சத்தியமார்க்கம்.காம்

இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்! print Email
பொதுவானவை - பொதுவானவை
சனி, 04 அக்டோபர் 2008 09:23

சுதந்திர நாள் என்றாலே காவல் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, "சார்! தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?'' என்பதுதான். அதற்கு அவர், மூன்று அல்லது நான்கு முஸ்லிம் பெயர்களைச் சொல்லி, அவர்களை எல்லாம் கைது செய்து பாதுகாப்பை தீவிரப்படுத்தி விட்டோம் என்பார். கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான பின்னணி குறித்தெல்லாம் கேள்விகள் ஏதும் கேட்காமல், போலிசார் கொடுக்கும் 'ஒற்றைப் பத்தி' செய்திக்காக காவல் துறை சொன்னதை அப்படியே அடுத்த நாள் பத்திரிகைகளில் வாந்தியெடுத்து, தங்களின் விசுவாசத்தைக் காட்டுபவர்கள்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள்.

இவ்வளவு அழும்பாய் கிடக்கும் இந்தத் துறையில் பார்ப்பனர்களும் பனியாக்களும் கைகோத்தால் என்ன நடக்கும்? 5 வயது குழந்தை குண்டு வைத்திருந்தது என்று செய்தி வெளியிட்டு அக்குழந்தையை தீவிரவாதியாக்கி, தூக்கில் போட பக்கம் பக்கமாய் எழுதுவார்கள். அதிலும் இந்து பயங்கரவாத 'இந்தியா டுடே' பற்றி சொல்லவே வேண்டாம்.

 

தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் கட்டமைப்பதில் அதன் பங்கு, இந்திய உளவுத்துறையைக் காட்டிலும் 'மகத்தானது'. அந்த 'மகத்தான சேவை'யின் இன்னொரு சாதனைதான் 'சுரணையற்ற இந்தியா' என்று தலைப்பிடப்பட்டுள்ள (ஆகஸ்டு 13) தமிழ் 'இந்தியா டுடே'. இதே கட்டுரைக்கு ஆங்கில 'இந்தியா டுடே' வைத்துள்ள தலைப்பு 'ஆண்மையற்ற இந்தியா'.

அட்டைப்படக் கட்டுரை என்ற பெயரில் 'தோற்றுப் போன தேசம்' தொடங்கி 7 தலைப்புகளில் முஸ்லிம் எதிர்ப்புக் கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள தலைப்புகளை எடுத்துவிட்டால், அது ஒரே கட்டுரைதான். இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக்கி, பின்னர் அவர்களை தூக்கில் போட்டு கொன்றுவிட்டால் இந்தியாவின் 'தர்மம்' காக்கப்பட்டு விடும் என்ற தன்மையில் அது இருக்கிறது. மூக்கில் கட்டு, நெற்றியில் பிளாஸ்திரி போட்ட இந்து மதத்தினரின் புகைப்படங்களை வெளியிட்டு ஒப்பாரி வைக்கும் 'இந்தியா டுடே'வுக்கு குஜராத் கொடூரங்கள் நினைவுக்கு வராது. மற்றவர்கள் மீதான நியாயத்தை அழிப்பதுதானே பார்ப்பனியம்.

 

இவ்வாறு தொடர்ந்து 'முஸ்லிம் எதிர்ப்பு பத்திரிகை இயக்கத்தை' நடத்தி வரும் 'இந்தியா டுடே'யின் 'சுரணையற்ற இந்தியா'வைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சென்னை 'இந்தியா டுடே' அலுவலகம் எதிரில் 13.8.2008 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த த.மு.மு.க.வின் மாநில துணை செயலாளர்களில் ஒருவரான ஹாரூண்ரஷீத், "அகமதாபாத், பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்று மெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம். அதில் குஜராத் கொலைக்கு பதிலடியாக இது செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்ததாம். இதனை யார் அனுப்பியது, எங்கிருந்து வந்திருக்கிறது என்று வேரைத் தேடிப்பார்த்தால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை பிரித்து தாங்கள் ஆதாயம் அடைய அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதே போல அமெரிக்காவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக 'தினமலர்' 'இந்தியா டுடே' உள்ளிட்ட பத்திரிகைகள் செயல்படுகின்றன. "போர்க்களத்தில் கூட பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. யார் குண்டு வெடிக்கச் செய்தாலும் அது தண்டனைக்குரியது; கண்டிக்கத்தக்கது. ஆனால், எது நடந்தாலும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. அதுவும் ஒரு மதத்தோடு முடிச்சுப் போடுவது என்பது, இங்குள்ள முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்களின் பங்கு பொறுப்புடன் இருக்க வேண்டும். 'இந்தியா டுடே' சில செய்திகளை கூறும்போது உளவுத்துறை சொல்வதாக கூறுகிறது. அது உண்மையாக இருந்தால், உளவுத்துறை அரசுக்காக வேலை செய்கிறதா அல்லது 'இந்தியா டுடே' பத்திரிகைக்காக வேலை செய்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். சுதந்திர நாள் விழா நேரத்தில் நாகர்கோயிலில் மினி லாரி ஒன்று வெடிகுண்டு மருந்தோடு பிடிக்கப்பட்டதாக 'தமிழ் முரசு' செய்தி வெளியிட்டது. பின்னர் நடந்த விசாரணையில் கல்குவாரிக்காக வெடி மருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. அப்போது மக்கள் மனதில் எதை விதைக்க விரும்புகின்றன இந்தப் பத்திரிகைகள்?'' என்ற கேள்வியோடு முடித்தார்.

பயங்கரவாதத்தின் மூல காரணமான பத்திரிகைகளின் கருத்தியல் பயங்கரத்திற்கு முதலில் முடிவு கட்டுவோம்!

கருத்துக்கள் (6)add comment

எழுதியவர்: abdul azeez , October 04, 2008 20:07

இவர்கள் பத்திரிக்கை வைத்துள்ளதே ! பிற கொள்கை சமூக மக்களை இழிவு படுத்துவதற்காகவும். முஸ்லிம்களின் உணர்வுகளை புன்படுத்துவதர்க்காகவும். மட்டும் தான் அல்லாமல் வேற எதற்கும் கிடையாது. வழக்கொழிந்த இவர்களின் மதகோட்பாடுகளை எந்த அடிப்படையிலும். மேல்தூகிவைக்கமுடியாது.சமூக சீர்கேடுகளையும், விபசாரத்தையும் ஊக்குவிக்க இவர்களுக்கு நிறைய பக்கங்கள் இருக்கும். சினிமாவின் போதனைப்படி. தன் நம்பிக்கைக்கு உட்பட்டதையும் எடுத்தெழுத முடியாது அதுவும் இதே தான் ஊக்குவிக்கிறது. இவர்களின் கண்களுக்கு சங்கபரிவாரங்கள் கிறிஸ்துவ ஆலயங்கள் உடைப்பு, இன்னும் ஏராள நஷ்டத்தை சிறுபான்மையினர்க்கு பொருளாதார ரீதியிலும், உயிர்சேதத்திலும் இழப்பை கொடுக்கும் இவர்கள் சார்ந்தவர்கள் அனைவரையும் இந்தியா டுடே போன்ற பத்திரிக்கை பேனாவிற்கு தேச தியாகிகளாக படுவார்கள் காரணம் தன் மதத்தை சார்ந்தவர்கள் என்ற நிமித்தம். மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: எஸ்.அன்பு , October 05, 2008 06:21

இந்தியா டுடே போன்ற ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும் உண்மைக்கு மாறான செய்திகள் பொது மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. உலக ரீதியாக பரவி இருக்கும் தீவிரவாதம், அமெரிக்க வல்லரசின் சட்டாம்பிள்ளைத்தனம், ஆயுத உற்பத்தி, இம்மாதிரியான சூழலில் இந்தியாவும் தப்பவில்லை எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல முஸ்லீம் இளைஞர்களை அந்நியப்படுத்தும் செயலும் வெகு சுலபமாக அவர்களைச் சில தீவிரவாத அமைப்புகளின் பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் தரும் செய்தியே அதற்குச் சான்று. வெடி மருந்துகளுடன் லாரி - தமிழகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி, என்பது செய்தி, ஆனால் உண்மை நிலை அறிந்த பின் எந்த ஊடகங்களும் மறுப்புச் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. ஒரு பொய்யை ஊர் கூடிச் சொல்லும் போது அது உண்மைதானோ என்ற என்ற எண்ணம் ஏற்படுவதால் ' ஊடகங்களின் செய்தியை அப்படியே சந்தேகமின்றி நம்பிவிடுகிறோம். பொதுமக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இவர்கள் எங்களைத் தாக்குகிறார்கள்? என்று எழுப்பப்படும் கேள்வியை சிலர் தங்களுக்கு மிக சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்துக்களிடம் 'முஸ்லீம்களுக்கு இந்த தண்டனை தேவைதான்' என்று நினைக்கும் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, நாம்தான் அவர்களைத் தீவிரவாதிகளாக்குகிறோம். மதம், இனம், மொழி, மண் சார்ந்து எவரையும் தீவிரவாதிகளாக அடையாளம் காட்டுவது தீவிரவாதத்தை வளர்க்குமே தவிர கட்டுப்படுத்தாது. உண்மைகளைக் கண்டறியவும் மனித உறவுகளைப் பேணவும் ஊடகங்கள் தரும் செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் அதற்கு அப்பால் நாம் பயணிக்க வேண்டும் என்பது தான் இப்போது உள்ள நிலை.



எழுதியவர்: அப்துல்லாஹ் M , October 05, 2008 09:36

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே // யாரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, நாம்தான் அவர்களைத் தீவிரவாதிகளாக்குகிறோம். மதம், இனம், மொழி, மண் சார்ந்து எவரையும் தீவிரவாதிகளாக அடையாளம் காட்டுவது தீவிரவாதத்தை வளர்க்குமே தவிர கட்டுப்படுத்தாது. உண்மைகளைக் கண்டறியவும் மனித உறவுகளைப் பேணவும் ஊடகங்கள் தரும் செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் அதற்கு அப்பால் நாம் பயணிக்க வேண்டும் என்பது தான் இப்போது உள்ள நிலை.// மிகவும் சரியான கருத்து...... ஊடகங்கள் உண்மையைப் பற்றி அக்கரையின்றி தமது உள் நோக்கமும் வயிரும் நிறைய வேண்டும் எனில் போக்கில் செயல்படுகின்றன என்பதை நியாயவான்கள் உணர்ந்து, பொய்களையும் விறுவிறுப்பான செய்திகளையும் காசாக்கிடும் பத்திரிக்கை (அ)தர்மம் தலை விரித்தாடுகின்றது. இதற்கு ஆர்வக்கோளாரினால் அப்பாவிகளாகவும் ஆதரவளித்து விடாமல், புறக்கணித்திடவும் தமது எதிர்ப்பை வெளிபடுத்திடாத வரையும் இது போன்ற மீடியாக்களின் வெட்கமற்ற தன்மைக்கு முற்றி புள்ளி வைக்க இயலாது. இதற்கு நடுநிலையாளர்கள் முன் வர வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமான ஒரு கடமை. இந்த கடமையுணர்வை இந்தியர்கள் இன்றும் என்றும், உணர்ந்து உண்மையான இன்றைய இந்தியாவினை ( இந்தியா டுடே) மாசு படுத்திடும் இது போன்ற தீய சக்திகளின் முகமுடியை கிழித்து களைந்து உலகத்திற்கும் பாடம் புகட்டிட அனைத்து கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி மனிதம் ஓங்கி சுமூகம் வளர்ந்திட வேண்டி முன் வர வேண்டும்.... இல்லையேல் இவற்றிற்கு நிச்சயம் இறைவனிடம் கணக்கு சொல்ல வேண்டி வரும் என்பதை மட்டும் நினைவூட்டுகின்றேன்.



எழுதியவர்: பிறைந்திபுரத்தான் , October 06, 2008 08:50

இந்தியா டுடே - ‘ஹிந்துத்வா டுடே’வாக மாறிவிட்டது போலிருக்கிறது. வாழ்க பத்திரிக்கை தர்மம்..



எழுதியவர்: Irai Adiyan , October 06, 2008 12:19

India Today ediraga valakku thodara vendum. Podumakkalukku vilakkum siriya vasagam aanal valuvana vasagam poster namadu kandanangalaiyum therivikka vendum ade nerathil podu makkalukku unmai nilai puriyavum vendum. Adu pondru seidaal podu makkalukku puriyum endru nambuhiren



எழுதியவர்: Irai Adiyan , October 07, 2008 08:00

இந்தியா டுடேக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். கண்டன போஸ்டர்கள் ஒட்ட வேண்டும். வாசகம் சிரியதாக வலுவாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு உண்மை புரியும் என்று நம்புகிர்றேன்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

2: 269 தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...


M.Mohamed Abbas : அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்...


Saraswathi : நல்ல குறிப்புகள் அடங்கிய இந்த வலைத் தளம் மிகுந்த பயன் அளிக்கிறது. நன்றி.


abdul hakkeem : அல்ஹம்துலில்லாஹ்



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்!