சத்தியமார்க்கம்.காம்

காலங்காலமாய் அழியாத நேசம்... print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
செவ்வாய், 21 அக்டோபர் 2008 08:22

 காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் - புதுக்  காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதமும் வன்முறையும் குஜராத்தில் உச்ச நிலையைத் தொட்டதும் அதற்கு அடுத்தபடியாக அண்மையில் ஆந்திராவில் ஹிந்துத்துவ தேசவிரோதக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதும் வாசகர்கள் அறிந்ததே!

கடந்த 10.10.2008 இல் ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டதிலுள்ள பைன்ஸாவில், துர்கா ஊர்வலம் என்ற பெயரில் இவர்கள் நடத்திய அட்டூழியத்தை சத்தியமார்க்கம்.காம் படம் பிடித்துக் காட்டி இருந்தது நினைவிருக்கலாம்.

மனித நேயத்துக்கும் நமது நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கும் சவாலாக உருவெடுத்து வளர்ந்து வருகின்ற ஹிந்துத்துவாவினரின் வெறித்தனத்தை, 60 வயதை எட்டிய துல்ஜா பாய் என்ற இந்துப் பெண்மணி எதிர்த்து நின்ற - உள்ளத்தை நெகிழ வைக்கும் - நிகழ்வை இங்குப் பதிவு செய்து நன்றி பாராட்டுவது நமக்குக் கட்டாயமாகிறது.

குடிவெறியோடும் கொலை வெறியோடும் முஸ்லிம்களை வீடுகளுக்கு உள்ளே வைத்துத் தீவைத்துக் கொளுத்திய இந்த வன்முறைக் கும்பலிலிருந்து தனது அடுத்த வீட்டாரான ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் மகன் தாக்கூர் ரமேஷ் சிங்கோடு தன் பேரப்பிள்ளைகளையும் ஈடுபடுத்தி, ஈனர்களை எதிர்த்து நின்று விரட்டியடித்த துல்ஜா பாயின் தீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

பைன்ஸாவிலுள்ள பஞ்சேஷா மஸ்ஜிதுக்குப் பின்புறம் வசிப்பவர்கள் உஸ்மானும் அவரது குடும்பத்தினரும். "கடந்த 3-4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த துர்கா ஊர்வலத்தில் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்பட்டதில்லை என்ற தைரியத்தில் என் சகோதரர் உஸ்மான், வெளியே சென்றிருந்தார். அன்று நானும் என் பணி நிமித்தம் வெளியிலிருந்தேன்" என்று கூறினார் உஸ்மானின் சகோதரரும் ஹைதரபாத் நாளிதழ் ஒன்றின் நிருபருமான ஸய்யித் முஹம்மத் பாஷா.

"எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ஒரு வெறிக்கும்பல் எங்கள் சந்துக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வீடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் உஸ்மானுடைய வீட்டிலிருந்து புகைமூட்டம் கிளம்பி மேலெழுந்து பரவியது. உடனே எனது குடும்பம் மொத்தத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு உஸ்மானுடைய வீட்டுப் பக்கம் விரைந்தேன். அப்போது அந்த வீட்டுக் குழந்தைகளில் ஒன்று வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு ஓடி வந்ததைப் பார்த்தேன். உடனே ஓடிப்போய் வீட்டுக்குள்ளிருந்த மேலும் இரு குழந்தைகளையும் (உஸ்மானின் மனைவி) ஸஃபிய்யாவையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து எனது வீட்டில் சேர்த்து விட்டு, உஸ்மானுடைய வீட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டோம்" என்று அன்றைய நிகழ்வின்போது, தான் செய்த செயற்கரிய செயலை மிகச் சாதாரணமாக விவரித்தார் துல்ஜா பாய்.

தனது வீட்டிலிருந்த தண்ணீரை வாளிகள் மூலம் அள்ளிக் கொண்டு போய் உஸ்மான் வீட்டுத் தீயை அணைக்கப் போன துல்ஜா பாயையும் அவரது குடும்பத்தினரையும் வன்முறைக் கும்பல் தடுத்து மிரட்டியது. கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சாமல், "இது எங்க அண்டை வீடு; இது எங்க பிரச்சினை. அவங்க எங்க உறவுக்காராங்க போல. நீயெல்லாம் வெளியாளு. ஒங்க அட்டகாசத்தையெல்லாம் ஒங்க பகுதியோட நிறுத்திக்க. இங்க வேணாம்; என்னை யாரும் தடுக்க முடியாது" என்று வெறிக்கும்பலை ஒதுக்கித் தள்ளி விட்டுத் தம் கடமையைச் செய்ததாகக் கூறினார் துல்ஜா பாய்.

"வீட்டிலிருந்த சேமிப்பான 1,30,000 ரூபாய் ரொக்கம், 19 தோலா தங்க நகைகள், 40 தோலா வெள்ளி நகைகள், ஆண்டுக் கணக்கில் சேர்த்த விலையுயர்ந்த ஆடைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர். பீரோ, கட்டில், சோஃபா அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன" என்று இழப்புகளை அடுக்கிய பாஷா, "என்றாலுமென்ன? பெரியம்மாவின் தீரச் செயலால் எங்கள் குடும்பத்தினரது உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. அவருக்கு நாங்கள் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டவர்களாவோம்" என்று நன்றிப் பெருக்கோடு கூறினார் பாஷா.

"எங்களிரு குடும்பத்தின் உறவு பல நூற்றாண்டுகளைக் கடந்ததாகும். உஸ்மானுக்கு நான் பெரியம்மா மாதிரி. அப்படித்தான் என்னை அவன் அழைப்பான். அந்தக் குழந்தைகள் எல்லாரும் என் (குடும்பத்துக்) குழந்தைகள். அவர்களுக்கான என் கடமையைத்தான் நான் செய்தேன். ஆபத்தான சூழ்நிலையில் அவர்களைக் காப்பாற்றாமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது" என்றார் 60 வயதைக் கடந்த துல்ஜா பாய்.

துல்ஜா பாய் போன்ற மனித நேயத்தோடு துணிச்சலும் இணைந்த பெண்மணிகள் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இது ஒரு போராட்டம்! காவிகளால் குனியும் நாட்டின் தலை, துல்ஜா பாய் போன்றோரால் அவ்வப்போது நிமிர்த்தப் படுகிறது.

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் - புதுக்

காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?

Trackback(0)
கருத்துக்கள் (9)add comment
0
Muhammad Abdul Ghani:
….And whoever saves one - it is as if he had saved mankind entirely…. (Quran Surah: 5.Al-Ma'idah, Verse: 32) May Allah show His Mercy on துல்ஜா பாய். she saved whole mankind.
1

October 21, 2008 13:09
0
basheer babu:
realy great thulja bai
2

October 21, 2008 14:43
0
Syed Nasar:
Thanks to Thulja bhai from all real muslims; Allah may give you the jannath.
3

October 22, 2008 10:38
0
S.S.K:
//Hats off to people like Tulja Devi.Incidences like this gives us courage that India will survive and it is not the country of only fanatics who are out to destroy the fabric of the country. Long live the brotherhood of humanity. reply Hindu-Muslim Bhai Bhai Submitted by Prathiba (not verified) on 19 October 2008 - 4:46am. All are Brothers and Sisters. All are from single father and mother. According to Islam all are sons of Adam and Eve. Tulja Bai, we indians are proud of you. We need Indians like you. We have to fight against Togadias, Advanis, Thakerays and Modis. We have our own religion, which says to respect each other. I beg to all Indians to take Tulja Bai as our model. We the Indians will win over the fanatcis and terrorists. We will March Forward until our last breath....
4

October 23, 2008 07:37
0
Dr.Suhail, HMC:
//காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் - புதுக் காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?// வைர வரிகள்... இந்து பெண்மணியான துல்ஜா பாய் அவர்களின் தீரச் செயலை தமிழில் முதன் முதலில் வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி! இந்தியாவைப் பற்றியெறிய வைக்கும் VHP, RSS, பஜ்ரங்தள் பற்றி வாயைத் திறக்காமல், ஒரு சார்பாக துவேஷம் துப்பும் தினமலர் போன்ற மதவெறி ஊடகங்கள் உங்கள் தரத்தைப் பார்த்தாவது அநீதியாக செய்திகளை திரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
5

October 23, 2008 09:08
0
iqbal:
Great really great ,Great Job MAM,we all are thanks to you & your family
6

October 23, 2008 09:34
0
சத்தியமார்க்கம்.காம்:
ஆங்கிலத்தில் கருத்துகளை எழுதும் சகோதரர்களின் கவனத்திற்கு, நமது தளத்தில் வெளியாகும் ஒவ்வொரு ஆக்கத்திற்கும் இறுதியில் 'கருத்துக்கள்' என்ற வரி இடம் பெற்றிருக்கும். அதற்குக்கீழ் 'தமிழில் தட்டச்ச...' என்ற உதவிச் சுட்டி இருக்கும். அந்தச் சுட்டியினைச் சொடுக்குவதன் மூலம் எளிதாகத் தமிழில் தட்டச்சக் கற்றுக் கொள்ளும் பகுதிச் செல்லலாம்; கருத்துகளைத் தமிழில் தரலாம். பயன் படுத்த எளிமையான முறை; பயன் பெறுக!
7

October 23, 2008 12:50
0
அபூ ஆயிஷா:
மனிதம் தளைக்க நீங்கள் செய்த இந்த நடவடிக்கையை உங்கள் தாய் உயிருடன் இருந்து கேள்விப்பட்டாளேயானால் அவள் மணிவயிறு பேருவகை கொள்ளும். தாய்மையின் சிறப்பே சிறப்பு! இந்திய நாட்டின் மனித நேயத்தை இந்தக் காவிகள் காலிகளைக் கொண்டு கவிழ்க்கிறார்கள். அம்மா, துல்ஜா பாய், உங்களுக்காக என்னால் முடிந்தது இந்தப் பிரார்த்தனைதான். இறைவா, துல்ஜா பாய்க்கும் அவரைச் சேர்ந்தோர்க்கும் நேரான வழியைக் காண்பித்து அருள்வாயாக. அபூ ஆயிஷா
8

October 23, 2008 16:06
0
abdul azeez:
துல்ஜா பாய் போன்ற மனிதநேயம் பார்க்கும் அநேகருக்கு வாழ்த்துக்கள் பல. இந்தியாவை பொறுத்தவரை கோமா நிலையிலாவது தேசத்துக்கு தேசம் ஒன்று, இரண்டு என்று சீரியசான நிலையில் மனிதநேயம் இருப்பதை பார்த்தால். ஸ்ரீலங்கா, எத்தியோப்பியா, சோமாலியா, போன்ற நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும். என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. // அம்மா, துல்ஜா பாய், உங்களுக்காக என்னால் முடிந்தது இந்தப் பிரார்த்தனைதான். இறைவா, துல்ஜா பாய்க்கும் அவரைச் சேர்ந்தோர்க்கும் நேரான வழியைக் காண்பித்து அருள்வாயாக.// இவருக்கும் நேர்வழி கிடைத்தால் நாளைக்கு இவர் வீடும் தீ பற்றி எரியும் அதனால் துல்ஜா பாய் அவராகவே ! இருக்கட்டும் அப்பொழுதாவது இன்னொரு முறை முஸ்லிம்கள் வன்முறையின் பொழுது ஒன்று இரண்டு என்று அவரால் காப்பாற்ற படுவார்கள் அல்லவா ? மா சலாம். அப்துல் அசீஸ்.
9

October 24, 2008 09:32

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

English News

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தலையங்கம் காலங்காலமாய் அழியாத நேசம்...
Twitter
RSS
YouTube
English