சத்தியமார்க்கம்.காம்

அமைதி எங்கே? print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 03 ஜூன் 2009 04:10

நீரின்றி அமையாது உலகம் !

ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்?

அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும்

இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும்

அது வெற்றியின் எழுச்சியே !

புனித பூமியைப் படைத்த இறைவன்,
 
 பொறுமையையும் சேர்த்துதானே படைத்தான் !
 
 பொல்லாத உலகத்தில் முள்ளாக பல மதங்கள்,
 
 இல்லாத போதனையை எடுத்துரைக்கும் அவலத்தால்,
 
 சொல்லாலும் செயலாலும் சுயபுத்தி இழந்துவிட்டு,
 
 பல்லாயிரம் கலவரங்கள் பாருக்குள் ஊடுறு
வ,
 
 எல்லா விதத்திலும் இயன்றவரை ஊதிவிட்டு,
 
 கல்லா மாக்களாகி கடவுள் பயம் சிறிதுமின்றி,
 
 நல்லோர் பலரை நாட்டினிலே மாய்த்துவிட,
 
 போருக்கு வழிவகுத்து பொன்னான உயிர் பறித்து
 
 போர்க்களத்தின் தர்மத்தை புதைகுழிக்குள் தள்ளி விட்டு,
 
 புகலிடம் தேடும் இப்பூவுலக மானுடமே !
 
 இனியேனும் சிந்தித்து இதற்கொரு தீர்வு செய்வீர் !
 
 இறை படைத்த இவ்வுலகில் இருக்கும் அனைவருமே,
 
 "இறைவன் ஒருவன்" என்ற ஏகத்துவ கொள்கையினை,
 
 இங்கிதமாய் பின்பற்றி இணைந்து வாழ்ந்தால்,
 
 எல்லோரும் சோதரராய் இணையற்ற குடும்பமாகி,
 
 ஒருமித்த கருத்துடனே ஒற்றுமை புன்னகையில்,
 
 ஓர் தாய் மக்கள்போல் உவகை துள்ளும் வண்ம்
 
 உன்னதமாய் வாழ ஒரு வழியும் பிறந்திடுமே !
 
 இம் மனமாற்றம் என்றேனும் நிகழ்ந்து விட்டால்,
 
 இவ்வுலக வளமெல்லாம் எல்லோருக்கும் சொந்தமாகி,
 
 ஏற்றத் தாழ்வற்ற இறைகூறும் நல்லுலகம்,
 
 எளிதாய் தோன்றிவிடும் இறையருள் எவர்க்கும் கிட்டும்!
 
 மனித நேயம் மலர்ந்து மக்கள் எல்லாம் ஒன்றாகி,
 
 மமதையெனும் போர் ஒழிந்து மகிழ்ச்சியுள்ள உலகமாகி,
 
 ஆர்ப்பரிக்கும் கடலடங்கி அன்றாடம் கரையைத்தொட்டு,
 
 அமைதியை தேடுதல்போல் -- இந்த அவனியிலே ,
 
 அமைதி தென்றல் வந்து அனைவரின் மனம் தொட்டால்,
 
 அமைதி கிட்டிடுமே ! அறவழியும் தழைத்திடுமே ! !
 
 எம்.அப்துல் ரஹீம், கோவை.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
M.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் // இறைவன் ஒருவன்' என்ற ஏகத்துவ கொள்கையினை, இங்கிதமாய் பின்பற்றி இணைந்து வாழ்ந்தால், // // அமைதி கிட்டிடுமே ! அறவழியும் தழைத்திடுமே ! ! // NO GOD NO PEACE KNOW GOD KNOW PEACE NO ISLAM NO PEACE KNOW ISLAM KNOW PEACE
1

June 06, 2009 06:46
0
காஜா:
//கடவுள் பயம் சிறிதுமின்றி,//

படைத்தவனை இந்து மதத்தவர் அழைக்கும் "கடவுள்" என்ற சொல் சத்தியமார்க்கம்.காமிலும் இடம்பெற்றுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

உடனடியாக இந்தக் கடவுள் என்ற சொல்லை நீக்குங்கள்.
2

August 31, 2009 11:32

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் அமைதி எங்கே?
Twitter
RSS
YouTube
English