சத்தியமார்க்கம்.காம்

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...! print Email
வாசகர் பகுதி - வாசகர் மடல்
திங்கள், 16 மார்ச் 2009 08:01

Image

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.

"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 'உரிய மரியாதை' கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.

திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).

திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).

இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).

இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் 'உள்குத்து' அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் 'இனிய' பிரச்சாரம் நடக்கலாம்.

போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இதேமகவுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)

இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.

தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!

ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.

"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!

"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)

- நல்லடியார்!

Trackback(0)
கருத்துக்கள் (6)add comment
0
Rafique uthuman,ngl/Riyadh:
ஓரிரு வாரங்கள் தாமதமானாலும் சரியான கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.மற்ற கட்சிகளின் சீட் கணக்கு செய்திகளில் வெளிவரும்போது முஸ்லீம் கட்சிகளின் சீட் கணக்கு லீக் ஆகியுள்ளது என்ற நிலையில்தான் இன்றுவரை உள்ளது. இதுவே முஸ்லீம் கட்சிகளை மற்ற கட்சிகள் எந்த இலட்சணத்தில் மதிக்கின்றன என்பதை உணர முடியும். மமக எந்த கூட்டணிக்கும் கதவு திறந்திருக்கிறது என்பதை அறிவித்ததே ஒரு ஆரோக்கியமான நிலையாக தெரிகிறது.முஸ்லீம் லீக் வேலூரையும் தமிழ் தேசியலீக் வேலூர் அல்லது ராம்நாட் கேட்டு பெறுவோம் என்று அறிவித்த செய்தி (கூகுள் செய்திகள்) வந்ததிலிருந்து அவர்களின் ஒரு சீட் கலாச்சார அடிமைத்தனம் போகல என்று தெரிகிறது. அல்லாஹீ அக்பர் என்றதும் ஓரே வரிசையில் நிற்கிற முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஓரே சின்னத்தில் போட்டியிடணும். வேலூர் லீக்ற்கும் ராம்நாட் இதேமகவிற்கோ அல்லது தே.லீக்ற்கோ மற்ற எல்லா வாய்புள்ள தொகுதிகளிலும் மமக வும் நிற்கலாம்.நமக்குள்ளே தேர்தல் நேரத்திலாவது ஒன்றிணையணும். நமக்குள்ளேயே போட்டிபோட்டு வாக்குகள் சிதறவேண்டாம்.ஒரே சின்னமாக பாராளுமன்றத்தில் ஓரே கட்சியின் எம்பி என்று அறியப்படணும். அதற்கு மு.லீக் தே. லீக் இதேமக போன்ற எல்லா கட்சிகளும் கண்டிப்பாக ஒத்துழைக்கணும்.திமுக அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்க்கணும். சமுதாய நல்ல எண்ணம் உள்ள அனைவரும் இதற்கு பாடுபடவேண்டும். துரோகம் செய்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் அவர்கள் ஓரளவு தெளிவாக இருக்கிறார்கள்.எந்த கூட்டணி அட்ஜெட்ஸ் செய்கிறதோ அந்த கூட்டணிக்கு மற்ற தொகுதிகளில் வாக்களிக்கலாம். எந்த கூட்டணியும் நம் தொகுதி எண்ணிக்கைக்கு ஒத்துவராவிட்டால் நாம் சேர்ந்து நின்றுவிட்டு மற்ற தொகுதிகளில் எந்த எம்பி எந்த கூட்டணி நமக்கு ஆதரவாக ஓரளவு இருக்கும் என்று பார்த்து போடலாம் ஆனால் முஸ்லீம் கட்சிகள் அங்கே வேலை செய்ய வேண்டியது இல்லையே. ஒவ்வொரு தேர்தலையும் நாம் தவறவிடும்போது அதால பள்ளத்திற்கு போய்கொண்டிருக்கிறோம் என்பதை உணரவேண்டும.;
1

March 16, 2009 17:24
0
ஹக்:
இது போன்ற விழிப்புனர்வு கருத்துக்களை ஒவ்வொறு ஜும்மா மேடையிலும் முழங்கினால் போதும். போஸ்டர், துண்டு பிரசுரங்கள்கூட இல்லாமல் நம்மால் வெல்லமுடியும்...
2

March 17, 2009 08:55
0
Farook Abdullah:
அல்லாஹீ அக்பர் என்றதும் ஓரே வரிசையில் நிற்கிற முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஓரே சின்னத்தில் போட்டியிடணும் ஒவ்வொறு ஜும்மா மேடையிலும் முழங்கினால் போதும் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் .வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்
3

March 17, 2009 12:19
0
Abudul Gaffar:
//ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.// இந்த ஒரு வார்த்தை போதும்! உலுக்கல் கொடுத்து விழிப்புணர்வு தரும் புள்ளிவிபரங்களுக்கு நன்றி நல்லடியார்!
4

March 17, 2009 12:40
0
அருளடியான்:
ஒரே தொகுதியில், இ ரு பெரிய கட்சிகளின் சார்பாகவும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டால், முஸ்லிம்கள் வாக்கு பிரியும். முஸ்லிம் கட்சிகள் போட்டியிட விரும்பும் மயிலாடுதுறை தொகுதியில் பா.ஜ.கவுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இங்கு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தால், அது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையும். கோவை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் மட்டுமாவது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே கூட்டணியை ஆதரிக்க முடிவெடுக்க வேண்டும்.
5

March 17, 2009 14:40
0
அபூபுஷ்ரா:
அருமையான கட்டுரை உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலியை தரட்டும், மேலும் இதை படிக்கும் சகோதரர்கள் இன்றைக்கு முஸ்லிம்களில் அரசியல் சக்தியாகத் திகழும் மு.லீக், தே.லீக், மமக போன்ற கட்சிகளிடம் பேசி ஒருவர் போட்டியிடும் தொகுதிகளில் மற்றொருவர் போட்டியிடுவதைத் தவிர்க்க வையுங்கள் அதுபோல ததஜவின் மேலாண்மைக்குழு உறுப்பினா சகோ பி.ஜே வுடனும் யாராவது பேசி இவர்களுக்கு எதிராகச் செயல்படாமல் இருக்கச்செய்யுங்கள். இந்த முயற்சியை யாரெல்லாம் செய்ய முடியுமோ அவரவர் சக்தியைப் பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் வெற்றி முஸ்லிம்களுக்கே! அன்புடன் அபூபுஷ்ரா
6

March 18, 2009 16:09

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» Modi govt denies scholarships to minority students

The 2010-2011 final examinations are almost over and the admission process for the new academic year is in full swing. But the ambitious Muslim students who want to pursue higher studies are down in the dumps.Six years have passed since the Central government under a Prime Minister’s scheme started offering pre-matriculation scholarships every year to hundreds boys and girls of minority communities in all states.

» A plan for minority development

By Moosa RazaThe main minorities in India are Muslims and Christians. At the all-India level, Muslims form close to 15% of the population. There are other minorities like Sikhs and Jains but they are dominant minorities. But among all the Minorities, both in terms of education, economic development and share in both public and private services, Muslims are at the bottom of the ladder. They are the deprived minorities; their share in the national cake is far less than their population...

» ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள்...

» பய்யினா - தெளிவான அறிமுகம்

நியூயார்க் நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர். ஒரு சராசரி அமெரிக்க மாணவனுக்குரிய அனைத்து குணாதிசியங்களையும் உடையவர். மதம், இறைவன், மார்க்கநெறி ஆகியனவற்றை எல்லாம் தத்துவயியல்,...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு வாசகர் பகுதி வாசகர் மடல் அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!
Twitter
RSS
YouTube
English