சத்தியமார்க்கம்.காம்

கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்! print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
சனி, 22 நவம்பர் 2008 14:33

"ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்" என மாலேகோன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இந்துத் தீவிரவாத சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் அமைப்பான 'அபினவ் பாரத்'தின் தலைவி ஹிமானி சவார்க்கர் அறிவிப்புச் செய்துள்ளார்.

 

 

ஹிமானி, காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சவர்க்கருடைய மருமகன் ஆவார்.

 

"மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது" என அவுட் லுக் தினசரிக்கு ஹிமானி வழங்கிய பேட்டியில் ஹிந்துத்துவ வாதிகளின் அட்டூழியங்களை நியாயப் படுத்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கண்டவாறு கூறினார்.

 

"தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம். அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர். ப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்" என ஹிமானி கூறினார்.

 

"துப்பாக்கியைத் துப்பாக்கி கொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் கூறியது தெரியுமில்லையா? எனில், வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது? மாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது" எனவும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஹிமானி குற்றம் சாட்டினார்.

 

"குஜராத் கலவரம் முதலானவற்றில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என முஸ்லிம்கள் கூறுகின்றனர். மதத்தை முன் நிறுத்தியே அவர்கள் அவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை" எனவும் ஹிமானி கூறினார்.

 

மும்பைக் கலவரத்தைக் குறித்து சமர்ப்பிக்கப் பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஹிமானி கூறினார். "குஜராத் கலவரம் குறித்த நானாவதியின் அறிக்கையிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?" என்ற கேள்விக்கு, "அந்த அறிக்கையினைக் குறித்துத் எனக்கு அதிகம் எதுவும் தெரியாது; எதிர் தாக்குதல் நடத்துவது மனிதர்களிடையே சகஜமானது" என்று அவர் பதிலளித்தார்.

 

"தற்பொழுது நடப்பவை அனைத்தும் ஹிந்துக்களின் யதார்த்தமான எதிர்வினைகளே! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிக் கொண்டு நிற்க வேண்டுமோ? நாங்கள் எதிர்த்துத் தாக்கவே செய்வோம். அதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக எவராவது நடவடிக்கை எடுப்பின் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என ஹிமானி ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கை விடுத்தார்.

 

"ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது?" என அதிபுத்திசாலி(!)த் தனமான கேள்வி ஒன்றை ஹிமானி எழுப்பினார்.

 

"அனைவரும் ஹிந்துக்களான இந்த ஹிந்துஸ்தானை ஒரு ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். இதனை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள் நாட்டை விட்டுப் போகலாம். தீவிரவாதத்தை அழிப்பதில் எந்த அரசு தோல்வியடைந்தாலும் அவர்களைத் தோற்கடிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். பங்களாதேசிகள் முதலான வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என அவர் கூறினார்.

 

***

ஒருமுறை குமுதம் இணையத் தொலைகாட்சியில் த.மு.மு.க. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாவுடனான நேர்முக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவி, ஒரு கேள்வியின் பொழுது, "இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது. எனவே இம்மண்ணை ஹிந்து மண், ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்" என்று கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

 

ஆர்.எஸ்.எஸ் எந்த அளவிற்கு இந்திய மக்களின் மனதில் விஷத்தை ஏற்றி மூளைச் சலவை செய்கிறது என்பதற்கு இதனைவிடச் சிறந்த வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.

 

செய்யும் அக்கிரமங்களை நியாயப் படுத்துதல், தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகுவதை விடுத்து, செயற் படுத்தும் அத்தனை அக்கிரமங்களையும் தேசப்பற்றாக நினைத்துக் கொண்டு, ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்தல் என ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி விட்டுள்ள இலட்சகணக்கான தொண்டர்கள், இந்தியாவின் இறையாண்மையையும் இந்திய மக்களின் ஒற்றுமையையும் தகர்க்கப் போகும் வெடிகுண்டுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

இந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின், காவல்-நீதித்துறைகளின் கட்டாயக் கடமையாகும்.

 

 

Trackback(0)
கருத்துக்கள் (13)add comment
0
பிரோஸ்கான்:
வெறி பிடித்த மூளைச்சலவை செய்யப்பட்ட கும்பலைச் சார்ந்த பயங்கரவாதிகள் வேறு எப்படி சொல்வார்களாம்,? இவர்களையும் இந்துத்துவா பேசும் பயங்கரவாத கும்பல்களையும் இந்து மகா சபை கண்டனம் செய்துள்ளது இங்கு குறிப்பிடதக்கது.( http://tamil.webdunia.com/newsworld/news/national/0811/22/1081122021_1.htm)இவர்கள் யாவரும் பெரும்பான்மை மக்களின் பிரதினிதிகள் அல்ல. மேலும் இந்திய தேசம் எந்த மதத்தினருக்கோ,சாதியினருக்கோ,அல்லது எந்த இனத்தினருக்கோ சொந்தம் கொண்டாடமுடியாத பன்முகத்தன்மைக் கொண்ட மண். இவர்கள் இந்த தேசத்து சரித்திரத்தை சுயம் சேவக்கின் நூலகங்களில் படித்தவர்கள், இவர்களிடம் போலியான தேசப்பற்றைத்தான் நாம் காண முடியும். காந்தியின் படுகொலையையும் 'எதிர்வினை' என்று நியாயப்படுத்தும் இக்கூட்டம் இந்த குண்டு வெடிப்பினையும் எதிர்வினை என்று நியாயப்படுத்தி வருவது ஆபத்தான போக்கு. மேலும் இக்கூட்டம் தேச விடுதலைக்கு ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை என்பதும் நாம் அறிந்ததே. மேலும், குமுதம் இணையதளத்தில் நடைப்பெற்ற நேர்முக நிகழ்ச்சியில் பேசிய அந்த பெண்மணியின் பேச்சை நானும் கேட்டேன். இந்திய அரசியல் சாசன சட்டத்திற்க்கு புறம்பான பேச்சாக தான் இருந்தது. இதை த.மு.மு.க. தலைவரும் குறிப்பிட்டிருப்பார் தனது பேச்சில். இந்தியா எங்கள் தாய் மண்; நாங்கள் இந்தியர்கள். எங்கள் மார்க்கம் இஸ்லாம், இந்த நாட்டை விட்டு வெளியேற சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இங்கே இருப்பவர்கள் அரசியல் சாசனத்தை மதித்து நடக்கட்டும் இல்லையேல் வெளியேறட்டும். மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை வேட்டையாடவே இவர்கள் தேசாபிமானி வேஷம் போடுகிறார்கள். வேஷம் கலைந்து வருகிறது. சாதுக்களின் முகமூடிக்குள் சாத்தான்கள் இருப்பதை தேசம் கண்டுக்கொண்டது.
1

November 22, 2008 17:35
0
மஸ்தூக்கா:
முஸ்லிம்கள் வேறு நாட்டுக்கு போய் வாழ வேண்டுமாம். இந்திய எங்கள் தேசம். நாங்கள் பிறந்த மண். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து எங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற எங்கள் செங்குருதியைச் சிந்தியிருக்கிறோம். மற்றவர்களை விட அதிகமான பங்களிப்பை நல்கியிருக்கிறோம். அப்போதும் சரி இப்போதும் சரி எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் கோடானு கோடி இந்து சகோதரர்கள் எங்களை மதிக்கிறார்கள். கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் இந்த நாட்டை விட்டு போகட்டும். இந்த வந்தேறிகள் போனால் வரவேற்க உலகில் ஒரு நாடு கூட இவர்களுக்குக் கிடையாது
2

November 22, 2008 21:39
0
muhammad:
யார் இவர்கள்? எப்படி இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது இப்படி பேச? சாதரணமாக பேசிய நெடுமாறன், வைகோ, சீமான், அமீர் இவர்களையெல்லாம் பிடித்து உள்ளே போட்ட அதே சட்டம் இவர்களிடம் மட்டும் நாய் போல் குழைந்து வாலாட்டிக் கொண்டு காலடியில் நக்கியபடி படுத்துக்கொண்டுள்ளதே! இது உண்மையில் மதச்சார்பற்ற நாடுதானா? இவ்வளவு நடந்த பிறகும் ஏன் இந்த இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் இன்னும் தடை செய்யப்படவில்லை? அரசுக்கு இதுவரை வெடித்த குண்டுகள் போதாதாமா? அவர்கள் வைத்ததாக ஒப்புக்கொண்ட வெடிகுண்டுகளில் மாண்டவர்கள் இந்தியர்கள் இல்லையா அரசே? நம்மால் என்ன செய்யமுடியும்? இவர்களின் மனம் நல்வழிப்பட இறைவனிடம் இறைஞ்சுவோம்.
3

November 23, 2008 08:04
0
Sithik Basha:
நாம் இந்த நாட்டின் பூர்வீக சொந்தக்காரர்கள், வந்தேரிகளான பார்பனர்கள்தான் நமது நாடை விட்டு ஓட வேன்டியவர்கள், நமது இலட்சியம் அவர்களை தனிமை படுத்துவதாக இருக்க வேன்டும், 20 கோடி முஸ்லிம்கள்தான் இந்த நாட்டின் மிகப்பெருமான்மையானவர்கள்,வந்தேரிகள் வேன்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேரட்டும், இல்லையேல் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கட்டும். இது மத சார்ப்பற்ற நாடு மதவாதிகள் வேண்டும் என்றால் 'நேப்பாள்' போகட்டும்
4

November 23, 2008 13:10
0
mumbaikar:
இந்தியா தனது சொந்த (கோட்ஸே & ஸாவர்கர் )கம்பனியாகவும் அதன் நிர்வாகிகளாக கருதும் இது போன்ற மேதாவிகள் கூற்று இங்கு பரவலாக உள்ள இரு குடிகாரர்களின் ஒரு ஜோக்கை நினைவூட்டுகிறது. முதல் குடிகாரன் : (குடிப்போதையில்) நான் மும்பை வீ.டி. ரெயில்வே ஸ்டேஷனை விலை கொடுத்து வாங்க போகிறேன்.... இரண்டாவது குடிகாரன் : (குடி போதையில்) நான் அதை விற்றால் தானே நீ வாங்க முடியும் நான் அதை விற்க போவதில்லையே.... பொய்யையும் வெறுப்பையும் வேற்றுமையையும் இந்துத்துவாவின் அடிப்படையென்று புரிந்து மனிதாபிமானமின்றி செயல் படும் இது போன்ற கொள்கையுடையவர்கள் நாட்டை பாதுகாக்க வேண்டுமென்ற நல்ல நோக்கம் இருப்பின் அரசியல் சாசனத்தையும் மனிதர்களையும் மதித்து வாழலாம் அல்லது நாட்டின் நலன் நாடி நாட்டை விட்டு துறந்து காடுகள் மலைகள் என்று எங்காவது சென்று தமது ராஜ்ஜியத்தை அமைத்து வாழலாம்..... உலகில் காடுகளுக்கும் மலைகளுக்கும் ஏதும் குறையில்லை என்பதை நினைவூட்டுவோம்.
5

November 23, 2008 16:52
0
abdul azeez:
பருப்பு வேகாது !! அப்துல் அசீஸ்.
6

November 23, 2008 21:44
0
Aludeen:
இந்த பெண் சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று தைரியமாக பேட்டி கொடுக்கிறார். உண்மையான ஆண்மையுள்ள அரசாக இருந்தால் பேட்டியை ஆதாரமாக வைத்து இவரை உள்ளே தள்ளி இவர் கொழுப்பை குறைக்க வழி செய்ய வேண்டும். இதுபோல் நடமாடும் பயங்கர தீவிரவாதிகளை நாட்டில் நடமாட விட்டு வைப்பது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ஆபத்து. இந்த ஆபத்தை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதால்தான் இது போன்றவர்களின் அநியாயம் நாளுக்கு நாள் (தெளிவான தீவிரவாத்தை நாளுக்கு நாள் வளர்த்து வரும் சு.ளு.ளு.குண்டர்கள் பலபெயர்களில் இயங்கி மறைமுகமாக செய்யாமல் அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்படியே தங்களின் காரியத்தை செய்து நாட்டையே சுடுகாடாக்கிக் கொண்டு வருகிறார்கள்.) பெருகிக்கொண்டே போகிறது. இவரின் பேட்டியை வைத்து வழக்கு தொடுத்து அரசாங்கத்திற்கு சவால் விடும் இந்த நடமாடும் வெடிகுண்டு தேசத்துரோகியை உள்ளே தள்ள வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் செய்ய வேண்டிய நல்ல காரியம். முயற்சி செய்யுங்கள். தமிழ்நாட்டில் வந்து அதிகாரிகளின் உயிரை எடுப்போம் என்ற உமாபாரதி தீவிரவாதிக்கே இன்று வரை சரியான நடவடிக்கை இல்லை. இந்த பயங்கரவாத ஹிமானி தீவிரவாதிக்கு எதிராக யார் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். இப்பொழுதே மாலேகான் பிரச்சனையில் எல்லா RSS குண்டர்களும் இந்துக்களை காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது என்று குழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கூடியசீக்கிரம் பயந்து போய் RSS குண்டர்கள் நாட்டிற்கு வெடிகுண்டு வைத்து நல்லது செய்திருக்கிறார்கள் என்று எல்லோரையும் விடுதலை செய்யப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் தொடைநடுங்கி காங்கிரஸ் செய்யப்போவதை. மேலும் இந்த ஊடகங்களும் இந்த RSS பயங்கரவாதிகள் கைதுகள் இது தொடர்பான செய்திகள் கூறுவதை மிக மிக மென்மையுடன் நாட்டுக்கு சேவை செய்தவர்கள் போல் செய்தியை வெளியிடுகிறது சில ஊடக தீவிரவாதிகள். //ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை;// இந்த RSS பயங்கரவாத குண்டர்கள் நாட்டை காப்பாற்ற போகிறார்கள் என்றால் அரசுக்கு வேலை இல்லையா? //வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது? // // நாங்கள் எதிர்த்துத் தாக்கவே செய்வோம். அதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக எவராவது நடவடிக்கை எடுப்பின் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம்' // RSS பயங்கரவாத குண்டர்கள் பெண்களை எப்படி பயிற்சி கொடுத்து மூளை சலவை செய்திருக்கிறார்கள். இப்படி வெறித்தனமாக அரசாங்கத்திற்கு சவால் விடுவது போல் பேசியதற்கு இவர் நிச்சயம் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான்.
7

November 24, 2008 15:14
0
Mohamed Hussain:
Hello Home dept and Central Government Please Listen these words........ Wat is difference between BJP AND YOU
8

November 25, 2008 12:57
0
ameen:
if any muslim or any organisation run by a muslim speaks like this,did this govt. allow them to walk freely?
9

November 30, 2008 07:21
0
திரிசூல சக்தி:
அகண்ட பாரதத்தை துண்டாக்கியது யார்? இஸ்லாமி மதம் எங்கிருந்து பாரதத்துக்கு வந்தது? நீங்கள் எத்தனை சேட்டு இரத்தம் சிந்தினிர்கள் இந்த தேசத்துக்காக? பாரதத்தை துண்டு போட்டு நவகாளியில் இந்து, சீக்கியர்களை கொன்று அட்டம்போட்ட இஸ்லாமிய வெறியர்களை, உங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது, ஒட்டகத்தைப் பிடித்து நீங்கள் அரபு தேசத்துக்கு ஓடு நாள் விரைவில் வரும். அதுவரை காத்திருங்கள்.
10

February 26, 2011 11:50
0
இந்தியன் முஸ்லிம்:
திரிசூல சக்தியே

உனக்கு இஸ்லாமிய கோட்பாடும் தெரியாது , உண்மை இந்திய வரலாரும் தெரியாது எனில் அதன் சுட்டி தருகிறேன் ... அதற்கு முன்னர் ஒரு முறை கீழேயுள்ள பின்னூட்டத்தை மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதித்து கொள்ளவும் மற்ற ....கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

// mumbaikar: November 23, 2008 13:10
இந்தியா தனது சொந்த (கோட்ஸே & ஸாவர்கர் )கம்பனியாகவும் அதன் நிர்வாகிகளாக கருதும் இது போன்ற மேதாவிகள் கூற்று இங்கு பரவலாக உள்ள இரு குடிகாரர்களின் ஒரு ஜோக்கை நினைவூட்டுகிறது. முதல் குடிகாரன் : (குடிப்போதையில்) நான் மும்பை வீ.டி. ரெயில்வே ஸ்டேஷனை விலை கொடுத்து வாங்க போகிறேன்.... இரண்டாவது குடிகாரன் : (குடி போதையில்) நான் அதை விற்றால் தானே நீ வாங்க முடியும் நான் அதை விற்க போவதில்லையே.... பொய்யையும் வெறுப்பையும் வேற்றுமையையும் இந்துத்துவாவின் அடிப்படையென்று புரிந்து மனிதாபிமானமின்றி செயல் படும் இது போன்ற கொள்கையுடையவர்கள் நாட்டை பாதுகாக்க வேண்டுமென்ற நல்ல நோக்கம் இருப்பின் அரசியல் சாசனத்தையும் மனிதர்களையும் மதித்து வாழலாம் அல்லது நாட்டின் நலன் நாடி நாட்டை விட்டு துறந்து காடுகள் மலைகள் என்று எங்காவது சென்று தமது ராஜ்ஜியத்தை அமைத்து வாழலாம்..... உலகில் காடுகளுக்கும் மலைகளுக்கும் ஏதும் குறையில்லை என்பதை நினைவூட்டுவோம். //
11

February 26, 2011 22:06
0
இந்தியன் முஸ்லிம்:
திரிசூல சக்தியே
இதையும் ஒருமுறைக்கு பல முறை படித்து தெளிவு பெற முயலும் ......

// மஸ்தூக்கா: November 22, 2008 21:39

முஸ்லிம்கள் வேறு நாட்டுக்கு போய் வாழ வேண்டுமாம். இந்திய எங்கள் தேசம். நாங்கள் பிறந்த மண். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து எங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற எங்கள் செங்குருதியைச் சிந்தியிருக்கிறோம். மற்றவர்களை விட அதிகமான பங்களிப்பை நல்கியிருக்கிறோம். அப்போதும் சரி இப்போதும் சரி எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் கோடானு கோடி இந்து சகோதரர்கள் எங்களை மதிக்கிறார்கள். கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் இந்த நாட்டை விட்டு போகட்டும். இந்த வந்தேறிகள் போனால் வரவேற்க உலகில் ஒரு நாடு கூட இவர்களுக்குக் கிடையாது //

12

February 26, 2011 22:10
0
சஃபி:
தெருசூலம் அண்ணே!

இவ்ளோ நாளா எங்கேண்ணே இருந்தே? ஒன்னய மாதிரி 'தேசபக்தி' பார்ட்டிங்கள இங்கப் பார்க்கும்போது உணர்ச்சி கொந்தளிச்சிப் போகுதுண்ணே!

அடிக்கடி வாண்ணே, வரமுன்னாடி இதுங்களப் படிச்சிட்டு வா, நாலு சேதியும் இந்த நாடு யாருதுன்னும் தெரியவாணாம்?

1 - http://www.satyamargam.com/998

2 - http://www.satyamargam.com/1015

3 - http://www.satyamargam.com/1110

4 - http://www.satyamargam.com/1400

ஒன்னுந் தெரியாம பேசுனா இங்க உள்ள சில பயபுள்ளைங்க "ஒளறு வாயன்"னு பட்டம் குடுத்துவானுங்க, சாக்கிரதயா இருந்துக்கண்ணே!
13

February 27, 2011 09:25

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!
Twitter
RSS
YouTube
English