| சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-1 |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | ||||
| வியாழன், 02 அக்டோபர் 2008 00:06 | ||||
|
வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! சிமியைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் கூறுபவை அனைத்தும் கலப்படமற்ற, படுசாமர்த்தியமான பச்சைப் பொய்கள் என தெஹல்கா நிருபர் அஜித் ஸாஹி அனாயாசமாக ஆதாரங்களுடன் நிறுவுகின்றார். தெஹல்கா விசாரணை அறிக்கையின் முக்கிய பாகங்கள் இன்று முதல் இங்கு வெளியிடப்படுகின்றது.
முதலில் தெஹல்கா தலைமை எடிட்டர் தருண் தேஜ்பால் எழுதிய அறிக்கையின் முகவுரை குறிப்பு:
இந்திய அரசு என்பது நீதி மறுக்கப்பட்ட ஒரு அபாயப் பிரதேசம் என தெஹல்காவின் பரவலான பல விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.
சுர்ஜித் சிங் பென்டா என்பது அவர் பெயர். அவர் மரணமடைந்ததைக் கண்ட அனேகரில் நானும் ஒருவன். அது நடந்தது 1988ஆம் ஆண்டு. சாமர்த்தியமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தங்கக்கோயில் தடையினைத் தொடர்ந்து, கோயிலின் தெய்வீகப் பீடமான ஹர்மந்திர் சாஹிபில் ஒளிந்திருந்த அனைத்துத் தீவிரவாதிகளும் ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடைந்திருந்தனர். அங்கிருந்து அவர்களைக் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள சராயி பவனில் கொண்டு சென்று, அனைவரையும் வரிசையாகக் குனிய வைத்த நிமிடத்தில் திடீரென அந்த அசம்பாவிதம் நடந்தது.
காவல்துறை கண்காணிப்புக் குழு ஒரு முக்கியத் தீவிரவாதியை அடையாளம் கண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவன்மீது கைவைக்கும் முன்பே அந்நபர் சயனைடை விழுங்கினார். மருத்துவமனையில் சேர்க்கக் காவல்துறை அவரை ஜீப்பில் ஏற்றியது. ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விட்டிருந்தார். அவர் தான் சுர்ஜித் சிங் பெண்டா. பெண்டாவின் சோகக் கதை இங்குக் கூறப்பட வேண்டிய கட்டாயம் யாதெனில், அது கொடுமைப் படுத்தப்படுதலின் முறையைத் தெளிவாகக் காண்பித்துத் தருகின்றது.
1984 - இல் நடத்தப்பட்ட மிருகத்தனமான சீக்கியப் படுகொலையைக் காண்பதற்கு முன்புவரை அந்தச் சீக்கிய இளைஞர், புது தில்லிக்கான தேசிய விளையாட்டு வீரராக இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சயனைடு உண்டு தற்கொலை செய்யப்படும் கால கட்டத்திற்குள் 40க்கும் மேற்பட்டக் கொலை வழக்குகளில் அவரைக் காவல்துறை பிரதியாக்கியிருந்தது.
இந்தியத் திருநாடு பெண்டா மீது பிரயோகித்தத் தீவிரவாதப் பொய் குற்றச்சாட்டுகளும் அதனைக் காரணமாக வைத்து அவர் மீது பிரயோகித்திருந்த கொடுமைகளும் அவரைத் தீவிரவாதியாக்கியது. நாடு சுட்டிக்காண்பிக்கும் தீவிரவாதிகளின் கதைகள் பலவற்றிலும் இதுதான் நிலைமை. அரசு அதிகாரங்களின் அக்கிரமங்கள் தீவிரவாதம் செழித்து வளர்வதற்கு விதை விதைக்கின்றன. அதனைத் தொடர்ந்து அதனால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட இதுபோன்ற தனி நபர்களின் தீவிரவாதங்களும். நீதியை நடைமுறைப்படுத்துதப்படுவதில் சர்வாதிகார மனோபாவம் பல வேளைகளிலும் கடைபிடிக்கப்படுகின்றது.
அது இந்தியாவில் அபாயகரமாகும் விதத்தில் ஒவ்வொரு தினமும் மோசமாகி வருகின்றது. நக்ஸலைட்டுகள், அக்கிரமக்காரர்களாக மாறுவதற்கு முன்பு காவல்துறையின் இரைகளாக இருந்தனரே?. வடக்கிலும் கிழக்கிலும் காஷ்மீரிலும் இளம் தீவிரவாதிகளோடு மிருகத்தனமாக நடந்து கொள்ளப்பட்டதே?, அவர்களின் குணம் மிருகத்தனமாக மாறுவதற்கு முன்பு!. சாதாரண குடிமகனுடன் மோசமாக நடந்து கொள்ளப்பட்டதே? அவன் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பு!. காவல்துறையைப் பயத்துடன் காண்கின்ற - காக்கி உடை அணிந்த மனிதர்கள் நேர்மையாகச் செயல் படுவர் என ஒருவர்கூட நம்பிக்கை கொள்ளாத - ஒரு நாட்டைக் குறித்து ஒருவர் என்ன கூறுவார்?.
அனைவரும் கட்டாயமாகப் பேண வேண்டிய சமாதானமான ஒரு வாழ்க்கை முறைக்குப் பதிலாக தெய்வவிரோதமான கொள்கைகள், சகிப்புத்தன்மையற்ற, ஹிம்சை துவங்கிய அபாயகரமான சிந்தனைகளைச் சில இயக்கங்கள் கொண்டுள்ளன. சிமி அத்தகையதொரு இயக்கம் எனில், அது நம்முடைய ஆட்சேபணையையும் விமர்சனத்தையும் பெறத் தகுதியானதே. அது சட்டத்தை மீறவும் வேற்றுமைகளை மக்களிடையே வளர்க்கவும் செய்கின்றது எனில், அதனைக் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, அதைச் சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால் அதே சமயம் அது பரவலாகத் திட்டமிட்ட முன்முடிவுகளுடன் குறி வைக்கப்படுகின்றது என்றால் ...?, அந்த அமைப்புக்கு எதிரான அணுகுமுறை தவறான திசையில் பயணிப்பதும் அதிகமாகத் தீவிரவாதத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்ட சதி அப்பயண வழி நெடுகப் பின்னப் படுவதென்றால் ...? இரும்பால் இரும்பைத் துண்டாக்கலாம் என்றப் பழைய ஹிந்திச் சொல்வடையைப் போன்று, சில முன்முடிவுகளை வேறு சில முன்முடிவுகளால் அழிக்க இயலுமோ?.
சிமி தடை செய்யப்பட்டப் பின்னர், கடந்த 7 ஆண்டுகாலமாகத் தீவிரவாதச் செயல்பாடுகளின் மூலம் அரசைத் துடைத்தெறிவதற்கான சதியாலோசனைகளில் ஈடுபட்ட தேசவிரோத இயக்கம் தான் சிமி என்றக் குற்றச்சாட்டில் அரசாங்க ஏஜன்சிகள் உறுதியாக நிற்கின்றன. லஷ்கரே தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷே முஹம்மத் முதலான பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுடன் அதற்குத் தொடர்பு உண்டு எனவும் கூறுகின்றன. இரண்டு வருடத்திற்கு முன்பு மும்பையில் 187 பேர் கொல்லப்பட்ட இரயில் குண்டு வெடிப்பு உட்பட இந்திய மண்ணில் நடந்த அதிபயங்கரமான அனைத்துத் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளிலும் சிமி உறுப்பினர்கள் எனக் காவல்துறையால் கூறப்படுபவர்கள் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.
ஆனால், தெஹல்கா நடத்திய மூன்று மாத கால, நீண்ட - இந்தியா முழுவதுமான - விசாரணையில், இதில் அதிகமான வழக்குகள், நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சேபகரமானதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் பிசாசு வேட்டையின் வாசம் வீசக் கூடியதுமாகும் என்பது உறுதியாகின்றது. இதற்குக் காவல்துறை மீதும் புலனாய்வுத் துறைகளின் மீதும் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல என்பதுதான் அவமானகரமானது. மாறாக, நீதி, நிர்வாக நடவடிக்கைகள்கூட பலவேளைகளிலும் பயங்கரமான முறையில் நீதி மறுக்கப்படும் விதத்தில் அமையப் பெற்றுள்ளன.
இந்திய அரசாங்கம் மிகக் கவனமாக அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். கடந்தப் பல ஆண்டுகளாக, சர்வதேச ஒத்த நிகழ்வுகளால் உற்சாகமூண்ட அரச நடவடிக்கைகளும் அநியாயங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு முன்முடிவுடன் கூடிய செயல்பாடுகள் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பாலிவுட்டின் பெரும்பாலான வில்லன்களும் இஸ்லாமியவாதிகளாக வார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்; இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு நம் இந்தியாவாகும். இவர்களில் ஒரு 10,000 பேர் புரட்சியாளர்களாக இருந்தால் கூட, அது ஒரு பெரும் தோப்பிலுள்ள ஒற்றை மரத்தை ஒத்ததாகும்.
இவ்வினத்தை முழுவதும் அலங்கோலப் படுத்தக்கூடிய சூழலை உருவாக்குதல் மடத்தனமானது. இச்சமுதாயம் முழுவதுமே தடை செய்யப்பட்டவர்கள்(கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்) என்பது போன்ற எண்ணத்தை மக்கள் மனதில் வலிந்து விதைப்பது அபாயகரமானது. அந்தச் சமுதாயம் சமாதானமாக வாழ்வதற்கான மாற்று வழிகளைத் தேடுவதற்கு முன்பு நமது அரசாங்கம் தனது செயல்பாடுகளில் அவசரகதியிலான ஒரு சுயபரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகும்.
வில்லியம் பாக்னர் இவ்வாறு கூறினார்: "முன்முடிவுகள் மிகவும் நாசகரமானதாக மாறுவது, அது சர்வதேச மயமாக்கப்படும் போதாகும்.!".
அது போன்றதொரு அபாயம், ஒளிர்கின்ற இந்தியாவுக்கு உண்டு என்பதை, தெஹல்காவின் விரிவான விசாரணைகள், தேடல்கள், ஆய்வுகள் அப்பட்டமாகச் சுட்டிக்காண்பிக்கின்றன.
அடுத்த பாகங்கள்:
"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-2) உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-3) குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம் 4)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (7)
![]()
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தெஹ்ல்காவின் புலனாய்வு செய்தியை தமிழாக்கம் செய்து வெளியிடும் சத்தியமார்க்கத்தின் பணி பாராட்டத்தக்கது.முஸ்லிம் சமூகம் கையில் எடுக்கவேண்டிய பணியை தெஹல்கா செய்திருப்பது இந்தியாவில் மனித நேயம் கொஞ்ச நஞ்சமாவது மீதமிருக்கிறது என்பதை காட்டுகிறது.பாராட்டுகள்.இந்தியாவில் அரசும் அதிகார வர்க்கமும் பாஷிச மயமாகிவிட்டது என்பதையே ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் இல்லாத பெயரில் உள்ள முஸ்லிம் இயக்கங்களின் பெயரில் முஸ்லிம் சமூகத்தின் இளைய சமூகம் பலிகடாவாக்கப்படுவதை காட்டுகிறது.ஆனால் இந்த தகவல்களையெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் எத்தனை சதவீதம் பேர் தெரிந்துவைத்துள்ளார்கள்.எத்தைனை பேர் இந்த அக்கிரமத்தினை எதிர்த்து போராட முன் வருகிறார்கள்.இது ஒரு அபாயகரமான சூழல்.
1
October 02, 2008 11:18
சமுதாய இயக்கங்கள் கவனித்து முன்னெடுக்கப் பட அசாதாரண ஆவணப் பணிகளை முன்னெடுக்கிறீர்கள்.
வாழ்த்துக்களும், துஆவும்.
2
October 02, 2008 12:56
This is a nice initiative. The tehelka's enquiry and expose should reach a wider audience and especially muslim community at large. A widespread awareness has to be created among muslims to know these kind of reports which are published in magazines and papers which believes in true and brave journalism. Kudos!!
3
October 02, 2008 17:09
சகோதரர்கள் ஸய்யித் அலீ, டாக்டர் ஸுஹைல், பீர் முஹம்மது,
தங்களது பாராட்டுகளுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி!
4
October 02, 2008 19:10
Alhamdulillah.. I'm really happy to know there are still people who are supporting the cause of Ummah and try to speak the truth to the fascist setup. May Allah accept ur work and make us Helpers of Allah. If poss try to send reply to Dinamani for Pala. Karupiah article appeared 3 days back
5
October 04, 2008 06:15
al hamdulillah..,greetings to satya margam 4r posting tehelka's fictions on simi..,we appreciate the work done by tehelka and satyamargam
6
October 04, 2008 18:34
//அந்தச் சமுதாயம் சமாதானமாக வாழ்வதற்கான மாற்று வழிகளைத் தேடுவதற்கு முன்பு நமது அரசாங்கம் தனது செயல்பாடுகளில் அவசரகதியிலான ஒரு சுயபரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகும்.//
முஸ்லிம்களுக்குச் சமாதானமாக வாழ மாற்று வழிகளைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
இஸ்லாம் ஆட்சி செலுத்தும் இடங்களில் அமைதியான வாழ்விற்கு முழு உத்தரவாதம் இருக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.
மனுசிந்தனை தலைக்கேறி விட்ட இந்திய அரசுகளும் மனு ஆட்சியை நடைமுறை படுத்தத் துடிக்கும் இரத்தவெறி பார்ப்புகளும் இதே முறையில் தான் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வர் எனில், இந்தியாவை இஸ்லாம் ஆள்வதற்கான முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத் தவிர வேறு வழியேதும் இருக்கப்போவதில்லை.
இந்தியாவில் இயங்கும் ஃபாஸிஸ சக்திகள் இந்தியாவை இஸ்லாமிய ஆட்சியை நோக்கியே நகர்த்திச் செல்கின்றனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- இறை நேசன்
7
October 05, 2008 14:05
கருத்து எழுதுக :
|