சத்தியமார்க்கம்.காம்

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
செவ்வாய், 18 நவம்பர் 2008 08:40
 டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!" என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

 விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

 வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

 ``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

 2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

 கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.
 

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

 இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

 நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

 இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

 செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

 

நன்றி: குமுதம்

Trackback(0)
கருத்துக்கள் (15)add comment
0
jafar safamarva:
சட்டக்கல்லூரி பிரச்சனையைப் படித்து மனது கலங்கியிருந்த வேளையில் மனதுக்கு ஆறுதலான விஷயம் தந்து இருக்கிறீர்கள்! இவரல்லவா மனிதர்!!!
1

November 18, 2008 12:32
0
Jegadesh:
மனித மாமிச வெறி பிடித்து அலையும் மதவெறி பிடித்த மிருகங்களுக்கிடையில் செந்தில் குமார் போன்றவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். புண்பட்டிருக்கும் மனங்களுக்கு ஆறுதலும் அளிக்கிறார்கள். லட்சங்களைத் துச்சமாக எண்ணி தூக்கி எறிந்து விட்டு மனநிம்மதி தரும் எளிமையான நற்காரியங்களைச் செய்யும் இவருக்கு வாழ்த்துக்கள்
2

November 18, 2008 12:52
0
மஸ்தூக்கா:
இந்திய மண்ணில் கிராமத்துக்கு ஒரு செந்தில் குமார் வேண்டும். எந்த சுயநலமும் இல்லாமல் பொதுநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சகோதரர் செந்தில் குமாரின் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் முன்மாதிரி. தொண்டு நிறுவனங்கள் இவரைப்போன்ற இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் கிராமங்கள் வளர்ச்சி அடையும். ஏழை எளிய மக்கள் மனம்குளிர வாழத்துவார்கள்.
3

November 18, 2008 19:58
0
abdul azeez:
செந்தில் குமார் என்றும் தாழ்ந்துவிடமாட்டார்.அவரின் சேவை அவரை உயர்ந்த இடத்தில் வைக்கும்.அவருக்கு என்றென்றும் வரவேற்ப்பு இருக்கும்.அவர் அனைத்து மக்கள் முன்பு ஹீரோ தான்.எஞ்சினீர் செந்தில் குமார் அவர்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
4

November 18, 2008 21:50
0
aejaz:
He is really great, i like his sacrifice
5

November 19, 2008 03:16
0
அப்துல்லாஹ் M:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே மனிதாபிமனத்தையும் மனிதநேயத்தையும் மறந்து வாழும் மனிதர்களில், இது போன்ற மனிதகுல மேம்பாட்டிற்கு நல்லுதாரணங்களாக திகழும் மனிதர்களுக்கும், அதை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிறருக்கும் உந்துதல் அளித்து பலனளிக்க வல்ல செய்திகள் வெளியிடுவோருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ் நல்லருள் புரிவானாக... இலட்சியங்கள் பெரிதானால் இலட்சங்கள் பெரிதல்ல அவைகள் வெரும் ஒன்றிற்கு அடுத்துள்ள பூஜ்ஜியங்கள் என்பதற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.
6

November 19, 2008 05:23
0
shahul hameed:
Well done Mr.Senthil, Hope u will do the same work more and more, keep it up. Allahu akbar!
7

November 20, 2008 06:56
0
ஆர்.நூர்ஜஹான் ரஹீம்:
அஸ்ஸலாமு ஆலைக்கும், தான்,தனது குடும்பம் என்று தன்னைச்சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை வளைத்துக்கொண்டு, பிறரை ஏமாற்றியே பிழைப்பவர்களின் மத்தியில், எளிமை, பணிவுக்கு இலக்கணமாக,படிப்பு,பதவி,வருமானம், வயசு எல்லாமே இருந்தும்,வாழ்க்கை வாழ்வதற்கே எனத்தெரிந்து இருந்தும், எல்லாவற்றையும் மறந்து ஆசாபாசங்களை துறந்து,பின் தங்கிய கிராமத்தைத் தத்தெடுத்து ,எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்தி ஒரு அரசாங்கம் செய்யக்கூடியவற்றை தனி ஒருமனிதனாக நின்று சாதித்து வருவது ........என்பது எல்லோராலும் முடியக்கூடியதுஅல்ல! இதற்கெல்லாம் துணிவு,உறுதி,குறிக்கோள்,தியாக மனப்பான்மை, அயராத உழைப்பு,தன்னலமற்றத் தொண்டு,தியாக மனப்பான்மை வேண்டும்.சொல்வது எளிது, செயல் படுத்துவது கடினம்.குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிப்பார் செந்தில்!வாழ்த்துக்கள்!இப்பெருமைகள் அனைத்தும் ஐ இரு திங்கள் சுமந்த தாய்க்கும் பெருமை தானே! இருந்தாலும் செந்தில்குமாருக்கு ஒரு வேண்டுகோள்.ஒரு கிராமத்தின் குறையைத் தீர்க்க முன் வந்த தாங்கள் உங்கள் தாயின் மனக்குறையையும(திருமணம்)தீர்த்து வைத்தால் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமையை அடைவீர்!சாதனைகள் வெற்றிபெறட்டும்! வாழ்த்துக்கள்! .. என்பது..............
8

November 22, 2008 20:53
0
faisal al farook:
asalamu alikum mr.senthil we r proud of u r doing best in u r life.i hope u r work grate and more and more .thanks mr.senthil
9

November 23, 2008 10:50
0
Alaudeen:
மேலும் அவர் சேவை தொடர வாழ்த்துக்கள்
10

November 25, 2008 08:07
0
indian:
கோவை, டிச. 2: கோவை நகரில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் கோவை நகரை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளிடமிருந்து கோவை நகர வரைபடம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. . மும்பையில் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். தேசிய பாதுகாப்புப்படையின் அதிரடிப்படையினர் புகுந்து தாக்குதல் நடத்தி பிணைகைதிகளை மீட்டனர். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்ப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில், கோவையில் ஒரு விடுதி ஒன்றில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வெளிநாடுகளில் உள்ள சிலரிடம் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னையில் இருந்து கோவை நகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், போலீசாரும், அதிரடிப்படையினரும் கோவை நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். கோவையில் லங்கா கார்னர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அதிரடிப்படையினர் சோதனை யிட்டனர். அங்கு உள்ள ஒரு அறையில் 3 பேர் பதுங்கியிருப்பதை அதிரடிப்படையினர் கண்டனர். துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்கள் மீது அதிரடிப்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சம்சுதீன் (வயது 23), இர்பான் அகமது (வயது 20), அப்துல் தமீம் (வயது 21) என்று தெரிய வந்தது. 3 பேரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. எர்ணாக்குளத்திலுள்ள எங்கள் தலைவர் கூறியபடி 3 பேரும் கொச்சி துறைமுகத்தில் இருந்து தனித்தனியாக பிரிந்து கோவை வந்தோம் என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக வந்தீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் மவுனம் சாதித்தனர். அவர்களிடமிருந்து கோவை நகர வரைபடம், ஒரு டைரி, 4 செல்போன்கள், 2 வில்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கோவை நகரிலுள்ள முக்கிய இடங்கள், செல்போன் எண்கள் இருந்தன. அவர்கள் வைத்திருந்த செல்போனை சோதனையிட்ட போது துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு பேசியிருப்பது தெரியவந்தது. கோவை நகரை தகர்க்கும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் 3 பேரும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை வந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 2 பேர் அவர்களுக்கு கோவை நகரை சுற்றி காண்பித்திருக்கிறார்கள். ரெயில் நிலையம், விமான நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், தலைமை டெலிபோன் அலுவலகம், அரசு மருத்துவமனை, உயரமான கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களுக்கு சென்று இவர்கள் கண்காணித்து இருக்கிறார் என்று விவரமும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உதவிகரமாக இருந்த கோவையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 3 தீவிரவாதிகளையும் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து உயர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11

December 08, 2008 04:11
0
mohamed saleem:
Assalaamu Alaikum.. Congradulations Mr.Senthil ... Really you are a great person...i don't have words to explain your services... மேலும் அவர் சேவை தொடர வாழ்த்துக்கள் .....
mohamed saleem....
12

December 19, 2009 18:42
0
kamaludeen:
மத வெறி பிடித்து மனித நேயம் மறந்து வாழும் மக்களுக்கு இடையில் இப்படியும் ஒரு மாமனிதர்..... வாழ்க பல்லாண்டு.....

Congradulations Mr.Senthil. Really you are great.
13

December 23, 2009 19:28
0
latha:
really very very nice person
14

April 28, 2010 17:03
0
abubaker:
Assalaamu Alaikum.. Congradulations Mr.Senthil ... i don't have words to explain your services... மேலும் அவர் சேவை தொடர வாழ்த்துக்கள் .....ஏக இறைவனாகிய அல்லாஹ் நல்லருள் புரிவானாக... ameen.
15

October 28, 2011 09:12

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்!
Twitter
RSS
YouTube
English