சத்தியமார்க்கம்.காம்

உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி? print Email
பொதுவானவை - பொதுவானவை
வெள்ளி, 10 ஜூலை 2009 00:07

சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2008 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள் முடித்துள்ளன. "வளைகுடா நாடுகளில் மட்டுமே ஹலால் பொருள்களுக்கான சந்தை 2.08 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் அளவுக்கு இருக்கும் எனக் கருதப்படுகிறது"


நொறுக்குத் தீனிகள், சமையல் எண்ணெய்கள் பால் பொருட்கள், மால்ட் உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஹலால் முத்திரையிடப்பட்ட இறைச்சி வகைகள் முதலானவை இவற்றுள் அடக்கம்.



எனினும்,தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.



"அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல" என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர்.



"முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன" எனக் கூறிய அவர், "இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.



இவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். "அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்" எனவும் அவர் கூறினார்.



இன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், "ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்" என்று தெரிவித்தார்.

இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.



ஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trackback(0)
கருத்துக்கள் (8)add comment
0
முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்.
பயனுள்ள எச்சரிக்கை.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தபோதே, சவுதியில் அமெரிக்க, ஐரோப்பிய உறைந்த நிலை கோழிக்கறி, ஆட்டுக்கறி முதலானவற்றை வாங்க முற்படும்போது பல நண்பர்கள் அது குறித்த ஹலால் பற்றிய சந்தேகங்களை எழுப்பி எச்சரித்தவுடன் பலரைப்போலவே நானும் அவற்றை வாங்குவதை தவிர்த்து வருகிறேன். ஈராண்டுகளுக்கு முன்பாக பறவைக்காய்ச்சலுக்கு பயந்த சவுதி அரசு, முற்றிலும் உயிர் கோழி விற்பனையை தடை செய்து விட்டதால், உறைந்த கோழி இறைச்சி வாங்குவதை தவிர வேறு வழி இல்லாமல் போய் விட்டது. ஆனாலும், இறக்குமதி கோழி இறைச்சியினை தவிர்த்து உள்நாட்டிலேயே அறுக்கப்பட்டு ஒருவார காலத்திற்குள் மட்டுமே விற்பனை நாட்கள் கொண்ட (நான்கு சவுதி நிறுவனங்களின்) குளிற்பதன கோழி இறைச்சியினை வாங்கி வருகிறோம். இவ்வாறு ஒட்டுமொத்தமாக அனைவரும் வெளிநாட்டு 'ஹலால் முத்திரை' இறக்குமதிகளை வாங்குவதை தவிர்த்தால் இவை -கையூட்டு ராஜாகளின் கைவரிசையையும் தாண்டி- தானாகவே முற்றிலும் ஒழிந்துவிடும், இன்ஷாஅல்லாஹ்.
1

July 10, 2009 16:24
0
அபூ சுஃபா:
முஸ்லிம்களை எச்சரிக்கை செய்யும் பயனுள்ள செய்தி.

முஹம்மத் அவர்கள் அளித்தத் தகவல் சிறப்பானது.

வளைகுடாக்களில் கோழி இறைச்சி என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் உணவு பொருளாகும். முஸ்லிம்கள் சாதாரணமாக இதற்கு sadia என்ற பிரேசில் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியையே பயன்படுத்துகின்றனர். இதுவும் ஹலால் முத்திரை உடையதே. ஆனால் இதே கம்பெனி பன்றி இறைச்சியையும் உற்பத்தி செய்து வருவது பலருக்குத் தெரியாத விஷயமாகும்.

பன்றி இறைச்சியை விற்பனை செய்பவன் நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படிகளைப் பேணுவான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மிக வெளிப்படையாக பன்றி இறைச்சியையும் உற்பத்தி செய்து வருபவனின் மற்ற உணவு பொருட்கள் ஹலாலானவை தான் என்று நம்புவதற்கு(ஹலால் முத்திரை இருந்தாலும்) எந்தச் சாத்தியக் கூறும் இல்லை. எனவே சதியா சிக்கனை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.

சகோ. முஹம்மத் அவர்கள் பயன்படுத்தும் சவூதி கம்பெனியின் பெயரைத் தெரிவித்தால் பயனாக இருக்கும்.

ஹராமான உணவு பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டும் நாம் கண்காணிப்பாக இருப்போம்.

வஸ்ஸலாம்
2

July 10, 2009 16:33
0
Sulthan, Kuwait:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

இது குறித்து அரப் டைம்ஸ் 6 மாதங்களுக்கு முன் வெளியிட்ட செய்தி:
http://www.arabnews.com/?page=1§ion=0&article=117793&d=3&m=1&y=2009

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரபுகள் அதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. வளைகுடா வாழ் தமிழ் / இந்திய முஸ்லிம்களிடமும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அரபு தேசங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலொழிய இந்நிலை மாறாது. இல்லையென்றால், ஹலால் என நினைத்து ஹராமான உணவுகளை உண்ண வைத்த பெருங்குற்றம் அவர்களையே சாரும்.
3

July 11, 2009 12:18
0
Ahamed Basheer:
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அபூ சுஃபா கூறியது சரியே!!!!!!!!!!!!

http://en.wikipedia.org/wiki/Sadia
4

July 12, 2009 20:41
0
Jamal Asraf:


முஸ்லிம்களை எச்சரிக்கை செய்யும் பயனுள்ள செய்தி.
5

July 17, 2009 09:13
0
முனாஸ் சுலைமான்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நல்ல செய்தி கட்டாயம் அனைவரும் அறியக்கூடிய செய்திதான். ஆனால் ஒரு விடயம் அன்று சொல்லப்பட்ட அறபிகள் இங்கு இப்போது இல்லை என்றுதான் சொல்லனும் ஏன் என்றால் இன்று எது ஹறாம் எது ஹலால் எனப்பிரித்து பார்க்கும் எந்த ஒரு யோசனையும் இல்லாமல்தான் இன்று அறபிகள் இருக்கிறார்கள்

அதுதான் நன்றாகப்புரிகிறதே நபியவர்களின் கதீஸ் ஒன்று இருக்கிறது ஒரு தொழிளாளி வேலை செய்து அவனது வேர்வை வற்றுமுன் அவனுக்கான கூலி கொடுக்கப்பட வேண்டும் என்று இது எங்க இங்கு நடக்குதா? இப்பவெல்லாம் எங்கு பார்த்தாலும் அநாச்சாரம் தலை தூக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன் அறபிகள் முஸ்லீம்களின் வாழ்வியல் நடத்தைக்கு எந்த வகையிலும் முன்னுதாரணமாக இருக்கமுடியாது என்பது எனது கருத்து நன்றி.
6

July 30, 2009 22:59
0
UMMAR:
POOVAI-UMMAR
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்...


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النّ


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”





அரபு நாடுகளில் KFC சிக்கன் பன்றி மாமிசத்தின் தூள்களும் மற்றும் சுவைக்காக அதன் தூள்களும் பயன் படுத்தி நன்றாக பவுடர் போல் ஆக்கி அதை சிக்கனுடன் பிரட்டி தயாரிகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் பெரும்பாலோனோர் இதை தெரியமல் முஸ்லிம்கள், தோழர்களுடன் அங்கு சென்று விருந்து கொடுப்பது, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும்,பெண்களுக்கும் கொடுத்து தாமும் உண்ணுகிறார்கள்.. மேலும் அது அல்லாவுடைய பெயர் சொல்லி அறுக்கப்பட்டதும் கிடையாது.. அது லண்டனில் இருந்து தயாரிக்கப்பட்டு அது பதப்படுத்தி, உலகில் உள்ள எல்லா நாடுகளிக்கும் அது எடுத்து சூடு செய்து விற்பனை செய்யப்படுகிறது.அது முழுக்க முழுக்க ஹராம், அதை உண்பது ஹராமாக்கப்படுவிட்டது. அது போல் McDonald சிக்கன் 100% ஹலால் என்று விற்பனை செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. அது அதுவும் அரபு நாடுகளில் அது தயாரிக்கப்படுவதில்லை. அதுவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது... இது தான் உன்மை அவர்கள் அல்லாவின் அல்லாவின் பெயர் கொண்டு அறுக்கப்படுகிறதா, இல்லையா,அல்லாவுக்கு அல்லா மட்டும் நன்கு அறிந்தவன். சந்தேகமானவற்றை பின்பற்றாதீர்கள்... அதனால் அதையும் தவிர்த்து கொள்வது அனைவருக்கும் நல்லது. நிச்சியமாக இது போன்ற காலங்களில் பயன் படுத்தும் பொருள்களை நன்றாக பார்த்து உபயோகபடுத்தவும்...

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

ஆதலால் உண்மையான முஸ்லிம்களாக நாம் வாழ விரும்பினால் அனைத்து உணவு பொருள்களையும் பார்த்துதான் வாங்க வேண்டும் , அவை இஸ்லாமிய நாடாக இருந்தாலுமே.

7

August 02, 2009 09:53
0
Masar Khan:
வ அலைக்கும் சலாம். சகோதரர் பூவை உமர்...

நீங்கள் கூறிய

//அரபு நாடுகளில் KFC சிக்கன் பன்றி மாமிசத்தின் தூள்களும் மற்றும் சுவைக்காக அதன் தூள்களும் பயன் படுத்தி நன்றாக பவுடர் போல் ஆக்கி அதை சிக்கனுடன் பிரட்டி தயாரிகிறார்கள்.//

மற்றும்

//அது லண்டனில் இருந்து தயாரிக்கப்பட்டு அது பதப்படுத்தி, உலகில் உள்ள எல்லா நாடுகளிக்கும் அது எடுத்து சூடு செய்து விற்பனை செய்யப்படுகிறது//

நீங்கள் கூரும் இது உண்மையான தகவலா? பொய்யாக இருப்பின் இட்டுக்கட்டிய பழியை நீங்கள் சுமக்க வேண்டி வரும். எனவே, உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தந்தால் நன்றியுடைவன் ஆவேன்.
8

August 02, 2009 12:23

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம். நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்"" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி?
Twitter
RSS
YouTube
English