சத்தியமார்க்கம்.காம்

நோன்புதான் மாண்பு! print Email
கதை-கவிதை - கவிதை
செவ்வாய், 09 செப்டம்பர் 2008 16:17

உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று
உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க
வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து
வழங்கிய அருட்கொடைதான் வளமான ரமளான் நோன்பு!{mosimage}

ஈகைத் திருநாள் என்று எல்லோரும் இறைபுகழ் பாடும்
இந்த ரமளான் நாளில் இயன்றவரை பொருள் கொடுத்து
வாகைசூழ் அல்லாஹ்வின் வானமுத அருளைப் பெறவே
வாருங்கள் தோழர்களே வலுவாக கரம் சேர்ப்போம்!!

சுவனம் திறந்திருக்கும் ரமளானில் சுமைகள் குறைந்துவிடும்
சோம்பல் ஷைத்தான்கள் சுருண்டு நிற்பர் விலங்கிற்குள்ளே
எவரும் அடையும் வண்ணம் ஏற்றமிகு ஓர் இரவு
இருக்கின்ற முப்பதில் எப்படியும் வந்தே தீரும்!

ஆவலுடன் அதை அடைய அன்றாடம் நோன்பு நோற்றால்
அல்லல் பல தீரும் அவனருள் தினம் கிட்டும்
நாவதனை அடக்கி நற்செயல் நிதம் புரிந்தால்
நாயன் மன்னிப்பை நமக்கு நல்கியே மகிழ்ந்திடுவான்!!

கையிலுள்ள ரமளானை காற்றில் பறக்க விட்டு
நிலையில்லா வரும் ஆண்டில் நோன்பிருக்க எத்தனித்து
காத்திருந்த பல பேரை காணவில்லை இப்போது
காற்றான உயிர் மூச்சு நின்று விடும் எப்போதும்!

காலத்தை உணர்ந்து இங்கே கடமை ஆற்றி
கருத்தாக நோன்பு நோற்றால் - மாதங்கள் ஆயிரத்தின்
சாலச்சிறந்த நன்மைபல சாற்றப்படும் நம்மீது
சரியான பாதை செல்ல சலிக்காதீர் தீனோர்களே!!

வியக்க வைக்கும் மருத்துவத்தை விஞ்ஞானம் காணும்முன்பே
விந்தை நோன்பின் மூலம் விடியலை கொண்டு வந்து
தயக்கமின்றி எல்லோரும் தாரணியில் நலம் பெறவே
தக்கதோர் மருத்துவத்தை தந்ததுதான் அல் குர்ஆன்!

அண்ணல் நபி வாழ்முறையும் அவர் சொன்ன நன்னெறியும்
அன்றுமுதல் இன்று வரை அகலாமல் இருப்பதற்கு
எண்ணம் கொண்ட இஸ்லாத்தை யாரேனும் வெறுப்பாரோ
எளிதாய் வாழ்ந்திடவே இன்றே உறுதி கொள்வீர்!!

இஸ்லாத்தில் இருப்பதினால் இச்சலுகை கிட்டுமென்றால்
எல்லோரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு தயக்கம் ஏனோ?
முஸ்லிமாய் வாழ்ந்திடவே முடிவு செய்துவிட்டோம் என்றால்
முகத்தழகும் அகத்தழகும் முத்துபோல் பளிச்சிடுமே!

ஒன்றுபட்ட இஸ்லாத்தில் உயர்தாழ் பேதமில்லை
உலகில் உள்ளோர் போற்றும் உன்னத நெறியிதுவே
தொன்றுதொட்டு இன்றுவரை எல்லோரும் சோதரரே
துடிதுடிக்கும் பகைமையினி தோற்றுவிடும் நம்மிடமே!!

நாடிய காரியத்தை நடத்தி வைக்க "இறை" இருக்க
நாம் ஏன் அஞ்ச வேண்டும் நானிலத்தில் பயத்துடனே
தேடிய பொருள் கொடுத்து தேவையை பூர்த்தி செய்ய
தென்றலாய் அல்லாஹ்வே திக்கெட்டும் வருவானே!

நன்றி சொல்லி நாம் தொழுவோம் - நாயனுக்கே
புகழனைத்தும் - நபியவர்கள் மொழி மழையில்
நனைந்திடுவோம் தினம் தோறும் - நாட்டிலுள்ள
முஸ்லிம்கள் நலம் பெறவே நல்லபல துவா கேட்போம்!!
 

ஆக்கம்: அபு ஷமீம்

 

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
Abu Irfan:
The writer of the poem has enjoyed each and every word, experienced each and every aspect of fasting..Also, the soft approach to non-muslims about the importance of fasting and what they are missing out..is really good and much appreciated. I enjoyed the poem.. it is excellent and usage of words is simple and great.
1

September 17, 2008 12:11
0
S.S.K:
ASSALAAMU ALAIKKUM //நாடிய காரியத்தை நடத்தி வைக்க 'இறை' இருக்க நாம் ஏன் அஞ்ச வேண்டும் நானிலத்தில் பயத்துடனே// ALHAMDULILLAH JAZAAKALLAHU KHAIRAN
2

September 17, 2008 18:52
0
நூர்ஜஹான்:
அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் அருமையான கவிதை. 'கையிலுள்ளா ரமளானை காற்றில் பறக்கவிட்டு நிலையில்லா வரும் ஆண்டில் நோன்பிருக்க எத்தனித்து காத்திருந்த பலபேரை கானவில்லை இப்போது' இந்த வரிகள் சிலரை சஹர் செய்ய வைதுவிட்டது. மாஷா அல்லாஹ்.. வளர்க கவிஞரின் இறைபணி.
3

September 18, 2008 15:14
0
kavianban KALAM Adirampattinam:
மாண்புமிக்க நோன்பின் மகத்துவத்தை ம்ரபு கவிதையில் யாத்துள்ள சக் க்விஞரை யான் புகழ்ந்து பாராட்டுகின்றேன் 'க்வியன்பன்'கலாம், அதிராம்பட்டினம்
4

September 24, 2008 18:42
0
\"கவியன்பன்\" கலாம், அதிராம்பட்டினம்:
ரமலான் சென்று விட்டது; அமலால் வென்று விட்டோமா......? பகலெலாம் பசித்து இருந்தோம்; அகமெலாம் 'இறையச்சத்தால்' கசிந்திருந்தோமா...? உண்ணா நோன்பினால் உடலை வருத்தினோம்; புண்ணான புறம் பேச்சுக்காக உள்ளம் வருந்தினோமா..? மாதம் முழுவதும் மாமறையை ஓதினோமே..... ஆயுள் முழுவதும் அதன் வழிகாட்டுதலை சாதிப்போமா..? 'ஆம்' என்றால்... உங்கள் முயற்சிக்கு வாகைத் தரும்நாள்; ஈகைத் திருநாளில்- வல்லான் அருள்நாளில் எல்லா வளமும் அல்லாஹ் அருள்பெற்று சூழ்க..!
5

September 29, 2008 14:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் நோன்புதான் மாண்பு!
Twitter
RSS
YouTube
English