சத்தியமார்க்கம்.காம்

15வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி! print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
ஞாயிறு, 17 மே 2009 18:07
நடந்து முடிந்த 15 ஆவது மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பாஜக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் பாஜக, வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களில் தன் ஆதிக்கத்தை வளர்க்கும் வகையில் கவனத்தைத் திருப்பி, பல்வேறு பிரதேச கட்சிகளுடன் கூட்டணிகளை ஏற்படுத்தி வந்தது. இதில் இம்முறை கர்நாடகாவில் சொல்லும்படியான ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடிந்தாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தல்களை ஒப்பு நோக்கும் போது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதை அறிய முடிகிறது. கடந்தத் தேர்தல்களில் தமிழகத்திலுள்ள முக்கிய இரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி வைத்து தன் இருப்பை உறுதி செய்து வந்தது. இம்முறை தமிழகத்தில் எந்தப் பிரதான கட்சியும் பாஜகவோடு கூட்டு வைக்க தயாராகாத நிலையில் சரத்குமார், கிருஷ்ணசாமி, கார்த்திக் போன்றவர்களின் சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்து களம் கண்டது. ஆனால் பயன் ஏதும் விளையவில்லை.
 
 அதே போன்று கேரளத்திலும் தன் ஆதிக்கத்தை வளர்க்கக் கடந்தப் பல தேர்தல்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதற்குத் தக்க வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்குக் கேரளத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்தே வந்தது. ஆனால் இம்முறை, கடந்த 2004 தேர்தலோடு ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை இழந்து பரிதாபமாக நிற்கின்றது.
 
 ஒட்டுமொத்தமாக கேரளத்தில் கடந்த 2004 தேர்தலில் சுமார் 18 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பாஜக, இம்முறை சுமார் 8 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் தொகுதி மிக முக்கியமானதாகும். இத்தொகுதியில் திரு. இராஜகோபால் தனது கடுமையான கட்சி பணிகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பாஜகவிற்குச் சம்பாதித்து வைத்திருந்தார். கடந் 2004 தேர்தலில் இத்தொகுதியில் பாஜக சுமார், 2,20,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 ஆனால், இம்முறை தேர்தலில் பாஜக வெறும் 84,094 வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதாவது கடந்தத் தேர்தலை ஒப்பிடும் போது இம்முறை சுமார் 1,40,000 வாக்குகளை இத்தொகுதியில் மட்டும் பாஜக இழந்துள்ளது.
 
 இதற்கிடையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கட்சியின் இராமசந்திரன் நாயரை விட 99,998 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சசி தரூர், ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றும் அவரை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வாக்காளர்கள் புறக்கணித்த வேளையில், தங்களுக்குச் சாதமான சசி தரூரை வெற்றி பெற வைக்கும் நோக்கில் பாஜக திட்டமிட்டே தங்கள் வாக்குகளைச் சசி தரூருக்கு வழங்கி வெற்ரி பெற வைத்துள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
 எது எப்படியோ, தென்னகத்தில் உறுதியாக கால் ஊன்ற நினைக்கும் பாஜகவிற்கு இத்தேர்தல் மர்ம அடி கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை!
Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
ayoobkhan:
தேர்தல் மற்றும் ஓட்டு வங்கியினால் மட்டும் தோல்வி நிர்மானிக்கப்படுவதில்லை என்பதனை முஸ்லீம் சமூகம் விளங்கவேண்டும்.பஜக வின் சிந்தனைகள் இன்று எல்லா மட்டஙளிலும் பரவியுள்ளது என்பதனை காங்கிரஸ் மட்டங்களிலும் காணலாம்.எல்லா சமூகத்துறையிலும் புரையோடிக்கிடகின்றன அச்சிந்தனை. அதிகாரப் பகிர்வு மூலம் முஸ்லீம்களுக்கு பிரச்சனை கூடலாம் அல்லது சிறிது குறையும் அவ்வளவே.
1

May 24, 2009 07:35

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 15வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி!
Twitter
RSS
YouTube
English