சத்தியமார்க்கம்.காம்

குழந்தைகள் செய்த குற்றமென்ன? print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
வியாழன், 16 அக்டோபர் 2008 02:53

ஆந்திராவில் ஆறு முஸ்லிம்களைக் கொளுத்திக் கொன்ற கயவர்களின் வெறியாட்டம்!

 

ஆண்டு தோறும் பிள்ளையார் சதுர்த்தி/வினாயகர் ஊர்வலம் என்ற பெயரால் நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ் / சங் பரிவாரங்கள் நடத்தி வரும் சமூக விரோதச் செயல்கள் அனைவரும் அறிந்ததே! ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப் பட்டுக் கொண்டிருந்த கயமைத் தனத்தை விரிவாக்கி இப்போது 'தசரா' ஊர்வலம் என்ற பெயரிலும் அடாவடி ஊர்வலம் நடத்தி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்து, நாட்டில் அமைதியை நிரந்தரமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

"முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில்தான் ஊர்வலம் செல்வோம்; முஸ்லிம்களின் வணக்கத்தலமான மஸ்ஜித் இருந்தால் கட்டாயம் அந்த வழியாகத்தான் பிள்ளையாரைக் கொண்டு போவோம்" என்று பிடிவாதம் பிடிக்கும் ஹிந்துத்துவாவின் உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!

 

பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல், இம்முறைப் பிள்ளையாரை மாற்றி, 'துர்கா'வை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊர்வலம் போயினர் ஹிந்துத்துவாவினர்.

 

ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டதிலுள்ள பைன்ஸா என்ற ஊரில் கடந்த வெள்ளிக்கிழமை (10.10.2008) முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் தசரா ஊர்வலம் என்ற பெயரில் துர்கா சிலைகளைக் கரைப்பதற்காக ஜும்ஆ மஸ்ஜித் வழியாகக் கொண்டு வந்த இவர்கள், வழக்கம்போல் முஸ்லிம்களைக் கொச்சைப் படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியும் மஸ்ஜிதுக்குள் கற்களை எரிந்தும் வன்முறையைத் தூண்டினர்.

 

முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு மருந்துக்கடைகளுக்குள் புகுந்து எல்லா மருந்துகளையும் அள்ளித் தெருவில் வீசினர் துர்கா பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஹிந்துத்துவாவினர். ஒரு ஜவுளிக்கடை, ஒரு வளையல்கடை, ஓர் உணவகம் உட்பட முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பது கடைகளையும் ஒரு டஜன் வாகனங்களையும் அடித்து நொறுக்கியும் தீவைத்துக் கொளுத்தினர்.

 

ஹிந்துத்துவாவினர் எதிர்பார்த்தபடியே கலவரம் மூண்டது! கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். காவல்துறை குறிபார்த்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர்படுகாயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். அவர்களுள் மாஜித் அஹ்மத் என்ற இளைஞரின் வயிற்றில் குண்டு பாய்ந்ததால் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளார்.

 

 


 

பைன்ஸாவில் தொடங்கிய வன்முறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

 

புரானா பஜார், ஜுல்ஃபிகார் கல்லி, காரி கல்லி ஆகிய பகுதிகளில் வசித்த முஸ்லிம்கள் வீடுகளைக் காலி செய்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர்.

 

நிர்மல் டவுன் பகுதியிலுள்ள மார்கெட் மஸ்ஜிதுக்குள் இந்த ரவுடிகளால் மதுப் புட்டிகள் வீசப் பட்டன. மஸ்ஜிதின் இமாம் ஹாபிஸ் முஹம்மது ஆஸிஃப் நையப் புடைக்கப் பட்டார். மஸ்ஜிதின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மஸ்ஜிதின் சாவிகளைக் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டுப் பாதுகாப்பு வேண்டி நிற்கும் அளவுக்குச் சூழ்நிலை மோசமானது. நிர்மல் டவுனின் பல பகுதிகளிலும் கல் வீச்சுத் தொடர்ந்தது.

 

கரீம் நகர் ஹாபிஸ் மஸ்ஜிதுக்குள் வன்முறைக் கூட்டம் கல் வீசித் தாக்கியதில் மூவர் காயமுற்றனர்.

 

இதற்கிடையில், "துர்கா ஊர்வலத்தின்போது கலவரத்தைத் தூண்டியவர்களைக் கண்டு பிடித்துக் கைது செய்வதுதான் எங்கள் முதல் வேலை" என்று பைன்ஸாவில் முகாமிட்டுள்ள காவல்துறை ஆணையர் பூர்ணச்சந்திர ராவ் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். கலவரத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.

 

ஊரடங்கு உத்தரைவை மீறி, அன்றிரவு வாள், இரும்புத் தடிகள் போன்ற பயங்கர ஆயுதங்களோடு ஓர் ஆட்டோவில் அலைந்து கொண்டிருந்த ஐவரை ரோந்து சென்ற காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது அந்தக் கும்பல் 'ஹிந்து வாஹினி' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று தெரிய வந்தது. ஐவர் கும்பல் கைது செய்யப் பட்டது; ஆட்டோ கைப்பற்றப் பட்டது.

 

"ஆர். எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்புகளில் ஒன்றான ஹிந்து வாஹினி என்ற பயங்கரவாத அமைப்பு, தெலுங்கானா ராஷ்ட்ர ஸமிதி கட்சியின் உள்ளூர் எம்.எல்.. நாராயண் ராவ் பட்டேலின் ஆதரவோடு செயல் படுவதாகும். முஸ்லிம்களது பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சீரழிப்பதுதான் அவர்களது குறி" என்று கலவரப் பகுதியான பைன்ஸாவுக்கு வருகை தந்து பார்வையிட்ட, மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற மேலைவை உறுப்பினருமான அதுல்லாஹ் உவைஸீ குற்றம் சாட்டினார். மேலும், "கலவரங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கும் பைன்ஸா பகுதியில் நூற்றுக் கணக்கானோர் துர்கா ஊர்வலம் செல்ல அனுமதித்த காவல்துறை, வெறும் 6 காவலர்களையும் ஒரு துணை ஆய்வாளாரையும் ஓர் ஆய்வாளரையும் பாதுகாப்புக்கென்று ஏற்பாடு செய்திருந்தது அதன் பொறுப்பற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறது" என்றும் குறிப்பிட்ட அவர், வன்முறைச் நிகழ்வுகளை விசாரிக்க ஸி.பி.ஐக்கு உத்தவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

மாவட்ட ஆட்சியர் அஹ்மத் நதீம், மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. ஜனா ரெட்டி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜி. வினோத், மாநிலக் காவல்துறைப் பொது ஆணையர் எஸ்.எஸ்.ப்பி யாதவ் ஆகியோர் கலவரப் பகுதியைப் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் கலவரத்துக்கான நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார்.

 

கலவரம் மேலும் பரவாமல் பார்த்துக் கொள்ளும்படி மாநிலக் காவல்துறையை முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அடுத்த நாள் சனிக்கிழமை (11.10.2008) அன்று கேட்டுக் கொண்டார்.

 

ஆனால், ஹிந்துத்துவாவின் திட்டமிட்ட பயங்கரவாதப் படுபாதகச் சதிச் செயல் அடுத்த நாளிரவு நிகழ்ந்தேறியது.

 

ஆம்! வெள்ளிக்கிழமையன்று நான்கு பேர் கொல்லப்பட்ட பைன்ஸிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வட்டோலி என்ற கிராமத்தில் உள்ள மஹ்பூப் கான் என்பவரது வீட்டுக்குள் ஞாயிறு (12.10.2008)  அதிகாலை இரண்டு மணியளவில் மதவெறிக் கும்பல் ஒன்று நுழைந்து, வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த  மஹ்பூப் கான்(55), அவர் மனைவி ஸஃபியா பேகம்(50), மக்களான ரிஸ்வானா(22), அர்ஸலான்(6), நுஃமான்(3), தூபா 'ஃபலாக்(2) ஆகிய அந்தக் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள் ஆறு பேரையும் கொன்றது.

 

பின்னர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றினர். வெளியே வந்து வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டி, வீட்டுக்குத் தீ வைத்து விட்டு, வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய் விட்டனர். சாம்பலான ஆறு முஸ்லிம்களில் மூன்று குழந்தைகள். இதில் ஒரு குழந்தை இரு வயதுள்ள பால்குடி மாறா பச்சிளம் குழந்தையாகும்.

 

 

 

 

"தீய்ந்த வாசனையும் தீயினால் மரச் சட்டங்கள் பற்றியெரியும் சப்தத்தையும் கேட்டு, மஹ்மூதின் வீட்டுக்கருகில் ஓடி வந்து பார்த்தேன். வீடு முழுக்க எரிந்து கொண்டிருந்தது. மண்ணெண்ணை வாசனை மூக்கைத் துளைத்தது. ஆனால், வீட்டுக்குள்ளிருந்து யாரிடமிருந்தும் குரல் வரவில்லை; வாசல் பக்கம் முழுக்கவும் தீ பரவி ஜுவாலையுடன் எரிந்து கொண்டிருந்ததால் என்னால் உள்ளே போக முடியவில்லை." என்று பயங்கரத்தை நேரில் பார்த்த சிபுரல்ல நர்சன்னா என்பவர் தெரிவித்தார். காவல்துறை அங்கு வந்து சேரும் முன்னரே அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் தீயில் கருகியிருந்தன. அதிகாலை 2:40க்கு நின்று போயிருந்த மஹ்பூப் கானுடைய கைக்கெடியாரத்தைக் கண்டெடுத்த காவல்துறையினர், இந்தப் பயங்கரப் படுகொலை இரண்டரை மணிக்கு நடந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தனர். வட்டோலியில் இரு முஸ்லிம் குடும்பங்களே வசித்து வந்தன. அதில் ஒன்றுதான் மஹ்பூப் கானின் குடும்பம்.

 

"அண்டை வீட்டாரது தகவல் கிடைத்து பைன்ஸாவிலிருந்து கிளம்பி இங்கு நான் வந்து சேர்ந்தபோது கரிக் கட்டைகளைத்தான் பார்க்க முடிந்தது. இது திட்டமிட்ட படுகொலை. ஆனால் என் மைத்துனர் யாரிடமும் வம்புக்கெல்லாம் போகிறவரல்லரே" என்று அரற்றினார் மஹ்பூப் கானின் மச்சான் முஜாஹித் கான். "ஓர் அப்பாவிப் பெட்டிக் கடைக்காரது குடும்பத்தை ஓரிரவில் பூண்டோடு அழித்து விட்டனரே படுபாவிகள்" என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபரிடம் கதறினார்.

 

"ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதக் கும்பல், தசராவைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் இப்படிப் பட்ட பயங்கரச் செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

நன்றாகக் கவனிக்க வேண்டும்.

 

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. கலவரம் பரவாமல் கண்காணித்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு அம்மாநில முதல்வர் கட்டளையிடுகிறார்.

 

ஆனால், மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் சதிச் செயல் அடுத்த நாளிரவு நிகழ்ந்தேறுகிறது.

 

குஜராத்தில் நவீன ஹிட்லர் மோடி துவங்கி வைத்த முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமமும் அதனைத் தொடர்ந்து குஜராத்தில் காவிக் கும்பலுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றியும் குற்றம் இழைத்தவர்களை டெஹல்கா போன்ற புலன் விசாரணை இதழ்கள் வீடியோ ஆதாரங்களுடன் நிறுவிய பின்னரும் ஒன்றும் செய்ய முடியாநாட்டின் நீதிதுறை தந்த ஊக்கம், நாடுமுழுவதும் சங்கபரிவாரத்தினரை வெறி கொண்டு அலைய வைத்திருக்கின்றது.

 

மனித இனமே அஞ்சி நடுங்கும்படியாக நடந்த குஜராத் இனப்படுகொலையை முன்மாதிரியாகக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் அது போன்றே மாற்ற முயலும் மனிதத் தன்மையற்ற சங்கபரிவாரத்தினரை அரசு கடுமையாக ஒடுக்க முன்வரவில்லையெனில், மதசார்பற்ற, ஜனநாயக இந்தியா உலக அரங்கில் தகரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
YASIR:
என்னால் நம்பமுடியவில்லை இவர்கல் மனிதனெயம் அரவெ இல்லதவர்கல் என்ரு, ஒரு சிரு குலந்யை எப்படி கொன்ராரகல் என்ரு இதுதன் இந்து மதம் கூருகிரதா?
1

October 16, 2008 10:06
0
mohammad iqbal:
மனித நேயம் என்பது இவர்கலிடம் இருக்கா? இவர்கல் மனிதர்கலா ? அல்லது மிருகமா? அதை விட கேவலாமான ஜாதி,
2

October 16, 2008 12:12
0
ayubkhan:
இந்துத்துவ பயங்கரவாத நாய் குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. ஆயினும்.... பார்ப்ப்னிய பயங்கரவாதம் குறித்தும் பாசிசம் குறித்தும் மயிர் பிளக்க பேசி வார்த்தை கடல்களையே உருவாக்கிவிட்டோம். ஆயினும்.... நமக்கு விரும்புகிற வாய்ப்புகள் கிடைத்த இடத்திலெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகளை அந்த கடலில் முக்கியெடுத்து மூச்சு திணறடித்து வார்த்தைகளால் அடித்தே விரட்டி விட்டோம். ஆயினும்.... வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத பயங்கரவாத வெளி என்பது இன்னும் பெரிய அளவில் விரிந்தே கிடக்கிறது. எந்தளவுக்கு என்றால் இந்துத்துவ அபாயம் குறித்த உண்மைகளை உணராமல் இருக்கும் கோடிக்கான மக்களுக்கும் இந்துத்துவ எதிர்ப்பு படிப்பறை கும்பலுக்கும் உள்ள இடைவெளி எந்தளவுக்கோ அந்தளவுக்கு. பயங்கரவாதமும் வெறும் அரட்டை அரங்க கூட்டத்தில் தோற்க்கடித்து ஓட விரட்ட வேண்டிய கூட்டமுமல்ல. ஆயினும்.... நாம் அப்படித்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இந்துத்துவ பயங்கராவதம் வார்த்தைகளை நம்பி களமிறங்கிய கூட்டமல்ல, அதனது ஆணி வேர் இந்திய மக்களின் ஜனநாயகமில்லா சாதி உற்பத்தி உறவிலும், ஆயிரம் வருடங்கள் தனது ஆதிக்கத்துக்காகவே உருவாக்கி வைத்துள்ள கருத்து நிறுவனங்கள், வரலாற்று திரிபுகள் மீதுமே நிலை கொண்டுள்ளது. முக்கியமான இந்த அரசின் வர்க்க இயல்பில்தான் இந்துத்துவத்தின் ஆணி வேர் உள்ளது. இவற்றை அழிக்கும் அறிவுப் பூர்வ வேலைகள் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட மிக முக்கியமனதாக களத்தில் இவர்களை அடித்து விரட்டும் வேலை உள்ளது. ஆனால், உண்மையில் முற்போக்கு வேடம் போட்டு வோட்டு பொறுக்கி அரசியல் செய்யும் கட்சிகளோ இந்துத்துவம் அம்பலமாகியுள்ள இந்த நேரத்தில் ஆழ்ந்த கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இதுதான் நம்மை மேலதிகமாக ஆத்திரமுறச் செய்கிறது. அந்த கட்சிகளின் அல்லக்கைகளாக கோஸ்டி கானம் பாடும் படிப்பறை கும்பலின் முதுகெலும்பற்ற தனம்தான் நம்மை காறி உமிழச் செய்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்களின் வர்க்க இயல்புதான் இப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துள்ளது. தரகு வர்க்கமாக ஒரு தலைவன் இருப்பது சமரசம் அல்ல கருங்காலித்தனம் என்பதை உண்மையான மக்கள் விடுதலை விரும்பும் ஒவ்வொருவனும் உணர வேண்டிய நேரம் இது. அரசு என்பது சிலர் நம்பிக் கொண்டிருப்பது போல சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்ல. அது தேர்தல் ஜனநாயக் குறித்ததும் அல்ல இவையெல்லாம் அரசாங்கமாகும். மாறாக அரசு என்பது நீதித்துறை, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, அதிகாரிகள் என்ற இயந்திரம் குறித்தது
3

October 16, 2008 16:09
0
கனி:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த சம்பவம் அதிக மனவருத்தத்தை ஏற்படுத்தியது. வல்ல அல்லாஹ் இறந்த அந்த குடும்பத்தார்களுக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக. ஆமீன் நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற இந்துத்துவ அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும். வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் இவர்களை ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் ஓட்டுப் போட கூடாது. இந்த அமைப்புகளைச் சார்ந்த அனைத்து அநியாயக்காரர்களும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கடும்தண்டனை வழங்கப்படவேண்டும். முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வல்ல அல்லாஹ் உதவிசெய்வானாக. ஆமீன்
4

October 16, 2008 21:16
0
M.K.:
மனித தன்மையற்ற் இந்த ஈனச்செயலகளை செய்த செய்பவர்களை ம்னித சமுதாயம் அனைவரும் வ்ன்மையாக உளப்பூர்வமாக கண்டிக்கவும் எதிர்த்திடவும் முன் வரவேண்டும். குறைந்த பட்சம் இதை வாயளவில் உள்ளத்தளவிலாவது எதிர்த்து கண்டிக்க வேண்டும், இவர்கள் கடும் தண்டனை பெற வேண்டும் என்று பிராத்திக்க வேண்டும் அதற்காக இயன்றவரை செய்ய வேண்டும்.(மண்ணின் நீதியின் படியாவது) இல்லையெனில் மவுனம் காக்கும் அனைவரும் குற்றவாளிகளே, இறைவனால் தண்டிக்கப் படக் கூடியவர்களே என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
5

October 17, 2008 11:42
0
Abuayesha:
மனித உருவத்தில் உலாவும் மிருகங்கள். தட்டிக் கேட்க வேண்டிய நீதித் துறை ஆழ்ந்த தூக்கத்தில். தூங்குவது போல் நடிக்கும் அரசு. இனியும் இந்திய மண்ணில் வாழும் சிறுபான்மையினர் வாழாவிருத்தல் கூடாது. அரசுக்கும் அரச காவல்துறைக்கும் எதிராக முறைப்பாடுகளை ஜெனீவாவிலுள்ள மனித உரிமை மனறத்தில் வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இந்திய மண்ணில் இயங்கும் அரசியல் கட்சிகள், மனித நேயத்தைக் காக்கப் பாடுபடும் அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன் சிறுபான்மை இனத்தின் வக்கீல்கள் இவ்விடயத்தை அங்கு எடுத்துச் செல்லலாம். உலகத்தின் கண்களுக்கு இந்த மனிதத் துரோகிகளின் மிருகத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் அரசாங்கத்தை கண்திறக்க முயற்சிக்கலாம். தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்வார்களா?
6

October 23, 2008 17:29
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் OPM Jabir, உணர்ச்சிப் பெருக்கால் நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம், இஸ்லாமியப் பண்பாட்டை மீறி அமைந்துள்ளதால் அதை இங்கு அனுமதிக்க முடியாமலாகி விட்டது; புரிந்து கொண்டு வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம். நமக்கு இழைக்கப் படும் கொடுமைகளால் எவ்வளவு சினம் ஏற்பட்டாலும் நம் எழுத்தில் பண்பாடு குறைந்து விடலாகாது. தங்கள் புரிந்து கொள்ளலுக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி!
7

November 19, 2008 07:23

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:29 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.

English News

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தலையங்கம் குழந்தைகள் செய்த குற்றமென்ன?
Twitter
RSS
YouTube
English