சத்தியமார்க்கம்.காம்

சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-5 print Email
தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள்
ஞாயிறு, 26 அக்டோபர் 2008 06:40

சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-5ஆதாரங்கள் உள்ளன; ஆனால் தரமாட்டோம்!

 

சிமி உறுப்பினர்களைப் பொறுத்தவரை கீதா மித்தலின் தீர்ப்பு, கடினமான-பாலைவனப் பயணமொன்றின் முடிவுபோல் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் இதற்கு முந்தைய மூன்று தடைகளையும் எதிர்த்துக்குரல் கொடுத்திருந்தனர்.

 

ஆனால், ஒவ்வொருமுறையும் அவர்கள் அதில் தோற்றனர். முதல் நீதிமன்றமே வழக்கின் பின்னணியிலான சதியினைப் புரிந்து கொள்ளும் என்றும் தடையை அது ரத்து செய்யும் எனவும் சிமி தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசின் தடையினை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.  இரண்டாவது, மூன்றாவது நீதிமன்றங்களும் அதே பாதையினைப் பின்தொடர்ந்தன.

 

அதற்காக நீதிமன்றங்கள் கூறிய காரணங்கள், சட்டத்திற்கோ சாதாரண மக்களின் அறிவுக்கோ புரிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. அவற்றுள் முதல் நீதிமன்றத்தின் தீர்ப்பு, நடைமுறைக்கு மிகவும் விரோதமானதாகும். "ஒப்புதல் வாக்குமூலத்தை குற்ற விசாரணையில் குற்றம் சுமத்தப் பட்டுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது சரியானதுதான்" என்று கூறிய நீதிமன்றம், "இவ்வழக்கு ஒரு குற்ற விசாரணை அல்ல. ஆதலால், இதுபோன்ற ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ள முடியும்" என்று விசித்திரமான ஒரு வாதத்தைக் கூறியது. இதனைத் தொடர்ந்துவந்த விசாரணைகளும் சட்டத்துக்குப் புறம்பான இந்தத் தலைகீழ் உத்தியையே பின்பற்றின.

 

கீதா மித்தல்இதிலும் வித்தியாசமான தீர்ப்பொன்றை இரண்டாவது நீதிமன்றம் வழங்கியது. "சிமிக்கு அதனுடைய வழக்கறிஞர் கட்டணம் செலுத்த முடிகின்றது என்பதே அந்த இயக்கம் தொடர்ந்து செயல்படுகின்றது என்பதற்கும் அரசியல் தலைவர்கள் கூறுவது போன்று அது இதுவரை கலைக்கப் படவில்லை என்பதற்கும் ஆதாரமாகும்" என்று கூறியது. அதே போன்று,  "சிமி உறுப்பினர்களுக்கு எதிராக மேலும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே அதன் செயல்பாடுகள் முடிவுக்கு வரவில்லை என்பதற்குச் சான்றாகும்" என்பது எல்லா நீதிமன்றங்களும் ஒரே குரலில் கூறிய மற்றொரு பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டாகும்.

 

இவை அனைத்தையும் விட அதிர்ச்சி அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம், "மத்திய அரசு சமர்ப்பிக்கும் ரகசிய விவரங்களை சிமிக்கு எதிரான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளலாம்" என்ற நீதிமன்றங்களின் நிலைபாடாகும். இந்த ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும் இரகசிய விவரங்களை நீதிபதிகள் மட்டும் படித்து விட்டு அப்படியே அரசுக்குத் திரும்பக் கையளிக்கின்றனர். அவற்றின் உள்ளடக்கம் என்ன என்பதைக் குறித்து வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாது.

 

சமூகத்திற்கு ஊறுவிளைவிக்கும் சில விஷயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு 1967இல் இயற்றப்பட்ட சட்டம் அரசுக்கு அனுமதியளிக்கிறது. ஆனால், "தடையினை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் குற்றம் சுமத்தப் பட்டவருடன் அரசு அதனைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்" என அதே சட்டம் கூறுகின்றது. சட்டத்தை மதிக்கும் அரசாக இருந்தால் சிமியிடம் அந்த ஆதாரங்களைக் காட்டி இருக்க வேண்டும். ஆனால், 1995இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா ஒரு தீர்ப்பில், விசாரணை நடத்தும் நீதிபதியிடம் மட்டும் அத்தகைய ஆதாரங்களை மத்திய அரசு காண்பித்தால் போதுமானது என்றும் தடையினை எதிர்க்கும் பிரதியிடம் அவற்றை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சொந்தமாக ஒரு கருத்தைக் கூறியிருந்தார். ஆக மொத்தத்தில் தங்களுக்கு எதிராக அரசு சமர்ப்பித்த ரகசிய ஆதாரங்களில் உள்ளவை யாவை என்பதை அறிய, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஒரு வழியும் இல்லை.

 

இருப்பினும் இந்திய நீதி, நியாய அமைப்புகளின் மீதான நம்பிக்கையைக் கைவிடாத சிமியின் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி, ஆரம்ப மூன்று தீர்ப்புகளையும் எதிர்த்து சட்டப்படி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்தார்.

 

இனி கேளுங்கள்!

 

மூன்றாம் தீர்ப்புக்கு எதிராக சிமியின் வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு வாதிடுவதற்காக எழுந்த பொழுது (அவரைப் பேசவிடாது) நீதிபதி, "சிமியின் செயல்பாடுகளும் மாறவில்லை; தடையும் மாறவில்லை" என்று கூறினார்.  "2003-2006 காலகட்டத்தில், சிமி புதிய செயல்பாடுகள் ஏதும் செய்யவில்லை என்று அரசே உறுதிபடுத்துகின்றது" என்பதைச் சுட்டிக்காட்டிய பொழுது, மரியாதைக்குரிய நீதிபதி, "இதென்ன காமடியா? நாங்கள் ஒவ்வொரு முறையும் தடையினைச் சரி என விதிக்கும் பொழுது நீங்கள் அப்பீலுடன் திரும்பவும் வருகின்றீர்கள்" என்று கூறி சட்டப்படி அப்பீல் செய்வதைக் காமெடி என வர்ணித்தார்.

 

வழக்கறிஞர் இணக்கத்துடன் நீதிபதியிடம் கூறினார்: "தாங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அப்பீலும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக காத்துக் கிடக்கின்றன. நீதிமன்றத்தில் வாதம் கேட்கப்படவே இல்லையே?." தன் தவறைப் புரிந்துக் கொண்ட நீதிபதி, "பெரும்பாலும் பெரிய பெஞ்ச்தான் வாதம் கேட்க வேண்டும்" என்று கூறினார். நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஆனாலும், மதிப்பிற்குரிய நீதிமன்றத்திற்கு ஃபலாஹியின் அப்பீல்களை விசாரணைக்கு எடுப்பதற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை.

 

ஆனால் இவற்றிற்கு நேர் எதிராக அடுத்த ஆண்டு நீதிமன்றம் நடந்து கொண்டது. நீதிபதி கீதா மித்தல் நீதிமன்றத்தின் "சிமி தடை நீக்க உத்தரவு" வெளிவந்த உடனேயே அதை எதிர்த்த அரசின் அப்பீல் மனுவினை நீதிமன்றம் சுடச்சுட விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  ஃபலாஹியின் இதற்கு முந்தைய மூன்று அப்பீல்களை மதிப்பிற்குரிய நீதிமன்றம் இதுவரை விசாரணக்கு எடுக்கவே இல்லை. ஆனால், சிமியின் மீதான தடையை விலக்கி நீதிபதி கீதா மித்தல் அளித்த உத்தரவினை ஒரே நாளில் ரத்தாக்கியது.

 

"நாங்கள் இவ்வழக்கைக் கைவிடமாட்டோம்" - உறுதியான நம்பிக்கையுடன் ஃபலாஹி கூறுகின்றார். "இறுதியாகத் தீர்ப்பு எங்களுக்கு அனுகூலமாக இருக்கும். காரணம், சத்தியம் எங்களுடன் உள்ளது".

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 

 

முந்தைய பகுதிகள்:

வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-1)

"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-2)

உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-3)

குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-4)

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் ஆய்வு சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-5
Twitter
RSS
YouTube
English