| ஒரிஸ்ஸா - மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்! |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||
| சனி, 30 ஆகஸ்டு 2008 10:40 | |||
|
காந்தமால் நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ்துவப் பாதிரியார்களையும் கன்னியாஸ்திரீகளையும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், காட்டுப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
இந்தப் போராட்டத்தில் தலைமையேற்று ஈடுபட்டவரும் கிருஸ்துவர்களை இந்து மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி வந்தவருமான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் காந்தமால் மாவட்டத் தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி, கலஹந்தி-புல்பானிப் பகுதியிலமைந்த தமது ஜலேஷ்பட்டா ஆசிரமத்தில் இருந்தபோது கடந்த சனிக்கிழமை (23.08.08) இரவு 9 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரோடு இருந்த அவரது சீடர்கள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, இக்கொலைகளுக்காகச் செய்ய வேண்டுவது என்ன?
கொலைகாரர்களைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
ஆனால், குஜராத்தைப் பின்பற்றி, ஒரிஸ்ஸாவிலும் சிறுபான்மையினரைப் பழிவாங்குவதற்கு ஆளும் கட்சி இந்தக் கொலைகளைப் பயன் படுத்திக் கொண்டது.
சம்பவம் நடந்த மறுநாளான ஞாயிறன்று (24.08.08) காவிகளின் வன்முறை காந்தமால் மாவட்டம் முழுதும் தலை விரித்தாடியது. ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய வன்முறை திங்கட்கிழமை முழுவதும் தொடர்ந்தது. காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் விஎச்பி, பஜ்ரங்தள் பாஜக குண்டர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களில் புகுந்து அடித்து நொறுக்கினர். ஏராளமான தேவாலயங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட காவி அமைப்புகள் சார்பாக 25.08.08 அன்று 12 மணி நேர 'பந்த்' என்ற பெயரில் வன்முறை அவிழ்த்து விடப் பட்டது. இதேமுறை குஜராத்திலும் பின்பற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
காந்தமால் மாவட்டத்தில் பலிகுடா, பர்காமா, திஹாபலி, உதயகிரி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற தேவாலயங்கள், வழி பாட்டுக் கூடங்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. தலைநகர் புவனேஸ்வரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
பெயருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த போதிலும் அதையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட வி.எச்.பி. குண்டர்கள் ஆயுதங்களுடனும் கொலைவெறியுடனும் அப்பாவி கிறிஸ்துவ மக்களைத் தேடித் தேடித் தாக்கினர்.
சாதாரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில், காவல்துறையின் அனுமதியின்றி எவரும் தெருக்களில் நடமாட இயலாது. ஆனால், இங்கு காவிகளின் வன்முறைகளைக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரீ ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஒரு பாதிரியார் பலத்த காயமடைந்தார். 20 குழந்தைகள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
பார்கார் பகுதியில் ஒரு கிறிஸ்துவ அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இதேபோல ரூபா என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் ராசானந்த பிரதான் என்பவர் உயிரோடு கருகினார்.
நவுகான், ரைக்கா, உதயகிரி, பிரிஞ்சியா, பலிகுடா போன்ற பகுதிகளில் தேவாலயங்களும், வீடுகளும் தொடர்ச்சியாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ரைக்கியா பகுதியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
காந்தமால் மாவட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னரும் காந்தமால் மாவட்டத்தில் பல இடங்களில் கலவரம் நீடிப்பதாகவும் திகாபலி, உதயகிரி மற்றும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிக்கும்பலின் அராஜக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் ஒரிஸ்ஸா வன்முறைகள் ஆவணப் படுத்தப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
ஒரிசாவில் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையைக் கண்டித்து நேற்று (29.08.08) நாடு முழுவதும் ஒருநாள் தங்களது நிறுவனங்களை மூடி பந்த் நடத்தி கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இதற்கு நாடுமுழுவதும் முஸ்லிம்களும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துத் தங்களின் கல்வி மற்றும் வியாபார நிறுவனங்களை மூடினர். ஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றைய தினம்(29-08-2008) இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களின் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தவிர இஸ்லாமிய தொழில் துறை நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதில் Muslim Educational Social and Cultural Organization (MESCO), Minority Development Forum, HELP Hyderabad, Tameer-e-Millat, Amarat-e-Millat-e-Islamia ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.
கடந்த 22.01.99இல் பழங்குடி மக்களிடையே சேவையாற்றி வந்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேன்ஸ் தமது இளம் மகன்கள் பிலிப், திமோத்தி ஆகியோருடன் காவி வெறியர்களால் எரித்து கொல்லப்பட்டது இங்குக் குறிப்பிடத் தக்கது.
சங்கபரிவார பயங்கரவாதிகள் நடத்தி வரும் மிருகத்தனமான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. முஸ்லிம் தலைவர்கள் உட்பட பல்வேறு சமுதாயத் தலைவர்களும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வெறிச்செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
தமீரே மில்லத்தினைச் சேர்ந்த மவுலானா அப்துல் ரஹீம் குறைஷி அவர்களும், அமராத்தே மில்லத்தே இஸ்லாமியாவினைச் சேர்ந்த மவுலானா ஹமீதுத்தீன் ஹுஸ்ஸாமி ஆகிய தலைவர்கள் தமது கடும் கண்டங்களைப் பதிவு செய்துள்ளனர். "மனித நேயம் தழைக்கவும், மத நல்லிணக்கம் ஓங்கவும் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்த அநீதிக்கு எதிராக போராட முன்வர வேண்டும்" என்றும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெஸ்க்கோ நிறுவனத்தினைச் சேர்ந்த டாக்டர் ஃபக்ருத்தீன் முஹம்மத் அவர்கள் கூறுகையில், "சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய அளவில் நடைபெறும் இத்தகைய வன்முறைகளை எதிர்த்துப் போராட மனித நேயமுள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இந்தியாவில் வாழ வேண்டுமெனில் இத்தகைய போராட்டங்கள் தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மையினர் வளர்ச்சிப் பேரவையினைச் சேர்ந்த ஜாஹீருத்தீன் அலி கான் அவர்கள் கூறுகையில் "சங் பரிவார் நாடெங்கிலும் நிகழ்த்தி வரும் இத்தகைய வெறியாட்டத்தினைக் கண்டித்து இன, மத பேதமில்லாமல் அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்த வேண்டும்" என்று சாடியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திரு. திருமா வளவனும் ஹிந்துத்துவ அமைப்பினரின் பயங்கரவாதத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"கடந்த 23ம் தேதி ஒரிஸ்ஸாவின் காந்தமால் மாவட்டத்தில் தொடங்கிய இந்துத்துவ வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் கடந்த 5 நாட்களில் மாநிலம் முழுவதும் பரவி பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மீதும் கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதும் ஏவப்பட்டு வருகிறது.
இத்தகைய வன்கொடுமைகளை விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதுடன் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நிகழ்வு 1999ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பழங்குடி மக்களிடையே சேவையாற்றி வந்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேன்ஸ் தமது இளம் மகன்கள் பிலிப், திமோத்தி ஆகியோருடன் அவருடைய ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது.
ஒரிஸ்ஸாவில் ஹிந்துத்துவ வெறியர்கள் கிறிஸ்தவர்களின் மீது நடத்திய வெறித்தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சிறுபான்மை சமூகத்தின் மீதும் பாலியல் வன்முறை நிகழ்த்துவதையும் அப்பாவிகளை உயிரோடு எரித்துக் கொலை செய்வதையும் ஹிந்துத்துவ வெறியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (20)
![]()
தலையெழுத்து!
வேறென்ன...
'நாங்க தான் கொன்னோம்! தோ.. அவன் தான் வயித்தைக் கிழிச்சி சிசுவ வெளியே எடுத்து எரிச்சான்..' என்று அரக்கக் குணத்துடன் கண்களில் வெறி மின்ன கொலைகாரர்கள் வீடியோவில் பேட்டியளித்தும், அம்பெய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத இந்த நாட்டில்..
சுவாசிக்கக் கூட பயமாய் உள்ளது. எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்தியா?
1
August 30, 2008 15:25
லட்சுமணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது வி.எச்.பி ஆட்களே என்று ஒரு செய்தி நிலவுகிறது.
விசாரித்து எழுதவும்.
2
September 04, 2008 12:49
i am shame to be a hindu with racist lik this profesional killars
3
September 05, 2008 02:01
Dear brother Saravanan,peace be upon you, Please ,first you read Hindu holy books,after you read Quran,and think. God give us 6th sense.Live honestly in this world with choosing good way of life,that way should be good for future life also.best wishes.
4
September 06, 2008 09:23
இதுபோன்ற இந்து வெறியர்கலின் செயல்பாடுகளால் சிறுபான்மையினர் மொத்த இந்துக்கலின் மீதும் வெறுப்படையும் சூழல் உருவாகும்.மத நல்லிணக்கம் நாடும் இந்துக்கள் இதை உணர்ந்து இதுபோன்ற செயல்கலை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்
5
October 08, 2008 08:20
இந்துக்கள் என்றாலே காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம் தோன்றும் படியாக செயல்படுகின்றார்கள். இது இந்திய தேசத்திற்கே அவமானத்தைத் தேடித்தரும் என்பதை சங்கபரிவாரத்தினர் என்று தான் உணர்ந்துக் கொள்ளப்போகின்றனரோ தெரியவில்லை.
6
October 08, 2008 12:34
this is very very against human rights. this is rememering gujarat violence. They must be Punished.
7
October 20, 2008 08:31
ணன்கல்தன் கொன்னொம் என்ட்ரு கொன்ட்ரவர்கலெ சாட்சி சொன்ன பிரகும் அவரகலை ஒன்ட்ரும் செய்யாத அரசு அப்பவி முச்லிமெகலை டேவிரவதிகல் என்ட்ரு சொல்கிரடு
8
October 20, 2008 08:35
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்தியன் பெயரில் எழுதும் நண்பருக்கு,
தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தயவுசெய்து தமிழை பிழையில்லாமல் எழுதி பழகவும்.
இன்ஷாஅல்லாஹ் இது தமிழ் எழுத்தாற்றலுக்கு பயனுள்ளதாக அமையும்.
9
October 21, 2008 08:14
Its all happening because of politicians, people shouold think before they react. we are all like brothers and sisters. India was honored because of humanity and culture. Now they even react worst than the animals. Even animals will not kill thier own. Its shame. I request all of you not to fall on religion. Try to be a good human.
10
October 25, 2008 10:31
இந்தியனாக இருக்க பெருமைபடுகிரவரே ! நீங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது அனைத்தும் நடப்பது அரசியல்வாதிகளால் தான் என்று.மக்கள் அவ்வளவு எளிதில் ஆவேசமாக கலவரத்தில் இறங்கிவிடமாட்டார்கள்.இஸ்லாம் அனைவரையும் சகோதர,சகோதரிகளாகத்தான் பார்க்கசொல்கிறது.நீங்கள் சொன்னது போல் மாதிரிக்கு என்று போலியாக கூட அல்ல. உங்கள் கோரிக்கைபடி நாங்கள் இந்த தூய மார்க்கமான இஸ்லாத்தின் நேரான பாதையை விட்டும் நாங்கள் விலகிப்போனால்.அப்பொழுது தான் உங்கள் வார்த்தை படி மிருகத்தை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம். இந்த மார்க்கம் போல் மனிதர்களுக்கு வேற எந்த மார்க்கமும் மனித நேயத்தையும். ஒழுக்க பண்புகளையும் கற்று தரவில்லை. நகம் வெட்டும் முறைமுதல் உணவு உண்ணும் முறை மற்றும் இல்லறம், கல்வி, பாகபிரிவினை இன்னும் ஏராளமான துறைக்கும் தெளிவான வழி வகுத்துள்ளது. மேலும் சகோதர வாஞ்சையுடன் உங்களுடன் இந்த அளவுக்கு பழகும் நாகரிகத்தை கற்றுகொடுத்த இஸ்லாத்தில் நான் மற்றும் என் போன்ற அனைத்து முஸ்லிம்களும் உங்களுக்கு உண்மை சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
11
October 25, 2008 13:57
இது இந்தியா. ஓடிப்போ. நான் எப்போதும் இந்து ஆதரவாளன். அனைத்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் உங்களது அரபு மற்றும் மேற்கத்திய மக்களிடம் செல்லுங்கள்.
_____________________ திரு. சங்கர், கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி! http://www.satyamargam.com/TamilTyping 12
November 28, 2009 13:02
யப்பா சங்கரு!
இங்க இருக்கிற முஸ்லிம்கள் எல்லாம் அரபு நாட்டு எறக்குமதி இல்லே கண்ணு. வர்ணபேத கொடும தாங்காம தன்மானம் காத்துக் கொள்ளக் கிடைத்த ஒரே வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பச்சத் தமிழனுங்க. நீயி வேணா கைபர் கணவாயைத் திரும்பிப் பாத்துக்க. கூடுதல் வெவரம் வேணும்னா திண்ணயில படிச்சுக்கோ! 13
November 30, 2009 23:25
அன்பு சகோதரர் சங்கர்
இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இணைந்து விட்டால் பலமான் சக்திகளாக மாறி தமக்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறி விடுவார்கள் எனும் அச்சத்தினால் ஏற்பட்ட் சுய நல ஆங்கிலேய பிரித்தாளும் மூளைச் சலவை சூழ்ச்சிதான் இந்த தங்கள் முஸ்லிம்களும் அந்நியர்கள் எனும் பொய்யான வாதத்தின் அடிப்படை. இதற்கு நடு நிலையான இந்து மத வரலாற்று ஆசிரியர்களிலும் பலர் சாட்சி பகர்கின்றனர். ஆனால் இந்துக்களில் வர்ண அடிப்டையில் பேதம் பாராட்டிடும் தத்துவத்தை விதைத்தவர்களின் விளைவினால் பிளவு பட்டு கிடக்கும் ஒட்டு மொத்த இந்துக்களின் ஓட்டுக்கு ஆசைவைத்து அவர்களை எப்படியாவது ஒரு கருத்தில் தற்காலிகமாக தேர்தல் வரை ஓட்டு வங்கியாக ஒன்று படுத்த கையாளும் அரசியல் வித்தையே இந்த பொய் வாதம் என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம் (OPEN SECRET) ஆகும். ஆகையால் மனித சமுதாயம் முழுவதும் (அவர்கள் யாராக இருந்தாலும் எந்நிரத்தவராகவும் மொழியினராகவும் குலத்தவராக இருந்தாலும் ) ஒரே குடும்ப அங்கத்தினர்கள் எனும் இந்து மத வேதங்கள் கூற்றையாவது ஏற்காத வரை தாங்கள் எப்ப்டி இந்து? என்று தங்களை கூற முடியும். இஸ்லாமிய வேதமாகிய குர் ஆன் மற்றும் கிருத்துவ பைபிள் கூறும் அடிப்ப்டையான போதனையும் இது தான்.. அதிக விபரங்கள் தேவையெனில் தெரிவிக்கவும் அனைத்து மத வேத கிரந்த ஆதாரங்களுடன் தங்களுக்கு இதை நிரூபித்திட சம்ர்ப்பிக்க இயலும். ஆகையால் இப்போக்கை கைவிடுவதே உங்களுக்கும் உங்கள் குடும்பமாகிய மனித் சமுதாயத்திற்கும் நல்லது. 14
December 01, 2009 09:32
Muslims are not eligible to criticise this matter, First you correct your self.
15
July 03, 2010 09:57
Mr. Justin,
We are more eligible to criticise anything. We dont want to see your hidden parivar face again here. 16
July 03, 2010 13:37
ஆர்.எஸ்.எஸ்., விஷ்வஹிந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற தேசவிரோத அமைப்புகள் இப்படியான அராஜகங்களை விளைவிக்க சங்கர், ஜஸ்டின் போன்ற கருத்து கந்தசாமிகள் கொடுக்கும் ஆதரவும் ஒரு காரணம். பக்கத்து வீடு பற்றி எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் இவர்கள்.
17
July 06, 2010 08:01
இது இந்தியா. ஓடிப்போ. நான் எப்போதும் இந்து ஆதரவாளன். அனைத்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் உங்களது அரபு மற்றும் மேற்கத்திய மக்களிடம் செல்லுங்கள்.
18
September 30, 2010 18:49
வாய்யா தோணி!
எங்கய்யா இருந்தே இவ்ளவ் நாளா? இந்து ஆதரவாளனா நீயி? நானும் அப்டித்தான்னு வெச்சிக்க. ஆமா ... எந்த இந்து ஆதரவாளன் நீயி? ஸ்டேண்டிங் ஸிங்கிள் லைன் இந்துவா இல்லே ... ஸ்லீப்பிங் மூணு லைனு பார்ட்டியா? ஐயங்காரா? அய்யிரா?மொல்லியாரா? செட்டியாரா? வன்னியரா? தேவ்ரா? அம்பலவாணரா? ஒடயாரா?இல்லே ... முக்குலமா? முக்குவரா? சேருவயா? நாயுடுவா? நாய்க்கரா? நம்பூதிரியா? பனியாவா? தலித்தா? திராவிடா ... இல்லே ஆதி திராவிடா? பஞ்சமரா அதுவும் இல்லேன்ன பொட்டு கட்டுன பார்ட்டியா? கொஞ்சம் வெவரமா சொல்றியா? - இந்தியன் 19
September 30, 2010 21:23
கருத்து எழுதுக :
|