சத்தியமார்க்கம்.காம்

ஒற்றுமையே தீர்வு! print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
திங்கள், 29 டிசம்பர் 2008 19:01

ஒற்றுமையே தீர்வு!உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும்.

விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.

கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.

கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.

மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.

அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.

தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.

இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.

இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.

ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.

எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.

வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!

கருத்தாக்க மூலம் : முஹம்மது அமின் பின் அப்துல் காதிர்

Trackback(0)
கருத்துக்கள் (15)add comment
0
HAJA MYDHEEN - RAJAGHIRI:
அருமையான யோசனை. சகோதரர் முகம்மது அமின் பின் அப்துல் காதிர் அழகாக ஒற்றுமையை பற்றி கூறியிருப்பது இந்த கால கட்டத்திற்க்கு மிக முக்கியம். முஸ்லிம்கள் இப்போது கூட விழித்துக் கொள்ளா விட்டால், முஸ்லிம்கள் இந்தியாவை விட்டும் நிரந்தரமாக புறக்கனிக்கப்படுவார்கள். ஒற்றுமை என்னும் கைற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் என்னும் குரான் வசனத்தை முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சமுதாயத்தின் முன்னேற்றம் கருதி ஒன்று பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும்.
1

December 30, 2008 05:52
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் ஹாஜா மைதீன், 'ஒற்றுமை என்னும் கயிறு' என்று குர் ஆனில் குறிப்பில்லை. 'அல்லாஹ்வின் கயிறான அல்-குர் ஆனை அனைவரும் ஒன்றுபட்டு வந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்' என்றுதான் ஆலுஇம்ரானின் 103ஆவது வசனத்தில் அல்லாஹ் நமக்குக் கட்டளை இடுகின்றான். அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை உலக முஸ்லிம்கள் முழுமையாகச் செயல் படுத்தினால் எவராலும் வெல்ல முடியாத தனிப் பெரும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
2

December 30, 2008 07:44
0
Sathyan:
//அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்...ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்...// காங்கிரஸின் அரசியலுக்கும், பாஜக வின் அரசியலுக்கும், இந்த கட்டுரைக்கும் எனக்கு பெரிதளவு வித்தியாசம் தெரியவில்லை... 'VOTE BANK POLITICS' ஒழிந்தால் மட்டுமே நாடு உறுப்படும்! மதத்திற்கு வோட்டு என்று எல்லா மதத்தினரும் புறப்பட்டு விட்டால் நாட்டில் அமைதி நிலவுவது மிக கடினம்... ஒற்றுமையே தீர்வு என்பது அழிக்க இயலாத உண்மை... ஆனால், நாடு என்று வரும்பொழுது 'மத ஒற்றுமை' யை விட 'மனித ஒற்றுமை' தான் முக்கியம்... ஆகவே, எந்த கட்சியாய் இருந்தாலும், எந்த வேட்பாளராய் இருந்தாலும் 'மதத்திற்காக' வோட்டளிதால், நம் நாடு நேற்று/இன்று எப்படி உள்ளதோ, அவ்வாறே நாளையும் இருக்கும்!
3

December 30, 2008 08:11
0
Ferozkhan-Abudhabi:
தமுமுகவின் அரசியல் பிரிவுக்கு பெயர் மனிதநேய மக்கள் கட்சி. தற்போது அரசியலுக்கு வந்துள்ள இவர்கள் தானே சிறிது காலத்துக்கு முன் கூட அரசியல் ஹராம் என்று முழங்கினர். தற்போதைய மாற்றத்துக்கு காரணம்?. இஸ்லாமிய அடிப்படையில் மக்களின் மனோஇச்சையின் அடிப்படையிலான இவ்வரசில் பங்கு பெறுவது அனுமதிக்கப்பட்டதா? அதற்கு பதில் அனைத்து அமைப்புகளும் இன்னொரு முஸ்லீம் லீக்காக மாறி முஸ்லீம் பெயர்களை கொண்டு இஸ்லாத்துக்கு முரணாக செயல்படுவதற்கு பதில் ஒன்றுபட்டு மார்க்கத்தை பரப்பும், நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தால் 60 ஆண்டு காலத்தில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தலாம்
4

December 30, 2008 13:25
0
abdul rahim / adirai kaka:
அருமையான ஆக்கம்.தமிழக அளவில் அரசியல் வலிமை பெற நினைக்கும் சமுதாய இயக்க தலைவர்கள் தேசிய அளவில் அரசியல் வலிமை பெற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா'வுடன் இனைந்து செயல்பட முன் வர வேண்டும். ஒற்றுமையை கருத்தில் கொண்டு சிந்தித்து செயல் செயல்பட வேண்டும்.
5

December 30, 2008 17:49
0
பிரோஸ்கான்:
சிறுபான்மை சமூகத்தில் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம்களின் குரல் நாடாளுமன்றத்தில் பலகீனமாக கூட ஒலிக்க மறுக்கிறது. மத்திய அரசால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கப்படும் சமுதாயமாக இச்சமுதாயம் இருக்கிறது. ஒன்றுப்பட்ட இந்தியாவில் ஒன்று படாமல் இருக்கும் நாம் ஒன்றுப்பட்டால் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். கஷ்மீர் முதல் குமரி வரையில் இருக்கும் பல முஸ்லிம் அமைப்புகள், குறைந்தபட்சம் கருத்தொற்றுமையுடைய விஷயங்களிலாவது ஒன்றிணைந்தால் அந்த ஒற்றுமையின் பலனும், அதன் வெற்றியும் மென்மேலும் ஒற்றுமையின் பக்கம் நம்மை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. அரசியல்,சமூக ரீதியாக இஸ்லாமிய சமூக மக்களுக்கும், அவர்களின் நிலையையும் மற்ற சமூக மக்களுக்கும் கொண்டு செல்வதில் உங்கள் இணைய தளம் பேருதவி புரிந்து வருவதையும் நான் பாராட்டுகிறேன். எத்தனை சமூக விழிப்புணர்வு தரும் கட்டுரைகள், ஊடகங்களால் மறைக்கப்பட்ட அல்லது முக்கியத்துவம் தராத செய்திகள், தமிழாக்கங்கள் என்று தொடரும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
6

December 30, 2008 18:47
0
abdul azeez:
// நாடு என்று வரும்பொழுது 'மத ஒற்றுமை' யை விட 'மனித ஒற்றுமை' தான் முக்கியம்... // மதம் என்ற அடிப்படையில் பி.ஜெ.பி கட்சி இருக்கும் பொழுது அதில் நாடு என்று நினைப்பது.பகல் கனவுக்கு கூட சாத்தியமில்லாத ஒன்று. மத விரோத போக்கை காட்டாத. கட்சிக்கு ஓட்டு போடுவது தானே இயல்பு. அந்த கட்சி எதுவும் செய்யலை என்றாலும் பிற சமூக சட்டங்களுக்கும், வழிப்பாடுகளுக்கும். மதிப்பளிக்கின்றன. மா சலாம். அப்துல் அசீஸ்.
7

December 30, 2008 22:22
0
haja:
Assalamu alikum Really useful artical everybody aware about political and Unity in national level.
8

December 31, 2008 06:20
0
Sherif:
Good artical. Victory is always based on the Unity. we must support Jamaat e islami hind (JIH) by all india level. This is the onely organisation which is working with unity in all india level.
9

December 31, 2008 17:52
0
M.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் நல்ல கருத்துக்கள். இந்த தூர நோக்கு தமிழகம் முதல் இந்தியா முழுவதும் பரவி, ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட்டு தமது கருத்து வேறுபாடுகள் இந்த ஒற்றுமைக்கு தடைகளாகாமல், வேற்றுமையில் ஒற்றுமை UNITY in diversity என்பதை முஸ்லிம்கள் நிலை நாட்ட முன் வர வேண்டும். அதற்கு அனைத்து இயக்கங்கள், அமைப்புகள், ஜமாத்துக்கள், அதன் முன்னோடிகள் மற்றும் பின்னோடிகள் என்ற அனைவரும் தூய மனதுடன் முனைய வேண்டும். அதன் மூலம் மாற்று மத்ததினரும் தூய இஸ்லாத்தின் மகத்துவத்தை உணரவும் அதன் மூலம் ஈடேற்றம் அடையவும் வழி வகுக்கப்பட இறைவனிடம் பிராத்திப்போம். M.S.K
10

January 04, 2009 05:19
0
Muhammadh Uwaiz,KSA:
Assalamu Alaikum Inquisitive Article. Difference of Opinion is natural in MasAla.But that does not intend a society to separate Socially and Politically.A common Muslim always views things positively.It is up to the leaders to unite who are the sole responsible for Disunity.
11

January 06, 2009 07:48
0
அபு முஜாஹித்:
அல்லாஹ் காட்டிய முறை அன்றி வேறு எந்த முறையும் தீர்வு இல்லை. அதிகார பீடத்தில் என்றுமே அல்லாஹ்வின் வேதம் தான் ஆட்சி செலுத்த வேண்டும்.
12

March 10, 2009 05:18
0
kamil jaward:
உண்மையில் இது முஸ்லிம் சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல கருத்து.

kamil jaward
Sri lanka
____________

சகோ. காமில்,
உங்களுக்காக : http://www.satyamargam.com/TamilTyping
13

September 28, 2009 18:13
0
ziath rahiman:
சலாம்.அல்லாஹ்வின் ஒற்றுமை கையிறை பற்றி பிடிக்க வேண்டும் என்று அல்லாஹ் குரானிலே கூறுவது உண்மைதான்.ஆனால் அல்லாஹ்வின் கயிறு எது.எந்த இயக்கம் சொல்லும் இஸ்லாம் அல்லாஹ்வின் கயிறு.எனவே உண்மையான கொள்கை என்பது யார் சத்திய வழியில் குரான் ஹதீஸை சொல்கிறார்கள் என்று ஆராயிந்து அந்த வழியிலே செல்வது.அதை விடுத்து நீ சொல்கிற கொள்கை எதுவாக இருந்தாலும் பரவா இல்லை.நாம் இருவரும் சேர்ந்து சத்தியத்தை சொல்வோம் என்று சொல்வது முனாபிக்தனம்.மற்றபடி எல்லோரையும் ஆதமின் மக்களாக பாவித்து,எல்லோரிடமும் அன்பு காட்டி கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து மரிப்பதுதான் உண்மையான முஹ்மீனுக்கு அழகு.எனவே சிந்தித்து செயல் படுவோம்.
14

December 18, 2009 16:24
0
ziath rahiman:
சலாம்.அப்துல் காதற் அவர்களே, "முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.
வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!"என்று உங்கள் கட்டுரையில் கூறி இருக்கிறீர்கள்.அல்லாஹ் எப்போது வெற்றியை தருவான்.கொண்ட கொள்கையிலே உறுதியாக நிற்கும்போது.ஆனால் இப்பொது இருக்கும் அரசியல் சூழ்நிலையிலே கொண்ட கொள்கையிலே உறுதியாக நிற்பதற்கு தமிழக அரசியல் அனுமதிக்குமா.எல்லா கொள்கை உடையவர்களும் ஒரே மேடையில் சந்தித்து முரணான நிலைபாடுகளை கூறி அரசியலில் ஜெயப்பதர்க்காக முரணான கருத்துகளை சொல்வதற்கு அல்லாஹ்வுடைய தூய மார்க்கத்தில் அனுமதி உண்டா.விடை கூறுங்கள்.
15

December 18, 2009 16:41

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:21 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சம். தூய்மையும்) உடையோராகலாம்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் ஒற்றுமையே தீர்வு!
Twitter
RSS
YouTube
English