சத்தியமார்க்கம்.காம்

சவூதி அரசருக்கு ஈரான் அதிபரின் கடிதம்! print Email
பொதுவானவை - பொதுவானவை
வியாழன், 29 ஜனவரி 2009 15:51

சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, 22 நாட்களாக கஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும் எனக் கோரி ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத், கஸ்ஸா படுகொலை உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது சவூதி அரசருக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகள்:

அளவற்றக் கருணையாளனான அல்லாஹ்வின் பெயரால்...!

சவூதி அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூத் அவர்களுக்கு,

அல்லாஹ்வின் கருணையும் அருளும் உங்கள் மீது எப்பொழுதும் பொழியட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

நிரபராதிகளும் உதவி செய்ய எவருமில்லாதவர்களுமான கஸ்ஸாவிலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக, நாகரீமற்றவர்களான சியோனிச அரசு அக்கிரமும் அராஜகமுமான ஆக்ரமிப்பைத் துவங்கி இன்றோடு 19 நாள்கள் கடந்து விட்டன என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

தரை, கடல், ஆகாய வழியிலான அனைத்து வழிகளும் இறுக்கப் பூட்டப் பட்டு, எல்லா வழிகளும் அடைக்கப் பட்ட நிலையில் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதலையும் கஸ்ஸா மக்கள் எதிர்கொள்கின்றனர்.

பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் உட்பட சாதாரண அப்பாவி மக்கள் தங்களின் சொந்த மண்ணில் வைத்து கருவறுக்கப் படுகின்றனர். கஸ்ஸாவில் நடக்கும் நிகழ்வைக் கண்ணுறும் எவரது இதயமும் வெடிக்கும்; மனதில் தீப்பிடிக்கும்.

ஜனநாயகத்தின் காவலர்கள், மனித உரிமைகளின் பிறப்பிடம் எனத் தன்னைத் தானே உரிமை கொண்டாடும் வன்சக்திகள், சியோனிஸ அரசுக்கு ஆயுத சப்ளை செய்து ஆக்ரமிப்பும் இன அழிப்பும் செய்வதற்காக மட்டுமே இத்தகைய நரமாமிசம் உண்ணும் அரசை இங்கு உருவாக்கினர். இஸ்ரேலின் செயல்களுக்குக் கண்ணை மூடி ஆதரவு நல்குவதோடு, குற்றங்கள் செய்வதற்குத் தேவையான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளை விலைக்கு வாங்கி வைத்திருக்கின்றனர்.

வன்சக்திகளின் செயல்பாடுகளிலும் அவர்களின் செய்திகளிலும் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், முன்பு எப்பொழுதும் இதுவரை நடந்திராத அளவிற்கான இந்த இன அழிப்பை, கண்டும் காணாதது போன்று நடிக்கும் இஸ்லாமிய-அரபு அரசுகளின் நடவடிக்கைகள் ஆச்சரியம் அளிக்கக் கூடியவை! வருத்தமளிக்கக் கூடியவை!.

எதிர்த்து நிற்பதற்கு எதுவுமே இல்லாத ஒரு சமூகம், தங்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக எங்கிருந்தாவது திடமான ஓர் எதிர்ப்புக் குரல் கேட்காதா என்று ஏங்கி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆக்ரமிப்பாளர்களின் மிருகச் செயல்பாடுகளின் முன்பு தலை கவிழ்ந்திருக்கும் நம்மை இறைவன் மன்னிக்கட்டும்.

சியோனிஸ அரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது நாமனைவரும் தெரிந்த ஒன்றாகும். நிராசையின் காரணத்தினாலேயே அவர்கள் இப்பொழுது அராஜகம் புரிகின்றனர். சுதந்திரமாகச் சிந்திக்கும்-பேசும் அனைத்து மக்களும் நாடுகளும் சியோனிஸ அரசின் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் உயர்த்தி விட்டனர்.

சவூதி அரசரும் புண்ணிய பூமிகளான மக்கா-மதீனாவின் பாதுகாவலரான தாங்கள், இக்கொடுமையான நிகழ்வில் காட்டும் மௌனத்தைக் கலைப்பீர்கள் எனவும் இஸ்லாமிய சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமான குழந்தைகளைக் கொன்றொழிக்கும் சியோனிஸ கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான நிலைபாட்டை எடுப்பீர்கள் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

இதன் மூலம் முஸ்லிம் உலகத்தில் பிரிவினை விதைகளைத் தூவலாம் என ஆசை கொள்ளும் வன்சக்திகளின் எதிர்பார்ப்பைத் தகர்க்கத் தங்களின் உறுதியான நிலைபாட்டினால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

சுதந்திர வேட்கையுள்ள கஸ்ஸாவிலுள்ள வீரப் போராளிகளின் தீரமான போராட்டத்திற்கு வெற்றியளிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். சியோனிஸ அரசு போன்ற கொடுமையாளர்களை அவன் அழிப்பான் எனவும் நான் அவன் மீது ஆதரவு வைக்கிறேன்.

அன்புடன்,

மஹ்மூத் அஹ்மதி நஜாத்.

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
Kavianban KALAM Adirampattinam:
இறைவனருளால் ஈரான் அதிபரின் முயற்சியால் சஊதி மன்னரின் செவியில் ஊதியச் செய்தியால் விடியட்டும் பாலஸ்தீன்
1

January 29, 2009 19:48
0
பைஜூர் ஹாதி:
மிகவும் அற்புதமான ஒரு கடிதம். அதிலுள்ள வார்த்தைகளின் வலு மிகவும் அதிகமானது. பாலஸ்தீன மக்கள் என்ற வார்த்தைகள் மாறி காஸா மக்கள் என்று சுருங்கியதே ஒரு வகையில் நமக்கு தோல்வி. நிராயுதபாணியாக ஒரு மிகபெரிய இன அழிவினை எதிர்கொண்ட பாலஸ்தீனர்களின் வீரத்திற்கு ஒட்டுமொத்த அரபு நாடுகளின் இராணுவமும் ஈடாகாது. ஒன்றுமறியா அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரலுக்கே செவிசாய்க்காத ஆட்சியாளர்கள் இக்கடித்தைக்கொண்டு செவிசாய்ப்பார்கள் என்று நாம் நினைத்தால் அது தவறாகவே இருக்கும். பாலஸ்தீனர்கள், அரபுகள் என்ற நோக்கில் அணுகுவதை விட்டுவிட்டு இஸ்லாமியர்கள், சகோதரர்கள் என்று எப்பொழுது அணுகுகிறார்களோ அன்றுதான் அரபு ஆட்சியாளர்களின் நடவடிக்கை பாலஸ்தீனர்களுக்கு சாதகமாக இருக்கும். பெண்களின் அழுகுரலுக்கும், அரபு ஆட்சியாளர்களின் துரோகப்போக்கிற்கும் இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் விடை இருக்கிறது. இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவான மஸ்ஜித் ஹராமை நிர்வகிக்கும் சவூதியை மதிக்கும் இஸ்லாமிய அரசுகள், இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவான மஸ்ஜித் அக்ஸாவை நிர்வகிக்கும் பாலஸ்தீனர்ளை மதிக்க மறுக்கிறது. அரபு அரசுகளின் நடவடிக்கைகள் அமெரிக்க கள்ளக்குழந்தையான இஸ்ரேலானது பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்களை கொல்வதற்கு மட்டும் உதவவில்லை. மாறாக இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவான மஸ்ஜித் அக்ஸாவை இஸ்ரேல் நாசப்படுத்துவதற்கும் துணை புரிகிறது என்பதனை நாம் நினைவில் நிலை நிறுத்திக்கொள்வோமாக.
2

January 30, 2009 07:04
0
indian:
சௌதி அரசருக்கு ஈரான்.... வரவேற்கதக்க ஒன்று எனலாம், ஆனாலும் மிகவும் காலம்கடந்த நடவடிக்கையாகவே தோன்றுகிறது இரன்டாயிரத்துக்கும் மேலான உயிர்களை பலிகொடுத்தபிறகு இப்போதாவது இவர்களுக்கு கஸா மக்கள் மேல் அனுதாபம் வந்தது போலும். இது இவர்களின் இயலாமையையே காட்டுகிறது இன்று இஸ்லாமிய நாடுகளிடம் ஒற்றுமை இல்லாததே இவர்களின் பலவீனம். இதயே மேற்கத்தய நாடுகள் தமக்கு பலமாக ஆக்கிக்கொள்கிறார்கள் தங்கள் மனம்போல் மற்றவர்களை நசுக்கவும் செய்கிறார்கள் இந்த நிலை மாறவேண்டும் என்றால் இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேரவேன்டும் உலகதில் நீதியை நிலை நிறுத்த வேன்டும் தனக்காக மட்டும் வாழாமல் நீதிக்காகவும் நேர்மைக்காகவும் வாழ்ந்து ஏக இறைவனின் அருளை பெற இறைவனிடம் வேண்டுவோமாக
3

January 31, 2009 11:46

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:117 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்" - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை சவூதி அரசருக்கு ஈரான் அதிபரின் கடிதம்!
Twitter
RSS
YouTube
English