| 'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். |
|
|
| பொதுவானவை - பொதுவானவை |
| வெள்ளி, 02 ஜனவரி 2009 11:03 |
|
''பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் 'அந்த பர்தா பொண்ணு!'ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!'' - வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது. '' 'ஆயிஷா என்கிற சங்கீதா - முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பர்தா பெண்', '100 கிலோ வெடிகுண்டுகளோடு தமிழகத்தில் தலைமறைவாக நடமாடுகிறார்'னு அன்னிக்கு ஆரம்பிச்சது பரபரப்புச் செய்திகள்! சின்னக் கோடு போட்டாங்க போலீஸ். அதுல ரோடே போட்டு புல்டோசர் ஓட்டிட்டுச்சு பிரஸ். அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்!'' - மௌனங்கள் படர்ந்த சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார் ஆயிஷா. '' 'இப்ப சூழ்நிலை சரி இல்லாததால், உடனே போலீஸ்ல சரண்டராக வேண்டாம். கொஞ்சம் பரபரப்பு அடங்கட்டும்'னு சொன்னார் உசேன். ஆனா, நிலைமை இன்னும் தீவிரமடையவும் ஆந்திரா கூட்டிட்டுப் போனார். டி.வி, பத்திரிகைகள் எல்லாத்திலும் பரபரப்பு அடங்கவே இல்லை. ஆந்திராவில் இருக்கப் பிடிக்காம இந்திய எல்லை ஓரம் இருக்கிற நேபாள குக்கிராமத்துக்குப் போனோம். அங்கே ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்தேன். அவருக்கு பலசரக்குக் கடையில் வேலை. கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்ட சமயம், தமிழகத்தில் உசேன் கைதானாரு. தகவல் நேபாளம் வரை எட்டி என் ஸ்கூல் வேலை போயிருச்சு. இன்னொரு ஸ்கூல்ல சேர்ந்து வேலை பார்த்தேன். தமிழகப் பரபரப்புகள் அடங்கி அவருக்கும் ஓரளவு வருமானம் வர ஆரம்பிச்ச நேரம் எங்களுக்கு முதல் மகன் பிறந்தான். 3 வருஷம் ஓடிருச்சு. 'இவ்வளவு நாளுக்குப் பிறகு பிரச்னை இருக்காதே'ன்னு இவர் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்காரு. மோப்பம் பிடிச்சுட்டாங்க போலீஸ்காரங்க. பீகார் போலீஸ் மூலமா எங்களை ட்ரேஸ் செஞ்சு கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களே தயாரிச்ச ஒரு வாக்குமூலத்தில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அதில் 'நாங்கதான் ரஃபீக்குக்கும் அவரோட நண்பர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போனதா'ப் பதிவாகியிருந்தது வேதனையான வேடிக்கை. முழுசா 3 வருடங்கள். நானும் அவரும் தனித்தனி செல்லில் இருந்தோம். மகன் சிவகாசியில் வளர்ந்தான். எங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லைங்கவும் பெயில் கிடைச்சது. இப்போ எனக்கு டீச்சர் வேலை. அவருக்குச் சின்னச் சின்னதாப் பல வேலைகள். ஆகஸ்ட் 15, டிசம்பர் 6, ஜனவரி 26 தேதிகளை நாங்க மறந்தாலும், வீட்டுக்கதவைத் தட்டும் போலீஸ் அதை ஞாபகப்படுத்திருவாங்க. தங்கி இருக்கிற இடத்துல நான்தான் ஆயிஷான்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும். வீட்டைக் காலி பண்ணச் சொல்லிருவாங்க. இதுவரை 4 வீடு காலி பண்ணிட்டோம். இப்ப குடியிருக்கிற வீட்டோட ஓனர், வேலை பார்க்கிற கடை முதலாளி யாருக்கும் நான்தான் ஆயிஷான்னு தெரியாது. இந்த 10 வருஷங்களைத் திரும்பிப் பார்த்தா, கண்ணீரும் ஓட்டமும்தான் மிஞ்சியிருக்கு. இனிமேதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு வருஷத் தண்டனை பாக்கி இருக்கு. அப்பீல் பண்ணியிருக்கோம். விடுதலை கிடைக்கும்னு நம்புறோம். நீதியையும் இறைவனையும் நம்புறோம்!'' - கைகோத்திருக்கும் 5 மாத மகனின் விரல்களைப் பிரித்து நீவும் ஆயிஷாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கும் தயக்கமாகத்தான் இருந்தது. ''இன்றைய சூழ்நிலையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் இத்தனை பிரச்னைகளும் என்ற நினைப்பு ஏற்பட்டது உண்டா?'' ஆயிஷாவின் கண்கள் அவசரமாக மறுத்தன. ''எப்பவுமே இல்லை. நானாகத்தான் இஸ்லாத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். 'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக் கொல்லப்படுவதை மட்டும் குர்-ஆன் அனுமதிக்குமா என்ன? 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு, அதுதான் எங்க எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!'' விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!'' நன்றி: ஆனந்த விகடன் தேதி: 07-01-2009 கருத்துக்கள் (15)
![]() எழுதியவர்: Muhammad , January 02, 2009 20:40 முஸ்லிம்களின் மீது அவ்வளவாக அக்கறை இல்லாத விகடன், குமுதம் என பலர் தற்போது திருந்தி உன்மையை அறிந்து கொள்ள முயல்வது மகிழ்ச்சியாக உள்ளது. அகில இந்திய அளவில் தெஹல்கா, லல்லு இவர்களை தவிர வேறு யாரும் முஸ்லிம்களை அனுசரனையுடன் பார்த்தது இல்லை. இவர்கள்தான் குஜராத்தில் மோடியின் முகத்திரையை கிழித்தவர்கள். தெஹல்கா மற்றும் லல்லு தந்த லட்டு மாதிரியான தெளிவான ஆதாரங்கள் கிடைத்தும், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு இவைகளை அலட்சியம் செய்து தாங்களும் மதச்சார்பிண்மை முகமூடி அணிந்த ஆர்.எஸ்.எஸ்.ன் இன்னொரு முகம்தான் என்று அம்பலப்படுத்திக்கொண்டனர். இது இந்திய ஊடகத்தில் எந்த அளவு முக்கியத்துவம் பெறாமல் மொத்தமாய் காணாமல் போனது என்பதையும் நாம் அறிவோம். ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி வருவது வரவேற்கப்படவேண்டிய விஷயம். அல்ஹம்துலில்லாஹ். இதற்கெல்லாம் காரணம் நேர்மை வீரர் ஹேமந்த் கார்கரெயின் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த புலனாய்வு என்பதை யாரும் மறுக்க முடியாது. உயரிய பொறுப்பில் உள்ள ஓர் உயர் அதிகாரி நேர்மையுடன் அலுவல் புரிந்தால் அது எவ்வளவு பெரிய மாற்றத்தை - ஒரு சிறந்த ஊடகம் / ஒரு தைரிய மத்திய மந்திரி சாதிக்க முடியாததை - சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது. அது இந்திய முஸ்லிம்கள் மீது அநியாயமாய் பூசப்பட்ட அழுக்காறை கழுவி அகற்றியது. அன்னாரை கொன்ற கயவர்களை உலத்துக்கு இனம் காட்டுவது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகிவிட்டது. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த மஹாத்மா காந்தியடிகளுக்கு நேர்ந்த கதியை நாம் இன்னும் மறக்கவில்லை. எழுதியவர்: abdul azeez , January 02, 2009 21:08 பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஆய்ஷா உங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நர்கூலிவழங்கவேண்டும். என்று பிரார்த்திக்கிறேன். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: ghazzali , January 03, 2009 04:52 Sahodhari Ayshavin pillaihal IAS aaha naamum Iraiwanai veandikolvom. எழுதியவர்: Muhammad , January 03, 2009 07:00 .....(இது எனது முந்தய பின்னூட்டத்தின் தொடற்சி)..... பொதுவாக பிற மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய பலரை நான் பார்த்திருக்கிறேன். இவர்களின் ஈமான் பிறப்பிலேயே முஸ்லிமாய் இருப்போரின் ஈமானை விட திடமாகவே உள்ளது. இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் சகோதரி ஆயிஷாவின் இறைப்பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த சகோதரியின் குடும்பத்திற்கு மென்மேலும் அல்லாஹ் பரக்கத் செய்யவும், இவர் எண்ணப்படி இவர்தம் குழந்தைகள் மிகப்பெரிய பதவிகளில் பணிபுரியவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். எழுதியவர்: Faiza , January 03, 2009 09:33 assalamu alaikum wrb,.. Allah sagodari Ayeshavukkum avaradhu kudumbathirkum pillaigalukum immaikum marumaikum arul purivaanga. எழுதியவர்: நூர் முகம்மது , January 03, 2009 15:36 சகோதரி ஆயிஷாவின் 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு’ என்று சொன்னாங்க, இல்லை சகோதரியே அது அல்லாஹ்வின் ஏற்பாடு. அதைப் பொருந்திக்கொள்ளுங்கள்.அல்லாஹ் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பிரதிபலனாக மேலான பாக்கியத்தை உங்கள் வாழ்க்கையில் தந்தருள்வானாக ஆமீன். எழுதியவர்: Rafique uthuman , January 04, 2009 06:21 சகோதரர் முஹம்மதுவின் உள்வேதனைதான் பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கும் நடுநிலைவாதிகளுக்கும் உள்ளது. ஒரே ஒரு உயர்அதிகாரியின் நேர்மையான புலனாய்வு எவ்வளவு மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. மும்பே செயலில் ஈடுபட்டவர்கள் எந்த இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மற்ற இயக்கங்களுக்காக செய்தாலும் சரி(காஸாபின் குரல் என்று மிடியா சொன்னது பணத்திற்காக செய்தேன் பணம் யார் தந்தாலும் செய்வேன்) அவர்களை இந்த சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.வெண்ணெய் திரண்டுவரும் போது பானையை உடைக்க துணைசெய்த மாபாவிகள். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகிஸ்தான் இந்தியநாட்டிற்கும் முஸ்லீம்களுக்கும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது.பாகிஸ்தானின் தலைவர்கள் எல்லாம் இஸ்லாமிய மடையர்கள்.காஸாபை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போட்டு இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்று. அதற்கு முன்னால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள். கஸாபை நார்கோ டெஸ்ட் செய்து உண்மையை வெளிக்கொணரவும் அவனை ஒரேஒரு பேட்டி மீடியாக்களின் முன் கொடுக்கவும் செய்து உண்மையை வெளிக்கொணர்ந்துவிட்டு தூக்கில் போடு என்று இந்திய அரசாங்கத்திற்கு சொல்லலாமே.இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் இந்திய முஸ்லீம்களுக்குத்தான் எவ்வளவு இடைஞ்சல் தருகின்றது.உண்மையிலேயே பாகிஸ்தானின் பங்கு எல்லாவற்றிலும் இல்லாவிட்டால் உறுதியோடு எதிர்கொள்ளவேண்டியதுதானே.ஏன் முன்பின் முரணாக பேசுவானோன் எழுதியவர்: MOHAMED IQBAL, KUWAIT , January 04, 2009 14:26 I was really shocked to read the story of Aysha. All these recent revealations prove one important fact, most of Indian security agencies like IB and police force and bigger section of Indian press are indulging in anti-Muslim and anti Islam activities since quite some time, that too after the Sangh Parivar forces came to power in the last two decades. It is really unfortunate that sister should go through all these sufferings just because she embraced Islam and married a Muslim youth. Shame on the police force. We can only pray for their peaceful life atleast in coming years. Any Muslim who understands Islam in it's true sense will never indulge in any such act which causes greater sufferings to fellow human beings. If some lunatic group indulges in such vicious activities in the name of Islam find them and punish them without any remorse whether they are Muslim name holders or any one else. We Indian Muslims love our mother land like any one else. Sorry, I don't know Tamil typing hence I made this letter in English. எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , January 04, 2009 15:01 ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு, கீழ்க்காணும் சுட்டியில் உள்ள உதவிப் பக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டு, தங்களது கருத்துகளைத் தமிழில் இடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்: http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=349 நன்றி! எழுதியவர்: abbas , January 06, 2009 02:15 Siater Ayisha, May Allah reward you due to having excellent patience of your, while He tested you in the past. Please pray for us or World peace. Our final return is with Him.Thanks எழுதியவர்: Noorul Ameen , January 08, 2009 16:28 Assalamualaikum, Allah will soon solve your problem sister insaallah your son will become IAS ameen from dubai எழுதியவர்: KNRNoor , June 13, 2009 13:44 சகோதரி ஆயிஷா அவர்களே! இந்த அற்ப மனிதர்கள் நாட்டை பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் உண்மை முஸ்லீம்களூக்கு துன்பம் தருவதையே பிழைப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்கள். உறுதியான ஈமான் கொண்ட சகோதரி உங்களுக்கு அல்லாஹ் மிகச்சிறந்த கூலியை வைத்திருப்பான். அல்லாஹ்வுக்காக பொருமையுடன் இருந்தீர்கள். அவனின் பொருத்தத்தை பெற்றுவிட்டால் வேறு என்ன வேண்டியிருக்கிறது சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் ஆகி உங்களை மகிழ்விக்க இந்த கருத்தை எழுதுவதன் மூலம் நானும் துஆ செய்கிறேன். ஆமீன். நீங்கள் இந்த உண்மை மார்கத்தை எடுத்ததன்மூலம் நீங்கள் மட்டும் நேர்வழி பெற்றுவிடவில்லை, உங்களின் மூலம் இந்த உலகுக்கு வரப்போகும் ஆயிரக்கணக்கான சந்ததிகளுக்கு நீங்கள் தான் ஆரம்பமாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து பாருங்கள் நீங்களே வியந்துபோவீர்கள். இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத (அவனது படைப்பான)மாற்றுமததினருக்கும் உனவளித்து வாழவைக்கும் அல்லாஹ், இப்படிப்பட்ட உங்கள் மீது அல்லாஹ்வின் அன்பு எந்த அளவு இருக்கும், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.... வாழ்க பல்லாண்டு நீங்கள் இறைவன் பொருத்தத்துடன்.. ஆமீன் எழுதியவர்: Peer Mohammed, Dubai , June 21, 2009 04:37 சகோதரி ஆயிஷா அவர்களே,தங்களின் தியாகத்திற்கு அந்த வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் அருள் செய்ய துஆ செய்கிறேன். எழுதியவர்: khan , November 01, 2009 04:21 http://www.satyamargam.com/TamilTyping sagothari eimmai vaalgaiyai vitru marumaiyai vaangi kontavar neengal taan சகோதரி, இம்மை வாழ்க்கையை விற்று மறுமையை வாங்கிக் கொண்டவர் நீங்கள்தான். கருத்து எழுதுக :
|