சத்தியமார்க்கம்.காம்

திருந்தாத தினமலர் இருந்தென்ன..? print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
திங்கள், 08 செப்டம்பர் 2008 11:29

Active Image"ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.


முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ்.


வீடியோவில் ஒரு குறிப்பிட்ட நொடியில் திட்டமிட்டு நிறுத்தி வெளியிட்ட தினமலர்முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.


கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.


கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்  வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.


காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது.


"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர்.


வேலூர் ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு முஸ்லிம் சகோதரரைப் பல காவலர்கள்   சுற்றி நின்று அடித்து நொறுக்கும் காட்சி (பட உதவி : தமுமுக தளம்)வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் அறிவுச்செல்வம், வட்டாட்சியர் சுகந்தி, மாவட்டக் காவல்துறை துணை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.


"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் 02.09.2008 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுமுக தலைமையேற்று சேலத்தில் நடத்திய தினமலர் எதிர்ப்புப் போராட்டத்தில், 28 பெண்கள் உள்பட 294 கைது செய்யப் பட்டனர்.


மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர். ததஜவினர் 04.09.2008 இல் மதுரையிலும் சென்னையிலும் 06.09.2008 இல் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமுமுக தினமலரை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 04.09.2008 இல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு 'வருத்தத்தை' மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர். தினமலரின் வருத்தத்தினை தெரிவிக்கும் செய்தியின் சுட்டியினை (Link) ஐக் கூட தளத்தின் முகப்பில் இல்லாதவாறு திட்டமிட்டு பார்த்துக் கொண்டுள்ளது தினமலர்.


ஒன்று இரண்டு என்றில்லாமல் பல திக்குகளிலிருந்தும் தினமலருக்கு ஆப்புகள் சீவப் படும் வேலை மும்முரமாகத் தொடங்கி விட்டது.


அரிப்பெடுக்கும்போது தலையைக் கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்ளும் முட்டாள் குரங்கைப் பற்றி உவமை கேள்விப் பட்டிருக்கிறோம். இதே கேலிச் சித்திரம், டென்மார்க் என்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டிருக்கும்போது, ஓர் அற்ப நாளிதழான நாம் எம்மாத்திரம்? என்பதைக் கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கும் முன்னர் தினமலர் யோசித்திருக்க வேண்டும்.


முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும்.

 

ந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான தன் காழ்ப்புணர்ச்சியைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் தினமலரைக் கண்டித்து - மதப்பாகுபாடு இன்றி பல்வேறு இயக்கங்கள், அமைப்புக்கள், செய்தி ஊடகங்கள் தத்தம் கண்டங்களை உலகெங்கும் தெரிவித்து வரும் சூழலில், தம் கண்டனங்களைத் தெரிவித்துள்ள சக சகோதர வலை / தளங்களின் சில சுட்டிகள் இங்கே வாசகர்களின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. (தமது கண்டனத்தினைப் பதிவு செய்ய விரும்பும் எவரும் இப்பக்கத்தில் கருத்துக்கள் / பின்னூட்டப் பகுதி மூலமாகவோ அல்லது தளநிர்வாகத்திற்கு மடல் அனுப்பியோ தெரிவிக்கலாம். (இப்பகுதி தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்)


தமுமுக - திருச்சியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் :

http://tmmk.in/news/999689.htm

 

ததஜ-மதுரையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் :

http://tntj.net/Event/Madurai/Dinamala_Mutrugai_4-9-2008.asp

 

ததஜ-சென்னை :

http://www.tntj.net/Event/Chennai/NabiSel_Keli_Sithiram_Dinamalar_Arpattam_4-9-2008.asp

 

ததஜ-கோவை :

http://tntj.net/Event/Kovai/Dinamalar_Arpattam_6-9-2008.asp

 

காவல்துறையின் அடக்குமுறை :

http://videosfromindia.smashits.com/view/3812/police-detained-agitators-angered-by-prophet-mohammeds-cartoon

 

தினமலரைப் புறக்கணிப்போம் - மரைக்காயர் :

http://maricair.blogspot.com/2008/09/blog-post.html

 

பார்ப்பனக் கைக்கூலியின் அயோக்கியத்தனம்! - இறைநேசன் :

http://copymannan.blogspot.com/2008/09/blog-post.html

 

தினமலரைப் புறக்கணிப்போம் - அதிரை எக்ஸ்பிரஸ் :

http://adiraixpress.blogspot.com/2008/09/blog-post_07.html

 

தினமலரெனும் சாக்கடை - அபூமுஹை :

http://abumuhai.blogspot.com/2008/09/blog-post.html

 

கேலிச்சித்திரமும் நமது அணுகுமுறையும் - சமுதாயம் வலைப்பதிவு :

http://samuthayam.blogspot.com/2008/09/blog-post.html

 

கோவையில் இஸ்லாமிய அமைப்புக்கள் போராட்டம் :

http://kovaimediavoice.blogspot.com/2008/09/blog-post.html

 

தினமலரின் வருத்தம்:

http://www.dinamalar.com/note.asp

 

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? - ஏ1ரியலிஸம் வலைப்பதிவு :

http://a1realism.blogspot.com/2008/09/blog-post_05.html


இது துவக்க அடிதான்! - அபூமுஹை :

http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_10.html


தினமலர் இணையத் தளத்திற்கு அமீரகத்தில் தடை! - இப்னுபஷீர் :

http://ibnubasheer.blogsome.com/2008/09/10/p83/


தினமலருக்கு புத்தி புகட்டுவோம் - பிறைநதிபுரத்தான் :

http://pirainathi-puram.blogspot.com/2008/09/blog-post.html


தினமலர் புறக்கணிப்பு தொடரட்டும் - மஸ்தூக்கா :

http://masdooka.wordpress.com/


தினமலரைப் புறக்கணிப்போம்! (மீள் பதிவு) - வஹ்ஹாபி பக்கம் :

http://wahhabipage.blogspot.com/2008/09/blog-post.html


சமூக நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? - சுட்டு விரல் :

http://suttuviral1.blogspot.com/2008/09/blog-post.html

Trackback(0)
கருத்துக்கள் (26)add comment
0
கனி:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்றைய சூழ்நிலையில் நமக்கென்று எல்லாமக்களும் படிப்பதுபோல் காலை பதிப்பில் ஒரு தினசரி பத்திரிக்கை ஆரம்பி்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
1

September 08, 2008 15:17
0
முஸ்லிம்:
காவல் நல்லாவே வூடு கட்டுறாய்ங்க. ஒத்த ஆளுக்கு இம்புட்டு காவலா...?
2

September 08, 2008 15:41
0
மஸ்தூக்கா:
//முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்.// ஆம் இனி ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் தினமலரைப் புறக்கணிக்கவும், பத்திரிகை உலகம் எனும் மீடியாவிலிருந்து அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் முயற்சிகள் எடுக்கவேண்டும். உதாரணமாக பத்திரிகை விற்பணையாளர்கள், கடைக்காரர்கள், 'தினமலரை' இனி விற்பனை செய்வதில்லை என்னும் முடிவுக்கு வரவேண்டும். முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள படிப்பகங்கள் நூல்நிலையங்களில் தினமலரை புறக்கணிக்கும்படி வேண்டு கோள் விடுக்க வேண்டும். சொந்தமாக வலைப்பதிவுகள் இணைய தளங்கள் நடத்துவோர் தமது வாசகர்களிடம தினமலரை புறக்கணிக்கும்படி தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். டென்மார்க் என்னும் நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்து இறையருளால் பெருவெற்றி கண்ட நம் சமுதாயத்திற்கு இது ஒரு பெரிய காரியம் அல்லவே. இது தினமலருக்கு மட்டுமல்ல இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சீண்டிப் பார்க்க நினைக்கும் மற்ற பத்திரிகைகளுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். சத்தியமார்க்கத்தின் இந்த சமுதாயப்பணியில் எமது 'தமிழ் இஸ்லாம் அரங்கம்' வலைப்பதிவும் தன்னையும் இணைத்துக் கொள்கிறது. நன்றியுடன் இக்கட்டுரையை நமது அரங்கம் மீள் பதிவு செய்கிறது. http://masdooka.wordpress.com/
3

September 08, 2008 17:43
0
இறை நேசன்:
//ஒத்த ஆளுக்கு இம்புட்டு காவலா...?// காவல்துறை காவிமயமாகி காலங்கள் பல ஆகி விட்டன. நாம்தான் வெகுளிகளாக இன்னமும் காவல்துறை நீதி, தர்மத்துடன் செயல்படும் என நம்பிக்கைக் கொண்டுள்ளோம். ஒரு செல்வராஜ் கொலைக்கு (கொலையாளிகளை உடனடியாக காவல்துறையில் பிடித்து ஒப்படைக்கப்பட்டப் பின்னரும்) ஒரு கோவையைச் சங்கபரிவாரத்திற்குக் காவித் துறை பரிசாக அளித்தது. உண்மையில் காவல்துறை மீது கைவைப்பவனுக்கெல்லாம் இதுதான் நிலைமை எனில், கடந்தச் சில வாரங்களுக்கு முன்னர் கேரளத்தில் ஒரு டி.எஸ்.பி யை ஆர்.எஸ்.எஸ்ஸினர் வெட்டிக் கொலை செய்தனர். காவல்துறை என்ன செய்தது?. ஒரு மண்ணும் செய்யவில்லை. அதற்காக இன்னொரு கோவையைக் காவல்துறை உருவாக்க வேண்டும் என நான் கூறவரவில்லை. முஸ்லிம் என்றால் மட்டுமே காவல்துறை காவிதுறையாகும் என்பதைக் கூற வந்தேன். நாடு சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த வேளையில், அதில் எவ்வித பங்களிப்பும் கொடுக்காமல் தனியாகக் காவிப் படையை உருவாக்கிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ், தனது திட்டத்தை மிகச் சரியாகவே செயல்படுத்திக் காட்டி விட்டது என்பதற்கான அடையாளம்தான், காவல் துறை காவித் துறையானதும் மதசார்பற்ற வேசமிடும் காங்கிரஸ் காவிக் கூடாரமாக ஆகி வருவதும் ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையில் தினமலம் போன்ற காவிமலங்கள் கலந்து இருப்பதும். ஆனால், அய்யோ பாவம்! முஸ்லிம்கள்தான் இன்னமும் இந்திய மதசார்பற்ற தன்மையையும் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் தங்களுக்குக் காவலாக இருக்கும் என மலைபோல் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கின்றனர். - இறை நேசன்.
4

September 08, 2008 17:57
0
அபூ ஸாலிஹா:
சில வருடங்களுக்கு முன் எம்.எஃப் ஹுசைன் என்ற முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவர் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்த சமயங்களில், இந்து என்று மதம் உள்ளதா, தெய்வத்தில் பெண்ணா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் இஸ்லாமியர்களே பெருமளவில் இவரைக் கண்டித்தனர். இஸ்லாத்தில் அடுத்தவர் வணங்கும் தெய்வத்தை இழிப்பதோ, அல்லது பெண்மையின் கண்ணியத்தை சிதைப்பதோ போன்ற கீழ்த்தரமான செய்கைகளுக்கு எள்ளளவும் இடம் இல்லை என்பதே முஸ்லிம்கள் கொதித்தற்குக் காரணம். இந்து மத நம்பிக்கைகளையோ, அல்லது கடந்து போன விநாயகர் சதுர்த்தி கழிந்த பின் கழிப்பறைக்கு மாற்றமின்றி கடற்கரையில் கிடந்த விநாயகர் சிலைகளைப் பற்றியோ எல்லாம் முஸ்லிம்கள் போட்டோவும், கார்ட்டூனும் போட்டு விமர்சிக்க ஆரம்பித்தால் தினமலர் ஆசிரியர் குழு அமைத்த மதவெறித் திட்டம் போலவே தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை நாம் இழக்க வேண்டி வரும். யூல்லண்ட் போஸ்ட்டன் போல் சீப் பப்ளிஸிட்டி செய்து புகழ் பெற வேண்டும் என்று தினமலர் நினைத்திருக்கலாம். ஆனால், திமிராய் நெஞ்சை நிமிர்த்திய டென்மார்க் அரசு, பின் பெரும் பொருளாதார சரிவைச் சந்தித்தபின் இஸ்லாமியர்களின் கால்களைத் தேடி மன்னிப்புக் கேட்டதை தினமலர் மறந்தது போனது பரிதாபத்திற்குரியது. சீப் பப்ளிஸிட்டி ச்ச்சீ.....ப் ஆகும் என்று தினமலர் ஆசிரியர் குழு கனவிலும் யோசித்துப் பார்த்திருக்காது. எனவே வெகு விரைவில், தினமலரின் துக்க நாளையும் உங்களுடன் இணைந்து எதிர்பார்க்கிறோம்.
5

September 08, 2008 19:12
0
சுட்டுவிரல்:
மிகுந்த உள்நோக்கத்தோடு செய்துவிட்டு இப்போது ஒரு ஊழியரைச் சுட்டி பழிசொல்லிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறான் தினமலர் கோபால்ஜி. இவன் சிறுபான்மையினரை கருவறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள வி.எச்.பி என்கிற இந்து பயங்கரவாத அமைப்பின் தமிழ் மாநில பொறுப்பாளர்களுள் ஒருவன் என்பதை நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். பின்னணி நோக்கம் புலப்படலாம். இன்ஷா அல்லாஹ், நாம் இவ்விஷயத்தில் புகட்டவிருக்கும் பாடமானது காலத்துக்கும் அவன்-களின் மனதின் துவேஷத்தை வேரறுக்கும் வகையில் அமையவேண்டும். இப்பிரச்னையில் களம் இறங்கும் அனைத்து சமுதாய அமைப்பினருக்கும் சரியான வழிகாட்டுதலை இறைவன் அருள்வானாக! என் பதிவு: http://suttuviral1.blogspot.com/2008/09/blog-post.html
6

September 08, 2008 21:12
0
வஹ்ஹாபி:
//மிகுந்த உள்நோக்கத்தோடு செய்துவிட்டு இப்போது ஒரு ஊழியரைச் சுட்டி பழிசொல்லிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறான் தினமலர் கோபால்ஜி// சுட்டுவிரல் சுட்டியது மிக்ச் சரியானது. இந்தத் தலையங்கத்தில் பதிக்கப் பட்டிருக்கும் ஸ்கேன் செய்த தினமலரைப் பெரிதாக்கிப் பார்த்ததில் டென்மார்க் கார்ட்டூனை யூ ட்யூபில் தேடிப் பிடித்து, அதை ஓடவிட்டுப் பாதியில் நிறுத்தி, குறிப்பிட்ட படம் வந்ததும் நிறுத்தி, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, கம்ப்யூட்டர் மலரில் பதிக்கப் பட்டுள்ளது. இவ்வளவையும் உள்நோக்கத்தோடு செய்து விட்டு, ஒன்னும் தெரியாத பாப்பா போல் பேட்டி கொடுப்பதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்? இருக்கட்டும். எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்? பார்த்து விடலாம். எனது மீள்பதிவொன்று: http://wahhabipage.blogspot.com/2008/09/blog-post.html
7

September 08, 2008 21:35
0
Nagore Durai:
தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy சவுதியில் தினமலரை தடைசெய்ய http://www.internet.gov.sa/resources/block-unblock-request/block/ தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த சாக்கடை பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும். தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்
8

September 08, 2008 22:18
0
அப்துல் அசீஸ்:
பத்து தலை, மண்டையில் பாம்பு, கையில் ஈட்டி, வில், சூலாயுதம், ஆண்-பெண் உறுப்புகளான லிங்கம்-யோனி போன்ற விசித்திர ஆயுதங்கள், எமன் வசம் உள்ள ஆயுதம் போன்ற ஏராளமான ஆயுதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள கடவுள்களும் அதுகள் உபதேசிக்கும் புல்லரிக்கும் தத்துவங்களை செயல்படுத்துபவன்களுக்குத்தான் பக்தி என்ன? பற்றுதல் என்ன? நொடியில் சபலப்படும் கடவுள் எவன் என்று தெரியாமலே படுத்து எழுந்திருக்கும் பெண் கடவுள் தத்துவங்களை கொண்ட தினமலரே! அந்தப் படுத்து எழுந்திருக்கும் கடவுளை உன் பத்திரிக்கையில் கார்டூனாக வரைந்தால் நடுநிலையாக இருக்குமே! அல்லது நாங்கள் உதவி செய்யலாமா? - அப்துல் அசீஸ்.
9

September 09, 2008 07:45
0
Abdul Rahman:
//இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு 'வருத்தத்தை' மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர்// That was a drama. Do you know why? That apology was timely released in a way to secure the bail of the editor whose bail case was due for hearing the next day of publishing of the apology. The editor promptly presented this apology in the court for his own defence. We must proof that we are not fools.
10

September 09, 2008 09:03
0
பிறைநதிபுரத்தான்:
அஸ்ஸலாமு அலைக்கும், மதவெறி வளர்த்து - மனித நேயம் சிதைப்பதையே வயிற்று பிழைப்பாக கொண்ட தின மலர் கும்பல் - தமிழ் முஸ்லிம்களின் உணர்ச்சி மிக்க எதிர்ப்பையும்- எழுச்சி மிக்க போராட்டத்தையும் கண்ட பிறகும் தன்னுடைய தவறை உணர்ந்து இதுவரை- மனமார மன்னிப்பு கோரவில்லை. ஆனால், முஸ்லிம்கள் காட்டும் எதிர்ப்பை குறைக்க என்ன வழியென்று மட்டும் 'சாணக்யத்தனமாக' யோசித்து, சடங்குக்காக - வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது. . 'தினமலர்' மனமார மன்னிப்பு கேட்டு விட்டதாக - திட்டமிட்டு ஒரு வதந்தியை இஸ்லாமிய மின்னஞ்சல் குழுமங்களில், வலைப்பூக்களில் மற்றும் இணையதளங்களில் உலாவ விட்டு - முட்டாளாக்கி நமது எதிர்ப்பை ‘மழுங்கடிக்க' முயற்சி நடைபெற்று வருகிறது. தினமலரின் இந்த நாடகத்தை - நீலிக்கண்ணீரை உண்மையென் நம்பி - சாத்வீகமான முறையில் நாம் தற்போது தெரிவித்து வரும் எதிர்ப்பை நிறுத்திவிடக்கூடாது. அரபு-முஸ்லிம் நாடுகளில் சட்ட ரீதீயாக தினமலர் இணையதளத்தை - தடைசெய்யவும், தினமலர் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய நம் சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக்கூடாது. தமிழ் முஸ்லிம்களை ‘கிள்ளுக்கீரையாக' நிணைத்துக் எள்ளி நகையாடும் - தினமலருக்கு, உலகெங்கும் பரந்து-படர்ந்து விழுது விட்டு நிற்கும் ஆலமரம் நாம் என்று நிரூபிக்க வேண்டும். தற்போது நமது சகோதரர்கள எடுக்கும் நடவடிக்கைகள் 'தினமலரு'க்கு புத்தி வரும் வரை அல்லது பொருளாதர நஷ்டம் வரும் வரை தொடரவேண்டும். அதற்காக நாம் கீழ்கண்ட ஐந்து விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். ... 1. நமது நடவடிக்கைகளின் மூலம் 'தினமலருக்கு' உண்மையில் புத்தி வந்ததா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். 2. எதிர்பார்த்த மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்றும் 3. மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அத்ற்கான 4. வழிமுறைகளை ஒருங்கிணைத்து - அந்த வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை (Action Plan or Plan of Actions) உருவாக்க வேண்டும்... 5. அந்த திட்டத்தை - நிறைவேற்ற ஆர்வமுள்ள சகோதரர்களை உள்ள்டக்கிய சிறு சிறு குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டும் இயக்க விலங்கை உடைத்து - குழு மணப்பான்மையை தகர்த்து -நாம் அனைவரும் இஸ்லாமியர்களாக ஒன்றிணைந்தால் மதவெறி வளர்க்கும் ‘வந்தேறிகளை' வந்த வழியே திருப்பி அனுப்பிவிடலாம்..இன்ஷா அல்லாஹ்
11

September 09, 2008 14:45
0
அபூ ஸாலிஹா:
தினமலருக்கு துக்கச் செய்தி! உலக முஸ்லிம்களின் மனதை, திட்டமிட்டு ரமலான் துவங்கிய நாளில் புண்படுத்திய தினமலர் இணையதளம் UAE முழுக்க முடக்கப் பட்டுள்ளது. http://abusaaliha.googlepages.com/Dinamalar_Blocked.JPG தினமலருக்கு எதிரான தமது கண்டனங்களை, சாத்வீகமான வழியில் உலங்கெங்கும் தெரிவித்து வரும் அனைத்து முஸ்லிம்கள் / பிற மத சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! அடுத்தடுத்த நாடுகளில் இருந்து தினமலர் அச்சு ஊடகமும் தளமும் முடக்கப்படும் செய்தியை எதிர்பார்ப்போம்! துவேஷமும் காழ்ப்புணர்ச்சியும் கொப்பளிக்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது குறிவைத்துத் தாக்கும் தினமலர், இனியேனும் தன் அநீதியான இரட்டை நிலைப் போக்கினை மாற்றிக் கொள்ளும் என்று நம்புவோம்.
12

September 10, 2008 08:04
0
shahul:
UAE yil dinamalar thadai seyyappattadhaal vilambaram moolam panam sambathippadhu ini kuraindhu pogum. dinamalar thaanagavae veelchi adaindhadharku vaalthukkal.......
13

September 10, 2008 10:23
0
jaffrullah:
ஐக்கிய அரபு அமீரக த்தில் , தின மலர் , பத்திரிக்கை , தடை செய்ய பட்டுள்ளது
14

September 10, 2008 12:40
0
ஸயீத்:
தின மலத்திற்கு யுனைடெட் அரபு அமீரகத்தில் 'ஆப்பு', மிகவும் சந்தோஷமான செய்தி. எல்லாப்புகழும் இறைவனுக்கே. ஏற்கனவே விற்பனையில் மண்ணைக் கவ்வியிருக்கும் வேளையில் தினமலம் எங்கும் வெளிவர வழியின்றி மூல வியாதி பிடித்து அலைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
15

September 11, 2008 12:07
0
Ashik:
ஸலாம், செய்தியை கண்டு கண்களங்கினேன். நம் தனி ஆளால் எப்படி குற்றதை சுட்டி காட்டுவது என்று. ஆனால் இறைவன் மிக பெரியவன். நம் இஸ்லாம் மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்று இறைவன் வழி காட்டிவிட்டான். எல்லா புகழும் இறைவனுக்கே...
16

September 13, 2008 07:48
0
A.IBRAHIM:
assalamu alaikkum. indha punidha ramalan madhaththil naam anaivarum allah vidaththil dua seivom.eppadi allah badhru porkalaththil sahabakalukku malakkuhalai kondu vudhavinano adhai pola allah namakku thunai purivaan.
17

September 13, 2008 23:38
0
md.sultan:
'' dinamalar '' website has been blocked in kuwait....!!!
18

September 20, 2008 01:37
0
Neyas ahmed:
dinamalar website is blocked in oman
19

September 24, 2008 05:28
0
Dr.Mohideen:
Assalamu alaikum. Please read my article in SAMARASAM -Islamic magazine,September 16-30 issue regarding Dinamalar Cartoon issue.
20

October 02, 2008 03:02
0
SHAHUL:
கத்தாரில் தினமலர் வலைதளம் காட்டபட்ட்டு கொண்டிருக்கிறது. எப்படி Qtel க்கு வேண்டுகோள் அணுப்ப?
21

October 11, 2008 14:47
0
SHAHUL:
How can I send request to Qtel to block dinamalar web in Qatar? Its shiowing now it self
22

October 11, 2008 15:07
0
S.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்களே கத்தரில் தின மலரை தடைசெய்ய கோரிக்கை வடிவம் கீழே: Subject: Request to Block a website in Qatar To: எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் Dear Sir, I request you to block the website of a Tamil daily from India www.dinamalar.com in QATAR. Dinamalar recently published a cartoon of Prophet Muhammad (peace be upon him) in its four editions in Tamil Nadu, coincidentally on the first day of Ramadan. It was one of the cartoons originally published by the Denmark newspaper. (Please see the attachment 'Dinamalar computer malar.jpg') Muslims throughout Tamil Nadu (South India) have condemned and protested against the newspaper. Brushing aside the complaints, the news paper said it was a mistake of one of its computer operator. This is not the first time Dinamalar publishing these cartoons. Last year in Oct, around the time of Eid-ul-Fitr it published another cartoon of the Denmark origin. It may be kindly noted that responding to hundreds of request the UAE Internet Provider Etisalat have already banned the website of this newspaper. I request your kind attention and prompt action in this regard. Thanks and best regards
23

October 12, 2008 06:53
0
Freshlanguage:
Assalamu alaikum, Before this incident i used to watch the dinamalar.com in my computer,now i totally avoided to visit this site. Also i am requesting my friends too. Insha allah we will win.
24

November 25, 2008 18:17
0
ameen:
நானும். முன்னர் தினமலர் ஈ பேப்பரைத் தான் நானும் தினமும் வாசித்து வந்தேன். இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விட்டேன். தினமலரை வாங்குவதையும் படிப்பதையும் நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்துச் சகோதரர்களையும் கேட்டுக் கொள்கிறேன். நமது உயிர் நபியைக் கேலியாக்க முனைந்தவனுக்குச் சரியான பாடம் இப்புறக்கணிப்பின் மூலம் நாம் புகட்ட வேண்டும். அதேவேளை, உண்மையான செய்திகளைச் செய்திகளாக கொடுக்கும் ஒரு நடுநிலை நாழிதழும் நமக்குத் தேவை. அதனைக் குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.
25

November 26, 2008 13:25
0
M. Faizur rahman:
Read this atricle
26

January 01, 2009 13:37

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

English News

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு தலையங்கம் திருந்தாத தினமலர் இருந்தென்ன..?
Twitter
RSS
YouTube
English