| உருகும் பிஞ்சுக்கு உதவுவோம்! |
|
|
| உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள் | ||||||||
| வியாழன், 30 ஏப்ரல் 2009 09:56 | ||||||||
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரைச் சேர்ந்த ஜஹபர் சாதிக்கின் மகன் இபுராஹீம், மூன்று வயது நிரம்பிய பாலகன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விரைப்புற்று நோயால் பாதிக்கப் பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.அவனின் தந்தை ஜஹபர் சாதிக் மிகக் குறைந்த ஊதியத்தில் டிரைவராகக் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரைக்கும் அவரது ஒரே சொத்தாக இருந்த, குடியிருந்த வீட்டையும் மகனது மருத்துச் செலவுக்காக விற்று விட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திருச்சியிலுள்ள ஜி.வி.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இபுராஹீமின் உடல்நலம் மோசமாகியதும், கடந்த மாதம் சென்னையிலுள்ள Cancer Institiute (WIA) புற்றுநோய் மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்படி ஜி.வி.என் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
கடந்த 03-06/04/2009 தேதிகளில் குழந்தையைப் பரிசோதித்த சென்னை மருத்துவர்கள், குழந்தையின் மூச்சுக் குழலில் பிரச்சினை உருவாவதாகத் தெரிவித்து உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டுமென்றும் மொத்தம் 3,00,000 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆரம்ப கட்டச் சிகிச்சைக்கு மட்டும் அவசரமாக 80,000 ரூபாய் உடனடியாகக் கட்ட வேண்டும் என்று சென்னை Cancer Institiute (WIA) நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தையின் தந்தை ஜஹபர் சாதிக், தனது இயலாமையைக் குறிப்பிட்டு பொருளாதார உதவி கேட்டு எழுதியுள்ளதை தட்ஸ்தமிழ்.காம் தளம் வெளியிட்டுள்ளது: குவைத்: நாகப்பட்டணத்தைச் சேர்ந்த குவைத்தில் பணியாற்றி வரும் ஜெஹப் சாதிக் என்பவர், புற்று நோயால் பாதிக்கப்பட் தனது 3 வயது மகனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பண வசதி இல்லாமல் நிதியுதவி கோரி நிற்கிறார். நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் எம். ஜெஹபர் சாதிக். புற்று நோயால் பாதிக்கப்படடுள்ள தனது 3 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து ஜெஹபர் சாதிக் கூறுகையில், எம். ஜெஹபர் சாதிக் ஆகிய நான் தற்போது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றேன். இப்ராஹீம் என்ற எனது மூன்று வயது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக புற்று நோய் ஏற்பட்டு திருச்சி GVN மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றேன். இந்நிலையில் GVN மருத்துவமனையினர் மேற் சிகிச்சைக்காக அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார்கள். அவர்களின் அறிவரைப்படி நானும் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், அவர்கள் கேட்கும் மருத்துவ தொகை என் சக்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இங்கு எனக்கு கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவுதான். அப்படியிருந்தும் ஏற்கனவே என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன். பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன். இப்படிப்பட்ட சூம்நிலையில் என்னால் இவ்வளவு அதிகமான தொகையை செலுத்தி மருத்துவம் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன். என் பிள்ளை பூரண குணம் அடைய வேண்டும் என்றால் உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். என்னால் இயலாத இந்த நிலையால்தான் தங்கள் அமைப்பிடம் உதவி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கின்றேன். என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கு அனுப்பி வைக்கப் பட்ட பல சான்றுகள் சரிபார்க்கப் பட்டு, இங்கு இரண்டு மட்டும் பதிக்கப் படுகின்றன. எங்களுக்கு வரப்பெற்றவைகளுள் தெளிவான சான்று-1:
![]() எங்களுக்கு வரப்பெற்றவைகளுள் தெளிவான சான்று-2:
![]() தங்கள் உதவிகளைக் கீழ்காணும் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பலாம்:
நேரடியாக விசாரித்துக் கூடுதல் தகவல் பெற விரும்புவோர் குழந்தையின் தந்தை ஜஹபர் சாதிக் அவர்களது தொடர்பு எண் 00965-99180678 என்ற குவைத் அலைபேசியிலோ குழந்தையின் தாய் மாமன் அன்ஸாரீ அவர்களது 0091-9791775642 என்ற இந்திய அலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். வீட்டு முகவரி : 564/393, மெயின் ரோடு, நாகூர்-611002, நாகப்பட்டிணம் மாவட்டம், தமிழ்நாடு. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்கு மனிதாபிமானம் நிறைந்தவர்கள் கைநிறைய வாரி வழங்குங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குழந்தையின் மருத்துவத் தேவைக்குரிய பொருளுதவி நிறைந்து விட்டால் அதை இங்கு அறிவிப்புச் செய்வோம், இன்ஷா அல்லாஹ். உதவி செய்யும் உள்ளங்கள் விரும்பினால் அவர்களது பெயர்களும் தொகையும் (சான்றுகள் பெறப்பட்டு) இங்குப் பதிவு செய்யப் படும். அள்ளி வழங்குவோம்; நமக்கு அல்லாஹ் வழங்குவான்! அள்ளி வழங்கியவர்கள்: கீழக்கரை அஞ்சல் சார்பாக ரூபாய் 25,000ஐ சென்னையில் உள்ள இ.த.ஜ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு நமக்கு அனுப்பப்பட்ட தகவல்: பிஸ்மில்லாஹ் வல்ல ரஹ்மான் குழந்தை இபுராஹீமின் நோயை மிக விரைவில் குணப்படுத்தி, அக்குழந்தையின் பெற்றோர்கள் மனம் குளிர வைப்பானாக ஆமீன். இக்குழந்தையின் மருத்துவத்திற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம் சார்பாக ரூபாய் 25 ஆயிரத்தை கொடுக்கின்றோம். இந்த ரூபாயை எங்களது சென்னை தலைமையகத்தில் வரும் மே 7ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதஜ தலைமைக்கு செல்வதற்கு முன்பாக எனக்கு (00971504985037) விபரத்தை தெரிவித்துக் கொள்ளவும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வஸ்ஸலாம் தாங்களின் சகோதரன் (தொடர்பு கொண்டதையும் உதவிபெற்றுக் கொண்டதையும் சகோ.ஜஹபர் சாதிக் இங்கு உறுதிசெய்க)
தமிழ் இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட (இஸ்லாம் குரல்) சகோதரர் ஸஃபா-மர்வா ஜாஃபர் அலீ அவர்களின் கடிதமும் உதவி வழங்கியதற்கான சான்றும்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பிஸ்மில்லாஹிர்ரஹிமானிர்ரஹீம். சத்திய மார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) குழந்தை இப்றாஹீமின் உடல் நிலையை தங்கள் தளத்திலிருந்து அறிந்தேன். அதனால் என்னாலான சிறிய முயற்சியாக இங்கு துபையில் என்னைச் சுற்றியுள்ள பலரிடமிருந்து உதவிகள் பெற்று கீழ் கண்ட தொகை (ரூபாய் 18,226)யை J. Riyas Deen அவர்களின் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளேன்.
நான் அவருடைய குடும்பத்தினர் எவரையும் தொடர்பு கொள்ள வில்லை. ஆகையால் தயவு செய்து இப்றாஹீம் குடும்பத்தினர் பணம் பெற்றுக் கொண்டதை உறுதி செய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை இப்றாஹீமின் உடல் நிலையை சரியாக்கி நீடித்த ஆயுளோடு பல்லாண்டுகள் ஹிதாயத்தோடு வாழ பிரார்த்தித்தவனாக… குறிப்பு: தங்கள் தளத்தில் இக்காரியத்தில் இரண்டே இரண்டு உதவிகள் தவிர வேறு எதனையும் காண முடிய வில்லை. இரகசியமாக பல சகோதரர்கள் உதவி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை பிரசுரிப்பது மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்றால் எங்களுடைய எந்த விவரமும் இல்லாமல் செய்யவும். நான் இத்துடன் இணைத்துள்ள ரசீதில் ஏற்கனவே என் விவரத்தை அழித்து விட்டேன். அன்புடன், முஸ்லிம் சகோதரன், ஏ.எஸ். (அராமெக்ஸ்-துபை).
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! அன்புச் சகோதரர் ரியாஸ்தீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நலம்; நலமே விழைவு. தங்கள் தம்பி இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்குப் பொருளாதார உதவிகோரி நமது தளமான சத்தியமார்க்கம்.காம் இணைய இதழில் 'உருகும் பிஞ்சுக்கு உதவுவோம்' என்ற தலைப்பில் கடந்த 30 ஏப்ரல் 2009 தேதியன்று வேண்டுகோள் விடுத்திருந்தோம் : http://www.satyamargam.com/1217 அதைப் படித்தச் சில சகோதரர்கள், தங்களால் இயன்ற பொருளுதவியைத் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் வளங்களை வாரி வழங்குவானாக! மேலும், சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகிகள் சார்பாக தங்கள் தம்பி இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்காக இத்துடன் ரூபாய் 62,000 (அறுபத்தி இரண்டாயிரம்) தாங்கிய காசோலை (593410) இணைத்திருக்கிறோம்.
பெற்றுக் கொண்டதற்கு எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் தம்பியின் நோயைத் தீர்த்து வைத்துப் பூரண நற்சுகம் அளிப்பானாக! பிரார்த்தனைகளுடன், நிர்வாகிகள், சத்தியமார்க்கம்.காம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ், அது நாளைக்கு நாகூரில் கிடைக்கக் கூடும்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (21)
![]()
பிஸ்மில்லாஹ்
வல்ல ரஹ்மான் குழந்தை இபுராஹீமின் நோயை மிக விரைவில் குணப்படுத்தி, அக்குழந்தையின் பெற்றோர்கள் மனம் குளிர வைப்பானாக ஆமீன்.
இக்குழந்தையின் மருத்துவத்திற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம் சார்பாக ரூபாய் 25 ஆயிரத்தை கொடுக்கின்றோம். இந்த ரூபாயை எங்களது சென்னை தலைமையகத்தில் வரும் மே 7ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதஜ தலைமைக்கு செல்வதற்கு முன்பாக எனக்கு (00971504985037) விபரத்தை தெரிவித்துக் கொள்ளவும்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
168/95, முதல் மாடி, பவளக்கார தெரு,
மண்ணடி, சென்னை - 600001
ஸெய்யது இக்பால் - 00919600191610
வஸ்ஸலாம்
தாங்களின் சகோதரன்
கீழை ஜமீல்
1
April 30, 2009 13:39
அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மனம் கஷ்டமாக உள்ளது. உதவனும் என்று நினைப்பவர்களுக்கு வசதியும் இல்லையே என்று என்னும் பொழுது. எனினும் சிறு துளி பெரு வெள்ளம் தானே ! சகோதரர்களே எல்லோரும் சேர்ந்து. வசூல் செய்து இந்த பிள்ளைக்கு உதவுங்கள். அல்லாஹ் வெற்றியையும் நீண்ட ஆயுளையும் பிள்ளைக்கு கொடுப்பானாக. இரண்டு ரக்அத் இரவில் தொழுது. பாலகனுக்காக துஆ செய்வோமாக.
சகோ sathyamargam.காம் வங்கி கணக்கு ஜெ. ரியாஸ்தீன் என்பது. யார் ? அறியத் தாருங்கள்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
2
May 01, 2009 00:03
எனது பெயர் சுல்தான். சிங்கப்பூரில் வசிக்கிறேன்.
குழந்தை இபுராஹீமுக்குப் பொருளுதவி செய்ய விரும்புகிறேன்.
ட்ராஃப்டாக அனுப்புவதானால் யார் பெயருக்கு அனுப்புவது?
3
May 01, 2009 16:59
அன்புச் சகோதரர்கள் அப்துல் அசீஸ், சுல்தான்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
வங்கிக் கணக்கு விபரம்:
J. Riyas Deen
A/c No: 734724928
Indian Bank
Nagoor Branch
Nagappattanam Dt.,
Pin: 611 002
மேற்படி வங்கிக் கணக்கு, குழந்தை இபுராஹீமின் அண்ணன் ரியாஸுத்தீனுக்கு உரியது.
வீட்டு முகவரி:
564/393, மெயின் ரோடு, நாகூர்-611002.
தாங்கள் செய்யும் உதவிகளுக்கு, அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி செய்வான்.
'உருகும் பிஞ்சுக்கு உதவுவோம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிடுவதோடு நின்றுவிடாமல் சத்தியமார்க்கம்.காம், குழந்தை இபுராஹீமுக்கான பொருளுதவி செய்யும் உதவிக்கரங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்கிறது.
4
May 01, 2009 17:06
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
ஜஸாக்கல்லாஹு கைரன்
இச்செய்தியை தாமறிந்த உறவினர்கள் தோழர்களுக்கு எத்திவைத்து அவர் அவர்களால் இயன்ற உதவியை குழந்தையின் வைத்திய அவசரத்தை கருத்தில் கொண்டு உடன் அனுப்பிடவும் அல்லாஹ் விரைவில் அந்த குழந்தையை குணப்படுத்திடவும் இரு கரமேந்தி இறைவனிடன் பிராத்திப்போமாக.
5
May 01, 2009 18:42
அல்ஹம்துலில்லாஹ். ஜஸாக்கல்லாஹ் ஹைரா.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அனுப்புவதற்கு சிரமப்படலாம். எனவே உதவி செய்ய விருப்பமுள்ளவர்களிடம் பணத்தை பெற்று மொத்தமாக அனுப்பினால் நல்லது.
அன்புடன்
முஹம்மத்
6
May 02, 2009 06:49
இசெய்தி தட்ஸ் டமில் -லில் வந்தபோது பின்னோட்டம் அளித்த ஒரு நண்பர், தன் உறவினர் புற்று நோயால் அவதிப்பட்ட போது சென்ன்னயில் அறிஞர் அண்ணா அரசு புற்று நோய் மருத்துவமனயில் இலவசமாக சிகிக்சை எடுத்துக்கொண்டதாகவும் இப்பொழுது நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிரு ந்தார். இச்செய்தியில் பயனுண்டா என சம்பந்தபட்டவர்கள் பரிசீலிக்கவும்.
7
May 02, 2009 08:57
அஸ்ஸலாமு அலைக்கும். அணைத்து முஸ்லிம்களுக்கும். சகோதரர் சிராஜ் அரசு மருத்துவமனை என்பது. எந்த அளவுக்கு நோயாளியின் மீது கவனம் எடுத்துக் கொள்வார்கள் என்பது. பரவலாக அனைவருக்கும் தெரிந்தது தான்.
// என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன்.
பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன். //
ஒரு சகோதரரின் எதிர்பார்ப்பு பிள்ளை மட்டும் தான் நோக்கமாக இருக்கும் பொழுது. அங்கே இலவசம் இங்கே இலவசம் என்று அறிவுறுத்துவது. என்ன பேச்சு.
சகோ சிராஜ் கொஞ்சம் யோசியுங்கள். சொந்த வீட்டை விற்றுவிட்டு வீதியில் இருக்கும் இந்த சகோதரருக்கு இனி இலவச மருத்துவம் இல்லாதது.மட்டும் தான் பெரிய குறையோ ?
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
8
May 02, 2009 23:21
அன்புச் சகோதரர் சிராஜ்,
நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டச் செய்தி எதுவும் தட்ஸ்தமிழ்.காம் பதிவில் காணப்படவில்லை.
இல்லாத செய்தியைக் குறிப்பிட்டு, உதவும் சகோதரர்களின் உற்சாகத்தைக் குறைக்க வேண்டாம்.
சகோ. அப்துல் அசீஸ் அவர்களின் கருத்தையும் படித்துக் கொள்க!
9
May 03, 2009 07:04
அஸ்ஸலாமு அலைக்கும்
குழந்தையின் உயிர் காக்கும் விஷயத்தில் நான் இல்லாத செய்தியை சொல்லி உதவி செய்யும் நல்லுள்ளங்களின் உற்சாகத்தை குலைக்கும் மட்டமான காரியத்தை செய்யவில்லை என்பதை சகோ. ஜமீலுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.29 ந் தேதி தட்ஸ் டமில்-லில் குழந்தை இப்ராகிமின் செய்தி வந்திருந்தது. அதற்கு பின்னூட்டம் அளித்த ஒரு இ ந்து நண்பர் அளித்த தகவலே அது. பழைய பின்னூட்டங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு புதிய பின்னூட்ட்ங்கள் மட்டுமே தற்போது காண்ப்படுகிறது. அதனால் நான் பொய்யனாகி விட மாட்டேன். நான் படித்த அந்த தகவல் சம்பந்தப்படவர்களுக்கு பயன் பட்டாலும் பயன்படலாம் என்ற நல்லெண்த்தில் தான் பதிய வைத்தேன்.சகோ அப்துல் அஸீஸுக்கும் இதுவே என் பதில்.
உதவி செய்வது தொடர்பான கருத்துக்களுக்கு மத்தியில் நான் அளித்த் தகவல் விவாதப் பொருளானதில் வருத்தம் அடைகிறேன்.
சிறுவன் இப்றாகீம் பூரண உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன்
10
May 03, 2009 08:18
அன்புச் சகோதரர் சிராஜ்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
தட்ஸ்தமிழில் பழைய பின்னூட்டங்களை அழிக்கும் விபரம் எனக்குத் தெரியாது.
எனது பின்னூட்டம் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
11
May 03, 2009 20:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
அல்ஹம்துலில்லாஹ்
குழந்தைக்கு பலரும் உதவிகள் வங்கி கணக்கில் அளித்து இருப்பார்கள் என்பதை பின்னூட்டங்கள் மற்றும் தாங்கள் பதிவு செய்துள்ள பணம் அனுப்பியவர்கள் விபரங்கள் மூலம் அறிய முடிகிறது.
// அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.//
அவர்கள் உறவினர்கள் மூலம் குழந்தையின் தற்போதய நிலவரம் சிகிச்சைகள், போன்ற விபரங்கள் அப்டேட்ஸ் அறிய ஆவலாக உள்ளேன் இயன்றால் அறியத் தரவும்.
குழந்தை இப்ராஹிம் விரைவில் நலம் பெற துவாக்களுடன்.
மு முஹம்மத்
12
May 10, 2009 06:35
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சென்று அவர்களின் உதவி இன்று பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. மேலு குறிப்பிட்டுள்ள இரு உதவிகள் அன்றி மேலும் ஒருவரிடமிருந்தும் 14 ஆயிரம் கிடைக்கப் பெற்றது. சத்தியமார்க்கம் நிர்வாகத்தினரின் உதவி வந்ததும் அது குறித்தும் தகவல் தருகிறோம்.
இந்த மாத இறுதியில் நான் ஊருக்குச் செல்கிறேன். அதன் பிறகு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சத்தியமார்க்கம் இணைய தள நிர்வாகிகளுக்கும், உதவிகளைத் தாராளமாக அள்ளித் தந்த சகோதரர்களுக்கும், குழந்தைக்காக துஆ செய்த, செய்யவிருக்கிற அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தை இபுராஹீமின் தந்தை ஜஹபர் சாதிக் அவர்களுக்காக....
குவைத்திலிருந்து அப்துல் கரீம்
13
May 12, 2009 18:05
அஸ்ஸலாமு அலைக்கும் !
சிறுவன் இப்ராகிமின் உடல் நலம் பெற அல்லாவிடம் பிரார்த்திக்கிறோம் !
நான் 333 ரூபாய் அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளேன். தயவு செய்து அந்த பணம் கிடைக்கப்பெற்றவுடன் இங்கே தெரியப்படுத்தினால் இன்ஷா அல்லா நான் 20000 (இருபதாயிரம் மட்டும்) மேற்கொண்டு அனுப்பி வைக்கிறேன்.
இன்ட்ரா டிரான்ஸ்பர் செய்வதால் உங்களூக்கு சரியாக கிடைத்துள்ளதா என தெரிய விரும்புகிறேன்.
14
May 21, 2009 05:22
அஸ்ஸலாமு அலைக்கும். சத்யமார்க்கம்.காம் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும். குழந்தை இப்ராஹீம் இறந்துவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்று காலை ஆறு மணியளவில் இறைவனடி என்னால் முடியலை
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
15
May 21, 2009 13:09
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் அப்துல் அசீஸ், இத்துயரச் செய்தி கேட்டு மனம் மிகவும் துன்புற்றது.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்!
குழந்தை இப்ராஹிமின் மறுமை வாழ்விற்காகவும், துயரத்தோடிருக்கும் பெற்றோருக்கு வல்ல அல்லாஹ் - சிறப்பு மிக்க இன்னொரு செல்வத்தை ஈடான தந்து அவர்களை இலேசாக்கி வைக்கவும் துஆச் செய்வோம்.
16
May 22, 2009 10:40
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
யா அல்லாஹ் துயரத்தில் தவிக்கும் குழந்தையின் பெற்றோருக்கு உன்னின் புறத்திலிருந்து அமைதியை நல்குவாயாக. ஆமீன்.
17
May 22, 2009 16:09
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் அப்துல் அசீஸ், இத்துயரச் செய்தி கேட்டு மனம் மிகவும் துன்புற்றது.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்!
குழந்தை இப்ராஹிமின் மறுமை வாழ்விற்காகவும், துயரத்தோடிருக்கும் பெற்றோருக்கு வல்ல அல்லாஹ் - சிறப்பு மிக்க இன்னொரு செல்வத்தை ஈடான தந்து அவர்களை இலேசாக்கி வைக்கவும் துஆச் செய்வோம்.
18
May 22, 2009 20:25
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
இத்துயரச் செய்தி கேட்டு மனம் மிகவும் துன்புற்றது.குழந்தை இப்ராஹிமின் மறுமை வாழ்விற்காகவும், துயரத்தோடிருக்கும் பெற்றோருக்கு மனம் இலேசாக்கி வைக்கவும் துஆச் செய்வோம்.
19
May 23, 2009 15:40
அலைக்கும் ஸலாம் சகோதரர் அப்துல் அசீஸ், இத்துயரச் செய்தி கேட்டு மனம் மிகவும் துன்புற்றது.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்!
குழந்தை இப்ராஹிமின் மறுமை வாழ்விற்காகவும், துயரத்தோடிருக்கும் பெற்றோருக்கு வல்ல அல்லாஹ் - சிறப்பு மிக்க இன்னொரு செல்வத்தை ஈடான தந்து அவர்களை இலேசாக்கி வைக்கவும் துஆச் செய்வோம்
20
May 26, 2009 11:38
கருத்து எழுதுக :
|