| சிறுமிக்கு (மஷ்ரூம் கட் ஸ்டைலில்) தலைமுடி கத்தரிக்கலாமா? |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | |||
| செவ்வாய், 19 மே 2009 19:03 | |||
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு கேட்டிருந்த கேள்விக்கு விடையை இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன். இப்போது 3 வயதாகும் என் மகளுக்கு Mushroom cut தலைமுடி கத்தரிக்க முயன்றபோது என் தோழி ஒருவர், "இஸ்லாத்தில் இது கூடாது" என்று கூறுகிறார். இந்தக் குழப்பத்தை உடனடியாகத் தீர்த்து வைப்பீர்களா? இது சாதாரண கேள்வியாக இருந்தால் மன்னித்துவிடவும். என் மனதில் குழம்பம் நீங்கி தெளிவு பெறவே கேட்டுள்ளேன். ஜஸாக்கல்லாஹ் கைர் மின்னஞ்சல் வழியாக சகோதரரி மெஹர். தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்... சகோதரி, இஸ்லாத்தில் சாதாரணம் எனக்கருதி அலட்சியப்படுத்தும் விஷயம் எதுவும் இல்லை! உங்கள் தோழியின் கூற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஏனெனில், மஷ்ரூம் கட் என்பது "பகுதி முடியை" அதிகமாக கத்தரித்தலும், "பகுதி முடியை" குறைவாக கத்தரித்தலுமாகும். எனவே கத்தரிக்கும் ஒன்றை மழிப்பது என்னும் ஹதீஸுடன் இதை ஒப்பிட முடியாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விடுவதைத் தடை செய்தார்கள் (அறிவிப்பாளர் : இபுனு உமர் - ரலி, நூல் : புகாரீ 5921). மேற்காணும் ஹதீஸ் ஆண்-பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்கள் தங்கள் தலைமுடியை முழுதுமாக மழித்துக் கொள்வதைத் தடைசெய்யும் ஹதீஸும் உண்டு: பெண்கள் தமது தலையை மழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பாளர்: அலீ - ரலி, நூல்கள்: நஸயீ 4963, திர்மிதீ 838). நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், தலைமுடியை ஒருபக்கம் மழித்தும் மறுபக்கம் மழிக்காமல் விடுவதும்தான் தடுக்கப் பட்டிருக்கின்றதேயன்றி, தலைமுடியை ஒருபக்கம் அளவு கூட்டியும் மறுபக்கம் அளவு குறைத்தும் வளர்த்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் தடையில்லை என்பதே. உதாரணமாக, ஆண்களின் தலைமுடி, பிடறியில் இருக்கும் அளவைவிட முன் நெற்றியில் கூடுதலாகவே இருக்கும்; காதோரம் குறைவாகவே இருக்கும். இதை அழகு படுத்துவதாகத்தான் கருத வேண்டும். பெண்களுக்கு இயல்பாகவே பிடறிப்பகுதிமுடி, பிறபகுதியைவிடக் கூடுதல் நீளமாக இருக்கும். பொதுவாக, 'தஃபஹ்ஹுஷாத்' எனப்படும் அலங்கோலமாகக் காட்சியளித்தல் இஸ்லாத்தின் பார்வையில் வெறுக்கத் தக்கதாகும். அதற்கு மாறாக, ஒருவர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. நமது தளத்தின் ஸஹீஹ் முஸ்லிம் பகுதியில், 'எண்வழித் தேடல்' பெட்டியில் 131 இட்டு நீங்கள் தேடினால் (சுட்டி: http://satyamargam.com/muslim/numbersearch.php?bnumber=131) கீழ்க்காணும் ஹதீஸ் உங்களுக்குக் கிடைக்கும்: "... தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான் ..." (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் - ரலி, நூல்: முஸ்லிம்). ஆனால், அழகு என்ற பெயரில் பெண்கள் பரவலாகப் பயன்படுத்தும் செயற்கை/ஒட்டு முடிக்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது. மதீனத்து அன்ஸாரிப் பெண்களுள் ஒருவர் தம் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். (நோய்வாய்ப் பட்டதில்) அப்பெண்ணுடைய தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் கணவர் எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்ளச் சொல்கிறார்' என்று கூறினாள். "வேண்டாம்! ஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் பெண்கள் சபிக்கப் பட்டுள்ளனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்தார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா - ரலி, நூல் புகாரீ 5205). பெண்கள் தலையை முழுதுமோ பகுதியோ மழித்துக் கொள்ளக்கூடாது என்றே இஸ்லாம் தடைவிதித்துள்ளது; தலை முடிகளைக் குறைத்துக் கொள்வதைத் தடைசெய்யவில்லை. தலைமுடி நீளமாக இருந்து அதைப் பராமரிப்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்படுமெனில் குறைத்துக்கொள்வதில் தவறில்லை! குழந்தைகள் தமது தலைமுடியை சுயமாக பராமரிக்கத் தெரியாதவர்கள். சிறுமிகள் மற்றும் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கத்திரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளதாக நாமறிந்தவரையில் சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே, சிறுமியருக்கு 'மஷ்ரூம் கட்' சிகையலங்காரம் செய்வதை, "கூடாது" எனச்சொல்லித் தடுக்க முடியாது. (இறைவன் மிக்க அறிந்தவன்)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்....
என்னுடய கேள்வியை எந்த பகுதியில் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை அதனால் வாசகர் பகுதியில் கேட்பதர்க்காக என்னை மன்னிக்கவும்.
என்னுடய கேள்வி வட்டி வாங்குவது ஹராம். வட்டிக்கு கொடுப்பது ஹராம். வட்டி செலுத்துவது ஹராமா?
1. வட்டி வாங்குவது அதாவது பணத்தை முதலீடு செய்து பணத்தை பேங்கில்(அல்லது இதே முறையை பின்பற்றிய வேறு எதுவானாலும்)அதிக பணமாக பெற்று சம்பாதிப்பது.
2. வட்டிக்கு கொடுப்பது அதாவது இருக்கும் பணத்தை ஒருவருக்கு கொடுத்துவிட்டு வசூலிக்கும்பொலுது அதிகமாக வசூலிப்பது.
3. வட்டி செலுத்துவது அதவது நான் வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கிறேன் ஆனால் எனக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் ஒரு கார் வாங்க வேன்டும். நான் ஒரே தவணையில் பணம் செலுத்தினால் அதை மூன்ரு லட்சம். அதை நான் நான்கு தவணையில் கட்ட வேண்டும் என்றால் மூன்று லட்சட்த்து ஐம்பது ஆயிரம் என்று விற்பவர் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருடைய கூற்றில் உண்மை உண்டு அதாவது நான் ஒரே தவணையில் செலுத்தினால் அவரால் அந்த பணத்தை கொண்டு வேரு ஒன்றில் முதலீடு செய்து லாபம் பெறுவார் மற்றும் அவருடைய தேவைகளை குறைக்கவும் முடியும். ஆனால் நான் நான்கு தவணைகளில் செலுத்தும்போது அவரால் அதை வைத்து ஒரு தொலிலை தொடங்கவோ அல்லது எதிலும் முலு தொகையையும் முதலீடு செய்யவோ முடியாது இதனால் அவர் நஸ்டமடைய நேரிடும் மற்றொன்று அவர் முலு தொகையயும் பெறும்பொலுது ஒரு வருடம் முடிந்திருக்கும் அதன் பிறகு அவர் ஒரு தொலிலில் அந்த பணத்தை முதலீடு செய்ய போகிறார் என்று வைத்து கொள்வோம் இப்பொது ஒரு வருட இடை வேலையில் அனைத்து பொருட்களின் விலையும் கூடி இருக்கும் இதை மனதில் வைத்து அவர் அதற்கு ஆகும் இலப்பீட்டை ஒரு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்து தவணையாக வாங்கும்பொலுது அதிகமாக கேட்கிறார். நாம் அப்படி கொடுக்கும்பொலுது விற்பவர் நஸ்டமடையபோவதில்லை. அதை வாங்குபவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்று கொள்கிறார் ஏன் என்றால் ஒரே தவணையில் செலுத்தினால் அவரால் அனைத்து தேவைகளையும் பூர்தி செய்ய முடியாத நிலை அதை தவணையில் செலுத்தினால் கடனையும் பெறுகிறார் தன் தேவையயும் பூர்தி செய்கிறார் அதாவது இவரிடம் உள்ள மூன்று லட்ச ருபாய் மூலம் ஒரு தவணையை செலுத்தி விட்டு மீத முள்ள தொகையை முதலீடு செய்து வருவாய்யெயும் பெருக்கி கொள்ள முடியும். இது கூடுமா?
இது கூடும் என்றால் பேங்கிலும் இதை தான் காருக்கு தவணை முறையில் செலுத்தினால் ஒரு குறுப்பிட்ட அளவு அதிகமாக செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தருகிறார்கள். அப்படி என்றால் இதுவும் கூடுமா?
உங்கலுடைய பதிலை குரான் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கும் படி கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு,
shahul
1
May 21, 2009 20:27
அன்புச் சகோதரர் ஷாஹுல்,
தங்கள் பின்னூட்டம் கேள்வி-பதில் பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதிலளிக்கப் படும்.
2
May 22, 2009 16:49
சிறிய நெருடல்தானே என்று விட்டுவிடாமல் நவீன பிரச்னைகளுக்கும் இஸ்லாமிய ஒளியில் பதில் அளிக்கிரீர்கள். இது தான் சமுதாயத்திற்கு இன்றைய தேவை. கேள்வி கேட்ட சகோதரிக்கும் வாழ்த்துகள்.
3
May 28, 2009 09:34
எனக்கு ஏற்பட்ட அய்யத்தை உங்கள் அட்மின் முகவரிக்கு அனுப்பினேன். பதில் கிடைக்கவில்லை. அதனால் இங்கே பதிகிறேன்.
தவ்கீத் சகோதரர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், இஸ்லாமிய அடிப்படைகளை நன்கு அறிந்தவர்கல் கூட மரைக்காயர், ராவுத்தர் என்று தங்கள் பெயர் பின்னாடி போட்டுக் கொள்வது ஏன்? இதனை பார்க்கும் அடுத்த மதத்தவர்கள் ஜாதிபோன்ற பிரிவினை இருப்பதைப் போல எண்ணுகிறார்களே. இவர்களுக்கு சத்தியாமார்க்கம் கூறும் அறிவுறை என்ன?
4
May 31, 2009 19:28
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |