| பிப்ரவரி 14 - ஆபாசதினம்! |
|
|
| பொதுவானவை - பொதுவானவை | ||||
| வெள்ளி, 13 பிப்ரவரி 2009 18:21 | ||||
|
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். இன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில் வெளியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது; முன்வரமாட்டார்கள்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
சமூகம் இந்த விபச்சார வலையில் விழுந்து வாடாமல் தங்களுக்குள் கட்டுப்பாடு கொண்டுவரவும். மேலும் இந்த இறைவாக்கான
`` அந்நியப் பெண்களுக்கு முன்பாக, 'முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்' /
'முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்', /
மற்றும் இருபாலரும் தங்கள் வெட்கத்தலங்களை பாதுகாத்துக்கொள்ளவும் என்ற வசனமும் மக்கள் நடைமுறைபடுத்தவேண்டும்.பின் பற்றவேண்டும்
எந்த தினமானாலும் அது ஒரு குறிப்பிட்ட நாளாக தான் இருக்கவேண்டும் என்பது. மூளையை அடகு வைக்கும் கலாச்சாரம் என்பது அனைவரும் தெரிந்தாகவேண்டும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
1
February 13, 2009 21:38
Valentine Day எனும் பெயரில் பெஃப்ரவரி 14 அன்று சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் உலகென்கும் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...
சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!
அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:
உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...
காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.
1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.
2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.
3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.
காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.
நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.
عيد الحب
فضيلة الشيخ محمد بن صالح العثيمين حفظه الله
السلام عليكم ورحمة الله وبركاته وبعد
فقد انتشر في الآونة الأخيرة الاحتفال بعيد الحب ــ خاصة بين الطالبات ــ وهو عيد من أعياد النصارى ، ويكون الزي كاملاً باللون الأحمر الملبس والحذاء ويتبادلن الزهور الحمراء ..00
نأمل من فضيلتكم بيان حكم الاحتفال بمثل هذا العيد ، وما توجيهكم للمسلمين في مثل هذه الأمور والله يحفظكم ويرعاكم
بسم الله الرحمن الرحيم
ج / وعليكم السلام ورحمة الله وبركاته
.الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم
.فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .
كتبه
محمد الصالح العثيمين
في 5/11/1420هـالتوقيع
VALENTINE’S DAY
Shaykh Ibn Uthaymeen (may Allah have mercy on him) was asked:
Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu…
In recent times the celebration of Valentine’s Day has become wide spread, especially among female students. It is a Christian festival where people dress completely in red, including clothes and shoes , and they exchange red flowers. We hope that you can explain the ruling on celebrating this festival, and what your advice is to Muslims with regard to such matters; may Allah bless you and take care of you.
He replied :
Wa Alaikum Salam Wa Rahmathullahi Wa Barakathuhu…
Celebrating Valentine’s Day is not permissible for a number of reasons.
1. It is an innovated festival for which there is no basis on Islam.
2. It promotes Love and Infatuation.
3. It calls for hearts to be preoccupied with foolish matters that are contrary to the way of the righteous (may Allah be pleased with them).
It is not permissible on this day to do any of the things that are the characteristic of this festival, whether that has to do with food, drinks, clothing exchanging gifts or anything else.
The Muslim should be proud of his religion and should not be a weak character who follows every Tom, Dick and Harry. I ask Allah to protect the Muslims from all temptations, visible and invisible, and to protect us and guide us.
வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre - Al Khobar,Saudi Arabia Tel. +96638655557
thanks http://adiraipost.blogspot.com/
2
February 14, 2009 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதா ? அல்லது நமது கலாச்சாரத்தைச் சீரழிக்க வேண்டும் என யாரேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா ? இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் இதன் பின்னணியில் உறைந்து கிடக்கும் உண்மைகள் முகம் காட்டுகின்றன.
வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த ‘தினங்கள்’ என்பதே முதன்மையான உண்மை. அதற்காகவே இவர்கள் ஊடகங்களைக் கவர்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.
முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.
நூறு ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்களை இதய வடிவப் பெட்டியில் வைத்து ஒரு சிவப்பு நிற ரிப்பனைக் கட்டி காதலர் தின சிறப்புச் சாக்லேட் எனும் பெயரில் விற்கின்றன நவீனக் கடைகள். இவற்றின் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே !
பழைய சில காதல் பாடல்களை கவர்ச்சிகரமான காதலர் தின ஸ்பெஷல் சிடி என கடைகளில் விற்கின்றனர் நான்கு மடங்கு அதிக விலையில்.
நகைக்கடை, வைரக்கடை, துணிக்கடைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம். இந்த வைர மாலையைப் போட்டால் காதல் வளரும் என்றெல்லாம் விளம்பரங்கள் சிலிர்க்க வைக்கும்.
என்னென்ன உத்திகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை யுத்திகளும் காதலர் தினத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நோக்கம் வியாபாரம், வியாபாரம், வியாபாரம் !
காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள்.
நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் காதலர் தினம் எத்தனை ஆழமாய் வேர் விட்டு விரிவாய் கிளை பரப்பியிருக்கின்றன என்பதற்கான “ஒரு சோறு பதம்” மட்டுமே.
அப்துல்லாஹ் M
3
February 14, 2009 05:29
அஸ்ஸலாமு அலைக்கும்
காலத்திற்கேற்ற ஆக்கம் அளித்தமைக்கு சத்தியமார்க்கம்.காம் குடும்பத்திற்கு ....நன்றிகள் (ஜஸாக்கல்லாஹு கைரன்)
பலருக்கும் தெரிந்திருக்காத ஆக்கத்தில் உள்ள இந்த குர் ஆன் வசனம் முழுமையாக கீழே:
அல் குர் ஆன் அத்தியாயம் 24- வசனம் 30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அல் குர் ஆன் அத்தியாயம் 24-வசனம் 31 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
ஹிஜாபும் பர்தாவும் பார்வையையும் கற்பையும் பாதுகாக்க வேண்டியது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் என்று கூறிடும் இறை வசனம்.
http://transliteration.org/quran/WebSite_CD/MixTamil/Fram2E.htm
4
February 14, 2009 13:11
பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
5
February 14, 2009 21:08
இது போன்ற அனாச்சாரமான செயலை நியாயப்படுத்திட ஒரு நாளை தேர்ந்தெடுத்து( ஒழுக்கக் கேட்டை பரப்பிட வாழ்த்துக்கள், அன்பளிப்புகள் என்று காசையும் கற்பையும் இழந்து நூதனமான வியாபாரமாக்கி) சில அறிவிலிகள் கொண்டாடி மகிழ்கிறார்கள், என்பது ஒரு புறம் ...அதை எதிர்க்கிறோம் என்பதில் ஒரு சிலர் அது அன்னிய நாட்டுக் கலாச்சாரம் என்பதற்காக மட்டும் அதை எதிர்ப்பது என்பது மறு புறம்.
ஒரு அனாச்சாரமான செயல் அல்லது சடங்கு என்றால் அது வெளி நாட்டு கலாச்சாரம் அல்லது உள் நாட்டு கலச்சாரம் என்றாலும் அதை வெறுத்து ஒதுக்கி எதிர்த்து புறந்தள்ளப் படவேண்டும். அதே போல் ஒரு காரியம் நல்லது எனில் அது எந்த நாட்டை சேர்ந்ததாக இருந்தாலும் அதை எடுத்து செயல் படுத்தலாம் என்ற நிலைபாடு வர வேண்டும் அதுதான் இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படையான கருத்து ஆகும். // ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது.// இதற்கு வாழ்த்துக்கள், அன்பளிப்புகள் அனுப்புவது முதல் இது போன்ற ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்கும் இழி செயலில் முஸ்லிம்கள் தாமும் சிக்கிடாமல் பிறருக்கும் இந்த அனாச்சாரமான, அநாகரீகமான செயலை உணர்த்தி இவ்வலையில் விழாமல், விழிப்புணர்வூட்டி நமது இளைய சமுதாயத்தை தடுத்திடுவதே இந்நாளில் மட்டுமின்றி என்றென்றும் நாம் செய்யவேண்டிய ஒன்றாகும். 6
February 13, 2010 22:20
கருத்து எழுதுக :
|