சத்தியமார்க்கம்.காம்

பிபிசியின் நிஜ முகம் print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வியாழன், 29 ஜனவரி 2009 17:09

கடந்த 27 டிஸம்பர் முதல் கஸ்ஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட 22 நாள் பயங்கரவாதத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிர், உடைமை இழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் பெரும் காயமடைந்து வீடுகளையும் இழந்து கடும் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு உதவி கோரி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்ஃபாம் போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உலகெங்கும் நிதி திரட்டி வருகின்றன.

 

இவற்றுள் ஒன்றான பேரிடர் அவசர உதவிக் குழு (Disaster Emergency Committee - DEC) என்ற நிறுவனம் கஸ்ஸா மக்கள் மறுவாழ்வுக்கென நிதியுதவி கோரி குறும்படம் ஒன்றைத் தயாரித்து, அதை ஒளிபரப்புவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பிபிசி உள்பட பல்வேறு ஊடக நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.  ஆனால் இக்குறும்பட விளம்பரத்தை ஒளிபரப்ப பிபிசி மறுத்துவிட்டது. இதை ஒளிபரப்புவது பிபிசி பேணிவரும் நடுநிலையைப் பாதிக்கும் எனக் கருதியதால் ஒளிபரப்ப மறுத்ததாக பிபிசியின் தலைவர் மார்க் தாம்ஸன் கூறியுள்ளார்.

பிபிசியின் இந்த முடிவை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்பட பல்வேறு தரப்பினர் குறை கூறி விமர்சித்துள்ளனர்.

"நடந்திருக்கும் கொடுமையின் அளவைப் பார்த்தபின், மனித நேயத்திற்கான ஆதரவுக்கும் நடுநிலை பேணுவதற்காக அக்கொடுமைக்கான உதவியை மறைப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறியும் அளவுக்கு பிரிட்டிஷ் மக்கள் பகுத்தறிவு உடையவர்கள்" என்று பிரிட்டனின் பன்னாட்டு வளர்ச்சிக்கான அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் காட்டமாக விமர்சித்துள்ளார். "மக்கள் பணத்தில் உதவி பெறும் பிபிசி, தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனின் முஸ்லிம் குழுமத்தின் (Muslim Council of Britain)  செயலர் முஹம்மது அப்துல் பாரி, "இதனை ஒளிபரப்ப மறுத்ததன் மூலம் பிபிசி தன் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது; சரிசெய்ய இயலா அளவுக்கு அதன் பிம்பம் சிதையும் முன் பிபிசி தன் தவறைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்" எனக் கூறினார்.

பிரிட்டன் முழுவதும் பிபிசி அலுவலகங்கள் முன்பு முஸ்லிம் அமைப்புகள் உள்படப் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி "பிபிசியே, உன் மீது இழிவே" என்று கோஷங்கள் இட்டனர்.

பிபிசி ஒளிபரப்ப மறுத்த இக்குறும்படத்தை அதன் போட்டி நிறுவனங்களான ITV, சேனல் ஃபோர் ஆகியன ஒளிபரப்ப முன்வந்துள்ளன.

Dim lights Embed Embed this video on your site
பிபிசி ஒளிபரப்ப மறுத்த வீடியோ 

 

இதற்கு முன் 2006-ல் அரசு நியமித்த உண்மை அறியும் குழு ஒன்று "இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் பிபிசி நடுநிலை தவறியதாகக் கருதாவிட்டாலும், பிபிசி தவறான ஒரு செய்தி பரவ வழிவகுக்கும் வகையில் தனது செய்தித் தொகுப்புகளை அளிக்கிறது" என்றும், "அடக்குமுறைக்கு ஆளாகும் பாலஸ்தீனர்களின் நிலையையும் அடக்குமுறையைக் கையாளும் இஸ்ரேலிய அரசின் நிலையையும் மனித நேயமுள்ள எவரும் நடுநிலை என்ற போர்வையில் ஒரே மாதிரியாகக் காணமாட்டார்கள்" என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் பிபிசியின் நிஜ முகம்
Twitter
RSS
YouTube
English