சத்தியமார்க்கம்.காம்

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்! print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
செவ்வாய், 11 நவம்பர் 2008 13:03
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர்.

இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார்.

நேற்றுக் காலை 7 மணியளவில் கோயிலின் பின்புறம் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்ட பொதுமக்கள், சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் கிடந்த உடல்களைக் கண்டனர். பக்கத்திலுள்ள கிணற்றில் தெறித்து விழுந்த நிலையில் ப்ரதீபனின் உடல் கிடந்தது. அவரின் இடுப்பின் கீழ்பாகம் முழுவதும் சிதைந்த நிலையில் இரு கால்களும் துண்டு துண்டாகக் கிடந்தன. திலீபின் உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் காணப்பட்டது. வெடித்த குண்டின் வீரியத் தாக்கத்தால் பக்கத்திலுள்ள தென்னை, பனை போன்றவை கருகியிருந்தன. ப்ரதீபன் குண்டு தயாரிப்பிலும் அதனைக் கையாள்வதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவன் என ஊர்மக்கள் கூறுகின்றனர்.

Dim lights Embed Embed this video on your site

இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சம்பவத்தில் இறந்தவர்களின் உடல் சின்னாபின்னமாகச் சிதறியிருக்கும் நிலையைப் பார்க்கும் பொழுதும் அப்பகுதியின் சூழலைப் பார்க்கும் பொழுதும் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த உடனேயே காயமடைந்தவர்களை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது தெரிவதாக காவல்துறை கூறியுள்ளது.

வழக்கம் போல், அனுமதியின்றி கைவசம் வைத்திருந்த வெடிபொருட்களைக் கவனமின்றி கையாண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 2000 - த்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸினர் வீசிய குண்டில் அஸ்னா என்ற மாணவி உட்பட 3 பேருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார்்.

அக்குண்டு வெடிப்பு வழக்கில் சென்ற வாரம், பிரதீபன் உட்பட 14 ஆர்.எஸ்.எஸ் - பாஜக தொண்டர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. வரும் வெள்ளியன்று இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் பிரதீப், குண்டு தயாரிக்கும் வேளையில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வோம் என வெளிப்படையாக ப்ரதீபன் உட்பட ஆர்.எஸ்.எஸ்ஸினர் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்ஸ்:

சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது.

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
அல் அமீன்:
//இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது.// இன்று சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில், பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெய்டு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்து விட்டது.
1

November 11, 2008 18:17
0
abdul azeez:
// அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார் // எட்டு வருடங்கள் முடியப்போகும் நிலையில் நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தாலும் கண்துடைப்பு தீர்ப்பாக தான் இருக்கும். இது போன்ற தீவிரவாதிகளை இந்திய காவல் துறை பாரபட்சம் இல்லாமல் அடையாளம் கண்டு பிடித்து சிறையில் அடைக்கவும். தொடர்ந்து ஒரு பிரிவினர் வஞ்சிக்கப்படும் பொழுது. நாட்டுக்கு ஆகுமானதான சூழல் ஒரு போதும் ஏற்பட்டதுமில்லை. கடந்த கால சம்பவம் மூலம் படிப்பினை பெறுங்கள் மா சலாம். அப்துல் அசீஸ்.
2

November 11, 2008 21:17
0
தீன் - சுடர்:
கோயில்களையும்,பள்ளிக்கூடங்களையும் ஆயுத கூடங்களாக மாற்றி விட்ட RSS தீவிரவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு பின்னால் இருக்கும் இவர்களின் சதிகளை தீர விசாரித்து உண்மைகளை வெளி கொணரும் நல்ல காவல்துறை அதிகாரிகள் பாராட்டபட வேண்டியவர்கள். சுதந்திர தினம் மற்றும் முக்கிய தினங்களில் அங்கு குண்டு வெடிக்கும், இங்கு குண்டு வெடிக்கும் என பூச்சாண்டி காட்டும் உளவுத்துறை களை எடுக்கபட வேண்டும்.
3

November 12, 2008 18:45
0
Thaz:
(நபியே! உமது எதிரிகளான) அவர்கள் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் (ஏற்கனவே) எதிர்த் திட்டம் தீட்டி விட்டேன். (அல்-குர் ஆன் 86:15-16).
4

November 12, 2008 19:44
0
Mohamed:
Dai Pratheeba.... Parthaya Un Nilaimaiyai!!!!!!!!!!!!!!!!! andru Nee Oru Chirum Pinchin Uyrai Edukka Ninaithai, Aaanal Indroo Aegan 'Allah' un uyirai Eduthu Vittan Parthayaa Manidaa,,,,, ALLAHU AKBAR ALLAHU AKBAR ALLAHU AKBAR.............
5

November 12, 2008 21:10
0
muhammad:
did u hear the raj news? they say them as 'rss thondargal' !?! see, if a hindu making a bomb to destroy the muslims, then he will be called as 'thondargal'. if the same 'thondu' being done by others, then they will be termed as 'bayangaravaadhigal' by these same media. 'welldone rss'. go ahead!. destroy the peace, humanity, religious tolerance, happyness, development, freedom, education, human resource, etc., etc., of our nation. u r already backedup by centrtal and state govts., police, also now by military. ya Allah! please, save my india and us from all of these terrorists. ya Allah! please, give us good political leaders who can run the govt., and rule our india bravely, brilliantly and without partiality.
6

November 13, 2008 05:09
0
Ashik:
Assalamu alaikkum dear brother muhammad. You missed to ask an important dhua, that i shall ask on behalf of all indians, 'ya Allah..! Please, change the mindset of all our media who are maintaining continual religious intolerance for muslims'.
7

November 13, 2008 09:35

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்!
Twitter
RSS
YouTube
English