சத்தியமார்க்கம்.காம்

மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!? print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
வியாழன், 12 பிப்ரவரி 2009 09:17

மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை  நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து வரும் ATS - (Anti Terrorist Squad) மூலம் தெரியவந்தது.


மேலும் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக பெண் சாமியார் பிரக்யாசிங், ராணுவ அதிகாரி புரோகித், சாமியார் தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா, ராகேஷ் தவாடே, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி உள்பட 11 பேரை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பைத் தீவிரவாத தாக்குதலின்போது படுகொலை செய்யப் பட்ட மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படை ATSயின் தலைவரான ஹேமந்த் கார்கரேயின் படுகொலைக்குப் பிறகு 90 நாட்களில் தீர்ந்துவிடும் என்று கார்கரே தன்னுடைய கடைசி பேட்டியில் உறுதியாக சொன்ன மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என்ற நாட்டு மக்களின் கவலையை நிஜமாக்கும் விதத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கார்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் ATS-ன் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார்.

அப்போது அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.

ஷிவானந்த் திவாரியின் கருத்து:-

இந்தத் திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கார்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு வந்து உளவு எடுப்பது குறித்து வகுப்பு எடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி.

போலீஸ் காவலுக்கு அனுமதி மறுப்பு:-

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் ஆஜரானார். அவர், "மாலேகானில் குண்டுவெடிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சுதாகர் சதுர்வேதிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை அவரது வீட்டில் கைப்பற்றி உள்ளோம். மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராம்ஜி கால்சங்கரா சதுர்வேதி வீட்டில்தான் தங்கி இருந்துள்ளார்.  இதுபற்றி சதுர்வேதியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும்" என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்து பிரக்யாசிங் உள்பட 11 பேரையும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தயானந்த் பாண்டே கோர்ட்டுக்கு வெளியில் வைத்து சகோதரரின் செல்போன் மூலம் தனது மகனுடன் பேச நீதிபதி அனுமதி வழங்கினார். இதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உண்மை நிலை :-

இது ஏதோ மலேகானில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டதும் அந்தச் சம்பவத்தில் இந்து முன்னனியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. ஆனால், குண்டுகள் வெடித்தவுடன் அப்போது அதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMIயும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும் "இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்" என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும் நினைவை விட்டு மாறாதவை.

தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்து உதவிகளையும் நல்கி வந்த மஹாராஷ்டிர துணை முதல்வர் R.R. பாட்டிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனவே மாலேகான் விசாரணை என்ன ஆகும் என்று ATSஇல் பணிபுரிபவர்களே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஹேமந்த் கார்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.

"தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்" என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம் 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறியும்வரை நம்முடைய லட்சியப் பயணங்கள் தொடர வேண்டும்.

நன்றி: ஃபிர்தௌஸ் - புதிய தேசம்(பெப்ருவரி 2009)

கருத்துக்கள் (1)add comment
0
ஜபருள்லாஹ் குத்புதீன்:
மாலேகான் , விவகாரம் பற்றிய செய்தி கிடைத்துள்ளது , இந்த செய்தி மூலம் மாலேகான் விவகாரம் , கொஞ்சம் ஆமை வேகத்திலாவது பயணம் செய்கிறது என்று சந்தோசப்பட வைக்கின்றது . ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லீம் பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் ஐ.எஸ்.ஐயிடமிருந்து பணம் பெற்றதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஷியாம் ஆப்தே தன்னிடம் கூறியதாக மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள தயானந்த பாண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் .. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தேன். அப்போது என்னிடம், இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறினார். இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித். புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார். மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்..... http://thatstamil.oneindia.in/news/2009/02/19/india-isi-funded-rss-leaders-pandeys-confession.html
1

February 22, 2009 15:05

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» Sangh Pariwar worried about ‘Hindu' link to terrorism

NEW DELHI: Ever since a ‘Hindu' link to terrorism surfaced in the form of , many in the Rashtriya Swayamsevak Sangh have been spending sleepless nights, wondering where police investigations will lead once the agencies are able to connect all the dots that have emerged over the past two years.

» ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள்...

» ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

"ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

» ”தீ”யில் ஒரு முரண்

ஆங்கிலத்தில் "Double Standard" என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. Terrorism, terrorist, - தீவிரவாதம், தீவிரவாதி - எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை - அம்மா, சின்னம்மா போல....

» முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த...

இறைமறை

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?