சத்தியமார்க்கம்.காம்

களாத் தொழுகை கூடுமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
திங்கள், 29 மே 2006 08:33

பதில்:

ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு சிலர் அவர் தம் இயலாமையின் காரணமாக நிறைவேற்ற முடியாது போயின், அவர்களுக்கு அவ்வாறு விட்டுப் போன கடமைகளைக் காலம் தாழ்த்தி நிறைவேற்றுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

உதாரணத்திற்கு, மாதவிடாய் உண்டான பெண்களும், நெடிய பயணத்திலிருக்கும் பயணிகளும் நோன்பை விட்டுப் பின்னர் நிறைவேற்ற இஸ்லாத்தில் அனுமதி உண்டு. இதனை களா நோன்பு என்பர். ஆனால் ஐவேளைத் தொழுகை விஷயத்தில் களா (பிற்படுத்துதல்) தொழுகை என்றொரு தொழுகையே கிடையாது. அவ்வாறு உண்டெனில் அதனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு காண்பித்துத் தந்திருக்க வேண்டும். அவர்கள் காட்டித் தராத எதுவுமே மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

தொழுகையைப் பொறுத்தவரை,

நிச்சயமாகத் தொழுகை மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக அமைந்துள்ளது. (அல்குர்ஆன் 4:103)

என இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

ஐவேளைத் தொழுகைகளின் ஆரம்ப நேரம் எது அதன் கடைசி நேரம் எது என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு விளக்கி விட்டார்கள்.

களாவாக ஆக்கித் தொழுவதற்கு அனுமதி இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ தான் சொல்ல முடியும். பிரயாணத்திலிருப்போரும் வேறு சில காரணங்களுக்குரியவர்களும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது வேறு நேரங்களில் தொழவும், தொழுகை ரக்அத் எண்ணிக்கைகளைக் குறைத்துத் தொழவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் பிரயாணத்தின் போது ஏற்படும் இடைஞ்சல்களைக் கணக்கில் எடுத்து மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளனர். தற்போதைய வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் எவ்வளவு தூரப் பிரயாணமாக இருந்தாலும் சவுகரியக் குறைவு ஏற்படாத பொழுது இந்த அனுமதியை நாம் உபயோகிப்பது சிறந்ததா என்பதை அவரவர் மனதில் கேட்டுப் பின்பற்றுவது சிறந்தது.

ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் இக்கட்டான போர் முனைகளில் கூட தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தியது கிடையாது. ஒரே ஒரு முறை அகழிப் போரின் போது மட்டுமே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதுள்ளார்கள்.

அகழ் யுத்தத்தின் போது சூரியன் மறையும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அஸர் தொழ முடியவில்லை. சூரியன் மறைந்த பின்பு அஸரைத் தொழுது அதன் பின்னர் மஃரிப் தொழுதார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதுகூட அச்சநிலையின் போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட நிலைபாடாகும். இந்த சம்பவத்தை வைத்து நாம் களா கூடும் என வாதிட்டாலும் அது அச்ச நிலைக்கு மட்டுமே பொருத்தமாகும். எனினும் இச்சம்பவத்துக்குப் பின் அச்ச நிலையின் போது கூட தொழுகையை அதற்குரிய நேரத்தில் நடந்து கோண்டோ இருக்கும் நிலையிலேயோ கண்டிப்பாகத் தொழுதே ஆக வேண்டும் என  இறைவன் உறுதிபடத் தெரிவித்து விட்டான்.

அகழிப் போரின்போது லுஹர், அஸர் ஆகிய தொழுகை போரில் ஈடுபட்டதனால் தவறிவிட்டது. நபி(ஸல்) அவர்கள், சூரியன் மறைந்த பிறகு பிலாலை அழைத்து லுஹருக்கு இகாமத் சொல்லச் செய்து லுஹர் தொழுகையை நிறுத்தி நிதானமாக அதற்குரிய நேரத்தில் தொழுவதுபோல் தொழுதார்கள். பின்பு அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து அஸரை, அதன் நேரத்தில் தொழுவது போல் அழகிய முறையில் நிறைவேற்றினார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள். இது நீங்கள் பயந்தால் நடந்து கொண்டோ வாகனத்திலோ தொழுது கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 2:239) என்ற வசனம் இறங்குவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியாகும் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (சுருக்கம் : நஸயீ, அஹ்மத், முஅத்தா ஆகிய நூல்களில் இந்த விபரம் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

போர்க்காலம் போன்ற அச்சம் தரும் சூழல் என்றாலும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்ற இறைவனின் கட்டளை வருவதற்கு முன் இது நடந்துள்ளதால் அந்த சலுகை இந்த வசனத்தின் மூலம் ரத்துச் செய்யப்பட்டு விட்டது என்பது தெளிவு.

தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டு மற்ற நேரத்தில் தொழ உறங்கியவருக்கும், மறந்தவருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழ வேண்டும்" என்பது நபிமொழி. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இங்கு மறந்து தூங்கியவருக்கு மட்டுமே இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துக் கொண்டு நாம் வேண்டுமென்றே படுத்துத் தூங்குவது கூடாது.

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது அவசியமான ஒன்று. அதைத் தவற விடுபவன் மாபெரும் குற்றவாளியாகின்றான். கடும் தண்டனைக்கு ஆளாகின்றான். ஆயினும் மறதி, உறக்கம் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் அதற்குரிய நேரத்தில் தொழத் தவறியவன் விழிப்பு ஏற்பட்டதும் தொழுதுவிடும் போது குற்றமற்றவனாகி விடுகின்றான். மறதி, உறக்கம் போன்ற நியாயமான காரணங்கள் இவனுக்கு இருப்பதால் இவனைக் குற்றவாளியாக்க முடியாது.

ஆனால் வேண்டுமென்றே தொழுகையை விட்டவன் மாபெரும் குற்றவாளியாகி நிற்கின்றான். இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தி இருக்கின்றான். இவன் குற்றவாளியாவதிலிருந்து சலுகை பெறுவதற்குரிய நியாயமான காரணங்கள் எதுவுமில்லை. மறதியாக விட்டவன் குற்றவாளியாக ஆகாதது போல் வேண்டுமென்று விட்டவனும் குற்றாவாளியாக மாட்டான் என்று நாம் யாரும் கூற மாட்டோம்.

எனவே இஸ்லாத்தில் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தி(களாவாக்கி)த் தொழுவது கூடாது என்பதை விளங்கலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
Nazimullah:
பிரயாணத்திலிருப்போரும் வேறு சில காரணங்களுக்குரியவர்களும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது வேறு நேரங்களில் தொழவும், தொழுகை ரக்அத் எண்ணிக்கைகளைக் குறைத்துத் தொழவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் பிரயாணத்தின் போது ஏற்படும் இடைஞ்சல்களைக் கணக்கில் எடுத்து மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளனர். தற்போதைய வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் எவ்வளவு தூரப் பிரயாணமாக இருந்தாலும் சவுகரியக் குறைவு ஏற்படாத பொழுது இந்த அனுமதியை நாம் உபயோகிப்பது சிறந்ததா என்பதை அவரவர் மனதில் கேட்டுப் பின்பற்றுவது சிறந்தது. Nabihal Naayaham Rasoul Sallallaahu Alaihi wa Sallam Katru thandha Qasar Thozhuhaiyai Patri Neengal Kurippittullathu Sariyalla. Ethai Katru Thandhaarhalo AthaiKadaivaai Parkkalaal Kawi pinpatruwathey Sirandhadhu. Idharkkaaha Manadhai keyttu Pin Patrinaal Ewalavu Aringjaraaha irundhaalum Owaru Arinjganum Oru Karuhtai Tharuvaarhal. Ottahathil payanitha Kaalam ponathu, Kudhiraiyil Payanithakaalam Ponathu, Auto Vaahanangalin Aarambakaalam Poi Vehu viraivu Vahanagal Vandhu vittana, Anaalum Naam Nabihal Naayaham Rasoul Sallallaahu Alaihi wa Sallam Katruthandha Muraiyil Payana ennathil Purapattu vittomaanaal Qasar thozhuvathey Sirandhathu. Allaah Nam Anaivarukkum Neyrvazhi Kaatta podhumaanavan. Allaahvey Miha Arindhavan.
1

April 27, 2007 21:16
0
ansari:
அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்களின் தளத்தை நீண்டநாட்களாக வாசித்து வருகிறேன். இஸ்லாமிய விடயங்களை மிகத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கி வருகிறீர்கள். களா தொழுகை குறித்த ஒரு கேள்வியில், அவ்வாறான ஒரு தொழுகை மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் விளக்கியிருந்தீர்கள். அதனை ஒட்டி எனக்கொரு கேள்வி, விரைந்து விளக்கமளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறேன்.

என் கேள்வி இது தான்:

இஸ்லாமிக் அகாதமி என்ற இஸ்லாமிய தளத்தில் தொழாமல் விடுபட்டுப் போன கடமையான தொழுகைகளைக் கண்டிப்பாக தொழுது தான் ஆக வேண்டும் எனவும் இல்லையேல் மறுமையில் கண்டிப்பாக இறைவனிடம் குற்றம் பிடீக்கப்படுவோம் எனக் கூறியுள்ளனர். விடுபட்டுப் போன ஒரு நாளைய கடமையான தொழுகைகளை இலகுவாக தொழுது முடிக்க என சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

எவ்வித ஆதாரங்களும் இன்றி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த ஆலோசனையில் எனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. ஆனால், அவர்கள் கூற வரும் "விடுபட்டு போன கடமையான தொழுகைகள்" குறித்த விஷயத்தில் பயமும் ஏற்படுகிறது.

இதனைக் குறித்து தெளிவான ஆதாரங்களுடன் எனக்கு விளக்குவீர்களா?

அவர்கள் வெளியிட்ட அந்த ஆலோசனையை இம்மடலுடன் ஒட்டியுள்ளேன்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்.

இப்படிக்கு
அன்ஸாரி


http://islamicacademy.org/html/Learn_Now/English/Qaza_e_Umree.htm

Method of praying Qaza Salahs Quickly

If someone have missed Salahs in their account. Either one time's or of many years, they must pray their Qaza as soon as possible. Salah is a Fard and not forgiven. On the day of judgement Salah will be the first thing asked about.
For the people who have many years of missed Salahs. There is a way to pray them quickly. Following instructions have four exeptions and has all Fards and Wajibs for a complete Salat. Please pray your Qaza as soon as possible. Even of you could pray one days Qaza Salahs every day which are only 20 rakahs (3 wajib witr), please do it. It only takes few mins to perform 20 rakahs according to the following instructions.

1) In Ruku and Sajdah instead of reciting "Subhaana Rabbiyal Azeem" and "Subhaana Rabbiyal A'la" three times, say it only once. But make sure do not leave Ruku poster untill the Meem (M) of Azeem has been said properly. Similarly do not leave the posture of Sajdah until Ala has been said completely. Just make sure to say these Tasbeehaat properly and do not rush.

2) In third and four Rakah of Fard Salah instead of reciting the whole Soorah Fatiha say, "Subhan Allah" three times and go to Ruku, . Make sure "Subhan Allah" has been recited three times properly, do not rush. This exeption is only for Fard. In third rakah of Witr it's a must to recite full Soorah Fatiha followed by at least three ayahs of Quran or a soorah (as we usually do in first and second rakah).

3) In last Qaidah (when we sit for Attahyyat) before Salam, after Attahyyat instead of full Durood and Dua just say, "Allah Humma Salle Ala Sayedena Mohammad Wa Aalihi", then finish the Salat with Salam. Dua is not a must here.

4) In Witr, instead of full Dua-e-Qunoot just say "Rabbigh Fir Lee" one or three times.
2

July 15, 2009 17:24

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக களாத் தொழுகை கூடுமா?
Twitter
RSS
YouTube
English