| தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய? |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | |||
| திங்கள், 29 மே 2006 08:21 | |||
|
தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும்.
"இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு! நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி
நமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான எண்ணங்கள் ஏற்படுமானால் அதைத் தவிர்க்கப் பின் வரும் ஹதீஸ் வழிகாட்டுகின்றது
"ஷைத்தான் எனக்கு என் தொழுகையையும் ஓதுவதையும் குழப்பி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவன் கின்ஸப் என்ற ஷைத்தான் ஆவான் அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உனது இடது புறம் மூன்று முறை துப்பு" என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன். உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல் :முஸ்லிம்
நமது கட்டுப்பாட்டை மீறி உமது உள்ளத்தில் ஏற்படுகின்ற மோசமான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்படும் எல்லா எண்ணங்களையும் மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல் புகாரி.
அலுவலகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ நமது உயரதிகாரி நம்மைப் பார்க்கும் போது நாம் சிரத்தையுடனும் அக்கறையுடனும் பணிபுரிய முனைவோம். பிரபஞ்சத்திற்கே அதிபதியான நம்மைப் படைத்த இறைவன் முன் நிற்கிறோம் என்கிற எண்ணத்தை நாம் நமது மனதில் தொடர்ந்து இருத்திக் கொண்டால், இவ்வகைத் தொல்லைகளில் இருந்து விரைவில் இன்ஷா அல்லாஹ் விடுதலை பெறலாம்.
இறைவன் மிக அறிந்தவன்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
'அல்லாஹ்' விடம் பேசத் துவங்கி விட்டோம் என்ற நினைவுடன் 'தக்பீர்' கட்டியது முதல் 'ஸலாம்' கொடுக்கும் வரை மனதில் பதிய வைத்துக் கொண்டு, நிலையில் நிற்கும்போழ்து 'ஸுஜுது' உடைய இடத்திலும்; 'ருகூ' செய்யும்போழ்து காலின் இரு பெருவிரல்களையும்; 'ஸுஜுது' செய்யும்போழ்து மூக்கின் நுனியையும்; 'அத்தஹிய்யாத்' தில் இரு முட்டிகள் அல்லது 'கலிமா' விரல் என்னும் சுட்டு விரலையும் நோக்கிக்கொண்டால், பார்வையும் மனமும் ஒர் அணியில் நின்று விடும். முக்கியமாக, ஓதும்போழ்து, ஓர்மை ஏற்பட வசனங்கள்- மற்றும் 'தஸ்பீஹ்' களின் பொருளறிந்து கொண்டே ஓதினால், அதன் சுவையே தனி; கிடைத்திடும் இறையருட்கனி. நமக்காக் நபி(ஸல்)அவர்கள் வாங்கி வந்த வரம் என்னும் தொழுகையில் எல்லா 'யோகா'வும் இணைக்கப்பட்டுள்ளது. நமது தொழுகையில் உள்ள 'அத்தஹிய்யாத்' மற்றும் 'ஸுஜுது' நிலைகளே இன்று 'யோகா' வில் கற்பிக்கப்படுகின்றன.இருக்கும் தொழுகையை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றனர் நம்மவர்கள் என்பதனை எண்ணி மனம் வேதனை; அதனால் எழுதினேன் இதனை...
-'கவிஅன்பன்' கலாம் ,அதிராம்பட்டினம்.
2
November 24, 2007 19:20
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |