சத்தியமார்க்கம்.காம்

வேரின் பலா - பாரில் உலா!! print Email
கதை-கவிதை - கவிதை
சனி, 13 டிசம்பர் 2008 14:09
 உடன்கட்டை ஏறுதலும் உள்ளம் தடுமாறுதலும்
உயிர்துறக்க முடிவுசெய்யும் உயிரற்ற நிகழ்வுகளும்
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கியே நிற்பதற்கும்
கடுமையான பாவத்தின் கருவாய் அமைவதற்கும்
 
காத்திருக்கும் அறிவிலிகள் கடவுளுக்கு நன்றிசொல்லி
காட்டாற்று பூவொத்த கைம்மை நோன்பேற்பதற்கும்
சாத்திரங்கள் சடங்கெல்லாம் சத்தியம் என்றுரைத்து
சலிக்காமல் விதவையரை சாகடித்தே ஓய்ந்திடுவர்!

(ஆனால்)

இஸ்லாத்தில் இம்மடமை என்றுமே இருந்ததில்லை!

எங்கேனும் விதவையவர்கள் இருக்கின்ற வீட்டினிலே

"இத்தா"-வின் காலம்வரை இதயம் பொறுத்திருந்து (மீண்டும்)
எல்லா பெண்களைப்போல் இணைந்திடலாம் இல்லறத்தில்!

முஸ்லிம் பெண்கள் முழுமதியாய் ஒளிர்வதற்கும்

முறையற்ற பாவம்விட்டு முத்தாய்ப்பாய் வாழ்வதற்கும்
மூச்சு காற்றினைப்போல் முடிவிலா நற்கருத்தை
முழங்கிடுதே அல்குர்ஆன் முழுநன்றி இறைவனுக்கே!

கைம்பெண்கள் மறுவாழ்வு கனவான காலத்திலே

கற்புநெறி காத்திடவும் கடுந்தனிமை நீங்கிடவும்
கண்டவர்கள் ஏச்சும் பேச்சும் காதில்கேட்காமல்
காற்றில் கலப்பதற்கும் கைம்மைநிலை மறைவதற்கும்

கைம்பெண்கள் துயரங்கள் காட்டுத்தீயாய் பரவும்முன்பே

கடல்நீராய் அதையணைக்க கருத்துரைத்த அண்ணல்நபி
மெய்யாக மணமுடித்து மாந்தர்க்கு முன்மாதிரியாய்
மெய்சிலிர்க்க வைத்தஒளி மேதினியில் உலவிடுதே!

சுதந்திரமாய் கைம்பெண்கள் சுயமாய் முடிவெடுக்க

சொத்தாக ஓருரிமை சுவையாய் உள்ளதிங்கே
சொல்லாலும் செயலாலும் தாம்சொன்னபடி நாம்நடந்தால்
சுவர்க்கநன்மை உண்டென்று சொன்னவர்தான் நபியவர்கள்!

ஒப்புதல் இல்லாமல் மறுமணத்தில் இணைவதற்கு

ஒருபோதும் இஸ்லாம் உரிமை அளிக்கவில்லை (பெண்ணின்)
ஒப்புதல் இசைவொன்று உறுதியான பின்பே
உருவாகி நிறைவேறிடுமாம் பெண்ணுரிமை மறுமணமே!

வேரின்பலா கோரிக்கையற்று பாரில் வீழ்வதனால்

வெளிச்சம் காணாமல் இருட்டறைக்கே சொந்தமென
போரில் தோல்வியுற்ற புகழ்பெற்ற ராணியர்போல்
புலம்புகின்ற பெண்களுக்கு புகலிடம்தாம் எங்குளதோ?

ஏழையாய் பிறப்பதினால் என்றுமே மணமில்லையென்றால்

எங்குதான் மனிதநேயம் இயல்பாய் பூத்திடுமோ?
வாழையாய் வாழ்ந்தால்தான் வறுமைநிறம் மாறுமென்றால்
வாரிக்கொடுத்து விட்டு வள்ளல்போல் மணமுடிப்போம்!

விதவையருக்கு பாடுபடும் விவேக முஸ்லிம்கள்

வீரமிகு அறப்போரின் வெற்றிகொள் வீரனைப்போல்
விடியும்வரை இறைதொழுது விடிந்தபின்னே நோன்பிருந்து
விண்சுவர்க்கம் கரமேந்தும் வியத்தகு மனிதரைப்போல்,

வெளிச்சத்துடன் வாழ்வரென்று வித்தகர் நபிசொன்ன

வியக்கவைக்கும் நற்செய்தி திக்கெட்டும் ஒலிக்கிறதே!
களிப்பான இச்செய்தி நாட்டில் காட்சியாக்கப்பட்டால்
கனிவான நற்கூலி நம்கைமேல் கிடைத்திடுமே!

இல்வாழ்க்கை கடலினிலே ஈமான், தொழுகைநோன்பு

இன்னும் ஜக்காத், ஹஜ் ஐங்கடமையெல்லாம்
நல்வாழ்க்கை வாழ்வதற்கே நாயன் படைத்ததினால்
நன்குநாம் வாழுகின்றோம், நம்பிக்கையுடன் உள்ளோம்!

வாழ்க்கைப்பெருங்கலத்தை வழிநடத்தும் தலைவன் மாண்டால்

வறண்டுவிடும் துணைவிவாழ்க்கை வாய்மை நாமறிவோம்!
வற்றியஜீவநதி மீண்டும் வளைந்தோடல் காண்பதற்கு
வரலாற்று மறுமணத்தை வரவேற்று போற்றிடுவோம்!

தூய நிலவொளியை துய்த்திருக்கும் தும்பைப்பூ

தூக்கம் மறந்துபோன துணையற்ற இருவிழிகள்
நேயர் மறைந்ததினால் நேசம் மறந்துபோய்
நீலவானத்தை  நித்தம் நித்தம் நோக்குதிங்கே!

பாயத் துடித்திருக்கும் பாவையெனும் பொன்னருவி

பயமென்ற அணைத்தடுப்பில் பரிதவித்து நிற்கிறதே!
மேயத் துடித்திருக்கும் மிடுக்கான கன்றினைப்போல்
மேதினியில் அவள்துள்ள மேடைபோட முன்வருவோம்!

கொடிதுகொடிது தனிமைகொடிது அதனிலும் கொடிது

கொழுகொம்பற்ற மகளிர்தம் கோரமானதொரு தனிமை
படிப்பினையை நன்குணர்ந்து பாரினிலே யாவருமே
பரிதவிக்கும் விதைவையர்க்கு பார்வைக்கண்ணாய் ஒளிரலாமே!!
ஆக்கம் : அப்துல் ரஹீம்.

 

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
muhammad:
///கொடிதுகொடிது தனிமைகொடிது அதனிலும் கொடிது கொழுகொம்பற்ற மகளிர்தம் கோரமானதொரு தனிமை படிப்பினையை நன்குணர்ந்து பாரினிலே யாவருமே பரிதவிக்கும் விதைவையர்க்கு பார்வைக்கண்ணாய் ஒளிரலாமே! /// -------------ஒவ்வொரு ஆணும் தன் திருமணத்திற்கு முன் சற்று யோசிக்கவேண்டிய வரிகள். நிறைய நன்மைகளை அள்ளிக்கொண்டு மறுமைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. சிறந்த ஆக்கம். நன்றி.
1

December 14, 2008 04:08
0
haq:
மாற்று மத சமுதாயத்தில் இருக்கும் மூடபழக்கவழக்கங்களிலேயே மிகவும் கொடுமையானது கணவனை இழந்தவள் நிலைதான்.. ஆம் ஒன்றா இரண்டா..ஒடுக்குமுறைகள்..!. கணவனின் இறப்புக்கு காரணம் அவளா..?. பின்னே ஏன் முடக்கிவைக்கப்படுகிறாள் மூலையிலே..? பெற்ற பிள்ளையின் திருமணத்தில் கூட பின்னால் இருந்து தானே வாழ்த்துகிறாள்..! தடைக் கல்லை உடைத்துக்கொண்டு சபைக்கு வருவது எப்போது..?. துருப்பிடித்த பழக்க வழக்கங்களை தூக்கியெறிந்து விட்டு நவீன சமுதாயம் படைத்தால்..??. இவர்களின் மனவேதனையை கொஞ்சமாவது மாற்றலாம் அல்லவா..!!. கைம்பெண்னின் கதறல் ,,,,,,,,,,,,,,,,,,,, பொட்டிழந்தேன், பூவிழந்தேன் புருசனை இழந்தற்காக..! இழந்து இருட்டிலே வாழ்வதை விட, அக்கால பெண்கள் போல், உடன்கட்டை ஏற உள்ளம் துடிக்கிறது, கணவனை இழந்தவள் கைம்பெண்னாம்..! வீதியில் உலாவந்தாள் விந்தயாய் சாடுகின்றனர்.!! நல்ல காரியங்கள் நான்முன்னின்றாள், நடந்தேறாது என்கிறார்கள்.? கட்டியவனை இழந்து கதறும் உள்ளத்தை, கத்தியால் குத்துகிரார்களே..!! இது நியாயமா என் போன்ற கோடி பெண்களின், குமுறலைப் போக்க விதவையை வீட்டில் பூட்டி வைக்கும், மூடத்தனதை போக்க - வாலிபனே.. முன் வரமாட்டாயா....?? பரவாயில்லை, பரவாயில்லை.. வயோதிகனே..!! நீயாவது - என்னை, வாழ்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்வாயா..?? உன் மீதி வாழ்கையின் ஊன்றுகோலாக - நான்.. இருந்துவிட்டுப் போகிறேன்....! .............................................................. 'கவிஹக்' ஜியா-உல்- ஹக். கரிசை...
2

December 14, 2008 05:17
0
Abu Irfan:
Assalamu Alaikkum, Words cannot express the feelings of a widow and the writer has created an excellent masterpiece by throwing open the options available to a Muslim widow about remarriage. The Prophet has himself been a role model which has been explicitly expressed by the writer. Excellent poem and fantastic use of words.... Feedback by, Abu Irfan
3

December 24, 2008 11:06

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் வேரின் பலா - பாரில் உலா!!
Twitter
RSS
YouTube
English