சத்தியமார்க்கம்.காம்

பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்! print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
ஞாயிறு, 28 செப்டம்பர் 2008 19:38

வழக்கம்போல் இந்த ஆண்டும் தமிழக முஸ்லிம்களுக்கு மூன்று வெவ்வேறு நாட்களில் நோன்புப் பிறை பிறந்தது!

வெவ்வேறு நாட்களில் (29,30 செப்டம்பர் மாலையில்) பெருநாள்பிறையும் பிறக்கவிருக்கிறது.

ஒரு நாட்டுக்குள் இருந்து வந்த பிறை வேறுபாட்டை, ஒரு மாநிலத்துக்குள் என்று சுருக்கி, ஒரு மாவட்டத்துக்குள் - ஒரே ஊருக்குள், ஒரே வீட்டினுள் பல நாட்களில் ஒரே பிறையைப் பிறக்க வைத்து, முஸ்லிம்கள் அதிசயத்தை நிகழ்த்தி வருகின்றனர்!.

இந்த ஆண்டு, குமரி மாவட்டத்தில் ஓரிரு ஊர்களில் மூன்று வெவ்வேறு நாட்களில் பிறை அறிவிக்கப் பட்டுள்ளது:

1. முன்னரே கணிக்கப் பட்ட வானியல் கணிப்பின் அடிப்படையில் (வெள்ளிக்கிழமை 30 ஆகஸ்ட்டு 2008 மாலை)

2. வெளியிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் (சனிக்கிழமை 31 ஆகஸ்ட்டு 2008 மாலை)

3. கண்களால் பிறையைக் கண்ட பின்னர் (ஞாயிற்றுக்கிழமை 1 அக்டோபர் 2008 மாலை)

சூரியனும் சந்திரனும் காலக்கணக்கை அறிவதற்காகப் படைக்கப்பட்டன என இறைவன் அறிவித்ததிலிருந்து, முதல் பிறை ஒன்றுதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இம்மூன்று மாலைப் பொழுதுகளில் எதில்தான் உண்மையான பிறை ஒளிந்திருக்கிறது?. அல்லது, சிலர் கூறுவது போன்று பார்ப்பவர்களுக்குப் பார்வையில் தெரியும் பொழுதுதான் அது முதல் பிறையா?.

சில வருடங்களுக்கு முன்பு இலங்கையின் தேசியநேரம் இந்திய நேரத்தைவிட ஒருமணிநேரம் முற்படுத்தப் பட்டது. அதேபோல், பாகிஸ்தான் தேசிய நேரத்தில் அரைமணி நேரம் துரிதப்படுத்தப்பட்டது. நிர்வாக மற்றும் மின்சார சிக்கன நடவடிக்கை காரணங்களுக்காக இப்படி நேரத்தை மாற்றிக் கொள்வது சகஜமான ஒன்று. அரை/ஒரு மணி நேரத்தை முன்/பின் மாற்றி அமைப்பதால் 48 அல்லது 24 நாட்களுக்கு ஒருநாள் வீதம் சேமிக்கப்படுகின்ற அதேவேளை ஒருநாளுக்குள் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாது.

அல்லாஹ் தன் திருமறையில்,

فَالِقُ الإصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள்) அமைதி பெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவை யாவும் வல்லமை மிகைத்தோனும் எல்லாம் அறிந்தோனுமாகிய (அல்லாஹ்வின்) ஏற்பாடாகும். (குர்ஆன் 006:096) என்று விளக்குகிறான். மேலும்,

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلا بِالْحَقِّ يُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

அவன்தான் சூரியனைச் சுடர்விடும் பிரகாசமாகவும் சந்திரனை ஒளிரச் செய்வதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறிமாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்க வில்லை. அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (குர்ஆன் 010.005)

இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வானில் இருவேறு இயற்கை நிகழ்வுகள் நடந்தேறின. மாதத்தின் தொடக்கத்தில் சூரிய கிரகணமும் மத்தியில் (16 ஆம் தேதி) சந்திரக் கிரகணமும் நிகழ்ந்தன. சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட இவை துல்லியமாக நிகழ்ந்தேறின. கிரகணம் நிகழ்வதை முன்னரே அறிவிக்க வேண்டும் எனில், சந்திரனின் ஓட்டத்தைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதிலிருந்து சிலர் கூறுவது போன்று, சந்திரனின் ஓட்டத்தைக் கணிப்பது இயலாத காரியம் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

காலக்கணக்கீடு செய்வதற்கு சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொள்ள அல்லாஹ் அனுமதித்திருக்கும்போது, ஒவ்வொரு வருடமும் நோன்பு/பெருநாள் பிறை பார்க்கும் விசயத்தில் முஸ்லிம்களிடையே குழப்பங்கள் ஏற்படுகின்றன. "பிறை கண்டு நோன்பு வையுங்கள்; பிறை கண்டு நோன்பு துறங்கள்" என்ற ஹதீஸிற்குப் வெவ்வேறுவித விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தாங்கள் சொல்வதே சரியென்று மாறுபட்ட கருத்துகளில் மவ்லவிகள் மோதிக் கொள்கின்றனர்.

மார்க்கத்தை நன்கு விளங்கியவர்கள் என்று கருதப் படுபவர்களுக்கே இந்நிலையென்றால், படிப்பறிவில்லாத மதில்மேல் பூனையாக இருக்கும் சாமான்யர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிறையைக் கணிக்கலாம் என்பவர்களோ, "அறிவியல் அறியப்படாத காலத்தில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதைய அறிவியல் நுட்பங்களைக் கொண்டு பிறை பார்ப்பதும் அதன் அடிப்படையில் நோன்பு நோற்பதும்/துறப்பதும் மார்க்கத்திற்கு முரணல்ல" என்கிகிறார்கள். பூமியில் பிறை தென்படும் கால, நேரத்தைத் துல்லியமாகக் கணிக்கலாம் என்று இப்பிரச்சினைக்கு நிரந்தர முடிவுதர முயன்றாலும், மற்றொரு சாரார் இதை எதிர்க்கிறார்கள். பிறை கண்டு நோன்பு பிடித்தல்/துறத்தல் என்பதற்கு 'வெறும் கண்களால் மட்டுமே பார்த்தல்' என்று விளக்கம் கொடுக்கிறார்கள்!

இவர்களில் யார் சொல்வது சரி? இவ்விவாதம் எப்போது முடிவுக்கு வரும்? அகிலம் முழுமைக்குமான இஸ்லாத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்குள்கூட ஒரு பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா? கால/நேரங்களைக் கணிக்க சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொள்ளலாம் என்று படைத்தவனே தெளிவுபடுத்திய பின்னரும், பிறையைக் கண்களால் பார்ப்பதை மட்டுமே மாதத்தின் துவக்கத்திற்கான அளவீடாகக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் முரண்டு பிடிக்கிறார்கள்.

அபூ உமைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "மேகமூட்டமாக இருந்ததால் ஷவ்வால் (பெருநாள்) பிறை தென்படவில்லை. எனவே அன்றைய தினத்தை நோன்பாகக் கருதி நோற்றோம். மாலை நேரம் முடியும் தருணத்தில் வணிகர் கூட்டம் ஒன்று வந்து, முஹம்மது (ஸல்) அவர்களிடம், நேற்று மாலை அவர்கள் பிறை பார்த்ததாகச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் உடனடியாக நோன்பைத் துறந்து மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்" அஹ்மது, அபுதாவுத், இப்னுமாஜா, நஸயீ, பைஹக்கீ, தாரக்குத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான் ஆகியற்றில் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.

மேற்கண்ட ஹதீஸில் முன்தினம் பிறையைப் பார்த்ததாகச் சொன்னதை ஏற்று, நோன்பு துறந்து, உடனடியாகப் பெருநாள் கொண்டாடச் சொன்னார்கள். இக்காலம்போல், அன்றும் தகவல் தொடர்பு, துரிதப் போக்குவரத்து வசதிகள் இருந்திருந்தால் வணிகர்களைப்போல், தன்பகுதி மக்களையும் அதேதினம் பெருநாள் கொண்டாடச் சொல்லி இருப்பார்கள். வேறொரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை, மறுநாள் முடியும் தருவாயில் சொல்லப்பட்ட போதும் ஏற்றுக் கொண்டார்கள். பிறை பார்த்தப் பிரதேசம், நேரம் தூரம், குறித்தெல்லாம் சர்ச்சிக்கவில்லை. இதே அளவீடு இக்காலத்திற்கும் பொருந்தும்தானே?

நோன்பும், பெருநாளும் வருடந்தோரும் வருகின்றன. இன்ஷா அல்லாஹ் உலகப்பேரழிவுநாள் வரையும் வந்து கொண்டுதான் இருக்கும். இறுதிநபி முஹம்மது (ஸல்) அவர்களால் முழுமைப் படுத்தப்பட்ட இஸ்லாத்தில், குழப்பமும் பிரிவினையும் இன்னும் ஏன் தொடர்கின்றன? ஒற்றுமையாக, சந்தோசமாகக் கொண்டாடப் படவேண்டிய பெருநாளை முஸ்லிம்கள் பரஸ்பரம் சாடிக்கொள்ளவும் சண்டையிட்டுக் கொள்ளவும் காரணமான பிறைக் குழப்பத்திற்கு இஸ்லாத்தில் நிரந்தரத் தீர்வே இல்லையா?

எமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பப்பட்ட முஆத் (ரலி) அவர்களிடம், "நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கு எதனை அடிப்படையாகக் கொள்வீர்? என்று கேட்கப்பட்டபோது குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன் என்றார்கள். அவ்விரண்டிலும் எனது அறிவுக்கு எட்டியவற்றுள் தெளிவு கிடைக்கா விட்டால் எனது சிந்தனையைப் பயன்படுத்தி குர்ஆன்,ஹதீசுக்கு எதிராகச் செல்லாமல் தீர்ப்பு வழங்குவேன்" என்றதைப் பெருமானார் அங்கீகரித்தார்கள்.

முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பெற்றிருக்கும் வளைகுடா நாடுகளில் 'பிறை அறிவிக்கும் குழு'வுக்கு நோன்புக்கும் பெருநாளுக்கும் பிறைகளை அறிவிக்கும் பொறுப்பளிக்கப் பட்டிருப்பதால், கணிப்பு/காலண்டர்/கண்களால் பார்த்தல் போன்றவற்றுள் பொதுமக்கள் ஈடுபடாமல் இமாரத் (தலைமை) சொன்னால் சரிதான் என்று செயல் படுகின்றனர். அதிலும் அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. பல்லாண்டுகளுக்கு முன்னர் சவூதியில் 28 நோன்பு வந்தது. "கணிப்பில் தவறு நேர்ந்து விட்டது. பெருநாளுக்குப் பின்னர் ஒருநாள் நோன்பிருந்து கொள்ளுங்கள்" என்று அரசு அறிக்கை விட்டது.

வளைகுடா நாடுகளுள் ஒற்றைநாள் நோன்பு/பெருநாள் என்பது (ஒமன்,லிபியா போன்ற நாடுகள் தவிர்த்து) பெரும்பாலும் தனி வகைதானேயன்றி மொத்த வளைகுடா வகையல்ல.

உலகளாவிய முஸ்லிம்களுக்கான ஓர் இமாரத் (தலைமை) ஏற்பட்டால் மட்டுமே பிறை/பெருநாள் குழப்பங்கள் எதிர்காலத்தில் இல்லாமலாகும். அதுவரை வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து பிறை அறிவிப்பிற்காக ஒரு தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பது போல், தமிழக முஸ்லிம்களும் குறைந்தபட்சம் ஒட்டுமொத்த தமிழகத்திற்காவது பிறை அறிவிற்பிற்காக ஒரு தலைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலத்தின் கட்டாயமாகிவிட்ட முஸ்லிம்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பிறை விசயத்தில் முரண்பாடுகளைப் புறந்தள்ளி, உலகம் முழுதும் ஒரேநாளில் நோன்பு/பெருநாள் பிறைபார்த்துக் கொண்டாட இஸ்லாமிய அறிஞர்கள் முன்வர வேண்டும். இதுவே உலக முஸ்லிம்களின், ஒற்றுமை விரும்பிகளின் தற்போதைய அவாவும் துஆவும்!

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகள்!

ஆக்கம்: நல்லடியார்.

Trackback(0)
கருத்துக்கள் (4)add comment
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் அருமையான ஆக்கம். //காலத்தின் கட்டாயமாகிவிட்ட முஸ்லிம்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பிறை விசயத்தில் முரண்பாடுகளைப் புறந்தள்ளி, உலகம் முழுதும் ஒரேநாளில் நோன்பு/பெருநாள் பிறைபார்த்துக் கொண்டாட இஸ்லாமிய அறிஞர்கள் முன்வர வேண்டும். இதுவே உலக முஸ்லிம்களின், ஒற்றுமை விரும்பிகளின் தற்போதைய அவாவும் துஆவும்!//
1

September 29, 2008 06:02
0
syedali:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பிறை குழப்பம் பல ஆண்டுகளாக தமிழக முஸ்லிம் மக்களிடையே பெரும் கருத்து வேற்றுமையை உருவாக்கி வருகிறது.தற்போது இந்த கருத்துவேற்றுமை பல்வேறு பகுதிகளுக்கு பரவுகிறது.இந்நிலையில் காலம் கடத்தாமல் சர்வதேச அளவில் உலமாக்கள்,விண்ணியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அறிஞர் குழு ஒன்று கூடி இது சம்பந்தமாக விவாதித்து ஒருமுடிவுக்கு வருவது சமுதாயத்திற்கு நல்லது.ஏனெனில் நபி(ஸல்...)அவர்களின் பொன்மொழி ஒன்று இங்கு கவனிக்கதக்கது,'நீங்கள் தீர்மானிப்பதுதான் நோன்பு,நீங்கள் தீர்மானிப்பதுதான் பெருநாள்...'
2

September 29, 2008 12:35
0
அபு நஸீஹா:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு அன்பு தள நிர்வாகத்தினரே ! வார்த்தையில் பிழை இருப்பதாக அறிகிறேன், தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் // 1. முன்னரே கணிக்கப் பட்ட வானியல் கணிப்பின் அடிப்படையில் (வெள்ளிக்கிழமை 30 ஆகஸ்ட்டு 2008 மாலை)// வெள்ளிக்கிழமை 30 செப்டம்பர் 2008 மாலை //2. வெளியிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் (சனிக்கிழமை 31 ஆகஸ்ட்டு 2008 மாலை)// சனிக்கிழமை 31 செப்டம்பர் 2008 மாலை //3. கண்களால் பிறையைக் கண்ட பின்னர் (ஞாயிற்றுக்கிழமை 1 செப்டம்பர் 2008 மாலை)// ஞாயிற்றுக்கிழமை 1 அக்டோபர் 2008 மாலை அன்புடன் அபு நஸீஹா
3

October 05, 2008 02:06
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் அபூ நஸீஹா, வ அலைக்குமுஸ்ஸலாம். தாங்கள் சுட்டிக் காட்டிய பிழை திருத்தப் பட்டுள்ளது. தங்களது தொடர் ஆதரவுக்கும் சுட்டிக் காட்டலுக்கும் மிக்க நன்றி. ஜஸாக்கல்லாஹு கைரா!
4

October 05, 2008 07:13

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்!
Twitter
RSS
YouTube
English