| இஸ்லாமோ ஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 6) |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் |
| திங்கள், 25 ஆகஸ்டு 2008 16:12 |
இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள்:
சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தினை எதிர்ப்பவர்களின் குறி, முஸ்லிம்களை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், இழித்துப் பேசுவதும் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதுமாகும். அதில் மிகவும் குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதிக்கும் பள்ளிவாயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை மற்றும் அவற்றின் மீதான அவதூறு பரப்புவதுமான இஸ்லாமோஃபோபியா என்பதன் அடிப்படையைச் சென்ற தொடரில் பார்த்தோம். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அநியாயமான முறையில் வேலை வாய்ப்புகளிலும் அரசியலிலும் உயர் பதவிகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. இஸ்லாமோஃபோபியா என்பது விஷமப் பாகுபாட்டைச் சமுதாயத்தில் விதைக்கும் அநீதிமிக்க ஊடகங்களாலும் எழுத்துக்களாலும் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டுப் பரிமாறப்படும் வன்முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.
உலக முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை கேலியாக்கி சித்தரித்து பன்னிரண்டு கேலிச்சித்திரங்களை டென்மார்க்கின் அதிக சர்க்குலேஷன் கொண்ட யில்லன்ஸ்-போஸ்ட்டன் கடந்த செப்டம்பர் 30, 2005 இல் வெளியிட்டது. அதில் ஒரு சித்திரத்தில் தலைப்பாகையில் வெடிகுண்டை வைத்திருப்பதாகக் காட்டி தன் அடிமன வக்கிரத்தை தீர்த்துக்கொண்டது...
இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஆதாரமின்றியும் துவேஷப்பார்வையுடன் விமர்சித்த, உலக முஸ்லிம்களின் மனதை ஒரு சேரக் காயப்படுத்திய 59 வயதான சல்மான் ருஷ்டிக்கு, பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் விருது வழங்கி கெளரவப்படுத்தியது....
துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கான Target க்கிற்காக குர் ஆனைப் பயன்படுத்தியது...
அப்பாவியான டாக்டர் ஹனீஃபை இலண்டன் விமானநிலைய குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திக் கைது செய்தது...
பெண் என்றும் பாராமல் டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து தற்பொழுதும் கொடூரமாகக் கொடுமைப்படுத்தி வருவது...
தாடி வைத்தவர்கள் பயங்கரவாதிகள் தான் என்ற முன்முடிவோடு லாஸ் ஏஞ்சல்ஸ், ஆம்ஸ்டர்டாம், லண்டன், பாரிஸ் போன்ற விமானநிலையங்களில் முஸ்லிம் பயணிகளை அதீதமாக ஆராய்ந்தது...
இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் கலந்த உணர்வினால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள் மனதாலும் உடலாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களின் சதவீதம் ஃப்ரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அதிகம் கூறப்பட்டாலும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் எல்லா இடங்களிலும் இஸ்லாமோஃபோபியா தலைவிரித்து ஆடுவதைக் கண்கூடாகக் காண இயலும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகையத் தாக்குதல்கள் பற்றிய வெகு சமீபத்தில் வளர்ந்த நாடுகளின் பட்டியலையும், அங்கே நடக்கும் நிகழ்வுகளையும் ஆராயும்போது அதில் சமீபமாக இடம் பெறுபவை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, இத்தாலி, நெதர்லாந்த் மற்றும் ஸ்பெயின் என்பதையும் அறிய முடிகிறது.
ஆக, சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எனப்படும் மனநோயை, வெற்றிகரமாக முஸ்லிம் அல்லாதவர்களிடம் திட்டமிட்டு பரப்பும் எண்ணம் கொண்டவர்களின் காரியத்தில் அவர்கள் எண்ணியபடி பலன் கிட்டியுள்ளது என்று கூறலாம்.
சரி இதனால் என்ன பலன்? என்ன அழுத்தமாகப் பதிய வைக்கப்படுகிறது?
1. வெள்ளைச் சருமம் கொண்ட முஸ்லிமல்லாதோர் அனைவரும் நல்லவர். 2. முஸ்லிம்களில் வழிபாடுகளைச் சரிவரச் செய்வோர் (Practicing Muslims) அனைவரும் பயங்கரவாதிகள். 3. இஸ்ரேல் தற்காப்பு மட்டுமே புரிகிறது.
திட்டமிட்டு குறிவைக்கப்படும் இஸ்லாமிய அடையாளங்கள்: பரவலாக முஸ்லிம் ஆண்கள் வைத்துக் கொள்ளும் தாடி, கரண்டை காலுக்கு மேலே அணியும் உடை, பெண்கள் தங்களின் உடலை மறைத்து அணியும் ஆடை(ஹிஜாப்/பர்தா) போன்ற இன்னபிற இஸ்லாமிய அடையாளங்கள் கூட ஒரு வகையில் மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்ட வழிவகுக்கின்றன.
இத்தகைய அடையாளங்களைப் பயங்கரவாதத்தோடும் தீவிரவாதத்தோடும் தொடர்பு படுத்த இயைந்து விட்டால், இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையை அணைபோட்டுத் தடுத்து விடலாம் என்ற மனப்பாலே, இஸ்லாமிய அடையாளங்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு அடைப்படைக் காரணமாகும்.
இஸ்லாமோஃபோபியாவின் தற்போதைய இலக்கு - ஹிஜாப்!
இஸ்லாமோஃபோபிக் செயல்முறை கொள்கைகளின் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஹிஜாப் பற்றியதே. இதை இஸ்லாமிய எதிர்ப்புப் பணியாளர்கள் இஸ்லாமிய சின்னம் என்று காழ்ப்புணர்ச்சியுடன் வர்ணிப்பதுண்டு. ஜெர்மனியில் ஹிஜாப் அணிவதற்கான தடையுத்தரவு ஆகஸ்ட் 2006 இல் பிறப்பிக்கப்பட்ட போது மத அடிப்படையிலான ஹிஜாப் அணியும் கலாச்சாரத்தின் மூலம், பள்ளி வளாகத்தில் பிற மதத்தினருக்கு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவேதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ஜெர்மனின் பள்ளிகளுக்கான அமைச்சர் பார்பரா ஸோம்மர் கூறியிருந்தார்.
ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக சமூக சேவை புரிந்து உலக மக்கள் மனதில் இடம் பெற்ற அன்னை தெரஸா மற்றும் நம் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா பட்டேல் அணியும் இஸ்லாம் கூறும் ஹிஜாப் படத்தையும் இவ்விடத்தில் இணைப்பது பொருத்தமாக இருக்கும். இவர்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்கள் என்பதையோ, இதைக் கடுமையாகச் சாட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோ So Called பெண்ணியவாதி(!)களுக்குத் தோன்றாததற்குக் காரணம் இவர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதே!
ஆக்கம்: அபூ ஸாலிஹா
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|