சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் - சீதாராமன் print Email
பொதுவானவை - பொதுவானவை
ஞாயிறு, 15 மார்ச் 2009 18:20

மத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற சீதாராமன், சிறந்த பேச்சாளரும்கூட. பொருளியல் பிரச்சினை குறித்துப் பல நூல்களையும் எழுதியுள்ளார். தஞ்சாவூருக்குச் சொந்தக்காரரான இவர், இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது என அழுத்தமாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அவர் அளித்த நேர்காணல் :

*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?

வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம்

திரு. சீதாராமன்: மத்தியக் கிழக்கின் கத்தர் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர்.சீதாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர். பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அண்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர், தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில் பயின்றவர். கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ள இவர் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஈட்டப்படுகின்றது. இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது. மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.

*இஸ்லாமிய வங்கி, வட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை. இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Sharing and Caring) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன. இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்குவதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Equity) நிதியுதவி அளிக்கிறோம். இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.

*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்?

'ஷுகுக்' எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்த உள்ளோம். பொறுப்புணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளன? மொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன? இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?

இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.

*இது உலகமயமாக்கல் காலம். இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்றச் சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்துப் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?

இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம் காரணம். சொத்து வங்கிப் பரிவர்த்தனைக்குப் (Asset – Banked Transactions) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் (Asset – Based Transactions) ஈடுபடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. உற்பத்திப் பொருள்களும் (Products) சொத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?

இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும். நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.

சந்திப்பு : ஏ.ஆர்

நன்றி : சமரசம்

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» இலாபம் பெருகும் பங்கு வணிகம்

இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்....

» STUDY OF ISLAM - இஸ்லாமியப் பாடத் திட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்.மழலையர் வகுப்பிலிருந்து +2 வரைக்குமான  "இஸ்லாமியப் பாடத் திட்டம்" Study of Islam தமிழக முஸ்லிம்களிடையே அறிமுகமாகி வருகின்றது. இப்பாடத் திட்டத்தை, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை...

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» Modi govt denies scholarships to minority students

The 2010-2011 final examinations are almost over and the admission process for the new academic year is in full swing. But the ambitious Muslim students who want to pursue higher studies are down in the dumps.Six years have passed since the Central government under a Prime Minister’s scheme started offering pre-matriculation scholarships every year to hundreds boys and girls of minority communities in all states.

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:168 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் - சீதாராமன்
Twitter
RSS
YouTube
English