சத்தியமார்க்கம்.காம்

தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
புதன், 17 செப்டம்பர் 2008 12:43

01.09.2008 :

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர்.

 

02.09.2008

தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் எதிர்ப்புகள் பதிவாயின.

 

வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.

 

"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.

 

"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். 28 பெண்கள் உள்பட 294 கைது செய்யப் பட்டனர்.

 

04.09.2008

தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கோவையில் நடத்தினர்.

 

மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர்.

 

ததஜவினர் மதுரையிலும் சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

06.09.2008

ததஜவினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தமுமுக திருச்சியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.

 

08.09.2008

"திருந்தாத தினமலர் இருந்தென்ன..?" என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்து சத்தியமார்க்கத்தின் தலையங்கம் வெளியானது.

 

10.09.2008

ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலர்.காம் என்ற இணைய தளம் முடக்கப் பட்ட செய்தியை, தினமலருக்கு முதல் அடி என்ற தலைப்பில் சத்தியமார்க்கம் வெளியிட்டது.

 

15.09.2008

தினமலர்.இன் என்ற மாற்று இணைய தளம் ஐக்கிய அரபு அமீரகங்களில் தடை செய்யப் பட்ட செய்தியை தினமலருக்கு இரண்டாவது அடி என்ற தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டு, "அடிகள் தொடரும்" என்று முடித்திருந்தது.

 

16.09.2008

குவைத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களின் முயற்சியால், இன்று முதல் தினமலர் அச்சுப் பதிப்புக் குவைத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. 

 

இனியேனும் திருந்தி, தினமலர் மன்னிப்புக் கேட்குமா?

கருத்துக்கள் (9)add comment

எழுதியவர்: mohamed , September 17, 2008 15:52

மேலும் சில நாடுகளிலும் இத்தளத்தின் தடையை எதிர்நோக்கி இருக்கின்றோம். இன்சா அல்லாஹ் அவையும் வெற்றி பெறும்.



எழுதியவர்: abdul azeez , September 17, 2008 22:36

// இனியேனும் திருந்தி, தினமலர் மன்னிப்புக் கேட்குமா? // அப்படியே ! மன்னிப்பு கேட்டாலும் வெறும் வாயளவில் தான் கேட்பான்கள். நாமளும் தொலைந்து போறான் என்று மறந்து பழயமேனிக்கு வாங்க ஆரம்பித்தால். மறுபடியும் கடிக்க தான் செய்யும்.வேற நாழிதல்கள் வாங்கி படித்துவிட்டு போகிறோம். மக்கள் களத்தில் மும்முரமாக இறங்கி ஒவ்வொன்றாக அடி கொடுக்கும் வேளையில் இந்த மாதிரியான நீர்த்து போகக்கூடிய கேள்விகள் வைக்கவேண்டாம்.அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: Muhammad Abdul Ghani , September 18, 2008 05:54

'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக'



எழுதியவர்: Rafique uthuman,Nagercoil from Riyadh , September 18, 2008 08:53

இனிமேலாவது மன்னிப்பு கேட்குமா என்ற வாதத்தை விட்டு விடுங்கள்.நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. முஸ்லீம்கள் என்ன கேணயர்களா. மீண்டும் மீண்டும் கொட்டுபட்ட பொந்தில் கை போட. மிகப்பெரும் திறமைசாலிகள் நம்மில் உண்டு.கேரளாவில் மிகவும் நஷ்டத்தில் ஓடிய தீபிகா தினசரியை பாரிஸ்ஆபுபக்கர் வாங்கி மிகப்பெரிய லாபகரமானதாக ஆக்கி பின் பழையவர்களிடமே அதை திருப்பிக்கொடுத்ததும் நாம் அறிந்ததே. ஒரு பொதுஜன பத்திரிகை தினசெய்தி தினதகவல் அல்லது போட்டியாக தின மலர்கள் என்ற பெயரிலே இப்படி ஏதாவது ஒரு பத்திரிகையை செல்வந்தர்களிடம் (காமாராஜர் சிறிய சிறிய கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்ட செல்வந்தர்களிடம் போய் எப்பா பிள்ளைகள் படிப்பிற்காக பிச்சை போடுங்கப்பா என்று செல்வந்தர்களிடம் கேட்டு எல்லா கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் கட்டியதாக அறிந்தேன் அது போல் கேட்டு முதலில் ஓரிரு வருடங்களுக்கு பின் வரும் வருமானத்தில் அவர்களுக்கு கிடைப்பது மாதிரி) பணம் பெற்று நடத்த முன்வரவேண்டும். முதலில் வெறும் ஆறு அல்லது நாங்கு பக்கங்கள் வைத்து ஒரு ரூபாய் என்று விற்க வேண்டும்.எவ்வளவு மதவெறி பிடித்தவராக இருந்தாலும் விலை குறைவு எனும் போது ஆட்டோமேடிக்காக வாசகர்கள் கிடைப்பார்கள். பிறகு பக்கங்களையும் விலையையும் மாற்றிக்கொள்ளலாம்.முதல் ஓரிரு வருடங்கள் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.தொலைக்காட்சி சேனல்கள் முதலில் ஆரம்பிக்கும் போது இப்படித்தான் செய்கிறார்கள்.எனவே சத்தியமார்கமாவது இதற்கு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் ஆச்சு.



எழுதியவர்: MOHAMED SULAIMAN , September 18, 2008 11:21

MASHA ALLAH.....................



எழுதியவர்: Abdul Razzak , September 18, 2008 11:31

குவைதில் தினமல்ர் என்ற இணைய தளம் முடக்கப் பட்டது



எழுதியவர்: கனி , September 18, 2008 14:45

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரர் ரபீக் உதுமான் அவர்களின் கருத்தை மிகவும் ஆதரிக்கின்றேன். என்னுடைய பல கருத்துகளிலும் தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் காலை தினசரி பொது பத்திரிக்கை வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளேன். தற்பொழுது இயங்கிவரும் மணிச்சுடர் பத்திரிக்கையைக் கூட தமிழக முஸ்லிம்களின் முழு ஆதரவோடு காலை பத்திரிக்கையாக மாற்றி வெளியிட ஏற்பாடு செய்யலாம். நமக்கென்று ஒரு காலை தினசரி பத்திரிக்கை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். வல்ல அல்லாஹ் நமக்கு உதவிசெய்வானாக. ஆமீன்



எழுதியவர்: Hassan Adirai , September 19, 2008 07:04

கனி அவர்களின் வேண்டுகோளை நானும் வறவேற்க்கிறேன்...



எழுதியவர்: mohamed , September 20, 2008 13:30

//மேலும் சில நாடுகளிலும் இத்தளத்தின் தடையை எதிர்நோக்கி இருக்கின்றோம். இன்சா அல்லாஹ் அவையும் வெற்றி பெறும்.// ஓமானில் இயங்கிவரும் omantel நிறுவனம் தினமலம் தளங்களை முடக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

4: 14 எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான். மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி!