு அலைக்கும்
கருஞ்சீரகம் பற்ரிய விபரங்கல் பலருக்கு நன்மையாக இருந்திருக்கும் இது போன்ற ஆக்கங்கள் வெளிநாடுகளில் இருக்கும் என் போன்றவர்களுக்கு மிக்க பிரயோசனம் அல்ஹம்துலில்லாஹ்
3

July 15, 2009 19:31
0
Hanifa:
இது புற்றுநோயைக் குணமாக்குமா?
4

July 16, 2009 15:17
0
ahamed:
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த விஷயத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே
5

July 23, 2009 14:31
0
Muslim:
இந்த ஆக்கத்தில் சகோதரர் முஸ்லிம் பதிவு செய்த மறுமொழியைக் காணல.
6

July 23, 2009 19:13
0
Rucknudeen:
அல்ஹம்துலில்லாஹ்

படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. நானும் முன்பு ஒரு மாத பத்திரிக்கையில் பார்த்த நினைவு. மேலும் தைராய்டு தொல்லைகளால் அவதிபடுபவர்களுக்கு, பொடியாக்கிய தோலில் நல்லெண்ணை மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு கரண்டி சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது டிப்ஸ்.
7

July 23, 2009 23:22
0
Muslim:
//கருஞ்சீரகம் குறித்த விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

இந்தக் கருஞ்சீரகத்தை விற்பனை செய்வதற்கு ஹதீஸ்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா?//


கருஞ்சீரகத்தை வேறு மூலிகைகளுடன் கலந்து மருந்தாகவோ, எண்ணெயாகவோ பயன்படுத்தி அதை வியாபாரமாக்கினால், கருஞ்சீரகம் குறித்து சிறப்பித்துக் கூறும் நபிமொழியை விற்பனை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது கூடாது!


நீரழிவு நோய், எய்ட்ஸ் நோய், புற்று நோய்கள், பறவைக் காய்ச்சல் என எவ்வளவோ நவீன நோய்கள் தோன்றியுள்ளன. தற்போது அதி நவீன நோயாக பன்றிக் காய்ச்சலும் பரவி வருகின்றன. இந்த நோய்களுக்கெல்லாம் நிவாரணியை மனிதன் கண்டுபிடித்து வென்றுவிடவில்லை, இன்னும் ஆராய்ச்சியிலேயே உள்ளன.


தீராத இந்நோய்களையெல்லாம் கருஞ்சீரகத்தால் வெல்ல முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? என்றால் சொல்ல முடியாது. ஏனெனில் ஆய்வில் வெற்றி பெறும்வரை மருத்துவத் துறைக்கு சவலாகத் தோன்றியுள்ள இவை உயிர்கொல்லி நோய்களாகும்.


''கருஞ்சீரகத்தில் 'சாமை'த் தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)


''கருஞ்சீரகத்தில் அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் வேறு சில மருத்துவத்தையும் பரித்துரைத்துள்ளார்கள். வரும் ஹதீஸ் புகாரி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5680
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.


இன்னும் சில நோய்களுக்கு வேறு சில மருத்துவத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என நேரடிப் பொருள் கொண்டால் கருஞ்சீரகத்தையே மருந்தாக்கி நோயினால் எவருமே மரணிக்க முடியாதபடிச் செய்து விடலாம். ஆனால் அன்றும் நோயினால் பாதிக்கப்பட்டு மனிதர்கள் மரணித்தனர். இன்றும் நோயினால் மரணமடைகின்றனர்.


அப்படியானால் ஹதீஸின் பொருள்:


ஆக்கத்தில் சொல்லப்பட்டுள்ள, மனிதனுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்கள் கருஞ்சீரகத்தால் குணமடையும் என்றாலும் ஒருவருக்கு குளிர் காய்ச்சலால் மரணம் ஏற்படும் என்றிருந்தால் கருஞ்சீரகம் குளிர் காய்ச்சலையும் குணப்படுத்திடாது. மரணம் வென்றுவிடும்.


''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)


நோய்குரிய மருத்துவம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் நோய் நீங்கும் என்பது நபியின் வாக்கு. எனவே மருத்துவம் குறித்து எல்லா நபிமொழிகளையும் ஆய்வு செய்தால், கருஞ்சீரகத்தால் எல்லா நோயும் குணமாகும் எனச் சொல்லி கருஞ்சீரக மருத்துவ விற்பனைக்கு நபிமொழியை விளம்பரமாகப் பயன்படுத்துவது ஒருவித ஏமாற்று மோசடி!


(அல்லாஹ் மிக அறிந்தவன்)
8

July 27, 2009 17:27
0
முருகன்:
அப்படின்னா எயிட்ஸுக்கும் இது நல்ல நோய் நிவாரணியா?
9

July 28, 2009 08:20
0
ummu hudhaifa:
''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)
intha hadheesilirunthu ''uyirkolli noyaaka"irunthaalum atharkkum shifaa undu enru arivathuthaan oru moominudaya panbaakum.
10

July 28, 2009 19:03
0
Muslim:
//''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)
intha hadheesilirunthu ''uyirkolli noyaaka"irunthaalum atharkkum shifaa undu enru arivathuthaan oru moominudaya panbaakum.//


அன்புச் சகோதரி ummu hudaifa அவர்களே!


ஸஹீஹான அறிவிப்புகளை இணைத்து விளங்குவதே முஸ்லிம்களின் பண்பாகும்.
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு மருத்துவம் சரியாக அமைந்துவிட்டால் ''பி இத்னில்லாஹ் - அல்லாஹ்வின் அனுமதியால்'' குணம் ஏற்படும்.


நோய் நிவாரணி சரியாக அமைந்தாலும் இறைவனின் அனுமதியின்றி குணமேற்படாது என அறிவதும் முஸ்லிமுடைய பண்பாகும். நோய், முருத்துவம் குறித்த பல அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவை!
11

July 30, 2009 09:16
0
sarbudeen a:
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

12

August 18, 2009 17:21
0
muhammad yakoob:
விந்து அடிகடி துக்கதில் வெலியெருஹிரது என்ன செய்ய வென்டடும்
13

March 26, 2010 16:25
0
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்:
"பாதாம் பிசின்" என்று நாட்டு மருந்துகடையகளில் கிடைக்கும்; அதனை சிறிதளவு எடுத்து காலையில் தண்ணீரில் போட்டு ஊறவைத்துவிட்டால், பூப்போல மலர்ந்துவிட்டபின், பாலில் கலந்து இரவு படுக்கப்போகுமுன்பாகக் குடித்து வரலாம். சுமார் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்; இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பலன் கிட்டும்.

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
14

March 27, 2010 14:56
0
sadiq:
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல நல்ல விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சி. நல்ல நல்ல பயனுள்ள செய்தி. நன்றி.
15

June 11, 2010 20:44
0
ihsan:
assalamu alikum ithu nalla payanulla vidayam. nanri
16

December 09, 2010 17:10
0
gkmurugan:
The same subject available http://chenaitamilulaa.bigforu...904-topic. who is scam personsmilies/cry.gif
17

May 10, 2011 17:18
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்பான முருகன் அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிட்டுள்ள 'சேனைத் தமிழ் உலா' தளத்தில் நமது கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளனர். "நன்றி" போடும் இடத்தில் 'சத்தியமார்க்கம்' என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக 'சன்மார்க்கம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
18

May 10, 2011 20:54
0
abdulrahman:
thank you assalaamu alaikkum
19

September 12, 2011 06:31

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண்...

» பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன வழி?

பன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும்… மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்ககப்படுவதுமான ஒன்று.

» சகோதரிக்கு உதவிடுவீர்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார்....
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English