சத்தியமார்க்கம்.காம்

இருதலைக் கொள்ளி எறும்புகளாய் இலங்கைத் தமிழர்கள்! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
செவ்வாய், 04 நவம்பர் 2008 07:15

இருதலைக் கொள்ளி எறும்புகளாய் இலங்கைத் தமிழர்கள்!முன்னெப்போதையும்விடத் தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய கவலையும் அவர்களுக்கு உதவும் முயற்சிகளும் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.


முதன் முதலில், "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள்" என்ற ஒரு கேலிக்கூத்து அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி விடுத்தார்.


கடந்த 26.10.2008இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி சென்னைக்கு வருகை தந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்திப் பேசப் போகிறார் என்ற செய்தி வந்தபோதே, எல்லாரும் எதிர் பார்த்த 'நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்' நாடகம் முடிவுக்கு வரப் போகிறது என்பது தெளிவாகி விட்டது. எதிர்பார்த்தவாறே, "இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன்" என்று கூறி, முதலமைச்சர் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி விட்டு, இலங்கைத் தமிழர்களுக்காக நிதி வசூலை அறிவித்தார். இதுவரை வசூலான தொகை நான்கு கோடியைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சி தருகிறது!

விடுதலைப் புலிகளின் வரலாறு!

உலகிலேயே மிகுந்த கட்டுக் கோப்புடன் கட்டமைக்கப் பட்ட தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளது LTTE, 1976 மே மாதம் 5ஆம் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தலைவராகக் கொண்டு தொடங்கப் பட்டது. புலிகளது தலைமையகம் வன்னிப் பகுதியில் அமைந்துள்ளது. வெளியார் யாரும் எளிதில் நெருங்க முடியாதவாறு உளவாளிகளாலும் சோதனைச் சாவடிகளாலும் தலைமையகப் பகுதியைப் பிரபாகரன் இறுக்கப் படுத்தி வைத்திருக்கிறார்.

தமிழ் மாணவர்கள், பல்கலைக் கழகங்களில் சேர்ந்து கல்வி பெறுவதைக் மட்டுப் படுத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியின் எதிர்வினையாக, 'தமிழ் மாணவர்கள் அமைப்பு' (Tamil Students Movement) என்ற பெயரில் 1970இல் தொடங்கப் பட்ட ஓர் அமைப்புதான் இலங்கையில் முளைத்த முதல் தீவிரவாதக் குழுவாகும். வெகுவிரைவில் இந்த அமைப்பு, தீவிரவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு திரைமறைவில் செயலாற்றத் துவங்கியது.

Dim lights Embed Embed this video on your site

1972லேயே யாழில் தீவிரவாதம் தீவிரமடையத் தொடங்கி விட்டது. ஒருங்கிணைந்த தமிழ் விடுதலை முன்னணி (Tamil United Liberation Front - TULF) என்ற பெயரில் புதிய அரசியல் நிர்ணயச் சட்டங்களை உள்ளடக்கிய பிரசுரங்கள் வெளியிடப் பட்டன. தமிழ் மாணவர்கள் அமைப்பு இரண்டாக உடைந்து தமிழ்ப் புதுப் புலிகள் (Tamil New Tigers - TNT) என்றும் ஈழத் தமிழ் விடுதலை அமைப்பு (Elam Liberation Organization - TELO) என்றும் புதிய அமைப்புகள் தோன்றியதும் 1972இல் தான்.

நாடு முழுதும் தமிழர்களுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் 1983இல் நடந்த கலவரங்களில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர்; ஆயிரக் கணக்கானோர் அகதிகளாயினர். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவம் குவிக்கப் பட்டது. இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கொரில்லாத் தாக்குதலும் இக்கால கட்டத்தில் தீவிரமாக்கப் பட்டு வெளிஉலகுக்கு விளம்பரப் படுத்தப் பட்டது.


கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ப்ரணாப் முகர்ஜி, "இலங்கையில் போர் நிறுத்தத்தைப் பொருத்தமட்டில் நாம் அதை அமல்படுத்த முடியாது. இலங்கையிடம் போரை நிறுத்துமாறு நாம் கூற முடியாது. அப்படிக் கூறினால் அது அவர்களது உள்விவகாரத்தில் தலையிடுவதாகும்" என்று நம் கிராமத்துக் குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்த உண்மையை நம் நாட்டின் நிலைப்பாடாகத் தெரியப் படுத்தியுள்ளார்.


இரண்டாவது, .தி.மு.க தலைவர்கள் வைகோவும் கண்ணப்பனும் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப் பட்ட விவகாரம். இதில் ம.தி.மு.கவினர் மீது 'பிரிவினை வாதத்தைத் தூண்டியதாக'வும் இயக்குநர்கள் சீமானும் அமீரும் விடுதலைப் புலிகள் இயக்கமான LTTE அமைப்பை ஆதரித்துப் பேசியதாகவும் கைது செய்யப் பட்டனர்.


இதில் எரியும் தீயில் எண்ணை வார்ப்பது போன்று பார்ப்பனீய ஆதரவு இதழ்களான இந்து, தினமலர் போன்றவை இலங்கைத் தமிழர்களின் அவலநிலைக்காக இங்கே குரல் கொடுப்பதை எதிர்த்து எழுதி வருகின்றன. அவ்வாறு எழுதிய தினமலரைக் கண்டித்துத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில், தினமலர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.


இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் வேறு-வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


முன்னது தார்மீகக் கடமை என்றால் பின்னது தேச விரோதமாகும். ஏனெனில், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறும் விடுதலைப் புலிகளின் அமைப்பான LTTE என்பது, தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக முதல் குரல் கொடுத்தத் தமிழீழ விடுதலை அமைப்பு (TELO), ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (EPRLF), ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி (TULF) ஆகிய இயக்கத் தலைவர்களைக் கொன்று, பிற இயக்கங்களை அழித்தொழித்தாகும். மட்டுமின்றி, LTTEயின் தளபதியான மாத்தையாவையும் தீர்த்துக் கட்டியது. "பிரபாகரன் ஒரு ஸாடிஸ்ட். அவரால் ஈழ மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தர முடியாது" என்று கூறி இன்னொரு தளபதியான கருணா LTTEயிலிருந்து வெளியேறினார். LTTE இதுவரை நடத்திய குண்டு வெடிப்புகளில் கொன்று குவித்தவர்களில் பலநூறு இலங்கைத் தமிழர் தலைவர்கள மட்டுமின்றி நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் அடக்கம். உலக நாடுகள் பலவற்றிலும் நமது நாட்டிலும் LTTE என்பது தடை செய்யப் பட்ட தீவிரவாத அமைப்பாகும்.



இந்திய நாட்டின் பார்வையில் LTTE அமைப்பின் தலைவர் பிரபாகரன் தேடப் படும் கொலைக் குற்றவாளி ஆவார்.


அதனால்தான், "தமிழகத்தில் 1991ம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தியின் கொடூரமான கொலைய நாட்டு மக்கள் மறக்கவில்லை. தேசத்திற்கும் காங்கிரசுக்கும் அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அதற்குக் காரணமானவர்களைக் காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை" என்று மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் வாசன் தெளிவு படுத்தினார்.


இதற்கிடையில் இலங்கை அதிபரின் தம்பியும் இலங்கை அரசின் சிறப்புத் தூதருமான பஸில் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து பலவிதமான ஆரூடங்கள் அரசியல் வட்டாரங்களில் உலா வந்தன. கடைசியில், அவர் இலங்கையிலிருந்து கொண்டு வந்த செய்தி என்னவென்றால், "எல்லை தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் மீது இனிமேல் துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டோம்" என்பதே!


அதிகம் அடிபடும்போது மட்டும் 'அமைதி'யை வேண்டுவது பிரபாகரனின் வழக்கம். அதுபோலவே, இப்போதும், "போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியே அவராகத் தேடிக் கொண்டதுதான். போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்தபோது தான் இலங்கையின் இராணுவத் தளபதி பரமி குலதுங்க புலிகளால் கொல்லப் பட்டார். மேலும், தற்போதைய தளபதி சரத் ஃபொன்ஸேகா மீது புலிகள் கொலைத் தாக்குதல் நடத்தியதும் 'அமைதி' காலத்தில்தான். அதனால்தான் "புலிகளை அழிக்காமல் ஓயமாட்டேன்" என்று சரத் சபதம் எடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.


மிகச் சாதாரணமாகி விட்ட இனப்படுகொலைகள்குறைந்து கொண்டே வரும் படை பலத்தைப் பெருக்குவதற்காகப் பெண்களையும் சிறுவர்களையும் கட்டாயப் படுத்திப் பயிற்சி கொடுப்பதில் புலிகள் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, போர்க்காலங்களில் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இடம் பெயரும் தமிழர்களையும் வலுக் கட்டாயமாகப் புலிகள் தடுத்து நிறுத்திப் பொதுமக்களைத் தங்களுக்குக் கவசமாகப் பயன் படுத்திக் கொள்வதாகவும் புலிப்படையின் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழர்கள் கூறுகின்றனர்.


கடந்த இரண்டாண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இலங்கையில் போர் நடந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதும் இப்போது கிளிநொச்சியை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறி நாச்சிகுடாவைக் கைப்பற்றி விட்ட வேளையிலும் அப்பகுதிப் பொதுமக்களாகிய தமிழர்களுக்குப் பெரும் பாதிப்புதான். மேலும் வங்காலை, செஞ்சோலை என்று பல பாராமிலிட்டரி, மிலிட்டரி பாதிப்புகள், குண்டுவீச்சுகள், பாலியல் வன்கொடுமைகள். இவ்வாறு இரு பக்கமும் இடி வாங்கும் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தவிக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும் உதவ வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமையே.


Dim lights Embed Embed this video on your site


அதேவேளை, இலங்கைக் தமிழர்கள் விஷயத்தில் மூன்றாவதும் முக்கியமானதுமான அம்சம் என்னவெனில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு இலங்கையில் வாழும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களை, இலங்கைத் தமிழர்கள் என்ற வரையறைக்குள் யாரும் கொண்டு வருவதில்லை.


வடக்கு/கிழக்கிலங்கையில் காலங்காலமாக வாழ்ந்து, விடுதலைப் புலிகளுக்கு மனிதாபிமான முறையில் அளவு கடந்த உதவிகளைச் செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள், உடமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு உடுத்திய உடையோடு ஒரே இரவுக்குள் 1990இல் வெளியேற்றிய புலிகள் இதுவரை அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. புலிகளின் கொடுமையால் பிறந்த நாட்டிலேயே அகதிகளாகப் புத்தளம் அகதி முகாம்களில் இதுவரை காலங்கழித்து வரும் முஸ்லிம்கள், விடுதலைப் புலிகளுக்குச் செய்திருந்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மீண்டும் உதவி தேவைப் பட்டபோது "நாமிருவரும் பேசும் மொழியால் ஒன்றுபட்டவர்களல்லவா? தமிழ் ஈழம் அமைந்தால் உங்களுக்கு நிச்சயம் அதில் பங்குண்டு; இப்போது உதவுங்கள்" என்று மறைந்த ஆண்டன் பாலசிங்கம் 2002இல் கோரிக்கை வைத்துப் பார்த்தார்.


Dim lights Embed Embed this video on your site


"ஏராவூரிலும் காத்தான்குடியிலும் மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த பிறகும் நாங்கள் புலிகளுக்கு உதவ வேண்டுமா?


கின்னியாவிலும் மூதூரிலும் முஸ்லிம்களைக் கருவறுத்து அவர்களின் சொத்துகளைச் சூறையாடிய பிறகும் அவர்களுக்கு உதவ வேண்டுமா?


தொழுது கொண்டிருந்த அப்பாவித் தமிழர்கள் இரத்த வெள்ளத்தில்...

பள்ளியகொடல்லயில் பெண்களென்றும் குழந்தைகள் என்றும் பாராமல் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பின்னரும் புலிகளுக்கு நாங்கள் உதவ வேண்டுமா?


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகளால் ஓரிரவில் வெளியேற்றப் பட்டு, இன்றுவரை பிறந்த மண்ணில் ஆயிரக் கணக்கில் அகதிகளாக வாழும் எங்கள் சகோதர-சகோதரிகளை மறந்து விட்டுப் புலிகளுக்கு உதவ வேண்டுமா? உதவுவதற்கு எங்களிடம் மீந்திருப்பதென்ன?


ஏற்கனவே LTTEக்கு உதவுவதாகச் சொல்லி ஆர்மிக்காரன் எங்களை அடிக்கிறான். ஆர்மிக்காரனுக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டி LTTEயும் எங்களைக் கொல்கிறான். எங்களுக்கு யார் உதவுவது?"


என்று கேட்கும் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தத்தளிக்கும் இலங்கை முஸ்லிம்களும் மனிதர்கள்தாமே? தமிழர்கள்தாமே?


உதவுவது ஒருபுறம் இருக்கட்டும்; கொடுக்கும் குரலில் இவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டாவோ? இவர்களை ஒதுக்கி விட்டு இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுப்பதென்பது, தமிழர்களில் ஒரு பகுதியினரை 'ஒதுக்கி' வைப்பதற்கு ஒப்பாகும்.


இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுக் கரம் நீளட்டும் - பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களையும் சேர்த்து முழுமையாக!

Trackback(0)
கருத்துக்கள் (11)add comment
0
Sithik Basha:
இலங்கை தமிழர்களுக்காக நாமும் குரல் குடுப்போம், ஒடுக்கப்பட்டொருடன் இனைந்து போராடுவோம்.
1

November 04, 2008 13:07
0
NILAM:
தமிழ்பேசும் இலங்கைமுஸ்லிம் மக்கலை சொல்லவேண்டிய நேரத்தி்ல் தமிழ்நாட்டு மக்கலுக்குபுரியவைத்தசத்தியமார்க்க ஆசிரியருக்கு எங்கலுடையபாராட்டுக்கல்
2

November 04, 2008 16:15
0
mohamed:
இலங்கை முஸ்லிம்களுக்கு புலிகளால் செய்த துறோகத்தை மறக்க முடியாது.சொத்துக்களை இழந்து இருந்தாலும் குடும்ப உறவுகளையும்,சமூக விழும்மியங்களையும் சிதைத்ததை மண்ணிக்க முடியாது.பாதிக்கப்பட்ட எங்களுக்கு மட்டும் அதன் வலி தெரியும் சகோதரா. ---வடகிலிருந்து துறத்தப்பட்ட முஸ்லிம்.
3

November 08, 2008 14:00
0
mohamed saleem:
thank you brother givnig such us thing
4

November 09, 2008 15:59
0
nasar:
alhamdulillah engalathu vethanaihaliyum varuththangalaiyum intha sathyamarkam valiyaha pataiththathukku nanri
5

November 09, 2008 16:20
0
mohamed:
ஜஸாக்கல்லாஹ் இஸ்லாமிய உள்ளங்களே. ஹஸ்புனல்லாஹு வனிமல் வகீல்.
6

November 10, 2008 08:31
0
sivaraman:
ivai anaithum orunaal tamilaka tamilar kalukum hindukalukkum oru naal puriyum nanbare ennaipol
7

November 13, 2008 01:00
0
mohamed:
தாங்ஸ் சிவராமன்.நீங்கள் என்ன விதத்தில் பாதிக்கப்பட்டீர்கள் என்று தெரியாது.ஆனால் புலிகள் நன்றி கெட்டவர்கள் என்பது நிச்சயமான உண்மை.அவர்களுக்காக போராடி உயிர் விட்ட முஸ்லிம் இளஞ்ஞர்களின் சமூகத்தை கொன்று குவித்திருக்க மாட்டார்கள்.நாளை தமிழகத்தையும் மறப்பார்கள்,பிடிப்பார்கள்.மாலைதீவை பிடிக்கப்போனவர்களல்லவா.ஜாக்கிரதை நன்பா.
8

November 13, 2008 08:57
0
mohamedasmeen:
இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுக் கரம் நீளட்டும்
இலங்கை தளுக்காக நாமும் குரல் குடுப்போம்
9

September 19, 2010 15:46
0
Nasick bin Siddick:
Is there any permanent solution ?
10

November 02, 2010 18:28
0
raja mohamed:
Those men,women,children are weak.Those people asked security to god,ALLAH says "who are trying to protect these weakness people like men,women,children.they must go to paradise.
11

September 16, 2011 14:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

English News

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு தலையங்கம் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் இலங்கைத் தமிழர்கள்!
Twitter
RSS
YouTube
English