சத்தியமார்க்கம்.காம்

பழகு மொழி (பகுதி - 1) print Email
தொடர்கள் - மொழியியல்
ஞாயிறு, 05 ஜூலை 2009 16:38

(1) எழுத்தியல்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர். தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன.

அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

(1):1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

(1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

(1):1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

(1):1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216

(1):1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1

மொத்தம் 247 எழுத்துகள்.

"அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் என்ற வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் என்ற யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை என்ற கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி ஈ என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் என்ற கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, ஆ என்ற நெடிலின் வரிவடிவம் அ என்ற எழுத்தை ஒத்திருக்கிறது. ஈ என்ற நெடிலில் இ என்ற குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது.

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,

அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ...
...
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ...


சேர்த்து 12உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:

"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.

- அதி. அழகு.


< பழகு மொழி (முன்னுரை) | அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் விரைவில் >

Trackback(0)
கருத்துக்கள் (8)add comment
0
முத்து கணேசன்:
நல்ல முயற்சி! தமிழில் இது போன்ற பயனுள்ள பயிற்சி தரும் தளத்தை தேடியிருந்தேன். தமிழ் என்ற பெயரில் தத்தித் தடுமாறும் என் போன்றவர்களுக்கு அரிச்சுவடியின் அடிப்படையை கூச்சமின்றி கற்றுக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பினை முதல் பகுதியே தந்து விட்டது. அடுத்தடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நன்றி! மு.கணேசன், விழுப்புரம்
1

July 05, 2009 19:41
0
Karthy:
ஆஹா.. இத இதத்தானல்லவா இவ்வளவு நாட்களா எதிர்பார்த்திருந்தேன். //"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.// தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு... அருண்மொழி என்ற இராஜராஜ... தோன்றியதை எழுதியிருக்கேன். இலக்கணம் எல்லாம் தெரியாது சார். சொல்லித்தந்தா கத்துக்குவேன்.
2

July 06, 2009 17:09
0
Mohamed Sathick:
"தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"
3

July 06, 2009 23:19
0
இராஜகிரியார்:
எம் தாய் மொழியாம் தமிழ் மீது தீராத காதல் கொண்ட இந்த இராஜகிரியாருக்கு இத்தொடர் ஒரு மகத்தான விருந்தாக அமையும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்...
4

July 07, 2009 02:39
0
கமுதியான்:
தஞ்சை என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்னும் இராஜராஜ சோழன் மன்னனாக ஆட்சி புரிந்தான்..



எப்புடி..??!
5

July 07, 2009 08:25
0
ஸ்டாலின் பெலிக்ஸ். ம:
தஞ்சை என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்னும் சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்..
6

July 07, 2009 20:48
0
அதி அழகு:
"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள் எனும் எனது வேண்டுகோளை ஏற்றுக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

சகோதரர்கள் முஹம்மது ஸாதிக், ஸ்டாலின் இருவரும் ஓரளவுக்குச் சரியான விடையளித்துள்ளனர். அவ்விருவரும் நான் எழுதியவை எவ்வாறு பிழை என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மிக்க நன்றி!
7

July 08, 2009 10:16
0
அதிரை அஹ்மது:
'பழகுமொழி' தொடர் வலைத் தளத்தில் வலம் வருவது வரவேற்கத் தகுந்த ஒன்று. தம்பி 'அதியழகு' பாராட்டிற்குரியவர். யான் சில மாதங்களுக்கு முன் 'மனாருல் ஹுதா' எனும் மாதப் பத்திரிகையில் 'பிழையின்றி எழுதுவோம்; பேசுவோம்' எனும் தலைப்பில் இப்படியொரு தொடரை எழுதத் தொடங்கினேன். மூன்று இதழ்களில் அத்தொடர் இடம்பெற்றது. நான்காவது வெளிவருவதற்கு முன், எங்களூர்ப் பணக்காரர்களுள் சிலர் தலையிட்டு, அப்பத்திரிகையின் மேலிடத்தைத் தொடர்பு கொண்டு, என் தொடரை நிறுத்தச் செய்துவிட்டனர்! 'கழுதை அறியுமோ கர்ப்பூர வாசனை?'
8

July 09, 2009 14:14

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» பழகு மொழி (பகுதி-12)

(2) சொல்லியல்சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக்...

» பழகு மொழி (பகுதி-7)

(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை) (1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம் 'உ' என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்

» பழகு மொழி (பகுதி-6)

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை) குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது...

» பழகு மொழி (பகுதி-4)

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள் ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும்.காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்).(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள்

» பழகு மொழி! - புதிய தொடர்

பழகு மொழி - முன்னுரை"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர்...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:168 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் மொழியியல் பழகு மொழி (பகுதி - 1)
Twitter
RSS
YouTube
English