சத்தியமார்க்கம்.காம்

நாகர்கோவிலில் நடைபெற்ற "எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்" நிகழ்ச்சி! print Email
வாசகர் பகுதி - வாசகர் மடல்
செவ்வாய், 17 மார்ச் 2009 17:35

இறையருளால் எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்(UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way) என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச் 09) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களைச் சைகைகள் மூலமும் உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.

இந்தப் பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு பாடங்களுக்கு இடையிலும் பயில்பவர்களை உற்சாகமூட்ட மூச்சுப் பயிற்சியளித்தார். இது பங்கெடுத்தவர்களின் கவனத்தில் தொய்வு ஏற்படா வண்ணம், நிகழ்ச்சி முடியும்வரை அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது.

குர்ஆனிலுள்ள முக்கிய 50 சொற்களை இப்பயிற்சி மூலம் தெரிந்து கொள்வதால் அதிலுள்ள சுமார் 27000 சொற்களைப் புரிந்து ஓத இயலும். குரானிலுள்ள சுமார் 78000 மொத்த சொற்களில் இது 35 சதவீதமாகும்.

மாலை நாலரை மணி முதல் இரவு சுமார் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணி நேரத்தில் 8 பாடங்கள் வாயிலாக இந்த வகுப்பு நடத்தப்பட்டது. மஃக்ரிப் தொழுகைக்காக அரை மணி நேரம் தேனீருடன் இடைவேளை அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழக்கறிஞர் அஸீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பேசிய IRG அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ். செய்யது முஹம்மது மத
னீ நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப் பேசியதோடு, மேலும் இது போன்ற நல்ல பலனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த IRGT வளாகத்தின் கதவுகள் திறந்திருக்குமென உறுதியளித்தார். சமூக நல அமைதி அறக்கட்டளையின் செயலர், பொறியாளர். பிஜிலி ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய தொடக்கம் முதலே முழு முயற்சியுடன் எல்லா ஏற்பாடுகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சமூக நல அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை இங்கு நினைவு கூறுவது இன்றியமையாததாகும்.

மேலும் இந்த நிகழ்சியைப் பல்வேறு இடங்களில் சிறப்புற நடத்த பக்க பலமாக இருந்து வரும் ஜனாப். கஸ்ஸாலி அவர்களும் நிகழ்ச்சிக்கான தொழில் நுட்ப அமைப்புகளைப் பொறுப்பாகச் செய்துவரும் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் மஸ்தான் அவர்களும் நிகழ்ச்சி சிறப்புற உதவினர்.

பயனுள்ள இந்த நிகழ்ச்சியினை தமிழ் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திப் பயன்பெறச் செய்யவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

வல்ல நாயன் அதற்கு அருள்புரிவானாக. ஆமீன்.

தகவல்: அபூ அய்னு.

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
ஹஸன் கமருதீன்:
அஸ்ஸலாமு அலைக்கும் சிறப்பான இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்... இந்நிகழ்ச்சியில் போட்டுக்காட்டப்பட்ட Slide Shows ஐ நம் சகோதரர்களுக்கு அனுப்பி தந்தால் உதவியாக இருக்கும். Please Send the Documents To : எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
1

March 24, 2009 06:51
0
அல் அமீன்:
அன்புச் சகோதரர் ஹஸன் கமருதீன், 'எளிய முறையில் குர்ஆன் ஓதுதல்' நிகழ்ச்சிகளுக்குத் தேவையான கோப்புகள் www.understandquran.com என்ற தளத்தில் பதிவேற்றப்படுகின்றன என நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் நான் இதுவரை பங்கு கொண்டதில்லை. இருப்பினும் எனக்குக் கிடைத்துள்ள்ள மின்னஞ்சல்களிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. அநேகமாக கீழ்கண்ட பக்கத்தில் உள்ளவைகளே இந்நிகழ்ச்சியில் போட்டுக்காட்டப்பட்டிருக்கும். http://www.understandquran.com/courses/short-course/tamil.html பயன்படுத்திக் கொள்ளுங்கள். - அல் அமீன்
2

March 24, 2009 13:17
0
ஹஸன் கமருதீன்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர் அல் அமீன் அவர்களுக்கு, அல்ஹம்து லில்லாஹ். அந்த Slide Show சில நாட்களுக்கு முன்பு எனக்கும் கிடைத்தது. சுட்டி காட்டியதற்கு தங்களுக்கு நன்றி. Jazakkallah Khaira...
3

April 03, 2009 08:16

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம். நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்"" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு வாசகர் பகுதி வாசகர் மடல் நாகர்கோவிலில் நடைபெற்ற "எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்" நிகழ்ச்சி!
Twitter
RSS
YouTube
English