சத்தியமார்க்கம்.காம்

தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
ஞாயிறு, 28 மே 2006 06:50

மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை, திக்ர், பிரார்த்தனை என்று எல்லா வழிமுறைகளையும் நபி(ஸல்) அவர்கள் செய்து காண்பித்துத் தந்துவிட்டார்கள்.

தஸ்பீஹ் தொழுகையை பொருத்தவரையில் அவ்வாறு ஒரு தொழுகையை நபி பெருமனார் (ஸல்) அவர்கள் செய்ததாகவோ அல்லது செய்வதற்கு ஏவியதாகவோ ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் காணப்படவில்லை. ஆனால் இத்தஸ்பீஹ் தொழுகையைக் குறித்து விவரிக்கும் பல ஆதாரப்பூர்வமற்ற அறிவிப்புக்கள் ஹதீஸ்களில் காணக் கிடைக்கின்றன. சிலர் இவற்றை எடுத்துக் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு இதனை சிறந்த ஒரு வணக்கமாக ஆக்கிவிட்டனர்.

இறைவன் கேட்பதை எல்லாம் தருவதாக வாக்குறுதி அளிக்கும் முக்கியமான ஒரு தொழுகையை (தஹஜ்ஜுத்) நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தந்துள்ளார்கள். இறைவனிடமிருந்து அளப்பரிய நன்மையை நாடுவோர் இத்தொழுகையை தொழுவதே சரியானதாகும்.

நன்மையான காரியம் என நினைத்து நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒரு காரியத்தை மார்க்கத்தில் செய்ய முயற்சிப்போமானால் அது நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் நமக்குக் குறை வைத்துச் சென்று விட்டார்கள்(நவூதுபில்லாஹ்) என்று தவறான எண்ணம் ஏற்படுவதற்கு வழியாகிறது. அதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.

நன்மையைக் கருதி செய்யும் ஒரு செயலால் மிகப்பெரும் தீமை விளைய சாத்தியம் வந்து விடக்கூடாது. இத்தஸ்பீஹ் தொழுகையை பொறுத்தவரை அதற்கு மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது. நன்மை செய்கின்றோமோ இல்லையோ தீமையான காரியம் செய்வதிலிருந்து விலகி இருப்பது ஒரு முஃமினுக்கு கட்டாயமாகும்.

இத்தொழுகை குறித்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பு இருப்பின் அதனை செய்வதில் யாதொரு தவறும் இல்லை. ஆனால் இத்தொழுகைக்கு ஆதாரமாக கூறும் செய்திகள் யாவும் ஆதாரப்பூர்வமற்றவையே. எனவே நபி(ஸல்) காட்டித்தராத இத்தொழுகையைக் கடைபிடிக்காமல் இருப்பதே நல்லது.

இத்தொழுகைக் குறித்து வரும் ஹதீஸ்களைக் குறித்து ஆராயும் விரிவான தொடர் கட்டுரையை இங்குக் காணலாம்.

Trackback(0)
கருத்துக்கள் (4)add comment
0
sameena:
அஸ்ஸலாமுஅலைக்கும் .
லுஹா தொழுகை என்றால் என்ன ? விளக்கவும்
1

January 26, 2010 07:13
0
இறைவனின் அடிமை:
லுஹா தொழுகை என்பது சூரியன் உதித்தப் பின்னர் லுஹர் தொழுகைக்கு(சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர்) தொழும் சுன்னத் தொழுகை(லுஹரின் முன் சுன்னத் அல்ல) ஆகும். சூரியன் உதித்த சில மணித்துளிகளில் தொழுவது மிக சிறப்பானது.

ஃபஜ்ரு தொழுகை முடிந்து சூரியன் உதிக்கும் வரை தொழுத இடத்திலேயே அமர்ந்திருந்து, சூரியன் உதித்தப்பின்னர் லுஹா தொழுகையையும் தொழுது எழுபவர்களுக்கு மகத்தான கூலி உள்ளதாக நாயகம் அறிவித்துள்ளதாக படித்துள்ளேன்.

இறைவனின் அடிமை
2

January 26, 2010 23:17
0
நூருத்தீன்:
இது குறித்துள்ள ஹதீஸின் ஆங்கில மொழியாக்கம்:

Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever prays Fajr in congregation then sits remembering Allaah until the sun rises, then prays two rak’ahs, will have a reward like that of Hajj and ‘Umrah, complete, complete, complete.” Narrated by al-Tirmidhi (586).

இந்த ஹதீத் நிலை குறித்து கருத்து வேறுபாடு உள்ளது. அல்-அல்பானி இந்த ஹதீத் ஹஸன் என்று தெரிவித்துள்ளார். பின் பாஸ், இது ஹஸன் லி ஃகைரிஹி என்று கூறியுள்ளார்

ஆனால், சயீத் சாபிக் அவர்கள் சூரியன் உச்சிக்கு உயர்ந்து வெயிலின் உக்கிரம் உள்ள நேரத்தில் தொழுவது சிறந்தது என அபிப்ராயப் படுகிறார். ஏனெனில்,

Zaid ibn Arqam relates: "The Messenger of Allah sallallahu alehi wasallam went to the people of Quba', and they were performing duha, and he said: 'The prayer of devotion should be observed when the young weaned camels feel the heat of the sun.'" This is related by Ahmad, Muslim, and at-Tirmizhi .

அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்.
3

January 27, 2010 00:34
0
M.S.K.:

நபி (ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது பாரமாகி விடுமே என்ற அச்சமே இதற்கு காரணம். நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.

புஹாரி : 1128 ஆயிஷா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்முஹானி (ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவித்ததில்லை. ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி (ரலி) குறிப்பிட்டார்கள்.

புஹாரி: 1103 இப்னு அபீ லைலா (ரலி)


ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.

புஹாரி: 1178 அபூஹூரைரா (ரலி)
4

January 27, 2010 21:19

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா?
Twitter
RSS
YouTube
English