| தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2 |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | |||
| வியாழன், 01 ஜனவரி 2009 03:15 | |||
|
கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது. மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது - தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
The answer is within your article itself.
///அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான். //////
/////சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?//////
////////கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.////////
====>>>>> one point is clear.
AS FOR AS THESE TREE ARE THERE IN POST AND ''ENQUIREING'' THIS CASE TRUTH WILL BE IN COMA - AS PER YOUR ARTICLE IT IS EVIDENT.
1
January 01, 2009 14:08
மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரேயின் படுகொலைக்குப் பிறகு மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். அவர்களது கவலையை நிஜமாக்கும் விதத்தில் ஒரு விரும்பத் தகாத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலை வராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் புரோஹித்துக்கு நெருக்கமானவராக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிர வாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பகுதியை வகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு (மாலேகான் குண்டு வெடிப்பு தீவிரவாதி) வர வேண்டும் என கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்த தாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி, ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கர்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு வகித்தார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷி தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் கையாண்ட அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டடாளி என்பதும் தீவிரவாதி புரோஹிதின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
மகராஷ்ட்ர அரசு உடனடியாக தீவிர வாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக செயல்படும் தீவிரவாதி களின் நண்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
Thanks to TMMK website.
2
January 01, 2009 17:11
விரைந்து மற்ற பாகங்களையும் வெளியிட்டு தொகுப்பை தமிழ் மற்றும் பிற மொழிகளில் கையேடாக விநியோகிக்க வேண்டிய பொறுப்பை சமூக இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். பிரதிகள் மக்கள் பிரதிநிதிகள், மீடியா பிரபலங்கள், சமூக ஆர்வலர்களுக்கு சென்றடைய வேண்டும். சாத்தியப்படுமானால் இதை ஆதாரமாக கொண்டு வழக்கு தொடுக்க வேண்டும். இதற்கு என்னை போன்ற எத்தனையோ சாமானிய முஸ்லீம்களும் மாற்று சமூகத்தின் நடுநிலையாளர்களும் கூட தயாராக உள்ளனர்
3
January 03, 2009 05:06
பல்வேறு குழப்பங்களைத் தெளிவாகிறது.
எங்கள் பகுதி ஜமாத்தில் இத்தொடரின் பிரதிகளை விநியோகித்துள்ளோம். நன்றி
4
January 04, 2009 12:24
முஸ்லிம்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம், இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக வெளிவரும் தகவல்கள் மற்றும் சந்தேங்களை பெரும்பான்மை சமுதாயத்திற்கு எடுத்து செல்வதுதான். அதே போல் முஸ்லிம்களும் தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான் என்ற நிலைக்கு வரவேண்டும். நான் பல தடவை பிரசங்கம் கேட்டிருக்கிரேன், இஸ்லாத்தின் அடிப்படையான கூறுகளில் ஒன்று, நீதி, அதற்காக முஸ்லிம்கள் குரல் கொடுக்க வேண்டும், பாடுபடவேண்டும்.
5
January 06, 2009 04:40
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது என்ற இறைக்கூற்றை தளத்தின் பெயர் மற்றும் கேப்ஷன் ஆக எடுத்துள்ள நீங்கள், அதனை இத்தனை நுணுக்கமாக கையாளவது வியப்பளிக்கிறது.
வாழ்த்துக்கள்.
நண்பர் சத்யம் அவர்களே, இஸ்லாத்தைப் பொறுத்தவரை தவறு - தவறு தான்.. மதவேறுபாடின்றி இதனைக் கையாள, உலகத்தலைவர் நபி(ஸல்) அவர்கள் தாங்களே முன் மாதிரியாக இருந்து பல்வேறு சமயங்களில் காண்பித்துக் கொடுத்துள்ளார்கள்.
6
January 06, 2009 08:56
கருத்து எழுதுக :
|