| நீ அடிபட்டால் எனக்கென்ன? |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் |
| புதன், 31 டிசம்பர் 2008 03:52 |
|
மீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர்.
உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவுக்குள் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் நீண்ட இஸ்ரேலிய பிரிவினைச் சுவரும் மறுபக்கம் எகிப்திய செக்போஸ்ட் அடைப்பும் இருக்க, மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, குண்டுகளைப் பொழிந்ததற்குச் சமமாக சுமார் 16க்கும் மேற்பட்ட எஃப்16 ரக யுத்த விமானங்களின் மூலம் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து "கஸ்ஸா ஆட்சியாளர்களை அழிப்பதாக"க் கூறி வெறியாட்டம் ஆடியிருக்கிறது. எல்லா மருத்துவமனைகளும் இறந்துபோன உடல்களாலும் படுகாயமுற்று உயிருக்குப் போராடும் ஃபலஸ்தீன் மக்களால் நிறைந்து விட்டன. [இஸ்ரேலின் அத்துமீறல்கள் பற்றி அறிய சத்தியமார்க்கம்.காம் தேடல் பகுதியைக் காண்க] ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவினுள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்திலிருந்து வந்த மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு ட்ரக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழித்தது. காயமுற்றவர்களின் காயங்களுக்கு இடுவதற்குப் போதிய மருந்தின்றி மருத்துவமனைகளில் காயங்களுடன் ஃபலஸ்தீனியர்கள் அலறித் துடித்தவாறு உள்ளனர். ''நேற்று அவன் எதிர்வீட்டுகாரனைத் தாக்கி அழித்தான்! அப்பொழுது இவர்களுக்காகக் குரல்கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்! கருத்துக்கள் (22)
![]() எழுதியவர்: Pandiyan , December 31, 2008 07:24 Sir, You must also condemn Hamas who brought this upon the innocent palestinians. Terrorism should be avoided at all costs. எழுதியவர்: jar , December 31, 2008 10:08 இதே நிலை.. தங்களுக்கும்(அரபுலகம்) வரலாம். அரபுலகம் இனியும் விழிக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் ?????..... எழுதியவர்: narkis ANNAN , December 31, 2008 10:21 //ஒன்றுக்கும் உதவா அறிக்கைகளை வெளியிடும் உலக நாடுகளும் அரபுச் சோற்றுப் பண்டாரங்களும் இம்முறையும் வெற்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மெக்டொனால்டின் ருசியையும் இஸ்ரேலின் கோலாவையும் ருசித்துப் பருகி, கூடிக் குலாவிப் பிரியும் அரபுலீக்,// உண்மை தான். ஒன்றாக இருந்த இஸ்லாமிய பேரரசை துண்டு துண்டாக்கி இன்று 56 நாடுகளாக சிதறுண்டு கிடக்கும் முஸ்லீம் நாடுகளை பார்த்து ஏகாதிபத்தியத்தின் ஆட்சியாளர்கள் சிரிக்கின்றனர் நமக்கு ஏற்ற அடியாள் என்று குறைந்த பட்சம் இரு புனித தலங்களின் பாதுகாவலர் என்று பறை சாற்றிக் கொள்ளும் நாட்டுக்காவது அமெரிக்காவின் வாலை நக்கும் இழிவு என்று நீங்குகிறதோ அன்று தான் இச் சமூகம் உருப்படும். இன்ஷா அல்லாஹ் அந்த நிலை வரும் பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து... எத்துணை வேதனை நீ ஏற்றாயோ என்னால் குமுற இயலவில்லை உன் நெஞ்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய் காலம் உனக்கு விடை தந்து விட்டது உனது காயமும் ஆறி விட்டது எமது இதயமோ? படை பட்டாளங்களுக்கு முன்னால் பாலஸ்தீனத்தில் உன்னால் எறியப்படும் கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன் கண்டு கொண்டு விட்டேன் உண்மையை ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும் சுவனத்தின் சொந்தகாரனே ஷஹிதாகி சாய்த்தவனே சின்னஞ்சிறு பாலகனே உன் மரண செய்தி கேட்டு உனது அன்னை இங்கு இன்னும் இருந்திருந்தால் எப்படி துடித்திருப்பாளோ இன்னும் அதிகமாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் துடிக்கிறது இம்மை துறந்த இலவளே என்றாவது சந்திப்போம் இல்லை, இல்லை சுவனத்தில் சந்திப்போம் எழுதியவர்: shaik Mohamed Ali , December 31, 2008 11:14 very very shame for arab named countries. They did'nt a true muslims. They are எழுதியவர்: tamilanban , December 31, 2008 12:16 ஷேக் முஹம்மது அலீ, இது போன்ற நிகழ்வுகளில் எல்லாம் அரபு நாடுகளைக் குறை கூறிவிட்டு ஓய்ந்து விடுவது ஏனைய நாடுகளின் முஸ்லிம்களின் வாடிக்கையாகி விட்டது. அரபுகள் என்ன இஸ்லாமின் அத்தாரிட்டிகளா? இல்லை முஸ்லிம்களின் பாதுகாவலர்களா? இங்கே நடப்பது மனித உரிமை மீறல்... ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், அப்பாவி பொதுமக்களும் கொத்து கொத்தாய் அழிக்கப்படுகின்றனர். உலகப் போலி-ஸ் எழுதிக் கொடுத்தவாறே அதை உலக ஊடகங்கள் தீவிரவாதிகளை அழித்து விட்டதென வாசிக்கின்றன. அதை நம்பி ஏமாந்து போகும் Pandiyan போன்ற நண்பர்களும் நம்மில் பலர் உண்டு. இத்தகைய கொடூரத்தை தட்டிக் கேட்க இதயமுள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். எழுதியவர்: S.S.K , December 31, 2008 13:12 Mr Pandiyan அவர்களே ஹமஸ் தான் இதற்கு காரணம் என்று மீடியாக்களின் கூற்றை கூறும் தாங்கள் இஸ்ரேல் எனும் நாடு 1947ல் யூதர்களால் பலஸ்தீனியர்களின் மண்ணில் ஆதிக்கச்சக்திகளால் உருவான ஒன்று என்பதை ஞாபகத்தில் வைத்து பேசுங்கள். ஹமஸும் ஒவ்வொரு பாலஸ்தீனியனும் அநியாயமாக அவர்கள் மண்ணில் நுழைந்துள்ள யூத ஆதிக்கச்சக்திகளுக்கும் அவற்றிற்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா போன்ற அராஜக வல்லரசுகளுக்கும் எதிராக போராடும் போராளிகள் ஆவார்கள்.... இதை மனதளவிலாவது எதிர்க்காமல், அமைதியாக வேடிக்கைப்பார்க்கும் முழு மனித உலகும் அந்த இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களே. அவன் கோப பார்வை இன்றோ நாளையோ இவர்களை நிச்சயமாக கணக்கு தீர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.. மனிதன், இன்று கொல்லும் இறைவன் நின்று கொல்லும் என்பர்......இதை நினைவு கூர்வோம். ஆம் நம் இந்திய ஷஹீத் பகத்ஸிங்க், சுபாஷ் சந்திர போஸ், ஜாலியன் வாலா பாகில் கொல்லப்பட்ட அப்பாவி இந்திய சுதந்திர போராளிகள் போன்ற எண்ணற்ற இந்திய போராளிகள் போல் தமது மண்ணையும் உடமைகளையும் மீட்க உதிரத்தையும் உயிரையும் துச்சமாக மதித்து போராடும் உயிர்கள்..... இதற்கு ஆதரவு அளிக்கவில்லையெனினும் ஹமஸும் அதே போல் தான் என்பதையாவது உணருவோமாக. எழுதியவர்: நூர் முகம்மது , December 31, 2008 17:08 யாஅல்லாஹ், அந்த இஸ்ரேல் யகூதிகளை அழித்துவிடுவாயாக, அங்கு உள்ள முஸ்லிம் சமுதாயத்தை காப்பற்றுவாயாக. எழுதியவர்: T.M.B , December 31, 2008 20:18 இன்று எமது விழிகள் தாங்கி நிற்கின்ற கண்ணீர்த்துளிகள்! பதில் காணாமல் போய்விடாது! உயிரை உருக்கிச் செய்யும் எங்கள் பிரார்த்தனைகள் - வானை துளைத்துச் சென்று இஸ்ரேலின் இதயத்தை கீறாமல் விடாது! கை ஏந்துங்கள்! கண்ணீர் விடுங்கள்! இந்த காற்றும் நெருப்பும் - அல்லாஹ்வின் படை! அவனிடம் மன்றாடுங்கள்! மலரை முத்தமிடும் வயதில்.. அங்கே குண்டுகளில் தீக்குளிக்கும் பிஞ்சுகளுக்காக நெஞ்சுருகுங்கள்! நெஞ்சுக்குள் கல் இருக்கும் அந்த இஸ்ரேலின் அடிபிரள அழுது கேளுங்கள்! எமது முதல் கிப்லாவின் வரலாறு காண இங்கே ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள் http://jamath- circle..com/ play.php? vid=431 எழுதியவர்: Murugavel , December 31, 2008 20:29 Horrible inhuman act. To be condemned by the whole world, regardless of religion & region. regards, Murugavel, Gulf consulting co. எழுதியவர்: Syed , January 01, 2009 04:26 Assalamu Alaikkum, Why all world nations are keeping quiet. When Mumbai carnage happen everyone condemned, but hundreds of INNOCENT people killed there, no one rising their strong voice. (Idiot) Muslims countries what are they doing? Is they are Muslims only no? Please give me the mail ids of all Muslim countries President. I know by this nothing will happen, but my eyes are crying when I see the dead body of innocent people particularly the children and old age people. Remember! all Presidents of Muslims Countries! You should answer this in front of Allah in Qiyamat. எழுதியவர்: Basheer , January 01, 2009 07:39 Insha Allah , As soon as the world's cancer israel will be disappear from the world map.... Pray to the Almighty Allah to win the battle to save our Brothers and sister... Asathiyam Azhindhae theerum... எழுதியவர்: abdul azeez , January 01, 2009 21:42 சகோதரர்களே ! என்றென்றும் செய்யும் அதே மேஜை அமைவைதான் இப்பவும் அரபு ஜி.சி.சி. தலைவர்கள் இப்பவும் பேசிவிட்டு மசாபிய் தண்ணீர் குடித்திவிட்டு டிராப்ட் அனுப்பிவிட்டார்கள். அமெரிக்கன் இல்லை என்றால். இதுகளுக்கு வாழ்க்கை இருக்காது. என்பது உண்மைதான். சாதாரண மக்களான நம்மால் என்ன தான் செய்ய முடியும். நம் சகோதரர்கள் பலியிட்டு கிடக்கயில். அவன்களின் காலண்டர் திகதி மாறியதற்கு ஹாப்பி நியூ இயர் மெயில் மூலமும், மெசேஜ் மூலமும் பரிமாறிக்கொண்டு பல்லிளிக்கிறார்கள். போலி வாழ்க்கையே ! லட்சியமாக இருக்கும் போது. அல்லாஹ்வின் தண்டனை எங்கு எப்பொழுது என்று சொல்ல முடியாது.ஈமான் கிலோ கணக்கில் விர்க்கப்பட்டாகிவிட்டது. மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: MuslimWatch (yahooGroup) , January 04, 2009 09:19 முஸ்லிம்வாட்ச் குழுமம் மூலம் பாதிக்கப்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம். Beloved people of Gaza -------------------------- Treasured people of Palestine Teachers of courage and dignity Archetype of humanity Allow me to kneel down And wash your feet with my tears Kiss your blessed hands And sprinkle your beautiful faces with musk and roses While we sat pondering like fools Utterly helpless Talking much and doing less Going round and round in circles Thinking how to help What to offer you to relief some of your pain As usual Full of surprises, you come out to our rescue, to soothe our agony You present us with the most precious gifts Lessons in bravery Steadfastness, patience, perseverance, defiance, resilience Optimism against all odds Creativity in the face of utter oblivion You've demonstrated that you are the free ones … we are the captives You chose resistance over subjugation You decided not to be enslaved Not even to superpowers Would we ever learn from you? Team – MuslimWatch எழுதியவர்: மு.சாதிக் , January 06, 2009 06:11 முதலில் இஸ்ரேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இடம்பெறுவது தவறு. அவர்கள் பாலஸ்தீன் நிலங்களைக் கொள்ளையடித்து, கொள்ளையடித்து இன்று அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டுவருகிறார்கள். UN-ம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது, அரபு நாடுகளும் அமைதியாக உள்ளது. //இஸ்ரேலின் மனித வேட்டைக்காகவே தண்ணீர் தெளித்து விடப்பட்டுள்ள எங்களுக்கு இனியும் வாழவேண்டும் என்ற எண்ணம் ஏதும் இல்லை. எங்கள் குழந்தைகளின், பெண்களின் உயிர்கள் இஸ்ரேலுக்கு விளையாட்டுப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது போலும்! நியாயத்திற்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லையா?. இத்தகைய மனிதத் தன்மையற்ற உலகில் வாழ்வதைவிட நாங்கள் இறப்பதை விரும்புகின்றோம்'. // இந்தக் குமுறல் உணர்வு ரீதியாக வெளிப்படுவது, அல்லாஹ் காப்பாற்றட்டும். அநியாயமாக உயிர்கள் சூறையாடப்படுகிறது. முஸ்லிம்களின் உயிர்களுக்கு விலை இல்லையா? இதை தட்டிக்கேட்க எந்த இஸ்லாமிய நாடும் ஏன் முன்வரவில்லை? 5 அல்லது 10 இஸ்ரவேலர்கள் இறந்தால், flash news வருகிறது; பாலஸ்தீனிய சகோதரர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்; எமது உள்ளம் பொறுக்கவில்லை. நியாயம் கிடைக்காத வேளையில்தான் தீவிரவாதம் தோன்றுகிறது,. இறைவன் எல்லாம் நன்கு அறிந்தவன், ஒருநாள் புஸ் செருப்படி வாங்கியதுபோல், இஸ்ரேலின் கொட்டம் அடங்க நாமெல்லாம் தொழுது, அழுது துஆச்செய்வோம். பாலஸ்தீன் மக்களின் துயர்போக்கவும், அவர்களுக்கு இறைவனின் அருள் பாதுகாப்பும் கிடைக்க நாம் ஒவ்வொருவரும் துஆச்செய்வோம். மீடியாக்களுக்கு நமது கண்டனத்தையும் தெரிவிக்கம்வேண்டும். அநியாயம் அழிந்தே தீரும்!!! அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! எழுதியவர்: kavianban KALAM, Adirampattinam , January 11, 2009 15:50 அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல் ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் 'அக்ஸா' ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது மன உறுதியுடன் கற்களை வீசியும்; பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில் தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே...........! இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை???????????? தீர்ப்பு நாளின் அதிபதியே..! தீர்ப்பை இவ்வுலகில் தந்து விட்டாலும் தீர்ந்து விடாது உனது தண்டனை இஸ்ரேலர் மீது உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான், உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்; கதறும் பாலகர்களின் குரல் கேட்டு பதறும் எங்கள் வேதனை அறியும் படைத்தோனே.......! அப்பாவிகளைக் கொல்லும் அ(ந்த)ப் பாவிகளை அழித்து விடு; எப்போதும் தலைதூக்காமல் இஸ்ரேலர்களை ஒழித்து விடு -அலறும் பால்ஸ்தீனர்கள் மீது அனுதாபங்களுடன், 'கவியன்பன்' கலாம், அதிராம்ப்ட்டினம். 0097150-8351499shaickkalam@ yahoo.com எழுதியவர்: abdul azeez , January 13, 2009 01:12 அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும். அன்பு சகோதரர் 'கவியன்பன்' கலாம், அதிராம்ப்ட்டினம். நமது குமுறல் படைத்த அல்லாஹ் அறிவான்.இருந்தாலும் நமக்கென்று சில வரைமுறைகள் உண்டு அதை மீறி நாம் அல்லாஹ் விஷயத்தில். வார்த்தைகளோ, அல்லது கருத்துகளோ சொல்லமுடியாது இறைவனுக்கு என்று இருக்கும் தனி ஆற்றல் அதிகாரத்தில் நாம் உரிமை கொண்டாட்டமோ ! அல்லது அடியான் என்னும் பாச உணர்வினாலோ ! எந்த கட்டளை கேள்வியும் முன்வைக்க முடியாது. சாதாரணமாக மனிதர்களுக்கு இருக்கும் தன்மை போல் கடிதம் மூலம் தான் படைத்த அல்லாஹ் அறிவான் என்ற தோற்றத்தை உங்களின் கவிதை நயம் கட்டும் முறை. இறைவன் செய்தி கிடைக்காதவரை ஒன்றும் அறியாதவன் போல் பலகீனவனாக சித்தரித்து காட்டுகிறது. இது அபாயகரமானது மாற்றிக்கொள்ளுங்கள். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: Kavianban KALAM, Adirampattinam , January 13, 2009 16:23 உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான், உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்; கதறும் பாலகர்களின் குரல் கேட்டு பதறும் எங்கள் வேதனை அறியும் படைத்தோனே.......! -இவ்வரிகளே போதுமானது தங்கள் ஐயம் போக்கும் எழுதியவர்: Inayathullah , January 13, 2009 20:52 //உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான், உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்;// கவியன்பன், சீரியஸான பதிவுல சும்மா காமெடி பண்ணாதீங்கள் சார்... கேட்க யாருக்கும் உரிமையில்லை... சரி! .. உரிமையில் கேட்கிறோம்! அட!! மன்னிக்கவும். முன்னுக்குப் பின் முரணான உங்கள் கவிதை சிந்திக்கத் தூண்டவில்லை.... .... எழுதியவர்: abdul azeez , January 14, 2009 00:26 அன்பு சகோதரரே ! தப்பா நினைத்து கொள்ளாதீர்கள் // உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான்,// என்று எழுதிவிட்டு உடனே ! // உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்;// என்று மட்டும் கேள்வி கேட்க்கலாமோ ! பொதுவாக கேள்வி என்றாலே ! ( ஏன்,எதற்கு,எப்படி,எங்கே,) என்று விரிவடைந்து வினா வாக்கியமாக பரந்த நிலையில் இருக்கக்கூடியது அந்த அடிப்படையில் படைத்த அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கும் உரிமையில் சக மனிதர்களிடம் கேட்பது போல் சரிக்கு சமமாக கேட்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் நாம் தலையிடுவதாக தெரிகிறது.கேள்வி கேட்டாலே அடியான் என்னும் தன்மை பறி போய்விடுகிறது. அல்லவா ? ஆக உங்களின் கேள்வி இது தான். // இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை???????????? // இப்படி ஒரு கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. அது அடியான் உரிமையானாலும், பாசத்தின் உச்சக்கட்டமானாலும், அல்லது வேறு எந்தவகையானாலும் சரியே ! மேலும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கோரிக்கை வடிவில் தான் துஆ செய்துள்ளார்கள். 10:88 ,இன்னும்: ``எங்கள் இறைவனே ! நிச்சயமாக நீ பிர் அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும்,இவ்வுலக செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே ! (வற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே ! அவர்களுடைய செல்வங்களை அழித்து,அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வுக்கு அஞ்சல் கடிதம் தோற்றமும் பயமாக தான் இருக்கின்றது சகோதரர் 'கவியன்பன்' கலாம், அதிராம்ப்ட்டினம் மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: மு முஹம்மத் , January 14, 2009 05:14 அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே // இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை????????????// அல்லாஹ்விடம் முறையிடுவதும், உதவி கோருவதும் வேறு, அவனிடம் தீயவர்களை தண்டிக்க அழிக்க கேட்பது வேறு. ஏன் தண்டிக்கவில்லை?????? என்று கேட்பது வேறு,,, மற்றும் சரியான அணுகுமுறையல்ல. இது எனது பணிவான கருத்து. அல்லாஹ் மிக அறிந்தவன். அன்புடன் மு முஹம்ம்த எழுதியவர்: அல் அமீன் , January 14, 2009 06:32 ஒரு கதை: ஒரு ஊரில் ஒரு பழ விபாபாரி இருந்தார். அவருக்கு இரு குழந்தைகள் இருந்தன. இருவருமே நல்ல அறிவாளிகள் - அதாவது சிந்தனை வேலை செய்யாத அறிவற்றவர்கள் அல்ல. வியாபாரிக்குக் கணக்கிலடங்கா சொத்துக்கள். தான் இறக்கும் வேளையில் இச்சொத்துகளை யாரிடம் ஒப்படைத்தால் தனது பாரம்பரியம் வளரும் என்ற ஆலோசனை அவருக்கு. தனது இரு பிள்ளைகளையும் சோதனை செய்து பார்த்து விட விரும்பினார். இருவருக்கும் ஆளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்து, இதனை உங்கள் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செலவழிக்கும் முறையினை வைத்து எனது மொத்தச் சொத்துக்களையும் உங்களிடம் ஒப்படைப்பேன் என்றார். மூத்தவன் யோசித்தான். இந்தப் பணத்தைச் செலவு செய்தால், அதன் பின்னர் மீண்டும் தந்தையிடமே சென்று நிற்க வேண்டும். எனவே இப்பணத்திலிருந்து மேலும் வருமானம் வரும்படி ஏதாவது செய்து விட்டு மீதியைக் கைச்செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அப்பணத்தில் ஒரு பகுதியை தனக்குத் தெரிந்த பல்வேறு தொழில்களில் முதலீடாக முடக்கினார். முதலீடாக்கியது வளர ஆரம்பித்தது. இரண்டாவது மகன், தனக்குக் கிடைத்தப் பணத்தை வைத்து ஒரு வீடு கட்டினார். மீதி பணத்தைத் தனது செலவுக்கு வைத்துக் கொண்டார். மூத்த மகன் ஆரம்பித்த பிஸ்ஸா கார்னரிலும் மேக்டொனால்டிலும் பெப்ஸி கோக்கோகோலாவிலும் இன்னபிற ஆடம்பர வசதிகளிலும் இரண்டாவது மகன் தனது பணத்தைச் செலவழித்து உல்லாசமாக சுற்றித் திருந்தார். இக்காலகட்டத்தில் எல்லாம் மூத்த மகன் தனது முதலீடுகளைப் புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் கவனம் செலுத்தினார். சிறிது காலத்திலேயே அவர் இருந்த ஊரை மொத்தமாக வாங்கும் அளவுக்கு அவர் செல்வம் ஈட்டி விட்டார். இப்பொழுது அவர் தனது செல்வத்தை வைத்து சொத்து வாங்க ஆரம்பித்தவர் இறுதியில் தனது தந்தையின் மற்றொரு மகன் வாங்கிய வீட்டையும் வாங்கி விட்டார். இப்பொழுது கூறுங்கள், அந்தத் தந்தை தனது சொத்துக்களை யாரிடம் ஒப்படைப்பார்? இந்த உலகில் நீதி என்று ஒன்று உண்டு. அந்த நீதியின் படியே இரைவன் தனது அடியார்களிடம் நடந்துக் கொள்வான். இங்கு அடியார்கள் என்று கூறியது முஸ்லிம்கலை மட்டுமல்ல. அவனின் படைப்புகள் அனைவரிடமுமே ஒன்று போல் தான் அவன் நடந்துக் கொள்வான். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு உதவி புரிவதாக அவன் கூறியுள்ளான். அந்த வகையில் முயற்சி செய்பவர் யார்? வெறுமனே தின்று விட்டு, 'நாங்கள் படைத்தவனுக்குக் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறிக் கொண்டு 'பள்ளிகளில் மட்டும் கடமையை' நிறைவேற்றி விட்டு, தேமே என்று இருப்பவர் யார்? ஏதாவது பிரச்சனை வந்த உடன், அவனை அழி, இவனை அழி, ஏன் நீ அழிக்கவில்லை? எனக் கேட்பது எவ்வகையில் சரி? நியாயம், அநியாயத்தை அவன் அறிவான். இங்கு கேள்வி, முயற்சிப்பவர் யார்? என்பதே! இவ்வுலகம் - முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றியை அளிக்கும் உலகம். எவ்வித முயற்சியும் செய்யாமல், அபாபீலை மட்டுமே நம்பியிருப்பேன் என்றால், அபாபீலை அனுப்புவதும் அனுப்பாததும் அவனின் உரிமையில் உள்ள விஷயம் என்பதை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். அவன் அனுப்பினால் பிழைத்துக் கொள்ளலாம். அனுப்பவில்லை எனில், ஏன் அனுப்பவில்லை? என்ற கேள்வி அபத்தமானது. அது போன்றே, அநியாயம் இழைப்பவர்களை ஏன் அழிக்கவில்லை என்ற கேள்வியும் அபத்தமானதே! பின்னர் எதற்காக இந்தச் சமுதாயத்தை நடுநிலை சமுதாயமாக, அக்கிரமத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சமுதாயமாக அவன் சுட்டிக் காட்ட வேண்டும்? வெறுமே'பள்ளிகளில் கடமையாற்றி' உண்டு உறங்கி வருவதற்காகவ? 'ஒரு சமுதாயம் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் வரை....' கருத்து எழுதுக :
|